என் மலர்
நீங்கள் தேடியது "Attack"
- அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
- திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது
சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது.
எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு
இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
- இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட பத்து பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. தாக்குதல் நடத்த ஆயத்தமான பயங்கரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருத்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்தனர் என்று காசா சுகாதார துறை தெரிவித்து உள்ளது. காசாவின் சுகாதார துறை செய்தி தொடர்பாளர் கலில் டெக்ரான் மத்திய காசாவில் உள்ள அல் அக்சா மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.
போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார். இந்த நடவடிக்கை முடிவற்றது என்றும், தொடர்ந்து விரிவாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நேற்று சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
- குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஹோலா மொஹாலா எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு கடந்த மார்ச் 14 தொடங்கி மார்ச் 16 வரை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு நேற்றும் ஏராளமான பக்தர்கள் தங்கக்கோவிலுக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் கையில் இரும்பு கம்பியுடன் நுழைந்த நபர் ஒருவர் கோவிலில் குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார்.
கையில் ஒரு இரும்புக் கம்பியுடன் வந்த அவரை பார்த்த கோவில் ஊழியர் ஜஸ்பீர் சிங் தடுக்க முயன்றார். ஆனால் அந்த நபர் ஊழியரை கம்பியால் தாக்கினார். பின் பக்தர்களும் மற்ற ஊழியர்களும் அந்த நபரை தடுக்க முயன்றபோது, அவர்களையும் அவர் தாக்கினார்.

பிற பக்தர்களும் ஊழியர்களும் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பக்தர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். அபவர்கள் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் காயமடைந்தவர்களில், ஒரு பக்தர் மற்றும் ஊழியர் ஆகிய இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பொற்கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போலீசார் அதிக சோதனைக்கு பின் பக்தர்களை உள்ளே அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர் அரியானாவின் யமுனா நகரில் வசிக்கும் சுல்பான் என்பது தெரியவந்துள்ளது.
- வாலிபர்களை முகமது சல்மான் சத்தம் போட்டு உள்ளார்.
- முகமது சல்மான் கையில் வாலிபர்கள் பிளேடால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
நெல்லை:
மேலப்பாளையம் பங்களாப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது சல்மான் (வயது 22). இவர் சம்பவத்தன்று வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது தெருவில் நின்று கொண்டிருந்த சிறுவர்களிடம் 2 வாலிபர்கள் தகராறு செய்துள்ளனர். இதனை பார்த்த முகமது சல்மான் அவர்களை சத்தம் போட்டு உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள். முகமது சல்மான் கையில் பிளேடால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து மேலப்பாளையம் போலீசில் முகமது சல்மான் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் வாலிபரை வெட்டி விட்டு சென்றது கணேசபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சூர்யா என்ற சுரேஷ் (24), ஆசுரன் கீழத்தெருவை சேர்ந்த யூனுஸ் (22) என்பது தெரிய வந்தது.
- களக்காடு அருகே உள்ள மாவடி புதூரை சேர்ந்தவர் ராஜாகுமார் (வயது 41). கூலி தொழிலாளி.
- தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிவலிங்கம், அருணை தேடி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மாவடி புதூரை சேர்ந்தவர் ராஜாகுமார் (வயது 41). கூலி தொழிலாளி. மாவடியை சேர்ந்தவர்கள் சிவலிங்கம், அருண். இவர்கள் இருவரும் மாவடி-டோனாவூர் சாலையில் அதிக வேகத்தில் விபத்தை ஏற்படுத்துவது போல், மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த ராஜாகுமார் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்கிறீர்களே என தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவலிங்கமும், அருணும் சேர்ந்து ராஜாகுமாரை தாக்கினர். இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிவலிங்கம், அருணை தேடி வருகின்றனர்.
- நாங்குநேரி அருகே உள்ள தோட்டக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லசாமி (வயது 47). இவர் பொன்னாக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக உள்ளார்.
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார், பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள தோட்டக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லசாமி (வயது 47). இவர் பொன்னாக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக உள்ளார். சம்பவத்தன்று இரவில் இவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது தோட்டக்குடி நடுத்தெருவில் சென்ற போது, அங்கு அதே ஊரை சேர்ந்த பிரகாஷ் (27) என்பவர் கையில் கம்பை எடுத்து வைத்துக் கொண்டு, போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த செல்லசாமி, அவரிடம் தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், செல்ல சாமியை கம்பால் குத்தினார்.மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் பலத்த காயமடைந்த செல்ல சாமியை உறவினர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப் பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார், பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மேலப்பாளையம் மில்லத் நடுத்தெருவை சேர்ந்தவர் நஜிமுனிஷா (வயது52).
- மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்னுல் ரபிக்கை கைது செய்தனர்.
நெல்லை:
மேலப்பாளையம் மில்லத் நடுத்தெருவை சேர்ந்தவர் நஜிமுனிஷா (வயது52). இவரது மகன் ஜெய்னுல் ரபிக் (27). இவர் தினமும் குடித்துவிட்டு குடிபோதையில் வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல ஜெய்னுல் ரபிக் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். அதனை அவரது சகோதரர் அன்சர் அலி பாதுஷா (29) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெய்னுல் ரபிக், அன்சர் அலி பாதுஷாவை அங்கிருந்த கிரைண்டர் கல்லால் தாக்கினார். இதில் அவர் பலத்த காய மடைந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் எபினேசர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்னுல் ரபிக்கை கைது செய்தனர்.
- செண்பகராமநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் நாங்குநேரியில் ஒட்டல் நடத்தி வருகிறார்.
- ஆத்திரம் அடைந்த சிவா, கந்தசாமியை மண்வெட்டியால் சரமாரியாக தாக்கினார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது39). இவர் நாங்குநேரியில் ஒட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வயல் செண்பகராமநல்லூரில் உள்ளது.
அதில் அவர் கடந்த 5 ஆண்டுகளாக பயிர் செய்யவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று கந்தசாமி தனது வயலுக்கு சென்ற போது, பக்கத்து வயலுக்கு சொந்தகாரரான காக்கைகுளத்தை சேர்ந்த சிவா என்பவர், கந்தசாமி வயலில் வேலி கற்களை பிடுங்கி எறிந்து விட்டு, உள்ளே புகுந்து, பனங்கிழங்கை நடவு செய்து கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த கந்தசாமி தட்டிக் கேட்டார். இதையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சிவா, கந்தசாமியை மண்வெட்டியால் சரமாரியாக தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயம் அடைந்த கந்தசாமி சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவாவை தேடி வருகின்றனர்.
- இரண்டு முறை டி.ஏ.பி. உரம் தெளித்திட 10 கிலோ டி.ஏ.பி உரம் வழங்கப்படுகின்றன.
- பூச்சி, நோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
பாபநாசம்:
பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றுப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு உரிய எட்டு கிலோ உளுந்து விதை 50 சத மானியத்திலும், இரண்டு முறை டி ஏ பி உரம் தெளித்திட 10 கிலோ டிஏபி உரமும் வழங்கப்படுகின்றன. எதிர்வரும் கார்த்திகை பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளும், சம்பா, தாளடி நெல் வயல்களில் வரப்பில் உளுந்து விதைப்பு செய்திடவும் இந்த உளுந்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன் மூலம் பூச்சி, நோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. எனவே, தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், உழவர் அட்டை நகல் ஆகியவற்றுடன் சென்று பாபநாசம், கணபதி அக்ரஹாரம், மற்றும் கூனஞ்சேரி ஆகிய விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன் குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி மணக்கண்.
- அஜித்குமார், அவரது உறவினர்கள் அந்தோணி, நூர்து உள்பட 7 பேர் சேர்ந்து மணக்கன்னை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன் குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணக்கண் (வயது 53). விவசாயி. இவருக்கும் அவரது சகோதரர் மகாராஜனுக்கும் பூர்வீக வீட்டை பங்கு வைப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று மணக்கண் தனது மனைவி கலை செல்வியுடன் மகாராஜன் வீட்டு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மகாராஜன், அவரது மகன் அஜித்குமார், அவரது உறவினர்கள் அந்தோணி, நூர்து உள்பட 7 பேர் சேர்ந்து மணக்கன்னை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மகாராஜன் உள்பட 7 பேரும் சேர்ந்து மணக்கண்ணை கம்பால் தாக்கினர்.
மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி அவர் மூலைக் கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மகாராஜன் உள்பட 7 பேரையும் தேடி வருகின்றனர்.
- பரளி ஒத்தையூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 65) . இவர் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார்.
- பழனிச்சாமியை தமிழ்ச்செல்வன் அவரது மகன் தனசேகரன் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பரளி ஒத்தையூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி
( வயது 65) . இவர் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இவருக்கு வெங்கடாசலம், செல்வம் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் பழனிச்சாமிக்கும் பக்கத்து தோட்டத்துக்காரரான அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (60) என்பவருக்கும் வழிதடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் பழனிச்சாமியை தமிழ்ச்செல்வன் அவரது மகன் தனசேகரன் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர் . இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பழனிச்சாமியை நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
இது குறித்த புகாரின்பேரில் மோகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய தமிழ்ச்செல்வன், அவரது மகன் தனசேகரனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- அடிவாங்கிய நபரின் மகன் தனது மகளுடன் ஓடிப்போய்விட்டதாக கூட்டத்தில் தனது குறையை கூறினார்.
- மேடையில் இருந்த மற்றவர்கள் தலையிட்டு, அந்த பெண்ணை கீழே இறக்கி அனுப்பி வைத்தனர்.
புதுடெல்லி:
டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண் அவரது காதலன் அப்தாப் பூனாவாலா படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பெண்ணுக்கு நீதி கேட்டு டெல்லியின் சத்தர்பூரில் உள்ள இந்து ஏக்தா மஞ்ச் என்ற இந்து அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண், மைக்கில் பேசினார். அப்போது அவர் திடீரென அருகில் நின்றிருந்த நபர் ஒருவைரை செருப்பால் தாக்குகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
#WATCH | Chattarpur, Delhi: Woman climbs up the stage of Hindu Ekta Manch's program 'Beti Bachao Mahapanchayat' to express her issues; hits a man with her slippers when he tries to push her away from the mic pic.twitter.com/dGrB5IsRHT
— ANI (@ANI) November 29, 2022
அதில் ஒரு பெண், நீல நிற துப்பட்டவால் முகத்தை பாதி மூடிய நிலையில் பேசுகிறார். அருகில் ஒரு நபர் நின்றுகொண்டிருந்தார். அந்த நபரின் மகன் தனது மகளை அழைத்துக் கொண்டு ஓடிப்போய்விட்டதாக கூட்டத்தில் தனது குறையை கூறினார். மேலும் தனது மகள் காணாமல் போனது குறித்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தாகவும், தன்னை அலைக்கழித்ததுடன், தனது குறையை கேட்கவில்லை என்றும் கூறினார். பின்னர் திடீரென தனது செருப்பை கழற்றி அந்த நபரை தாக்குகிறார். மேடையில் இருந்த மற்றவர்கள் தலையிட்டு, அந்த பெண்ணை மேடையில் இருந்து இறக்கினர்.
தாக்கப்பட்ட நபர் மேடையில் அந்த பெண்ணுக்கு அருகில் நின்று தனது மகனுக்கு எதிரான புகாரை பகிர்ந்து கொள்வதைத் தடுக்க முயற்சிப்பது போல் தெரிகிறது.