என் மலர்
நீங்கள் தேடியது "Army"
- பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
- எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்:
உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.
இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.
ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.
- ராணுவத்திற்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 4-வது நாளாக உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
- இன்றுடன் (புதன்கிழமை) இந்த பணிகள் நிறைவடைகிறது.
பெரம்பலூர்:
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்த பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ஏற்கனவே கணினி வாயிலாக எழுத்து தேர்வு நடந்தது. முதற்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 600 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பு பணிகள் பெரம்பலூரில் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது நாளாக இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு-சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. இன்றுடன் (புதன்கிழமை) இந்த பணிகள் நிறைவடைகிறது.
- 4 ஹெலிகாப்டர்களும் தொடர்ந்து உணவு வினியோகித்து வருகின்றன.
- அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட முதியவர் ஒருவரையும், கர்ப்பிணி பெண் ஒருவரையும் மீட்டனர்.
தூத்துக்குடியில் மழை ஓய்ந்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் பல கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப் பட்டுள்ளது. பல இடங்களில் ஆபத்தான அளவுக்கு தண்ணீர் ஓடி கொண்டிருக் கிறது. இதனால் யாரும் அந்த கிராமங்களுக்குள் செல்ல முடியவில்லை.
154 ராணுவ வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள். இது தவிர பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
ராணுவ வீரர்கள் சிறு சிறு ரப்பர் படகுகளில் உணவு, தண்ணீரை கொண்டு கிராமங்களில் வினியோகிக்கி றார்கள். ஆபத்தான இடங்களி லும் கயிறு கட்டி தண்ணீருடன் போராடி பணி செய்கி றார்கள். ராணுவம், பேரிடர் மீட்புக் குழுவினர் உயிரை யும் பணயம் வைத்து சென்று உதவி வருவதை பொது மக்கள் பாராட்டுகிறார்கள்.
தரை வழியாக ராணுவ வீரர்கள் உதவி வரும் நிலை யில் கடற்படை மற்றும் விமானப் படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர் களும் தொடர்ந்து உணவு வினியோ கித்து வருகின்றன.
ஹெலிகாப்டர் சத்தம் கேட்டால் பொதுமக்கள் வீடுகளின் மொட்டை மாடிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தாழ்வாக பறந்து உணவு பொட்ட லங்களை போடுகிறார்கள்.
ஒரு இடத்தில் காலியான பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நின்றனர். அந்த பகுதியில் காற்றின் வேகமும் குறைவாக இருந்ததால் கைக்கு எட்டுவது போல் ஹெலிகாப்டரை தாழ்வாக பறக்க செய்து வாசலில் இருந்த படி வீரர் ஒருவர் உணவு பொட்டலங்களை வழங்கினார்.
வைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று மட்டும் 3.2 டன் உணவு பொட்டலங்களை வினியோகித்தனர். இன்றும் உணவு வினியோகத்தை தொடர்ந்து அவசர மருத்துவ உதவி தேவைப் பட்ட முதியவர் ஒருவரையும், கர்ப்பிணி பெண் ஒருவரை யும் மீட்டனர்.
- எல்லை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
- ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்
ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்பி சென்ற நிலையில், அவர்களை தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் நிலவரம் குறித்து கடந்த 2-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீசார் இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் அதிகரிப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, ஜன.9 அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார். அங்கு எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
- மாலத்தீவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என மாலத்தீவு அதிபர் திட்டவட்டம்.
- சீன அதிபருடனான சந்திப்பை தொடர்ந்து, இந்திய ராணுவம் வெளியேற உத்தரவிட்டுள்ளார்.
தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் பெற்று கடந்த மாதம் அதிபராக தேர்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப்படி நாட்டின் 8-வது அதிபராக அந்நாட்டு தலைமை நீதிபதியின் முன்னிலையில் பதவியேற்றார்.
சீன ஆதரவு நிலைப்பாடு உள்ள முகமது மூயிஸ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டி இனி எந்த நாட்டு ராணுவத்திற்கும் இடம் கிடையாது என அறிவித்தார். மேலும், மாலத்தீவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் எனவும் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தினரை திரும்ப பெற வேண்டும் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் சீன பயணம் மேற்கொண்ட முகமது முய்சு, சீன அதிபர் சீ சின்பிங்-யை சந்தித்து பேசினார். சீன அதிபருடனான சந்திப்பை தொடர்ந்து, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாலத்தீவு அதிபரின் இந்த அறிவிப்பு இந்தியா மாலத்தீவு இடையிலான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.
சுமார் 70-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் மாலத்தீவில் உள்ள ரேடார் நிலையங்களையும், கண்காணிப்பு விமானங்களையும் பராமரித்து வருகின்றனர்.
சீன ஆதரவாளர் முகமது முய்சு, தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் முழுவதும் வெளியேற நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
- காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
- துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் துணை ராணுவ படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவ வீரர்களுக்கு திருத்தணி போலீஸ் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
இதற்காக கோழிக்கறி வறுவல், கோழிக்கறி கிரேவி மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகள் தடபுடலாக சமைக்கப்பட்டு, துணை ராணுவ வீரர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த துணை ராணுவ வீரர்களுக்கு போலீசார் அசைவ விருந்து வைத்த சம்பவம் பொது மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
- ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்தது.
- பொது மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவு.
கடந்த ஆண்டு அக்போடர் மாத துவக்கத்தில் இஸ்ரேல் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், கண்ணில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது.
இந்த கொடூர சம்பவம் காரணமாக ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த துவங்கியது. கடந்த ஏழு மாதங்களாக காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசா எல்லையின் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா நகரத்தில் வசிக்கும் பொது மக்கள் விரைந்து அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.
புதிய திட்டமிடலின் கீழ் பெய்ட் லஹியாவில் உள்ள ஹமாஸ் உள்கட்டமைப்பு பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட இருப்பதால் இந்த அறிவிப்பை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"நீங்கள் மிகவும் அபாயகரமான போர் மண்டலத்தில் இருக்கின்றீர்கள். உங்களை காப்பாற்றிக் கொள்ள உடனடியாக இந்த பகுதியில் இருந்து வெளியேறிவிடுங்கள்," என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே குறிப்பிட்டுள்ளார்.
- உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
- இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நேற்று நிறைவடைந்தது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன் அயலான் திரைப்படத்தில் நடித்து குடும்பங்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அமரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மறைந்த இந்தியா ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் அமரன்.
இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நேற்று நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இன்று அமரன் படக்குழுவினர்க்கு சிவகார்த்திகேயன் விருந்தளித்தார். படத்தில் பணிப்புரிந்த அனைவரும் இதல் கலந்துக் கொண்டனர். அவர்களுக்கு அன்பாக பிரியாணி பரிமாரும் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதனுடன் கூடிய விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமரன் படம் அமையும் என்று கருதப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மணிப்பூரின் தலைநகர் இம்பால் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தால் மூன்று அதிநவீன வெடிகுண்டாக IED செயலிழக்கச் செய்யப்பட்ட்டுள்ளது.
- வழக்கமாக கண்காணிப்பு ரோந்தின்போது இராணுவ வீரர்கள் மூன்று IEDகள், சாலையோரம், ஒன்றாக வைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர்.
மணிப்பூரின் தலைநகர் இம்பால் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தால் மூன்று அதிநவீன வெடிகுண்டாக IED செயலிழக்கச் செய்யப்பட்ட்டுள்ளது.46 கிமீ இடைவெளியில் உள்ள நோங்டாம் மற்றும் இத்தம் கிராமங்களை இணைக்கும் சாலையில் ஐஇடி வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
வழக்கமாக கண்காணிப்பு ரோந்தின்போது இராணுவ வீரர்கள் மூன்று IEDகள், சாலையோரம், ஒன்றாக வைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர். துரிதமாக செயல்பட்ட ராணுவம், அந்த சாலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் குழு அந்த இடத்திற்கு வந்து IED குண்டுகளை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தது. இதனால் கிராமப் பகுதியில் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குக்கி- மெய்தேய் பழங்குடியினருக்கு இடையே மோதல்கள் வெடித்து ஒரு ஒரு வருடத்திற்கும் மேலாகியும் அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

இதனால் மணிபூர் தலைநகர் இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலையடிவாரங்களுக்கு அருகில், இரு சமூகங்களின் கிராமங்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் சாலையில் வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என்று ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.
- ஒரு ராணுவ அதிகாரியின் வீட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
- ராணுவ வீரர்கள் காவலர்களை தாக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் காவல்நிலையத்தில் நுழைந்த ராணுவ வீரர்கள் அங்குள்ள காவலர்களை தாக்கியதில் 4 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ரயீஸ் கான், இம்தியாஸ் மாலிக், சலீம் முஷ்டாக், ஜாகூர் அஹ்மத் ஆகிய 4 காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கொலை முயற்சி, அரசு ஊழியரை பனி செய்ய விடாமல் தடுத்தல், பணியில் இருக்கும் அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் 16 ராணுவ வீரர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 16 பேரில் 3 பேர் லெப்டினல் கர்னல் பதவியில் இருக்கும் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ அதிகாரியின் வீட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர்கள் காவல்நிலையத்தில் உள்ள காவலர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
காவல்நிலையத்திற்குள் ராணுவ வீரர்கள் புகுந்து காவலர்களை தாக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை அதிகாரிகளை ராணுவ வீரர்கள் தாக்கியதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை என்றும் காவல்துறையினருக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனை இப்போது பேசி தீர்க்கபட்டுள்ளது என்று இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- 'நாகாஸ்திரா-1' ட்ரோன் முதல் தொகுப்பு இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
- 9 கிலோ எடை கொண்ட நாகாஸ்திரா ட்ரோன், வானில் 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது.
புதுடெல்லி:
நாக்பூரைச் சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் எகனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் (இஇஇஎல்) நிறுவனம் 'நாகாஸ்திரா-1' ட்ரோனை உருவாக்கி உள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'நாகாஸ்திரா-1' ட்ரோன் முதல் தொகுப்பு இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
எதிரிகளின் இலக்கை கச்சிதமாக தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா-1 என்ற தற்கொலைப்படை ட்ரோன் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாகாஸ்திரா-1 ட்ரோன்கள் எதிரிகளின் பயிற்சி முகாம்கள், ஏவுதளங்கள் மற்றும் ஊடுருவல்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. எனவே ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.
இந்திய ராணுவம் இஇஇஎல் நிறுவனத்துக்கு 480 ட்ரோன்களை ஆர்டர் செய்தது. அவற்றில் 120 நாகாஸ்ட்ரா-1 ட்ரோன்கள் ராணுவ வெடிமருந்து கிடங்கிற்கு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகாஸ்திரா-1 என்ற ராணுவ ட்ரோனை மனிதர்கள் எளிதில் எடுத்துச்செல்ல முடியும். 9 கிலோ எடை கொண்ட நாகாஸ்திரா ட்ரோன், வானில் 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது. 30 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா ட்ரோன்கள் 200 மீட்டர் உயரம் வரை வானில் எளிதாக பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- இஸ்ரேல் லெபனானுக்கு ராணுவத்தை அனுப்பும் பட்சத்தில் இஸ்ரேல் மீது தீவைரமான போரை முன்னெடுப்போம் என்று நேற்று நடந்த ஐ.நா கவுன்சில் கூட்டத்தில் ஈரான் எச்சரித்துள்ளது.
- ஹிஸ்புல்லா பிரச்னையை தீர்க்க வழி தேடி வருவதாகவும் அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர்
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இஸ்ரேல் நடத்திய டதாக்குதலில் காசாவில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் - ஹிபுல்லா - இஸ்ரேல் விவகாரம்
பலஸ்தீனத்துக்கு ஆதரவாக உலக நாடுகள் பல குரல் கொடுத்து வருகிறது. குறிப்பாக ஈரான் இந்த விவகாரதத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. ஈரானில் பிரதானமாக இயங்கி வரும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. பாலஸ்தீன் லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி நடத்தி வருகிறது.
ஈரான் எச்சரிக்கை
இதனால் ஹிஸ்புல்லா எல்லையை விட்டு நீங்க வில்லையென்றால் லெபனானில் ராணுவ நடவைடிகைகளை மேற்கொண்டு ஹெஸ்புல்லாவை துடைதெரிய இஸ்ரேல் நேரம் பார்த்து காத்திருக்கிறது. இந்த நிலையில்தான் இஸ்ரேல் லெபனானுக்கு ராணுவத்தை அனுப்பும் பட்சத்தில் இஸ்ரேல் மீது தீவைரமான போரை முன்னெடுப்போம் என்று நேற்று நடந்த ஐ.நா கவுன்சில் கூட்டத்தில் ஈரான் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து
இதற்கு பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், இந்த ஒரு கருத்தே ஈரான் அரசை முழுவதுமாக அழித்தொழிக்க போதுமான காரணம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோகாவ் காலண்ட் சுமூகமான முறையில் ஈரான் - ஹிஸ்புல்லா பிரச்னையை தீர்க்க வழி தேடி வருவதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அதிபர் தேர்தல்
இதற்கிடையில் முன்னாள் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஷி (Ebrahim Raisi) ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தநிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்த நிலையில் ஈரான் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகக் குறைவாக 39.93 சதவீத வாக்குகளே பதிவாகின.

மேலும் நேற்று வெளியான இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்காததால் வரும் ஜூலை 5 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக மீண்டும தேர்தல் நடத்தப்படும் என்று அறிகிக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு நீதித் துறை தலைவர் இப்ராஹிம் ரய்லி உட்பட அந்நாட்டின் அணுசக்தி துறையின் முன்னாள் ஆலோசகர் சயீத் ஜலீல், முன்னாள் தளபதி மோசின் ரேசாய், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ரசா ஜகானி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹுசைன் காஜிஸ்தி, அந்நாட்டு மத்திய வங்கியின் தலைவர் அப்துல் நசீர் ஹிம்மதி, மிதவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியனி ஆகியோர் போட்டியிட்டனர்.
