என் மலர்
நீங்கள் தேடியது "almsgiving"
- உலக சிவனடியார் கூட்டத்தினர் திருவாசக முற்றோதல் நடத்தினர்.
- தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
நாகப்பட்டினம்:
நாகூர் காங்கேய சித்தர் ஜீவபீடத்தில் திருவாசக முற்றோதல் நாகூர் கொச தெரு என்னும் குயவர் மேட்டு தெருவில் அருள்பாளித்து வரும் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் உலக அமைதி வேண்டி திருநாகை காயாரோகனத்தார் அர்தசாம அடியார் திருக்கூட்டத்தினர், உலக சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் மலேசியாவின் பினாங் நகர உலக சிவனடியார் திருகூட்டத்தினர் திருவாசக முற்றோதல் நடத்தினர்.
இந்நிகழ்வில் உலக சிவனடியார் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜம்புலிங்கம் மற்றும் மலேசிய பினாங் நகர சிவனடியார் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாகூர் பிடாரி அம்மன் கோவில் நிர்வாகி கணபதி மற்றும் நாகை சத்ரு சம்ஹார மூர்த்தி ஆலய நிர்வாகி சிங்காரவேலு ஆகியோர் முற்றோதல் செய்த சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும் அன்ன தானம் வழங்கினர்.
இந்த நிகழ்வை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் இராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், குமார், டாக்டர் அனிதா பழனிவேல் மற்றும் சேலம் வெங்கடேசன், நாகை ஐடிசி நடராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
- பங்குனி உத்திர திருவிழாவில் தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கினர்.
- நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம், பழச்சாறு மற்றும் மோர் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. சார்பில் நடந்தது. மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.யின் அறிவுரையின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் குணசேகரன், அவரது மகன் அருண் குணசேகரன், ராமநாதபுரம் கார்மேகம், நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெகநாதன், முன்னாள் நகரச்செயலாளர் மங்களேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி பழ.பிரதீப் பழனிவேல், நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- மூடிக்கிடந்த திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப்ப திகங்கள் பாடி திறந்ததாகவும் வரலாறு இக்கோவிலுக்கு உண்டு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்திய மாமுனி வருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
புராண காலத்தில் 4 வேதங்களும் பூஜை செய்தும், மூடிக்கிடந்த திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப்ப திகங்கள் பாடி திறந்ததாகவும் வரலாறு இக்கோவிலுக்கு உண்டு.
இந்த கோவிலில் சிவபெருமானும் பார்வதியும் திருமண கோலத்தில் அகத்தி யருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாண வரணி ஆதீனம், செவ்வந்திநாத பண்டார சன்னதி, கயிலைமணி வேதரத்தினம், கேடிலியப்பன் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் யாழ்ப்பாண வரணி ஆதினம், செவ்வந்தி நாதபண்டார சன்னதி ஸ்தத்தார், கயிலைமணி வேதாரத்தினம், கேடிலியப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சோழிய வேலாளர் சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- பரவையில் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் நடந்தது.
- சமயநல்லூர் அருகே உள்ள அதலையில் ராமலிங்க சுவாமிகள் கோவில் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது.
வாடிப்பட்டி
சமயநல்லூர் அருகே உள்ள அதலையில் ராமலிங்க சுவாமிகள் கோவில் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது. திருவிழாவை காண்பதற்காக பக்தர்கள் பரவை வழியாக சென்று வருகின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் பரவை பேரூராட்சியில் ராமலிங்க சுவாமிகள் அறப்பணி பேரவையின் 65-வது ஆண்டு விழா நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இதை பேரூராட்சி சேர்மன் கலா மீனாராஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜா அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
- அலங்காநல்லூர் அருகே சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தனிச்சியம் கிராமத்தில் அமைந்துள்ள சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 4 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் 4 கால சிறப்பு ஹோமங்கள் நடந்தன. மூலமந்திர ஹோமம், கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடானது. புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து பின்னர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூசாரி ஜெயசீலன் மற்றும் கோவில் பங்காளிகள், கிராம மக்கள் செய்தனர்.
- மேலூர் அருகே பட்ட சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டி கிராமத்தில் உள்ள பிரான்மலை திருமலைசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி பிரான்மலை ராமசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் யாகசாலையில் இருந்து காப்புகட்டிய பக்தர்கள் புனித தீர்த்ததை எடுத்து சென்றனர். பின்னர் கோபுர கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கோவில் முன்பு நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை கூத்தப்பன்பட்டி பெரியஅம்பலம், சின்னஅம்பலம் வகையாறவினர் செய்திருந்தனர்.
- இளையான்குடி அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகில் உள்ள ஆத்திவயல் ஆதிருடையவர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் அருகே யாகசாலை அமைத்து அதில் புனித நீர் கடங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. யாகத்தின் நிறைவில் பூர்ணாகுதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் மங்கள இசை முழங்க புனிதநீர் கடங்களை சுமந்து கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். அதன் பின்னர் ஆதிருடையவர் அய்யனார் சுவாமி மூலவர் விமானக் கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்குள் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். விமானக் கலசத்திற்கு தீபாரதனை கட்டப்பட்டதும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப.தமிழரசன் மற்றும் ஆத்திவயல், புக்குளி, மொச்சியேந்தல், சிறுபுக்குளி சுமாதரப்பு மற்றும் இதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். மதியம் கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- இரவு சுமங்கலி பெண்களுக்கான விளக்கு பூஜை நடைபெற்றது.
- ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுரபாஷாணி புரம்- காடந்தகுடியில் செல்வவிநாயகர், பாலமு ருகன், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த மாதம் (ேம) 30-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.
தொடர்ந்து, 31-ந்தேதி குழந்தைகளுக்கான அகல் விளக்கு பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நேற்று மதியம் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு சுமங்கலி பெண்களுக்கான விளக்கு பூஜையும் நடைபெற்றது.
இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் மஞ்சள் பொடி, குங்குமம், அருகம்புல், பச்சரிசி உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு வந்து அமர்ந்து விளக்கேற்றி பூைஜயில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதனை அடுத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பூஜையில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, இன்று (2-ந்தேதி) மாவிளக்கு போடுதல், பால்குடம், பால் காவடிகள் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மதியம் சிறப்பு அன்னதானமும், தொடர்ந்து, 3 மணிக்கு அம்மன் குளக்கரையில் இருந்து சடல் காவடி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதேபோல், நாளை (3-ந்தேதி) பாலமுருகன் வீதிஉலாவும், இரவு 7 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு வானவேடிக்கை நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரபாஷாணிபுரம்- காடந்தகுடி கிராமக்கள் செய்து வருகின்றனர்.
- க. உவரியில் புகழ்பெற்ற சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது.
- இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார்.
திசையன்விளை, ஜூன். 4-
க. உவரியில் புகழ்பெற்ற சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார். பக்தர்களுக்கு உணவுகளை வழங்கி இந்த சிறப்பு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரிவர உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் ராஜன், கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் வாழவந்த கணபதி பாலசுப்ரமணியம், எழில் ஜோசப், புளியடி குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழங்கினார்.
- கிளை செயலாளர்கள் அகிலன், சரவணன், மற்றும் முரளி, ஸ்டிபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை வழியாக வேளாங்கண்ணி சென்ற பக்தர்களுக்கு உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் காந்தி வீதி – ரெயில்வே நிலையம் சந்திப்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.
மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரெமிஎட்வின் தலைமை தாங்கினார்.
தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மராஜ், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குரு, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமரை க்கண்ணன், தொகுதி பொருளாளர் சசிகுமார், தொண்டரணி ராஜேஷ், வீரய்யன், சேட்டு, கிளை செயலாளர்கள் அகிலன், சரவணன், மற்றும் முரளி, ஸ்டிபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து பின்பு சுதர்சன யாகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி முதலியார் குத்தகை ராதா-ருக்மணி சமேத கிருஷ்ணா ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ஆலய பத்தாம் ஆண்டு சுதர்சன ஹோம கோகுலாஷ்டமி விழா நடைபெற்றது
முன்னதாக பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து பின்பு சுதர்சன யாகம் நடைபெற்றது.
பின்பு கேரளாசெண்டை மேளத்துடன் கிருஷ்ணர் கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
- வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சாமி கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. எக்ஸெல் ஜி. குமரேசன் தலைமை தாங்கினார்.
கோயம்புத்தூர் சென்னை ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் இதனை தொடர்ந்து கோவை தொழிலதிபர் ஏ.அன்பு அமுதா குடும்பத்தினர் தனது சொந்த செலவில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
இன்று காலை 7 மணி முதல் அன்னதானம் தொடங்கியது. கோவை தொழில் அதிபர் கோவை அன்பு அமுதா குடும்பத்தினர் அன்னதானத்தை வழங்கி விழாவை துவக்கி வைத்தார்.
ரைஸ் மில் ராஜா, மின்வாரிய அலுவலர் சுரேஷ், சென்னை மகேந்திரன், கவுன்சிலர் இனியன், வாழைப்பழம் மண்டி சதீஷ், ஹார்டுவேர்ஸ் ராஜேந்திரன், ரெயில்வே ஊழியர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 5 சனிக்கி ழமைகளில் அன்னதானம் வழங்கப்படும் மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.