search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrest warrant"

    • இஸ்ரேல் அளித்த அறிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம் மூவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
    • இஸ்ரேல் மனிதநேய விரோத செயல்களில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த காசா இனப்படுகொலை வழக்கில் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட், ஹமாஸ் தலைவர் முகமது தியாப் ஆகியோருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீன மக்களின் மரணம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த அறிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம் மூவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    போர் என்ற பெயரில் இஸ்ரேல் மனிதநேய விரோத செயல்களில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட 124 ICC உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் இவர்கள் நுழைந்தால் கைது செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

    • நீதி மன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.

    அரியலூர்:

    2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீதும் வெங்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதற்கான குற்றபத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக அரியலூர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆஜராகாமல் இருந்துள்ளார்.

    இதனால் அவர் மீது அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்நீதி மன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி அரியலூர் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

    போக்குவரத்திற்கு இடையூறாக பொதுமக்கள் பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அரியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாராணைக்கு ஆஜராகாத கந்தர்வக் கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. சின்னதுரைக்கும் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வாரன்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட் பிறப்பிப்பு.
    • ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான இது தொடர்பான வழக்கை கர்நாடக மாநில டிஜபி, சிஐடி-க்கு மாற்றினார்.

    சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட்-ஐ பிறப்பித்துள்ளது. இதனால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், எடியூரப்பாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பிடிவாரண்டுக்கு எதிராக எடியூரப்பா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படம் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள பிரஜ்வலை கைது செய்ய சர்வதேச அளவில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பிரஜ்வல் ஆபாச வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தேவராஜ கவுடா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஆபாச படங்கள் வெளியான இணையதளங்கள் குறித்த பட்டியலை சேகரித்து அவற்றை நீக்க சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த ஆபாச படங்கள் இருந்தால் அழிக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரஜ்வல் கர்நாடகாவில் யார், யாருடன் தொடர்பில் இருந்து வருகிறார் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில்,பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஐந்து முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஏற்கனவே ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • அரியலூர் அருகே வழிப்பறி கொள்ளை வழக்கில் கோர்டுக்கு வராத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு நீதிபதி உத்தரவு
    • இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் தளவாய் போலிஸ் சரகம் முள்ளுக்குறிச்சி கிராமத்தை சார்ந்தவர் ராஜாராம் இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார், இவர் கடந்த 27.5.2019 அன்று 3மணியளவில் இருசக்கர வாகனத்தில் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது 2 வாலிபர்கள் பின்தொடர்ந்து ராஜாராமை வழிமறித்து தாக்கி இருசக்கரவாகனத்தை பிடுங்கிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர், ராஜாராம் கொடுத்த புகார் கொடுத்ததின் பேரில் தளவாய் போலிசார் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்டம் கருங்குழி கிராமத்தை சார்ந்த சக்திவேல்(30), கடலூர் மாவட்டம் சின்னகொசப்பாளையம் கிராமத்தை சார்ந்த அஜய்(23) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர், இந்த வழக்கு செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது, அனைத்து சாட்சிகளும் விசாரனை முடிவுற்ற நிலையில் விசாரனை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கோர்ட்டு சம்மனை பெற்றுக்கொண்டு மார்ச்-23 அன்றைய தேதியிலிருந்து கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வரவில்லை, விசாரனை செய்த செந்துறை குற்றவியல் நிதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயகிருபா வழிப்பறி கொள்ளை வழக்கில் கோர்ட்டிற்கு சாட்சி சொல்ல வராத சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு 24ம் தேதி மாற்றப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

    • சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில், கடந்த 2020-ம் ஆண்டு, இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றி னார்.
    • வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில், கடந்த 2020-ம் ஆண்டு, இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றி னார். அப்போது, 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை காலகட்டத்தில நடந்த 6 சாலை விபத்து வழக்குகள் தொடர்பாக அவர் சேந்த மங்கலம் கோர்ட்டில் நடை பெற்று வரும் விசாரணை யில், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார்.

    இதைத்தொடர்ந்து சேந்த மங்கலம் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ஹரிஹ ரன், வழக்குகளில் ஆஜராகா மல் இருந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்கு மாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.தற்போது சதீஷ்குமார் சிவகங்கை மாவட்ட தெற்கு கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வருகிறார்.

    இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வளவன். அப்போது அங்கு நடந்த ஒரு வழக்கில், சேந்தமங்கலம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையில், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து அவர் நாளை (6-ந் தேதி) சேந்த மங்கலம் கோர்ட்டில் ஆஜராக, நீதிபதி பிடிவா ரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன்.
    • வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி 13 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    நாமக்கல்:

    கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது அப்பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை தற்போது சேந்தமங்கலம் கோர்ட்டில் நடந்து வரு கிறது. வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி 13 முறை நோட்டீஸ் அனுப்பி யும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் மாதை யனுக்கு கோர்ட்டு நீதிபதி ஹரிஹரன் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார்.

    • இம்ரான்கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
    • எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.

    எனினும் இந்த வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தற்போது இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டின் நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இஸ்லாமாபாத் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பான விசாரணைக்கு இம்ரான்கான் இதுவரை நேரில் ஆஜராகாத நிலையில் நேற்று அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி, அவரை ஏப்ரல் 18-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயா.
    • அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு சார்பில் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயா. இவர் மீது வேலூர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு சார்பில் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனிடையே ஆஞ்சநேயா தேன்கனிகோட்டை கோர்ட்டில் வருகிற 31-ந்தேதி விசாரணைக்காக ஆஜர் ஆகவேண்டும் என்று நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    • திருப்பத்தூர் கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தரவு
    • 6 மாதமாக ஆஜராகவில்லை

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம் பூரை அடுத்த உமராபாத் போலீஸ் நிலைய எல்லைக்குட் பட்ட தேவலாபுரம் புதுமனை பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பார்த்திபன் என்பவர்கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக காளிதாஸ் என்பவர்கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

    கொலை நடந்தபோது உம ராபாத் போலீஸ் இன்ஸ்பெக் டர்களாககோகுல்ராஜ் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். அவர் களில் கோகுல்ராஜ் தற்போது ஆரணி டவுன் இன்ஸ்பெக்ட ராகவும், பாலசுப்பிரமணி வேலூரில் காத்திருப்போர் பட்டியலிலும் உள்ளனர்.

    கொலை வழக்கில் சாட்சி சொல்ல ஆஜராகும்படி இன்ஸ்பெக்டர்கள் 2 பேருக் கும் பலமுறை சம்மன் அனுப்பியும் கடந்த 6 மாதமாக ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர்கள் கோகுல் ராஜ், பாலசுப்பிரமணி ஆகியோர் வழக்கம்போல ஆஜராகவில்லை.

    இதனால் கூடுதல் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி, இன்ஸ் பெக்டர்கள் 2 பேருக்கும் பிடி வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

    • வழக்கு விசாரணைக்கு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் கோர்ட்டில் ஆஜராகமல் இருந்து வந்தார்.
    • இதையடுத்து நீதிபதி தயாநிதி, இன்ஸ்பெக்டர் சோமசுந்ரம் கோர்ட்டில் ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்தார்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சுண்டப் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 84). விவசாயி. இவருக்கும் அவரது மகன்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது வந்தது. இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி பழனிசாமி வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர். இதில் அவரது பேரன் உள்பட சிலர் சொத்துக்காக பழனி சாமியை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது 17 வயது பேரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை கோபி செட்டிபாளையம் 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது.

    இந்த வழக்கின் விசார ணை அதிகாரியாக அப்போதைய கோபிசெட்டி பாளையம் போலீஸ் இன்ஸ் இன்ஸ்பெக்டர் சோம சுந்தரம் இருந்து வந்தார். சோமசுந்தரம் தற்போது ஈரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு சோம சுந்தரம் கோர்ட்டில் ஆஜரா கமல் இருந்து வந்தார். இதையடுத்து நேற்று மீண்டும் இது குறித்து வழக்கு விசாரணை கோபி செட்டிபாளையம் கோர்ட்டில் நடந்தது. ஆனால் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆஜராகமல் இருந்தார்.

    இதையடுத்து நீதிபதி தயாநிதி, இன்ஸ்பெக்டர் சோமசுந்ரம் கோர்ட்டில் ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்தார்.

    பணமோசடி வழக்கில் இந்திய அரசால் தேடப்படும் தொழிலதிபர் நிரவ் மோடி மீதான குற்றச்சாட்டை ஆய்வு செய்த லண்டன் நீதிமன்றம், அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது. #NiravModiExtradition #LondonCourt
    லண்டன்:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாக தெரியவந்தது. அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

    அத்துடன் நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.



    இதையடுத்து நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. அவரை கைது செய்தபிறகு, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கும். நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும்.  #NiravModiExtradition #LondonCourt
    ×