என் மலர்
நீங்கள் தேடியது "Appreciation"
- இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
- புல்டோசர் எந்திரம் மூலம் மெகா பள்ளங்களை சரி செய்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி - சென்னை சாலை, பண்ருட்டி -கும்பகோணம் சாலைகுண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால்அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர் லாரி வெங்கடேசன் தனது சொந்த செலவில் டிப்பர் லாரிகளில் ஜல்லி, தார் ஆகியவை எடுத்து வந்து புல்டோசர் எந்திரம் மூலம் மெகா பள்ளங்களை சரி செய்தார். இவரது முயற்சியை பொது மக்கள் பாராட்டினர்
- 7 வாலிபர்களை போலீசார் பிடித்து ஆயுதங்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
- 48 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு.
வல்லம்:
தஞ்சை அருகே மாதாக்கோட்டை டான்போஸ்கோ தெருவை சேர்ந்தவர் செபஸ்டின்.
இவருடைய மகன் பிரின்ஸ்லாரா என்ற சின்னா(வயது28).
இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
சம்பவத்தன்று திருக்கானூர்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மாதாகோட்டையில் இருந்து சின்னா மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இதனை அறிந்த ஒரு மர்ம கும்பல் 3 மோட்டார் சைக்கிள்களில் சின்னாவை பின் தொடர்ந்து சென்று அவரை சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
சின்னாவை அக்கம்பக்கத்தினர் மற்றும் வல்லம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னா உயிரிழந்தார்.
இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் கொலையாளிகள் பதுங்கி இருந்த இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் வல்லம்- மருத்துவக்கல்லூரி சாலை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வளாக பகுதியில் மறைந்திருந்து அவ்வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 7 பேரையும் போலீசார் வல்லம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் தஞ்சை மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20), ராஜேஷ்(23), புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சேர்ந்த விஜய்(26), ஒரத்தநாட்டை சேர்ந்த விக்னேஸ்வரன்(21), நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த அஷ்ரப்அலி(19), கோரிகுளம் பகுதியை சேர்ந்த ஆகாஷ்(19), தஞ்சை விளார் ரோடு பகுதியை சேர்ந்த ஜெகதிஸ்வரன்( 28) என்றும் முன்விரோதம் காரணமாக இவர்கள் 7 பேரும் சேர்ந்து சின்னாவை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
இவர்களை போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
பின்னர் 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை நடந்த 48 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பாராட்டு தெரிவித்தார்.
- மாணவி வா்ஷினிக்கு பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
- குத்துச்சண்டைப் போட்டியில் ஆா்வமுள்ள இவா் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயிற்சி பெற்று வந்தாா்.
திருப்பூர்:
வெள்ளக்கோவில் - கரூா் சாலையில் உள்ள அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீ வா்ஷினி (16). குத்துச்சண்டைப் போட்டியில் ஆா்வமுள்ள இவா் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயிற்சி பெற்று வந்தாா்.
திருப்பூா் ஜெய்வாபாய் பள்ளியில் நடைபெற்ற திருப்பூா் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தாா். இதையடுத்து மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்றாா். மாணவி வா்ஷினிக்கு பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
- பள்ளி மாணவர்கள் 6 போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம்.
- தருமபுரம் ஆதீனம் மாணவர்களை பாராட்டி அருளாசி வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவர்களுக்கிடையே போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் குருஞான சம்பந்த மிஷன் மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 6 போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களை பள்ளியின் புரவலர் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆட்சி மன்ற குழுவின் தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாதன் தம்பிரான் சுவாமிகள், துணைத் தலைவர் முருகேசன், நிர்வாக செயலர் பாஸ்கர், செயலாளர் பாஸ்கர், முதல்வர் சரவணன், போட்டிக்கு தயார் செய்த ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- சாலை அகலம் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து திருக்கருகாவூர் வழியாக சாலியமங்களம் வரையிலான நெடுஞ்சாலையில் பல இடங்களில் குண்டு, குழி பள்ளங்கள் உருவாகி இருந்தன அதனால் வாகன ஓட்டிகள் தினசரி சிரமப்பட்டு வந்தனர்.
நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை அடுத்து சாலியமங்களத்தில் இருந்து பாபநாசம் வரையிலான சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடைபெற்றது இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலை புதுப்பிக்கும் பணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது
பாபநாசம் சாலியமங்களம் முக்கிய நெடுஞ்சாலையில் தினசரிநூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், இலகுரக, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன அதனால் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது சாலை அகலம் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
தற்போது சாலையை விரிவாக்கம் செய்து அகலமாக சாலையை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதனால் இந்த சாலையை பயன்படுத்தகூடிய பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாலை புதுப்பிக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல் குறையும் என நினைக்கிறோம் என தெரிவித்தனர்.
- மானாமதுரை அருகே சிலம்பத்தில் உலக சாதனை படைத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
- கிராம பெண்கள் வாழ்கையில் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என முன் உதாரணமாக வெற்றி பெற்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே திருப்பாசேத்தி மலவராய னேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாலன். இவரது மகள் செல்வ பிரியா (வயது 21). இவர் சிறுவயதில் இருந்தே சாதனை படைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஓவிய போட்டி, தடகள போட்டி, படிப்பு என எல்லா வற்றிலும் திறமையை மெருகேற்றிக் கொண்ட இவர் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திலும் பயிற்சி பெற்று அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கும் வகையில் கோலோச்சி இருக்கிறார். பி.எஸ்.சி. பட்டப்படிப்பு முடித்த இவர் சிலம்ப மாஸ்டர் குமாரிடம் முறையாக கற்று தினமும் பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடை பெற்ற உலக சாதனைப்போட்டியில் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி செல்வ பிரியா உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனைக்கு அவரது பெற்றோர் மற்றும் பேராசிரியைகள் ஜெபா, சுகன்யா உள்ளிட்ட பலர் உறுதுணையாக இருந்துள்ளனர். தொடர்ந்து செல்வபிரியா தனது கிராமத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார்.
கிராம பெண்கள் வாழ்கையில் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என முன் உதாரணமாக வெற்றி பெற்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிவகங்கையில் என்னைப்போல் சாதிக்க பல்வேறு பெண்கள் இருக்கி றார்கள். அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும், வாய்ப்பையும் கொடுக்க வேண்டும் என்றார்.
- தாயன்பிற்கு ஈடாக அன்பு காட்டி மனிதநேயத்தை வளர்த்து அதன்வழி ஆக்கப்பூர்வமான காரியங்களை செயல்படுத்த வேண்டும்.
- பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகரத்திற்குட்பட்ட ஏழை, எளிய அன்றாட கூலி தொழில் செய்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும், வருமானம் இல்லாமல் முடங்கி கிடக்கும் மக்களுக்கு உதவி செய்யும் வகையிலும் தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் விலையில்லா அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஜோதி அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:- மனிதனிடம் இருக்கும் பல்வேறு ஆக்கப்பூர்வான எண்ணங்கள் சொல் வடிவம் பெறாமல் போவதற்கு அவர்களுக்கு அன்பும், ஆதரவும், அரவணைப்பும் கிடைக்காமல் போனதே காரணம். இந்த நிலை இருக்க கூடாது.
தாயன்பிற்கு ஈடாக அன்பு காட்டி மனிதநேயத்தை வளர்த்து அதன்வழி ஆக்கப்பூர்வமான காரியங்களை செயல்படுத்த வேண்டும் என்றார். மேலும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோர் மற்றும் முதியோர் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர். பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.
- தி.மு.க. மாநில மாணவரணி தலைவராக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எவ்வாறு உழைத்து வருகிறார் என்பது குறித்து பேசிவருகிறார்.
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் இரா.ராஜீவ் காந்தி. சென்னை உயர்நீதிமன்ற வக்கீலான இவர் தி.மு.க.வின் மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் இவருடைய கட்சி பணிகள் மிகச் சிறப்பாக இருந்து வந்துள்ளன. இவருடைய செயல்பாடுகள் குறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு கூட்டங்களில் ராஜீவ் காந்தியைப் பாராட்டி வாழ்த்தி பேசியுள்ளார்.
மாணவர் இயக்கங்களை ஒன்றிணைத்து செயல்பட க்கூடிய திறமை மிக்கவரான வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் கட்சி பணியை பாராட்டி தற்போது அவரை மாநில மாணரவணி தலைவராக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
சாதாரண கிராமத்தில் பிறந்து வளர்ந்து சென்னை யில் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பணியாற்றி வரக்கூடிய ராஜீவ்காந்தி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் இல்லம் தோறும் இளைஞர் அணி என்ற திட்டத்தின் மூலம் இளைஞர் அணியில் சேரும் உறுப்பினர்களுக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை மூலம் தி.மு.க.வின் கொள்கை, வரலாற்று சாதனைகள் குறித்து மாவட்டங்கள் தோறும் நடத்தி வந்த திராவிட மாடல் நிகழ்ச்சிகளில் அதிகமான கூட்டங்களில் கலந்துகொண்டு ராஜீவ்காந்தி பேசினார். மேலும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று திராவிட ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எவ்வாறு உழைத்து வருகிறார் என்பது குறித்து பேசிவருகிறார்.
மாநில மாணவரணி தலைவராக அறிவிக்க ப்பட்ட இரா.ராஜீவ் காந்தி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இதுபோல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளை வாழ்த்துக்களை பெற்றார்.
ராஜீவ் காந்தி கட்சியில் இணைந்த சில வருடங்களில் அவரது அயராது கட்சி பணி மூலம் தி.மு.க.வில் உயர்ந்த பதவி வழங்கியிருப்பது வரவேற்பு பெற்றுள்ளன. தி.மு.க.வின் மாநில மாணவரணி தலைவராக பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு நேரிலும் மற்றும் வலைதளங்களிலும் பாராட்டுக்களும், வாழ்த்து க்களும் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
- மதுரை ஐகோர்ட்டில் 3 மாதங்களில் 6 ஆயிரத்து 300 வழக்குகளை நீதிபதிகள் விசாரித்தனர்.
- இதற்கு உறுதுனையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள் தெரிவித்தனர்.
மதுரை
மதுரை ஐகோர்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு, பிரதான அமர்வாக இருந்து, பொது நல வழக்குகள், ஆக்கிரமிப்புகள், மேல் முறையீட்டு வழக்குகள் உள்ளிட்டவற்றை விசாரித்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, நீதிபதிகள், கடந்த (3 மாதங்களில்) செப்டம்பர் முதல் நவம்பர் வரை 6 ஆயிரத்து 300 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளோம்.
இதற்கு உறுதுனையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள் என்றும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறி ஞர்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தனர்.
- இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் நடுநிலைப் பள்ளி தமிழகத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டதையொட்டி வாழ்த்து தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
- விழாவில் வாழ்த்தி பேச வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் நடுநிலைப் பள்ளி தமிழகத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டதையொட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக பள்ளியில் பயிற்றுவிக்கும் தலைமை ஆசிரியர் உட்படஅனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்தவர்களை தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியம் வரவேற்று பேசினார்.இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உப தலைவர் எஸ். பரமசிவம் , திருப்பூர் நிலவள வங்கி இயக்குனர் கே.ஈஸ்வரன், இடுவாய் ஊராட்சியின் முன்னாள் உப தலைவர் எஸ் சொக்கப்பன் ,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கணேசன், மணி, பூவதிபிரகாஷ் , கூட்டுறவு சங்க இயக்குனர் இந்திராணி , வள்ளுவர் நகர் சின்ராஜ் , பள்ளி மாணவ மாணவிகள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தலைமையாசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியம் , உடன் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் ஊராட்சி தலைவர் கணேசன் , விழாவில் வாழ்த்தி பேச வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். பள்ளியின் முடிவில் துணை தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்தார்.
- அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆலோசனை செய்து அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டன.
சென்னை:
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேத்தில் காற்று பலமாக வீசியது.
இதனால் பெரும்பலான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாலைகளில் சாய்ந்த மரங்களை மாநகராட்சி பணியாளர்கள் இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கனமழையின் காரணமாக மின்வெட்டு இருந்த போதும் அவை உடனடியாக சரிசெய்யப்பட்டன.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்கூட்டியே பேரிடர் அமைப்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக அரசு இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆலோசனை செய்து அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்து.
இந்நிலையில் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள்! தமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தினை முன்னிட்டு ரத்ததான முகாமினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி தேசிய தன்னார்வ ரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது. 2020-21ம் வருடத்திற்கான முழக்கம் ஒற்றுமையுடன் இரத்த தானம் செய்வோம், ஒருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களை காப்போம் என்பது முன் வைக்கப்பட்டு
ரத்ததான முகாம் மற்றும் ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 4 அரசு ரத்த மையங்கள் உள்ளன.
4 அரசு இரத்த மையங்களில் 2021-22ம் ஆண்டில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10701 யூனிட்டும், அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனையில் 6767 யூனிட்டும், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணத்தில் 2774 யூனிட்டும் மற்றும் அரசு மருத்துவமனை பட்டுக்கோட்டையில் 1912 யூனிட் ஆக மொத்தம் 22154 யூனிட் கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவர் 2021-22ம் ஆண்டில் அரசு இரத்த மையங்களுக்கு ரத்த தான முகாம் நடத்திகொடுத்த 69 ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பா ளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், மாவட்ட திட்ட மேலாளர் ஜெனிபர் அருள் மேரி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் வேல்முருகன், மருத்துவர்கள் வரதராஜன், ராதிகா மைக்கேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.