என் மலர்
நீங்கள் தேடியது "assault"
- சங்கராபுரம் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யபபட்டனர்.
- புத்திராம்பட்டு பகுதியை சேர்ந்த தண்டபாணி மகன் சதீஷ் என்பவர் திடீரென தகராறில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் புது காலனி பகுதியை சேர்ந்தவர் குப்பன் (45) தொழிலாளி. இவரிடம் புத்திராம்பட்டு பகுதியை சேர்ந்த தண்டபாணி மகன் சதீஷ் என்பவர் திடீரென தகராறில் ஈடுபட்டனர். மேலும் சதீஷ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து குப்பனை திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் சதீஷ், சிலம்பரசன், கோகுல், தமிழ்ச்செல்வன், முருகன் ஆகிய 5 பேர் மீது வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து அதில் கோகுல், முருகன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- அரசு அதிகாரி மீது தாக்குதல் நடந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.
மதுரை
மதுரை ஒத்தக்கடை, நகுலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது 54). இவர் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக உள்ளார்.
சம்பவத்தன்று காலை திருக்கண்ணன் மருத்துவ குழுவினருடன், ஒத்தக்கடை அய்யப்பன் நகருக்கு சென்றார். அப்போது அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு யானைக்கால் நோய் தொடர் பாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
இதற்கு ஜகதாரணி குடியிருப்பில் வசிக்கும் சந்தோஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை மருத்துவ அதிகாரி திருக்கண்ணன் சமாதானப்படுத்தி விளக்கி கூற முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அவரை சரமாரியாக தாக்கினார்.
இதில் கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக எடுக்கப்பட்ட ரத்த மாதிரி பாட்டில்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக திருக்கண்ணன் ஒத்தக்கடை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.
- பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த வழக்கு தொடர்பாக மேலும் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை சேடப்பட்டியை அடுத்த வீராளம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மனைவி ஜோதிமணி (வயது 36). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது.
சம்பவத்தன்று ஜோதி மணி வீராளம்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், சரமாரியாக அடித்து உதைத்து தப்பி சென்றது. இது தொடர்பாக ஜோதிமணி, சேடப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பாண்டி (31), சிவனாண்டி (60), தங்கேஸ்வரன் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மதுரை திருமங்கலம் அடுத்த பன்னிகுண்டு, கிழக்கு தெருவை சேர்ந்தவர் போதும்பொண்ணு (வயது 50). இவரது கணவர் சந்திரன். இவர் அங்கு உள்ள ஒரு கோவிலில் மேளக்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிலர், கோவில் திருவிழா நிகழ்ச்சியின்போது முதல் மரியாதை கேட்டதாக தெரிகிறது. இதற்கு போதும்பொண்ணு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 8 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியது. படுகாயமடைந்த போதும்பொண்ணு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் பெரியபாண்டி, அவரது மகன் பால்பாண்டி, மகள் ஜோதி, பெரிய பாண்டி சகோதரர் சின்னபாண்டி, அவரது மனைவி பாப்பாத்தி, பெரியபாண்டி மனைவி பொன்னுத்தாய், நீலமேகம் மகள் மீனாட்சி ஆகிய 8 பேரிடம் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநில வரி அலுவலர் அரவிந்தை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு பேச வேண்டும் என கூறி அழைத்து சென்றனர்.
- புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 40).கடலூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் மாநில வரி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அதே அலுவலகத்தில் 30 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் நட்பாக பழகி பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அந்த பெண்ணின் தந்தை குணசேகரன்2 பேரையும் பலமுறை கண்டித்து உள்ளார். சம்பவத்தன்று குணசேகரன் மற்றும் 3பேர் வணிகவரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் மாநில வரி அலுவலர் அரவிந்தை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு பேச வேண்டும் என கூறி அழைத்து சென்றனர். அப்போது குணசேகரனுக்கும், அரவிந்துக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. . இதில் குணசேகரன் மற்றும் 3 பேர் திடீரென்று மாநில வரி அலுவலர் அரவிந்தை சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவர் அணிந்திருந்த 9 பவுன் செயின் மற்றும் அவரிடம் இருந்த விலை உயர்ந்த 2 ஐபோன் ஆகியவற்றை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அரவிந்த் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கடலூரில் பட்டப்பகலில் வணிகவரித்துறை அலுவலகம் அருகே மாநில வரி அலுவலர் அரவிந்தை தாக்கி நகை மற்றும் ஐபோன் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் திடீரென வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
- இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டும் சேகர் என்பவரும் நண்பர்கள் எனக் சொல்லப்படுகிறது.
இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ராஜ்குமாரை திடீரென வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீ சார் , அடிதடி வழக்கில், தாதகாப்பட்டி சண்முக நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் (47), அவரது மகன் அரவிந்த் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.
- உன் தங்கையை ஒழுங்காக வீட்டிற்கு கூட்டிகிட்டு போ என அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது.
- சிவாஷினியின் அண்ணன் கருணாகரனை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே திருக்கனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். விவசாயி, இவரது மகள்கள் ஆசியா (வயது 17) 12- ஆம் வகுப்பு, சிவாஷினி (15) 10- ஆம் வகுப்பு, ஆகியோர் மூரார்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் ஆசியா, சிவாஷினி ஆகியோர் பள்ளிக்குச் சென்று விட்டு மீண்டும் பள்ளி முடிந்து மாலை மூரார்பாளையத்தில் இருந்து அரசு பஸ்ஸில் ஆலத்தூர் வந்து இறங்கினர்.
அங்கிருந்து திருக்க னங்கூர் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலத்தூர் சிவன் கோவில் எதிரே இருந்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (21) என்பவர் ஆசியாவிடம் உன் தங்கையை ஒழுங்காக வீட்டிற்கு கூட்டிகிட்டு போ என அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது. அதற்கு ஆசியா ஏன் திட்டுகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற அய்யனார் ஜாதிப் பெயரை சொல்லி திட்டி தாக்கினர்.
அப்போது உடன் இருந்த சிவாஷினி ஏன் எனது அக்காவை அடிக்கிறீர்கள் என கேட்டதற்கு அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு 17 வயதுடைய வாலிபர் சிவாஷினியை திட்டி தாக்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவாஷினியின் அண்ணன் கருணாகரனை சம்பவ இடத்தில் இருந்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் (18) என்பவர் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆசியா கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யனார் மற்றும் நீலகண்டன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 17 வயது வாலிபர் இளஞ்சிரார் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் நீலகண்டன் என்பவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- குண்டியமல்லூரை சேர்ந்த 15 வயது மாணவன் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- ஏறிய போது வழியில் நிற்காமல் சற்று வழி விடவும் என கூறியுள்ளார்.
கடலூர்:
கடலூர் அருகே குண்டியமல்லூரை சேர்ந்த 15 வயது மாணவன் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதேப்பகுதியை சேர்ந்த 16 வயது மாணவன் குறிஞ்சிப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று குறிஞ்சிப்பாடியில் இருந்து குண்டியமல்லூர் பகுதிக்கு அரசு பஸ்ஸில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் முதலில் ஏறி உள்ளார். இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பின்னால் ஏறிய போது வழியில் நிற்காமல் சற்று வழி விடவும் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் 11-ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு 10-ம் வகுப்பு மாணவன் என்னிடம் சண்டை ஏற்படுத்துவது போல் பேசி சென்றுள்ளார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து குண்டியமல்லூர் பகுதியில் 10-ம் வகுப்பு மாணவன் இறங்கி நடந்து சென்ற போது, 11ஆம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் 10-ம் வகுப்பு மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த 10-ம் வகுப்பு மாணவன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் 11-ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மற்றும் அதன் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
- நெல் பயிரில் மஞ்சள் நோய் மற்றும் அதன் மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படும் அட்மா திட்டத்தில் எழிலூர் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகம் பற்றிய பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் வேளாண் அறிவியல் நிலைய செயல்பாடுகள் பற்றியும், பாரம்பரிய நெல் ரகம் அதன் மதிப்பு கூட்டுதல் பற்றியும், தற்போது நிலவி வரும் காலநிலையில் நெல் பயிரில் ஏற்படக்கூடிய பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் மற்றும் அதன் மேலாண்மை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் மண்வள மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் இயற்கை பூச்சி விரட்டிகள் பற்றியும் நெல் பயிரில் மஞ்சள் நோய் மற்றும் அதன் மேலாண்மை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை பெரும் விவசாயிகள் தங்களது ஆதார் எண், கைபேசி எண் இ.கே.ஒய்.சி. இணைக்கவும், மற்றும் உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து பேசினார்.
முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதரன் நன்றி கூறினார். பயிற்சியில் எழிலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் இளமதி சிவகுமார் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் முன்னோடி விவசாயிகள் மணிமொழி, சுபத்ரா என 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- விருத்தாசலம் அருகே பஸ்சில் ஏறி மாணவர்களை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல் செய்தனர்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே சின்னவடவாடியில் இருந்து நேற்று காலை அரசு பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு விருத்தாசலத்துக்கு வந்து கொண்டிருந்து. இந்த பஸ் வயலூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தபோது வயலூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கும்பல் பஸ்சில் ஏறி சின்னவடவாடியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல்செய்தனர்.
இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், சின்னவடவாடி கிராம த்தைச் சேர்ந்த மாணவனு க்கும், வயலூரை சேர்ந்த மாண வனுக்கும் கடந்த 2 தினங்களுக்கு முன் பள்ளியில் தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் வயலூரை சேர்ந்த வாலிபர்கள், பஸ்சில் வந்த மாணவர்களை தாக்கியதாக தெரியவந்தது. இதுகுறித்து சின்ன வடவாடியை சேர்ந்த பள்ளி மாணவன் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகாந்த்(20), ராஜேஷ்(23), அஜித்குமார் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க வயலூர் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு வழியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தனது மனைவி யுடன் சண்டை போட்டு க்கொண்டி ருந்தபோது, ஊர்க்கா ரர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
- தடுக்கவந்த மகன் இருதயராஜையும் செந்தில்குமார் கட்டை மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார்.
புதுச்சேரி:
காரைக்கால் கோட்டுச்சேரி கீழகாசா குடியைச்சேர்ந்தவர் ஜேம்ஸ்மேரி (வயது60). இவரது மகன் இருதயராஜ். இருதயராஜ் பந்தல்வேலை செய்துவருகிறார். கடந்த 26ந் தேதி ஜேம்ஸ்மேரி வசிக்கும் பகுதியில், செந்தில்கு மார் என்பவர் தனது மனைவி யுடன் சண்டை போட்டு க்கொண்டி ருந்தபோது, ஊர்க்கா ரர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். அந்த இடத்தில், ஜேம்ஸ்மேரியும் இருந்தார். கடந்த 27-ந் தேதி செந்தில்குமார் ஜேம்ஸ் மேரி வீட்டு வாசலுக்கு சென்று, எங்கள் குடும்ப பிரச்சனையில் ஏன் தலையிடுகிறீர்கள் என கேட்டு, கையில் வைத்திருந்த கட்டையால் ஜேம்ஸ்மேரியை தாக்கினார்.
இதனை தடுக்கவந்த மகன் இருதயராஜையும் செந்தில்குமார் கட்டை மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 2 பேரும் கோட்டுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி பெற்று, தொடர் சிகிசைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு ஜேம்ஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில், கோட்டுச்சேரி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- போலீசில் புகார் கூறிய பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் உமாதேவி(வயது29). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார்(35)என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
செந்தில்குமார் விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழந்து வருகின்றனர்.
தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வரும் உமாதேவி, தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் செந்தில்குமார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த இரு வழக்குகளும் கோர்ட்டில் நடந்து வருகின்றன. இந்நிலையில் செந்தில்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் 2-வது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த தகவல் உமாதேவிக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது மீது மகளிர் போலீஸ் நிலையத்தில் உமாதேவி புகார் செய்தது செந்தில்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் தனது தாய் ராஜம்மாளுடன், உமாதேவி வீட்டிற்கு சென்று மகளிர் போலீசில் புகார் கொடுத்தது குறித்து கேட்டு தகராறு செய்தார்.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செந்தில்குமார் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் சேர்ந்த உமாதேவியை சரமாரி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர், தனது கணவர் மற்றும் மாமியார் கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். செந்தில்குமார், அவரது தாய் ராஜம்மாள் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருத்தாசலம் போலீஸ் ஏட்டு செல்வராஜ் பணி முடிந்து தனது வீட்டிற்கு சென்றார்.
- 2 வாலிபர்களை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்த னர்.
கடலூர்:
விருத்தாச்சலம் பஸ் நிலையம் அருகே ஜங்ஷன் ரோட்டில் நேற்று இரவு 4 வாலிபர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக விருத்தாசலம் போலீஸ் ஏட்டு செல்வராஜ் பணி முடிந்து தனது வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு பொது மக்களுக்கு இடையூறாக நின்று பேசிக் கொண்டிருந்த 4 வாலிபர்களிடம் சென்று விசாரணை செய்தார். ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் போலீஸ் ஏட்டு என்று கூட பாராமல் செல்வராஜை சரமாரியாக தாக்கினார்.
இதில் காயமடைந்த செல்வராஜ் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று போலீஸ் ஏட்டுவை தாக்கிய 4 வாலிபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்க ளில் 2 வா லிபர்களை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்த னர். விசாரணை செய்ததில் தர்மபுரியைச் சேர்ந்த அன்பு (வயது 22) மணி (20) என்பது தெரியவந்தது. மேலும் தப்பியோட 2 வாலிபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.