என் மலர்
நீங்கள் தேடியது "awareness"
- 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் விஜயகுமார் வழிகாட்டுதலின் பேரிலும், திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் 30 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும், இலவச மார்பக பரிசோதனைகளை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
மாவட்ட சுகாதார நலக் கல்வியாளர் மணவாளன் முன்னிலை வசித்தார்.
இதில் மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுனர் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மார்பக புற்றுநோய் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
- இன்ஸ்பெக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் ரவிகுமார் தலைமை தாங்கினார். கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பஸ் நிலையத்தில் புறப்பட்ட பேரணி மார்க்கெட் திடல், காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம் வழியாக காந்தி மைதானத்தை சென்றடைந்தது. பேரணியில் மாணவ-மாணவிகள் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், மார்பக புற்றுநோய் குறித்தும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், அவர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
- நடைபாதைகளில் உள்ள செடி, கொடிகளை தூய்மைப்படுத்தினர்.
- நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடைபெற்றது.
சீர்காழி:
விழுதுகள் இயக்கத்தின் சார்பில் சீர்காழி ரெயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விழுதுகள் இயக்கத்தின் தலைவர் ஏ.கே.ஷரவணன் தலைமை வகித்தார். ரெயில் நிலைய அதிகாரி முன்னிலை வகித்தார்.
சீர்காழி எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ரயில் நிலையத்தில் நடைபாதைகளில் இருந்த செடி, கொடிகளை தூய்மைப்படுத்தினர்.
கடும் வெயிலிலையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிவில் விவசாய பயிர்களை அழிக்கும் எலிகளின் எதிரியான பாம்புகளை அடித்து கொல்லாமல் பாம்புகளை பாதுகாப்பான முறையில் பிடித்து கையாளுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாம்பு பாண்டியன், நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர்கள், விழுதுகள் இயக்கத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் விழுதுகள் இயக்கத்தின் காமராஜ் நன்றி கூறினார்.
- ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- டி.எஸ்.பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்,
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31-ந் தேதி முதல் வரும் 5-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெரம்பலூர் முக்கிய அலுவலகங்களில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டிஸ் ஒட்டப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தொடங்கிய பேரணியை ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சத்யராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். பாலக்கரையில் துவங்கி பேரணி முக்கிய வீதி வழியாக சென்று புது பஸ்ஸ்டாண்டில் முடிவடைந்தது. செல்லும் வழியில் பொதுமக்களிடம் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
இதில் இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, விஜயலெட்சுமி, போலீசார் மற்றும் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மா
- விழிப்புணர்வு பேரணி நடைபெற்று சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
- மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியும், ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முகாம் அலுவலர் முரளிதரன், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினுடைய முன்னாள் தலைவர்கள், மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், என். எஸ்.எஸ் மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
முன்னதாக பொருளாளர் வினோத் வரவேற்றார்.நிறைவில் செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
- ராவுத்தர் கோவில் மற்றும் பள்ளி வளாகத்தில் தூய்மை பணி.
- பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் ஆனந்த கோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது
இதில் பாதிரங்கோட்டை தெற்கு பஞ்சாயத்தில் அமைந்துள்ள கருப்பட்டி தெருவில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில், மற்றும் ஆண்டாாங்கொள்ளையில் உள்ள ராவுத்தர் கோவில், மற்றும் பள்ளி வளாக தூய்மை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர் மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மேற்கொண்டனர்6வது நாள் நிகழ்ச்சி யாக மரக்கன்றுநடுவிழா நடைபெற்று மரக்கன்று களை தொடர்ந்து பராமரிப்போம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது மேலும் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர், செல்லத்துரை, தலைமை தாங்கினார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுதாகர், வரவேற்று பேசினார், மேலும் சிறப்பு விருந்தினராக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாரதிதாசன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார், இறுதியாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவன், அகத்தீஸ்வரன் நன்றி கூறினார்.
- பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி உள்ளது.
- 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே செம்மனாரை ஆதிவாசி கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில், தன் சுத்தம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர், சங்கத்தின் பொறியாளர், கிராம வளர்ச்சி அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு நோய்கள் வராமல் பாதுகாக்க சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம் என்று விளக்கினர். மேலும் முறையாக கை கழுவுதல், சுயமாக தன்னை எவ்வாறு நோய்களில் இருந்து காத்துக் கொள்வது, இதற்கு தன் சுத்தம் முக்கியம் என குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து கைகளை சுத்தமாக கழுவும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
- லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
- 31ம்தேதி முதல் இன்று வரை நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் கடந்த 31ம்தேதி முதல் இன்று (5-ந் தேதி) வரை ஊழல் தடுப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டது. இதன் காரணமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி ஆகியவை நடைபெற்றது. மேலும் பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், காமராஜர் வளைவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி சத்தியராஜ் மற்றும் அவரது குழுவினர்கள் லஞ்ச ஒழிப்பு தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஊழல் தடுப்பு தொடர்பாக வசனங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தி வாகன ஓட்டிகள் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியின் போது இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, விஜயலெட்சுமி மற்றும் ஏட்டு, போலீசார் கலந்து கொண்டனர்.
- அனைத்து தன்னார்வ அமைப்பினரையும் இணைத்து, நொய்யல் நதி பாதுகாப்பு என்பதை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
- தினமும் மாலை, நொய்யல் நதிக்கு ஆங்காங்கே ஆரத்தி எடுக்கப்படும்.
திருப்பூர்:
நொய்யல் சீரமைப்பு பெரு விழா-2023 குறித்த ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், கொங்கு மண்டல மக்கள் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பேரூா் சாந்தலிங்க மருதசால அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி ஆகியோா் தலைமை வகித்தனா். அஜீத் சைதன்யா, திருமுருகன்பூண்டி சுந்தரராஜ அடிகளாா், செஞ்சேரிமலை சுவாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலகளாவிய ஆன்மிக கூட்டமைப்பு பொறுப்பாளா் கோவை சாய் சுரேஷ், உலகளாவிய ஓம் நவசிவாய அறக்கட்டளை பொறுப்பாளா் சிவ வெற்றிவேல் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம் வருமாறு:-
நொய்யல் நதியை புனிதப்படுத்தும் விதமாக கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களில் 2023 மே, ஜூன் மாதத்தில் ரத யாத்திரை நடத்துவது, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சியாக ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் நடத்துவது, முக்கிய நிகழ்ச்சியாக 2023 ஆகஸ்ட் 25 முதல் 31ந்தேதி வரை 7 நாட்கள் பேரூா் தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கங்கள், ஆன்மிக கண்காட்சிகள் நடத்துவது, நொய்யல் மறுசீரமைப்பு பவுன்டேஷன் அமைப்பை ஏற்படுத்தி தொழில் துறையினா், கல்வித் துறையினா், தொண்டு நிறுவனத்தினா், சமூக அமைப்பினா் உள்ளிட்டோரை ஒருங்கிணைந்து 150 கிலோ மீட்டருக்கும் அதிகமாக உள்ள நொய்யல் நதியை புனிதப்படுத்தும் பணியை தொடங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் ஒருங்கிணைப்புக்கு 9940737262, 9943433880 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசியதாவது:-
காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி போன்ற ஆறுகளில் கழிவுகள் கலந்தாலும், அந்த நீரை தொட்டு பயன்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால், நொய்யல் ஆறு அத்தகைய நிலையில் இல்லை. மாசுபட்டுள்ளது.
நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 'நொய்யல் பெருவிழா' நடத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்தாண்டு ஜூலையில் நொய்யல் நதிக்கரையோரம் யாத்திரையும், ஆகஸ்டு 25ல் இருந்து, 7 நாட்களுக்கு, 'நொய்யல் பெருவிழா'வும் நடத்தப்படும்.
இதில் துறவியர் மாநாடு, சைவ, வைணவ மாநாடு, மகளிர் மாநாடு, சித்தர்கள் மாநாடு, பசு பாதுகாப்பு, நில மற்றும் நீர் மேலாண்மை, முத்தமிழ் கருத்தரங்கம் என ஆன்மிக, சுற்றுச்சூழல் மாநாடு, கருத்தரங்கு, கண்காட்சி ஆகியன இடம்பெறும். தினமும் மாலை, நொய்யல் நதிக்கு ஆங்காங்கே ஆரத்தி எடுக்கப்படும்.
நொய்யல் பாதுகாப்பு என்பது வெறும் விழாவாக முடிந்துவிடக்கூடாது என்ற நோக்கில், நொய்யல் நதி பயணிக்கும், 150 கி.மீ.,க்கு அதிகமான நீர்வழித்தடங்கள், நல்லாறு, கவுசிகா போன்ற ஏராளமான கிளை நதிகள், இடையிடையே உள்ள குளம், குட்டைகளை சுத்தப்படுத்தி, அதில் கழிவுகள் தேங்காதவாறு மாற்ற வேண்டும்.
அனைத்து தன்னார்வ அமைப்பினரையும் இணைத்து, நொய்யல் நதி பாதுகாப்பு என்பதை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஊர்வலங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி, அபராத கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
- அரசு கொண்டுவந்த புதிய போக்குவரத்து விதிமுறைகளை தொடர்ந்து பல்லடம் பகுதியில் தினசரிசுமார் 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.
பல்லடம்:
பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட் பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன .
இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி, அபராத கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது குறித்து பல்லடத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் குறித்து விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இது குறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு கூறியதாவது:-
தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி, அபராத கட்டணத்தை உயர்த்தி உள்ளது.அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய், ஹெல்மெட் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய், உள்ளிட்ட பல்வேறு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
அரசு கொண்டுவந்த புதிய போக்குவரத்து விதிமுறைகளை தொடர்ந்து பல்லடம் பகுதியில் தினசரிசுமார் 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. குறிப்பாக ஹெல்மட் அணியாமல் வந்து அபராதம் செலுத்துவோர் அதிக அளவில் உள்ளனர். எனவே ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி,பல்லடத்தில் ஆங்காங்கே விளம்பர பதாகைகள் வைத்துள்ளோம். பொதுமக்கள் அரசின் போக்குவரத்து விதிகளை பின்பற்றி, தங்களது விலைமதிப்பில்லாத உயிரை காப்பாற்றிக்கொள்ளவும் அபராதங்களை தவிர்க்கவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கல்.
- இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வடக்கு வீதியில் உப்பு சத்திய கிரகசத்தியாகிரக நினைவு கட்டிட நுழைவு வாயிலில் ஆட்டோ டிரைவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு வேதாரண்யம் காவல்து றையின் சார்பில் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் உள்ளிட்ட போலீசார் வாகன ஒட்டிகளுக்கு சாலைவி ழிப்புணர்வு ஏற்பட்டுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர் நிகழ்ச்சியில் சாலை விதிகளை மதிக்க வேண்டும் வானத்தில் போகும்போது செல்போன் பேசக்கூடாது இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை போலீசார் எடுத்து கூறினர் மேலும் வேதாரண்யம் பகுதியில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களையும் போலிசார் வழங்கினர் நிகழ்ச்சியில் ஏரளமான போலீசார் பொது மக்கள் வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.
- கழிவு நீர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
- பழைய டயர்கள் கொசு உற்பத்தியாகும் பொருட்களை வைத்து கொள்ளக் கூடாது.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் அக்க ரைவட்டம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையுடன் இணைந்து அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர், கண்ணையன் தலைமையில், அதம்பை சுகாதார ஆய்வாளர், எஸ், ராமநாதன் மற்றும் குழுவினர் இணைந்து ஊராட்சியில் இயந்திரம் மூலம் கொசு மருந்து 6 வார்டுகள் முற்றிலும் அடிக்கப்பட்டு கொசு ஒழிப்பு நடவடிக்கை, மற்றும் வீடுகளில் ஆங்காங்கே கழிவு நீர்களை உடனடியாக அகற்ற வேண்டும் வீட்டின் அருகே பழைய டயர்கள் கொசு உற்பத்தி ஆகும் பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.