என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "airline service"
- இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் தலா 7 விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.
- புறப்பட வேண்டிய விமானங்கள் விமான நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டன
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் தலா 7 விமானங்கள் , 6 ஏர் இந்தியா விமானங்கள் உட்பட இன்றைய தினமும் 25 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஆங்காங்கே விமானங்களில் வெடிகுண்டு வைத்து உள்ளதாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் புறப்பட வேண்டிய விமானங்கள் விமான நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டன. பறந்து செல்லும் விமானங்கள் திட்டமிடப்படாத விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன.
விமானங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வெடிகுண்டு வைக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்ட பின்னர் விமானங்கள் புறப்பட்டுச் செல்கின்றன. கடந்த 12 நாட்களில் இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுள்ளது.
- கடந்த வாரத்தில் மட்டும் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உளவுத்துறை விசாரணை நடத்துகிறது.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் தொடர்பாக என்ஐஏ களத்தில் இறங்கினர்.
மிரட்டல் வந்த இ மெயில் முகவரி மற்றும் சமூக வலைதள முகவரியை வைத்து தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உளவுத்துறை விசாரணை நடத்துகிறது.
பாதுகாப்பு அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்துகிறது.
- 2021-ம் ஆண்டில், 8.03 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14.83 லட்சமாக இருந்தது.
விமான தாமதத்தால் இந்த ஆண்டு மே மாதம் வரை 11 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட 13 கோடி ரூபாயை வழங்கியுள்ளன என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023-ம் ஆண்டில், விமான தாமதங்கள் காரணமாக 22.51 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்காக விமான நிறுவனங்கள் ரூ.26.53 கோடிக்கு மேல் செலவழித்தனர். இதேபோல் 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14.83 லட்சமாக இருந்தது. இது தொடர்பாக விமான நிறுவனங்கள் செலுத்திய தொகை ரூ.15.87 கோடிக்கும் அதிகமாக இருந்தது.
இந்தத் தகவல்களை மக்களவையில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்தார்.
2021-ம் ஆண்டில், 8.03 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக விமான நிறுவனங்கள் செலவழித்த தொகை ரூ.3.91 கோடியாக இருந்தது. 2020-ம் ஆண்டில், கோவிட் தொற்று விமானத் துறையைத் தாக்கிய ஆண்டாக பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் விமான தாமதத்தால் மொத்தம் 2.06 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக விமான நிறுவனங்கள் செலவழித்த பணம் ரூ. 62.07 லட்சமாகும்.
திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமான நிறுவனங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ), ஒப்புதல் அளித்த அட்டவணையின்படி தங்கள் விமானங்களை இயக்குகின்றன. இருப்பினும், வானிலை, தொழில்நுட்பம், செயல்பாட்டு போன்ற பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் விமானங்கள் தாமதமாகின்றன," என்று அமைச்சர் கூறினார்.
- ஐதராபாத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானங்களை இயக்கியது.
- இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வேறு ஒரு விமானத்தில் அயோத்தி செல்ல வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு, அயோத்திக்கு முக்கிய நகரங்களில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்கத் தொடங்கியது. ஐதராபாத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானங்களை இயக்கியது. இந்த இடைநில்லா விமானங்கள், வாரத்தில் மூன்று முறை இயக்கப்பட்டன.
இந்நிலையில், ஐதராபாத்- அயோத்தி நேரடி விமான சேவையை கடந்த 1-ம் தேதியில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் நேரடி விமான சேவை முடிவுக்கு வந்துள்ளது. டிக்கெட் விற்பனை குறைந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
தென்னிந்தியாவின் பரபரப்பான தொழில்நுட்ப மையமான ஹைதராபாத்தை வடக்கு மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள மத மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நகரமான அயோத்தியுடன் இணைக்கும் விமான சேவையை நிறுவனம் தொடங்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த பாதையில் செயல்பாடுகளை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஐதராபாத்தில் இருந்து அயோத்தி செல்ல வேண்டுமானால், ஐதராபாத்தில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வேறு ஒரு விமானத்தில் அயோத்தி செல்ல வேண்டும்.
இதற்கு முன்பு, சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கான நேரடி விமான சேவைகளையும் ஸ்பைஸ்ஜெட் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து மட்டும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நேரடி விமானங்கள் செல்கின்றன.
- 9 மணியில் இருந்து விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
- விமான சேவை தொடங்கப்பட்டாலும், குறைந்த அளவிலேயே விமானம் இயக்கப்பட்டது.
கனமழை காரணமாக காரணமாக சென்னை விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. ஓடுபாதையில் இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் இரவு 11 மணி வரை மூடப்படும். அதன்பின் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மழையின் தாக்கம் குறையாததால் இன்று காலை வரை விமான நிலையம் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மழைவெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் 9 மணியில் இருந்து விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
விமான சேவை தொடங்கப்பட்டாலும், குறைந்த அளவிலேயே விமானம் இயக்கப்பட்டது. இன்றும் 177 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர்:
திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மும்பைக்கு மற்றொரு விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்க உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 15-ந்தேதியில் இருந்து இந்த விமானம் வாரம் 7 நாட்களும் இயக்கப்படவுள்ளது. தினமும் இரவு 9:35 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த விமானம் 11:20 மணிக்கு மும்பையை சென்றடையும்.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்துக்கே (டி 2) இந்த விமானம் செல்வதால் அங்கிருந்து வேறு விமானம் மாறி வெளிநாடுகளுக்கு செல்ல முடியும்.
கோவையில் இருந்து ஒரே டிக்கெட்டாக பதிவு செய்தால், சீம்லெஸ் கனெக்ட்டிவிட்டி என்ற முறையில் பொருட்களை விமானத்துக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. மும்பை டி 2வில் இமிக்ரேசன் மற்றும் கஸ்டம்ஸ் சோதனைகளுக்கு பின் விமானம் மாறிச் செல்லலாம்.
இதனால் கோவையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு 19 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்று விட முடியும். அமெரிக்க நகரங்களுக்கு மட்டுமின்றி, லண்டன், முனிச், பாரிஸ், மொரிஷியஸ், ஆம்ஸ்டர்டாம், ரியாத், ஜெட்டா, எகிப்து, தோஹா, துபாய், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட 20 வெளிநாட்டு நகரங்களுக்கு இந்த ஏர் இந்தியா விமான சேவை இணைப்பாக அமையும்.மும்பைக்கு 3 இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானங்கள் இயக்கப்படும் நிலையில் இது 6-வது விமான சேவையாகும்.
கோவையிலிருந்து மும்பைக்கு காலை 6:45 மணிக்கு, இண்டிகோ விமானம் முதல் சேவையை தொடங்குகிறது. அதையடுத்து ஏர் இந்தியா-காலை 9 மணி, விஸ்தாரா-மதியம் 2:30 மணி, இண்டிகோ-மாலை 4:45 மணி, ஏர் இந்தியா-இரவு 9:35 (டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து ), இண்டிகோ-இரவு 10:20 மணி என மொத்தம் 6 விமானங்கள் கோவையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படுகின்றன.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக விமான நிறுவனங்களும் புதிய விமான சேவைகளை அதிரடியாக அறிவித்து வருகிறது.
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது முதலே ரெயில், பஸ் உள்ளிட்டவைகளில் வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
அதேபோல் வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் வசதிக்காக விமான நிறுவனங்களும் புதிய விமான சேவைகளை அதிரடியாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் பயணிகளின் வசதிக்காக மதுரை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவை வழங்கப்ப டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, வருகிற 22-ந் தேதி முதல் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கும் தினசரி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இதையடுத்து, இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூர்-மதுரை, மதுரை-சிங்கப்பூர் வழித்தடத்திற்கான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பு, சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திருச்சியில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை திடீர் ரத்தானது
- அதிக கட்டணம் செலுத்த முடியாமல் பயணிகள் தவிப்பு
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, மலிண்டோ, ஸ்கூட் விமான நிறுவனங்கள் இயக்கி வருகிறது.இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மட்டும் பல ஆண்டு காலமாக இயக்கப்பட்டு வருகிறது.
இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து இலங்கைக்கு பிட்ஸ் ஏர் நிறுவனம் தனது சேவையை துவங்குவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் இயக்கமானது ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக திருச்சியில் இருந்து இலங்கைக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் விமானம் இயக்கப்பட்டது. இந்த விமான சேவையும் குறைந்த காலமே இயக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திருச்சியில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இரு சேவைகளை வழங்கி வந்தது.
அதில் குறிப்பாக காலை மற்றும் மதிய நேரங்களில் என இரு சேவைகளும் இயக்கப்பட்டு வந்தது. இதில் திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் இலங்கை வழியாக செல்வது வாடிக்கை. இந்த பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் நிலை இருந்து வந்தது.திருச்சிக்கு வரும் பயணிகள் அதிக அளவில் இந்த விமான சேவையினை பயன்படுத்தி வந்தனர். தென் தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு பணி நிமித்தமாக செல்லும் பயணிகள் அதிகம் என்ற காரணத்தினால் அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமான சேவைகளை பயன்படுத்தும் நிலை இருந்து வந்தது.
இவ்வாறு திருச்சி விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவைகள் வளைகுடா நாடுகளுக்கு இருந்தாலும் இலங்கை சென்று அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு கட்டணம் குறைவாக இருந்த காரணத்தினாலும் பயண நேரம் குறைவு என்பதாலும் இதனை அதிகம் பயன்படுத்தி வந்தனர்.இதற்கிடையே கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்பட்டு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது வாரத்திற்கு இரண்டு நாட்கள் அதாவது, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கடந்த 6-ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரு சேவைகள் வழங்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தற்போது ஒரு சேவை மட்டும் வழங்கி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி செல்லும் நிலை ஏற்படுகிறது.மேலும் விமான சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் ஒரு விமான சேவையை மட்டுமே நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீர்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் தனது இரண்டாவது சேவையை வழங்குவதுடன் ரத்து செய்யப்பட்ட இரண்டு நாட்கள் விமான சேவைகளும் மீண்டும் வழங்கிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் திருச்சி விமான நிலையத்திலிருந்து புதிய விமான நிறுவனங்களின் சேவைகள் இலங்கைக்கு இயக்கப்பட்டால் இது போன்ற சிரமங்கள் பயணிகளுக்கு ஏற்படாது என கூறப்படுகிறது.
- ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் 91.45 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
- பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது.
கோவை,
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும், சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், விமான போக்குவரத்தை ஆய்வு செய்யும் வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி சார்பில் சமீபத்தில் சர்வதேச அளவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நடந்த விமான போக்குவரத்தை மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. விமான நிலையங்களுக்கு விமானங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவது, புறப்பட்டுச் செல்வது, பயணிகள் சேவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது.
இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், சர்வதேச அளவில் சரியான நேரத்துக்கு விமானங்களை இயக்கும் உலகின் முதன்மையான 20 விமான நிலையங்களுக்கான பட்டியலில், கோவை விமான நிலையம் 13-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் இந்த விமான நிலையம், 88.01 சதவீதத்துடன் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் சேவை ரத்து 0.54 சதவீதம் மட்டுமே. இந்த பட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் 91.45 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
- பன்னாட்டு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
- இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது.
மதுரை
மதுரை விமான நிலையம் 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 2010-ம் ஆண்டில் புதிய முனையக் கட்டிடம் திறக்கப்பட்டது.
மதுரை விமான நிலை யத்தில் 2013-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு விமான சேவை நடந்து வருகிறது. மதுரையில் இருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது. மதுரை விமான நிலையம் இதுவரை பன்னாட்டு விமான நிலையமாக நிலை உயர்த்தப்படவில்லை. சுங்க விமான நிலையமாக செயல்படுகிறது.
இங்கு 3 சர்வதேச விமான சேவைகள் இருந்தாலும், மதுரை விமான நிலையம் அதிகளவில் பயணிகளைக் கையாண்டு வருகிறது. கோவை, ஷீரடி, விஜய வாடா, கண்ணூர், திருப்பதி ஆகிய விமான நிலையங்கள் குறைந்த அளவில் பயணிகளைக் கையாளுகின்றன.
அவை சர்வதேச விமான நிலையங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன. மதுரை விமான நிலையம் மட்டும் இன்னும் சுங்க விமான நிலையமாகவே உள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
மத்திய அரசு ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை பயணியர் சேவை உதவியாளர்களாக, மதுரை விமான நிலையத்தில் பணியமர்த்த உள்ளது. இவர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் மதுரை-மலேசியா வழித்தடத்தில் நேரடி விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்க உள்ளது. இது வியாபாரிகள் மற்றும் விமான பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறுகையில், உலகம் முழுவதும் சுற்றுலா பயணிகள் மலேசியா, சிங்கப்பூர் வழியாக மதுரை வருகின்றனர். சர்வதேச அந்தஸ்து கிடைத்தால் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் குடியேறி இருப்பவர்கள் எளிதில் மதுரைக்கு வர முடியும்.
வேளாண் விளை பொருட்களும் அதிகளவில் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிட்டும். பிற நாடு களுடனான விமான சேவை ஒப்பந்தங்களில், மதுரை விமான நிலையம் ஒரு ''பாயின்ட் ஆப் கால்'' ஆக சேர்க்கப்பட வேண்டும்.
சர்வதேசவிமான பயணத்தில் தென்தமிழகத்தின் நுழைவு வாயிலாக மதுரை விமான நிலையம் திகழ்கிறது. மலேசியா, சிங்கப்பூர், குவைத், இதர ஐக்கிய அரபு நாடுகளுடனான இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை சேர்த்து, பன்னாட்டு விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்