search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Affirmation"

    • புகளூர் காகித ஆலை நிறுவனத்தில் ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
    • தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு கூறும் விதமாக தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி டிஎன்பிஎல் காகித ஆலை நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தின் அருகில் நடைபெற்றது. உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் பொது மேலாளர் நாகராஜன், பாதுகாப்பு பிரிவு துணைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், மனிதவளம் பிரிவு முதுநிலை மேலாளர் சிவக்குமார், மேலாளர் வெங்கடேஷ், பாதுகாப்பு பிரிவு துணை மேலாளர் சங்கிலி ராஜன் ஆகியோர் தலைமையில் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்

    • புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு வார உறுதி மொழி ஏற்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்

     புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு வார உறுதி மொழி ஏற்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், தனித்துணை ஆட்சியர் செய்யது முகம்மது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

    • போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • ஒருவழிப்பாதையை கட்டாயம் பின்பற்றி, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    சீர்காழி போக்குவரத்து காவல்துறை சார்பில் நகரில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வா ளர்கள் பிறைச்சந்திரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் ஆய்வாளர் சிவக்குமார் பேசுகையில், ஆட்டோ ஓட்டுனர்கள் பணியின்போது சீருடை அணிந்து வாகனங்களை இயக்கிடவேண்டும், மதுஅருந்திவிட்டோ, செல் போன் பேசிக்கொண்டோ, வாகனங்களை இயக்ககூடாது.அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்றி செல்லவேண்டும் நகரில் ஒருவழிப்பாதையை கட்டாயம் பின்பற்றி,போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து ஆட்டோக்களை இயக்கவேண்டும் என்றார். அப்போது போக்குவரத்து முதல்நிலை காவலர்கள் தேவேந்திரன், பூபாலன், அண்ணாமலை மற்றும் 70-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றனர். முடிவில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • அரியலூர் அரசு கல்லூரிகளில் சமூக நீதி நாள் அனுசரிக்கப்பட்டது
    • சமூக நீதிநாள் உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ,மாணவியர்கள் என அனைவரும் உறுமொழியை எடுத்துக் கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் சமூக நீதிநாள் அனுசரிக்கப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த நாளான செப்.17 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் முன்னதாக இந்த சமூக நீதிநாள் அனுசரிக்கப்பட்டது.அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கல்லூரி முதல்வர் ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்து, சமூக நீதிநாள் உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ,மாணவியர்கள் என அனைவரும் உறுமொழியை எடுத்துக் கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் வெ.கருணாகரன், மேரி வைலட் கிருஸ்டி ஆகியோர் செய்திருந்தனர்.இதே போல் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில், முதல்வர் ரமேஷ் தலைமையில் அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • கரூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • பள்ளி, கல்லூரி மாண வர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எஸ்.பி. சுந்தரவதனம் அழைப்பு விடுத்துள்ளார்

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாண வர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எஸ்.பி. சுந்தரவதனம் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:முதல்வர் ஸ்டாலின் வரும் 11-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கவுள்ளார். அதே நேரத்தில் கரூர் மாவட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பள்ளி மற்றும் கல்லுாரிகளில் போதையில்லா சமூகத்தை உருவாக்குவோம்' என்ற போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல பேரணி, கருத்தரங்கம்,துண்டு பிரசுரங்கள் விநியோகம், சமூக வலைதள தகவல்கள், விளம்பர பதாகைகள் அமைப்பது விழிப்புணர்வுஇவற்றில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளும் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று எஸ்.பி.சுந்தரவதனம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    • புகையிலை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

    முகாமிற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் தலைமை தாங்கினார்.

    சுகாதார ஆய்வாளர் பரமநாதன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் மதுமிதா கலந்துகொண்டு புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து விளக்கினர்.

    இதில் பகுதி சுகாதார செவிலியர் பானுமதி, ஊராட்சி செயலர் பாலசுந்தரம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

    முடிவில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவிகளுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு நலக்கல்வி அளிக்கப்பட்டது.
    • அனைவரும் டெங்கு குறித்த சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர் சுகாதார பணிகள் விஜயகுமார் உத்தரவின் பேரில் பொரவாச்சேரி ஆண்டவர் நர்சிங் கல்லூரியில் தேசிய டெங்கு தினம் மே 16 கடைபிடிக்கப்பட்டது.

    மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி மரு. லியாக்கத் அலி மாவட்ட நல கல்வி அலுவலர் மணவாளன் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் நேர்முக உதவியாளர் கோகுல்நாதன் வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் பொறுப்பு செந்தில்குமார் ஆண்டவர் கல்லூரியின் தாளாளர் நடராஜன் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள் களப்பணி உதவியாளர்கள் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் கல்லூரியில் பயிலும் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பேரணி சென்றனர் கல்லூரி மாணவிகளுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு நலக்கல்வி அளிக்கப்பட்டது மேலும் டெங்கு பற்றிய சுகாதார உறுதிமொழியை சுகாதார ஆய்வாளர் மணிமாறன் வாசித்தார்.

    முடிவில் வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையசுகாதார ஆய்வாளர் சுத்தானந்த கணேஷ் நன்றி கூறினார்.

    • கண்தானம் பெறப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • அனைவரும் கண்தான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் வசித்து வந்த ரவிச்சந்திரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

    அதனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் கண்தானம் பெறப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கண் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி, ராய் டிரஸ்ட் சார்பில் கண்தான சான்றிதழை குடும்பத்தினரிடம் வழங்கினார்.

    இதில் கருணாநிதி, ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன், சென்னை ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

    இது குறித்து ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன் கூறுகையில்:-

    அனைவரும் மண்ணுக்கு போகும் கண்ணை தானம் செய்து அடுத்தவரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, அனைவரும் கண்தான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு போட்டி நடைபெற்றது.
    • நகராட்சி ஆணையர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் நம்ம ஊரு திருவிழாபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி 8 கி.மீமாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஆண் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் தொடங்கிய மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை நிகழ்ச்சிக்கு நகரமன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்

    வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் பெண்கள் கான மாரத்தான் ஒட்ட பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்பு ஆண்களுக்கான 8 கி.மீ ஓட்டப்பந்தயத்தை டிஎஸ்பி முருகவேல் துவக்கி வைத்தார். ஒட்டபந்தயதில் 1500-க்கும் மேற்பட்ட ஆண் பெண்கள் கலந்துகொண்டனர்

    நிகழ்ச்சியில்நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியில்கோடியக்கரை வணச்சரகர் அயூப் கான் நகராட்சி பொறியாளர் முகமது இப்ரஹீம் கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள்கலந்து கொண்டனர்வெற்றி பெற்ற வீரர்களுக்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி பரிசுகளை வழங்கினர்.

    • பள்ளியில் படித்த வகுப்பில் மீண்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி தங்களுடைய ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
    • மேம்பாட்டுக்கான பணிகளை செய்வது என உறுதிமொழி ஏற்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

    இப்பள்ளியில் 1974-75 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    பள்ளியில் தங்கள் அமர்ந்து படித்த வகுப்பில் மீண்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி தங்களுடைய தற்போதைய சூழ்நிலைகள் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து தங்கள் படித்த பள்ளியின் மேம்பாட்டிற்காக ஏதேனும் செய்ய வேண்டுமென முடிவு செய்து அதன்படி தனி வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் முன்னாள் மாணவர்களையும் ஒன்றிணைத்து பள்ளி மேம்பாட்டுக்கான பணிகளை செய்வது என உறுதிமொழி ஏற்றனர்.

    இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய தலைமை ஆசிரியருமான நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் நாகராஜன் நன்றி தெரிவித்தார்.

    • அவனியாபுரத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • போக்குவரத்து காவல்துறை சார்பில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களிடம் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அவனியாபுரம்

    மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாணவன் பிரபாகரன் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்து பலியானார். இதையடுத்து போக்குவரத்து காவல்துறைதுணை ஆணையர் ஆறுமுகசாமி, கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார், உதவி போக்குவரத்து காவல் ஆணையர் செல்வின் ஆகியோரது அறிவுரையின்படி மதுரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து காவல்துறை சார்பில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களிடம் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அவனியாபுரம் பெரியார் சிலை முன்பு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் தங்கபாண்டியன், பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்க வைத்தார். இதில் ஆர்.டி.ஓ. சித்ரா, திருப்பரங்குன்றம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பூர்ணா கிருஷ்ணன், போக்குவரத்து கழக கிளை மேலாளர் முத்துமணி, உதவி பொறியாளர் கண்ணன், இன்ஸ்பெக்டர் இளங்கோவன், போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வம், காவலர்கள் அழகு முருகன், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×