என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Arrangements"
- ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலாய காட்சி திருவிழா நடைபெறும்.
- போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலாய காட்சி திருவிழா நடைபெறும். அதன்படி வருகிற ஆடி அமாவாசையையொட்டி இந்த திருவிழா நடைபெறுவது தொடர்பாக திருவையாறு தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் பழனியப்பா தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில், திருவிழாவில் போலீசாரின் மூலம் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் காவிரி ஆற்றில் உரிய தடுப்பு வசதிகள் , மின்சார துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரூராட்சி மூலம் குடிநீர், சுகாதார வசதிகள் செய்ய வேண்டும், ஐயாறப்பர் கோவில் நிர்வாகம் மூலம் ஆகம விதிகளின்படி விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதில் பேரூராட்சி துணை தலைவர் நாகராஜன், போலீசார், பொதுப்பணித்துறையினர், மின்வாரிய அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், திருக்காஞ்சி கோவில்களுக்கும் ஜனாதிபதி செல்கிறார்.
- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரி வாக ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 6,7-ந் தேதிகளில் புதுவைக்கு வருவதாக கூறப்பட்டது.
6-ந் தேதி சென்னையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார். இதனால் 7, 8-ந் தேதிகளில் புதுவைக்கு ஜனாதிபதி வருகிறார். புதுவை கடற்கரை சாலை நீதித்துறை விருந்தினர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி, ஜிப்மர் கலையரங்கில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
8-ந் தேதி ஆரோவில் செல்கிறார். இடையே மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், திருக்காஞ்சி கோவில்களுக்கும் ஜனாதிபதி செல்கிறார்.
ஜனாதிபதி வருகையையொட்டி அவர் தங்குமிடம், செல்லும் பாதைகள், விழா இடங்களில் பாதுகாப்பு குறித்து டி.ஜி.பி. சீனிவாஸ் தலைமையில் ஆலோ சனைக்கூட்டம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பிரஜேந்தி ரகுமார் யாதவ், அனிதாராய், நாராசை தன்யா, சூப்பிரண்டுகள் செல்வம், மாறன், மோகன்குமார், ரவிக்குமார், சுவாதிசிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரி வாக ஆலோசிக்கப்பட்டது.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டுகள் பழமையான சீதேவி, பூதேவி சமேத சென்றாயப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
- தேர்த்திருவிழாவை யொட்டி நேற்று மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக ளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டுகள் பழமையான சீதேவி, பூதேவி சமேத சென்றாயப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு, ஆங்கி லேயர் ஆட்சி காலத்தில், 1942–ம் ஆண்டு ஆவணி மாதம் 12 –ந் தேதி, ரூ.750 செலவில் தத்ரூபமான சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரமாண்டமான மரத்தேர் உருவாக்கப்பட்டது.
இந்த பழைய மரத்தேர் வலுவிழந்ததால், ரூ.20 லட்சம் செலவில், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய மரத்தேர் அமைக்கப்பட்டது. இதனை யடுத்து, தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.. தேர்த்திருவிழாவை யொட்டி நேற்று மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக ளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) சென்றாயப்பெருமாள், பூதேவி, சீதேவியருக்கு சிறப்பு அபிசேக ஆராதனை களும், திருக்கல்யாண வைபோவமும், உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா உற்சவமும் நடைபெறு கிறது.
இதனையடுத்து, நாளை (சனிக்கிழமை) காலை திருத்தேர் நிலை பெயர்த்த லும், தொடர்ந்து ஊரணி பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் தீர்க்கும் நிகழ்வுகளும், மாலை 3 மணிக்கு ராஜவீதிகளில் தேரோட்டமும் நடைபெறு கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- ராஜபாளையம் அருகே அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சி யார்பட்டி மாரியப்பன் செய்திருந்தார்.
ராஜபாளையம்
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜ பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா சத்திரப்பட்டி நடுத்தெருவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ராஜபாளையம் கிழக்கு ஒன்றியசெயலாளரும், கூட்டுறவு வங்கி தலை வருமான குறிச்சியார்பட்டி மாரியப்பன் வரவேற்று பேசினார். கிளைக் கழகச்செயலாளரும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான முருகபூபதி, சத்திரப்பட்டி கிளை செயலாளரும், ஒன்றிய அவைத்தலைவருமான முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரும், கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான மா.பா.க.பாண்டியராஜன் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தலைமைக்கழக பேச்சா ளர்கள் சவுண்ட் சரவணன், மதுரை முத்தரசு, சரவெடி சம்சுகனி பேசினர்.
கூட்டத்தில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் சண்முக கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மேற்குஒன்றிய செயலாளர் மணிகண்டன், மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணபதியாபுரம் கிளை செயலாளரும், ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான சேகர் மற்றும் லட்சுமணன், முத்து கணபதி நன்றி கூறினர். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சி யார்பட்டி மாரியப்பன் செய்திருந்தார்.
- ஆம்னி பஸ், லாரிகள் நுழைய அனுமதிக்காமல் புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட வேண்டும்.
- இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.
ராமநாதபுரம்
கீழக்கரையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் கீழக்கரை கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி சார்பில் மனு அளித்தனர்.
இது குறித்து அந்த நிர்வாகிகளை அழைத்து கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி அவைத்தலைவர் சீனா தானா (எ) செய்யது அப்துல் காதர் தலைமையில் குழுவினர் கலெக்டரிடம் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து கீழக்க ரையில் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த வி. ஏ. ஓ. அலுவலகம் மற்றும் பீசா பேக்கரி பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து கண்காணிப்பதோடு அதன் மூலம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.
கீழக்கரை நகராட்சியுடன் இணைந்து காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஊருக்குள் வரும் கனரக வாகனங்கள், லாரிகள், ஆம்னி பஸ்களை ஊருக்குள் அனுமதிக்காமல் புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசுக்கு கலெக்டர் பரிந்துரைத்தார்.
திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி செல்லும் தொலைதூர பஸ்கள் கீழக்கரை புதிய பஸ் நிலையம் வரை வந்து செல்லவும் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். விரைவில் கீழக்கரையில் போக்குவரத்து காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் கீழக்கரை காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி தலைவர் சாகுல்ஹமீது ஆலிம், துணை தலைவர்கள் உமர் களஞ்சியம், செய்யது அபுதாஹிர், பொருளாளர் ஷபீக், சமூக ஆர்வலர் ஜஹாங்கீர் ஆலிம், ஏர்வாடி தீயணைப்பு நிலைய கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் கூறு கையில், கலெக்டரின் அறிவுரையின்படி, முதற்கட்டமாக நகராட்சி சேர்மன், அதிகாரிகள், மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி வாகனங்கள் நகருக்குள் வந்து செல்ல நேர கட்டுப்பாடு தீர்மானிக்கப்படும். அதன் பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்கள் உள்ளே செல்வதற்கு தடை ஏற்படுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது என்றார்.
- ஜூனியர் பெடரேசன் கோப்பை ஆண்கள்-பெண்கள் கபடி போட்டி நடந்தது.
- போட்டிகளில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மதுரை
உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் வகையில் ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டிகள் மதுரையில் 3 நாட்கள் நடக்கிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம் ஆகியோர் கூறியதாவது:-
6-வது ஜூனியர் பெட ரேஷன் கோப்பைக்கான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நாளை (1-ந்தேதி) முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி அளவில் செல்லூர் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கபடி வீரர்கள் சிலை முன்பிருந்து வீரர் -வீராங்கனை களின் அணிவகுப்பு நடைபெறுகிறது.
இந்த அணி வகுப்பினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்கள். தொடர்ந்து முதல் நாள் கபடி போட்டி நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், கலந்து கொள்கிறார்கள்.
2-ந்தேதி 2-ம் நாள் போட்டிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்கள். கடைசி நாளாக 3-ந் தேதி போட்டி களை தளபதி எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகள், மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.
மதுரையில் நடைபெறும் இந்த கபடி போட்டிகளில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், இந்திய விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யம், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய அணி களும், பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இமாச்சலப்பிரதேஷ், இந்திய விளையாட்டு ஆணையம், தெலுங்கானா, மராட்டியம், சண்டிகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய அணிகளும் மோதுகின்றனர்.
இந்த போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்ப டுகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஊக்க தொகையாக முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.30 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரம் வழங்கப்படு கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணி வீரர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந் தேதி ஈரானில் நடைபெறும் உலக கோப்பை கபடி போட்டிக்கான இந்திய ஆண்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தஞ்சை மாநகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.
- சாலை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை நிறுவி தமிழர்களின் கட்டிடக்கலையை உலகறிய செய்த சோழப் பேரரசன் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் "சதய விழா"வாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா பரவலால் 1 நாள் விழா மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் வழக்கம்போல் 2 நாள் விழாவாக நடைபெறுகிறது.
அதன்படி நாளை தொடங்கும் விழா நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது. இதனால் தஞ்சை மாநகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.
தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பெரிய கோவிலில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது மேயர் சண். ராமநாதன் கூறியதாவது :-
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா 2 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டை விட , இந்த ஆண்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் வந்தாலும் அதற்கேற்றவாறு பல்வேறு வசதிகளை செய்ய மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி 3 -ம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் தலைமையில் சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
- 7 இடங்களில் விநாயகா் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
- விநாயகா் சதுா்த்தி விழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி தினத்தில் 300 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்ட இடங்களிலேயே இந்த ஆண்டும் அமைக்க–ப்படுகிறது. விநாயகா் சதுா்த்தி பூஜைக்கு பிறகு சிலைகள் மாவட்டத்தின் 7 இடங்களில் கரைக்கப்பட உள்ளன.
ராமேசுவரத்தில் 2 இடங்களிலும், ராமநாதபுரம், பரமக்குடி, தேவிப்பட்டினம், நரிப்பையூா், மண்டபம் ஆகிய இடங்களிலும் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. வருகிற 1 மற்றும் 2-ந்தேதிகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு அளித்த விதிமுறைகளின்படி சிலைகள் தயார் செய்து வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் விநாயகா் சிலை ஊா்வலமும் அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே நடைபெறும். விநாயகா் சதுா்த்தி விழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட பா. ஜனதா தலைவர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகிறார். அவர் நாளை (13-ந்தேதி) மாலை ராமநாதபுரம் மாவட்டம் வருகிறார்.
அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூர் மரிச்சுக்கட்டியில் மாலை 6 மணிக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு குமரையா கோவில் அருகில் உள்ள தனியார் லாட்ஜில் தங்குகிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் ராமநாதபுரம் முதல் தனுஷ்கோடி வரை 60 கி.மீ., தூரம் சாலையின் இருபுறமும் மூவர்ண தேசிய கொடிகள் கட்டி பறக்க விடப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. 14-ந்தேதி காலையில் மூவர்ண தேசிய கொடியுடன் ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து கோதண்டராமர் கோவில் வரை கடலை சுற்றி வருகிறார்.
அதன் பின்பு பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து 75 தேசிய கொடி ஏந்தி 75 நாட்டுப்படகில் குந்துகால் செல்கிறார். சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாடு சென்று விட்டு குந்துகால் வந்து இறங்கிய போது மன்னர் பாஸ்கர சேதுபதி எவ்வாறு வரவேற்பு அளித்தாரோ? அதே போன்று வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை பார்வை யிட்டு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.பின்பு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாநில தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ராமேசுவரம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் மதிய உணவு அருந்து கின்றனர்.
குந்துகால் பகுதியில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் பட்டிணம்காத்தானில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற மையக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
அதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், பூத் சஷக்திகரன் பொறுப்பாளர்கள் கூட்டம், பிரவாஸ் யோஜனா பொறுப்பாளர்கள் கூட்டம் முடித்து விட்டு மாலை 5.30 மணி அளவில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் நாட்டுபடகு மீனவ பிரதிநிதிகளை சந்தித்து விட்டு அவர் சென்னை திரும்புகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்