search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assignments"

    • காரைக்கால் - திருச்சி ரெயில் பயண நேரத்தை மாற்ற வேண்டும்.
    • திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ரெயில் பயணிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு சங்கத் தலைவா் அய்யனாபுரம் நடராஜன் தலைமை வகித்தாா்.

    செயலா் வக்கீல் ஜீவக்குமாா் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில், தஞ்சாவூா் ரெயில் நிலையத்தில் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தஞ்சாவூா் ரெயில் நிலைய பின்பகுதி நுழைவு வாயில் அருகேயுள்ள பயணச் சீட்டு வழங்கும் மையத்தை 24 மணிநேரமும் செயல்பட வைத்து, அங்கு முன்பதிவு வசதியும் செய்து கொடுக்க வேண்டும்.

    வண்டி எண் 06739 காரைக்கால் - திருச்சி ரெயில் மாலை 5.15 மணிக்கு தஞ்சாவூருக்கு வந்து புறப்படுகிறது.

    அரசு ஊழியா்கள், வங்கி ஊழியா்கள், பணி முடிந்து மாலையில் வீடு திரும்ப வசதியாகவும், மாணவ, மாணவிகள் செல்ல வசதியாகவும் மாலை 6 மணிக்கு புறப்படும் வகையில் நேரத்தை மாற்ற வேண்டும்.

    பயணிகளுக்கு பயன்படும் வகையில் வண்டி எண் 06646 திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரெயில் காலை 8 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து புறப்படும் விதமாக பயண நேரத்தை மாற்ற வேண்டும்.

    திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு காலை 6.05 மணிக்கு பிறகு 11 மணிக்கு சோழன் விரைவு ரெயில்தான் உள்ளது.

    இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ரெயில்கள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் உறுப்பினா்கள் கண்ணன், திருமேனி, செல்லகணேஷ், உமா்முக்தாா், பைசல்அமகது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்த கொத்தங்குடி ஊராட்சி சாத்தனூர் கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை ஆரம்பிக்கப்பட்டது.

    பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.

    இதன் அருகில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது.

    மாணவர்கள் ஓய்வு நேரங்களில் அவ்வழியாக செல்வதும், விளையாடுவதும் ஆக உள்ளனர்.

    எனவே, பள்ளியும் அருகில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

    • கழிவுநீர் வெளியேறி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.
    • பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட இரட்டைகாளியம்மன் கோயில் தெருவில், பழைய பேருந்துநிலையகட்டண கழிவறை கழிவுநீர் வெளியேறி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.

    இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதியடை ந்துவந்தனர்.

    இதற்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தியதின்பேரில் அப்பகுதி நகர்மன்ற உறுப்பி னர் சாமிநாதன் நகர்மன்ற தலைவர் துர்காராஜ சேகரனிடம் கோரிக்கை வைத்தார்.

    அதன்படி கட்டண கழிவறை கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க நகராட்சி சார்பில் கழிவுநீர் தொட்டி அமைத்திடவும் கட்டண கழிவறை சுற்றுசுவர் அமைத்திடவும் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு பொதுநிதியில் ரூ.5லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனையடுத்து பணிகள் தொடங்கிட நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், முபாரக், தேவதாஸ் உடனிருந்தனர்.

    • தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே திருவதிகை முத்துலட்சுமி நகரில் உள்ள மரத்தில் ஒரு வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாககிடந்தார். இதனை கண்ட அப்பகுதியினர் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பண்ரு ட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 29). முந்திரி வியாபாரி என்பதும், இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிக்கை வைக்கும் பணிகள் நடந்து வந்தது. நண்பர்களுக்கு பத்திரிக்கை வைக்க செல்வதாக கூறி வீட்டிலிருந்து மோகன்ராஜ் இன்று காலை வெளியில் சென்றவர் தூக்கில் தொங்கியபடி கிடந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து முந்திரி வியாபாரி மோகன்ராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்பது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த ஆண்டு சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது.
    • 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜன் சதய விழா வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சதய நாளான 25ஆம் தேதி மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதேபோல் பல்வேறு கட்சியினர், இயக்கம், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.

    சதய விழாவை ஒட்டி பெரிய கோயில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக பந்தல் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து விழா மேடையும் அமைக்கப்படும்.

    • காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கோர்ட்டு பணிகளை ஒருநாள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு காவிரி நதிநீர் ஆணைய உத்தரவின் படியும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படியும் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், பெற்று தர முயற்சிகாத மத்திய அரசை கண்டித்தும் காவிரி கூட்டியக்கம் சார்பில நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சீர்காழி வக்கீல்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை ஒருநாள் புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    வழக்குரைஞர் சங்க தலைவர் ஜீவானந்தம் தலைமையில், செயலாளார் மணிவண்ணன் , பொருளாளர் ராம்குமார் முன்னிலையில் துணைத் தலைவர்கள் கவிதா, தாமஸ் குமார், துணை செயலாளர்கள் சுதா,ஆனந்த ,செந்தில்குமார் ,விஜய் பொருளாளர் ராம்குமார் மூத்த வழக்கறிஞர்கள் வீரமணி, சுந்தரையா,வெங்கடேசன், ரங்கராஜ் அப்துல்லாசா,குமரேசன்,ஆத்மநாதன்,கார்த்திக் கலந்து கொண்டனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • கட்டுமான பணிகளை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் சிகிச்சைகள் குறித்து முகமது ஷாநவாஸ் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

    அப்போது ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்ப ட்டு முதல் பிரசவமாக மேலவாஞ்சூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி ரோஷி (வயது 27) என்பவருக்கு பிறந்த ஆண் குழந்தையை பார்வையிட்டு அவருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பரிசு பெட்டகத்தை வழங்கினார்.மேலும் அந்த குழந்தைக்கு தருண் என்ற பெயர் சூட்டினார்.

    பின்னர் அதைத் தொடர்ந்து திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளத்திடலில் இடிக்க ப்பட்ட சமுதாயக்கூடத்திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் கட்டுமான பணி களை தொடங்கப்படாமல் இருப்பதை பார்வையிட்டு உடன் கட்டுமான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷாசி த்திக்கா,வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் ,பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது சுல்தான்,பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ்,சுகாதார ஆய்வாளர் பரமநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • நடைபெற்று கொண்டிருக்கின்ற பணிகள் குறித்து பார்வையிட்டார்.
    • நுண்ணுயிர் உரம் தயாரித்தல் மையத்தை ஆய்வு செய்தார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு மத்திய தணிக்கை துறை தலைமை கணக்காயர் நெடுஞ்செழியன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போத பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2021, 22,23 ஆகிய 3 ஆண்டுகளில் இதுவரை நடைபெற்று முடிந்த வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் ராஜகிரி ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரித்தல் மையம், கிராம சேவை மைய கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிட பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் மரக்கன்று நட்டு வைத்தார்.

    ஆய்வின் போது உடன் முதுநிலை தணிக்கையாளர் முரளி, மேற்பார்வையாளர் மனோகர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன் ,சரவணன், ராஜகிரி ஊராட்சி மன்ற சமீமா பர்வீன்ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தரம் உயர்த்துவதற்காக மின்பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    கும்பகோணம்:

    திருநாகேஸ்வரம் துணை மின்நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக மின்பாதை அமைக்கும் பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதனால் அந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான திருநீலக்குடி, திருநாகேஸ்வரம், விட்டலூர், ஏழாம்கட்டளை, அந்தமங்கலம், திருபுவனம், அம்மாசத்திரம், திருபுவனம் இன்டஸ்டிரியல் எஸ்டேட், முருக்கங்குடி, தண்டந்தோட்டம், ஆண்டளாம்பேட்டை, பவுண்டரீகபுரம், நெடார், புத்தகரம், அம்மன்குடி, தேப்பெருமாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • சரபோஜிராஜபுரம் -வடக்குமாங்குடி சாலை பணிகளை ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் சென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலக கண்காணிப்பு பொறியாளர் கவிதா வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சக்கராப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் சிமெண்ட் சாலை பணிகள், பாய் நெசவு பணி கட்டிடம், வழுத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் காலை உணவு வழங்கும் திட்டம், ஆதி திராவிட நல பள்ளி கட்டிடம், சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடம், காளான் வளர்ப்பு மையம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டம், சரபோஜிராஜபுரம் வடக்குமாங்குடி சாலை பணிகள், கல்வெட்டு பணிகள்,

    ஆதனூர் ஊராட்சியில் சோழங்கநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம், குழந்தை நேய பள்ளி கட்டிடம் ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு பொறியாளர் கவிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது உடன் செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஆம்னி பஸ் நிலையம் கட்டும் பணி ரூ.10.46 கோடி மதிப்பில் நடந்து முடிந்துள்ளன.
    • காந்திஜி வணிக வளாகத்தை மேம்படுத்தும் பணி உள்பட 10 பணிகள் நடந்து முடிந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

    இதில் புதிய பஸ் நிலையம் அருகே ஆம்னி பஸ் நிலையம் கட்டும் பணி ரூ.10.46 கோடி மதிப்பில் நடந்து முடிந்துள்ளன.

    இதேபோல் தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11.50 கோடியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா

    (ஸ்டெம் பூங்கா), ரூ.7.32 கோடி மதிப்பில் மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக மாற்றுதல், ரூ.15.61 கோடி மதிப்பில் காந்திஜி வணிக வளாகத்தை மேம்படுத்தும் பணி உள்பட 10 பணிகள் நடந்து முடிந்துள்ளது.

    இந்தப் திட்டங்களை வருகிற 27-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த பணிகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) செந்தில்குமாரி, ஆணையர் சரவணகுமார், துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட திட்ட செயலாக்க அலகு, வாழ்வாதார திட்ட பணிகள் மேற்கொள்வதற்கு செம்பனார்கோயில், சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இப்பணிகளுக்கு 28 வயதுக்கு மிகாமல் உள்ள பட்டதாரிகள் விண்ண ப்பிக்கலாம். MS-Office 3 மாத காலத்திற்கு படித்திருக்க வேண்டும் (சான்றுடன்), கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வாழ்வாதார திட்டப்பணிகள் குறித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    அதே வட்டாரத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

    எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலம் விண்ணப்ப தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும், அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.

    விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெறும் தேதி கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: –

    திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கச்சேரி ரோடு, ஆர்.டி.ஓ. அலுவலகம் பின்புறம், மயிலாடுதுறை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×