என் மலர்
நீங்கள் தேடியது "awareness meeting"
- விபத்து ஏற்படாமல் கவனுத் துடன் பணியாற்றுதல் உள் ளிட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினர்
- வாடிக்கையாளர்கள் தெரிவித்த குறைகளை தீர்வு காணப்படும் என தெரிவித்தார்
சோளிங்கர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற் றும் பகிர்மான கழகம் சார் பில் வருவாய் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு விழிப்பு ணர்வு கூட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சோளிங்கர் செயற்பொறியா ளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி செயற் பொறியாளர் உமாசந்திரா முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் சங்கர் வரவேற்றார்.
வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு வருவாய் மேம்ப டுத்துதல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பல் வேறு ஆலோசனை வழங்கினார்.
மேலும் பணியின் போது தேவையான உபகர ணங்கள் வைத்திருத்தல், விபத்து ஏற்படாமல் கவனுத் துடன் பணியாற்றுதல் உள் ளிட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.
உதவி பொறியாளர்கள், மதிப்பீட்டு அலுவலர், உதவி கணக்கு அலுவலர், வருவாய் மேற்பார்வையாளர்கள், கணக்கீட்டு கண்காணிப்பா ளர்கள், கணக்கீட்டாளர்கள் மற்றும் கோட்ட கண்காணிப் பாளர்கள் கலந்து கொண்ட னர்.
முன்னதாக சோளிங்கர் மின் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு குறைகளை கேட்ட றிந்தார். வாடிக்கையாளர்கள் தெரிவித்த குறைகளை தீர்வு காணப்படும் என தெரி வித்தார்.
- பாளை யூனியனுக்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
நெல்லை:
பாளை யூனியனுக்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பஞ்சாயத்து தலைவி அனுராதா ரவிமுருகன் தலைமையில் நடைபெற்றது. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் சார்பில் நடந்த இந்த விழிப்புணர்வு பிரசார கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் கலந்து கொண்ட பெண்களிடம், மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகள், பெண்களுக்கான நீதிகள், அதனை எவ்வாறு பெறுவது என்பது குறித்து அவர் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர் ராஜாமணி, பணித்தள பொறுப்பாளர் சோபனா, ஊர் நாட்டாமைகள் செந்தூர் கனி, பரமசிவன், கிருஷ்ணன், பம்ப் ஆப்ரேட்டர் ராமச்சந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது
- மாலை 7 மணிக்கு மேல் பொருட்களை இறக்குவது குறித்து ஆலோசனை
நெமிலி:
ராணிப்பேட்டைமாவட்டம்,காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தீபிகா முருகன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பள்ளி, கல்லூரி அலுவலக வேலை நேரங்களான காலை 8 முதல் 11 மணிவரையிலும் மற்றும் மாலை 4 முதல் 7 மணி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
ஆதலால் வணிக பொருட்களை ஏற்றிவரும் லாரிகளுக்கு போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள நேரங்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மற்றும் மாலை 7 மணிக்கு மேல் பொருட்களை இறக்குதல் பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், போலீசார்,வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- அன்னப்பராஜா பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
- மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு மன்றத்தின் சார்பில், போதை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடை பெற்றது. தலைமையாசிரியர் நல்லாசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் பேசுகையில், இன்றைய நாளில் மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால், கல்வியில் நாட்டமின்மை, ஒழுக்கக்கேடுகள், சமூகவிரோதச் செயல்பாடுகள், சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இவைகளிலிருந்து மாணவர்கள் விடுபடவேண்டும் என்றார். கூட்டத்தில் போதை தடுப்பு மன்ற உறுப்பினர்களும் மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
- நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- நெசவாளர்களுக்கான முத்ரா கடன் மேளா மற்றும் அரசு நல்வாழ்வு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது.
விருதுநகர்
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை வட்டார மருத்துவ அலுவலர் கருணாகர பிரபு ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி துணை சேர்மன் செல்வமணி, விருதுநகர் கைத்தறித்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசுதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
முகாமில் நெசவாளர்களுக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த சர்க்கரை அளவ பரிசோதனை, நவீன இசிஜி பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தேவைப்படுவோருக்கு மருந்துகளும் வழங்கப்பட்டன. யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 229 நெசவாளர்கள் பங்கேற்றனர். நெசவாளர்களுக்கான முத்ரா கடன் மேளா மற்றும் அரசு நல்வாழ்வு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது.
- கொள்ளை சம்பவங்கள் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில்போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே முருங்கதொழுவு ஊராட்சி க்கு உட்பட்ட ஒட்டன் கொட்டை கரியாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள்.
இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்ய ப்பட்டனர். மேலும் இவர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டது தெரிய வந்தது.
இதையொட்டி பொது மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யிலும் கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் சென்னிமலை அருகே அம்மன் கோவில் புதூரில் உள்ள வாகை த்தொழுவு அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமை தாங்கினார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சர வணன் முன்னிலை வகி த்தார்.
இந்த கூட்டத்தில் தனியாக தோட்ட பகுதி களில் குடியிருப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள், போலீசார் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- பீட்சா, பர்கர் போன்ற துரித உணவை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.
- அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் அறிவுரை வழங்கினார்.
திருமங்கலம்
திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் நாட்டு நல பணித்திட்டம் மற்றும் திருமங்கலம் வட் டார ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் அனுமதி யின் பேரில் கல்லூரி முதல் வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற் றது.
இதில் இளம் வயதில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய விட்டால் பிற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை தவிர்த்து சரிவிகித சத்தான உணவை மாணவ, மாணவிகள் உட் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழவேண்டும் என கூறினார்.
மருத்துவ அலுவலர் ஹரிஷ் ஊட்டச்சத்து சரி விகித உணவு பற்றியும், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காந்திமதி ரத்த சோகை பற்றியும், வட்டார ஒருங்கிணைப்பாளர் பாரதி பெண்களுக்காக அரசு வழங்கும் சுகாதார திட்டங் கள் பற்றியும் எடுத்துரைத் தனர்.
இறுதியில் ஊட்டச் சத்து பற்றி எழுப்பிய வினாக்க ளுக்கு சரியான விடை அளித்த மாணவ, மாணவிக ளான தமிழ் துறை யைச் சார்ந்த ஹரி சங்கர், துர்க்கா, வணிகவியல் துறையைச் சார்ந்த ஹேமஸ்ரீ, ரூபஸ்ரீ, நாகஜோதி ஆகியோ ருக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி னார். முன்னதாக தமிழ்த்து றைத் தலைவரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரு மான முனைவர் முனி யாண்டி வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் ராமுத்தாய், சிங்கராஜா, ராஜேஸ்வரி, இன்பமேரி, ஜோதி, ஆறுமுகஜோதி வர லாற்றுத்துறைத் தலை வர் மணிமேகலை, உதவிப்பேரா சிரியர் இருளாயி, வணிகவி யல் துறை உதவிப்பேராசி ரியர் சிவசுந்தரி, சகாய வாணி, முத்துலெட்சுமி, கதிரேசன் உள்ளிட்ட 20 பேராசிரியர்களும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை நாட்டு நல பணித்திட்ட தொண்டர் கள் செய்தனர். இறுதியில் வணிகவியல் துறைத்தலை வர் தனலெட்சுமி நன்றி கூறினார்.
- திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் சமூக மருத்துவத்துறை சார்பில் நடத்தப்பட்டது.
- முடிவில் அனைவரும் டெங்கு ஒழிப்பு சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் சமூக மருத்துவத்துறை சார்பில் நடத்தப்பட்டது. அதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் டெங்கு விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். துணை முதல்வர் சலீம், அனைத்து துறைத் தலைவர்கள், டாக்டர்கள் மற்றும் 300 மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். முடிவில் அனைவரும் டெங்கு ஒழிப்பு சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகா பழனிச்சாமி, பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- கழிவுநீர் குழாய் பராமரிப்பு, பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகா பழனிச்சாமி, பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் குறித்தும்,கழிவுநீர் குழாய் பராமரிப்பு, பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் 400 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
மதுரை
திருமங்கலம் ஆலம் பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீபாவளி பண்டிகையை பாது காப்பான முறையில் கொண்டாட மாணவ மாண விகளை அறிவுறுத்தும் வகையில் தீயணைப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கல்லூரி தாளாளர் எம். எஸ்.ஷா மற்றும் பொருளாளர் சகிலாஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நடந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பேசினார்.
திருமங்கலம் தீயணைப்புத்துறை சார்ந்த அலுவலர்கள் கவியரசு மற்றும் வரதராஜன் ஆகியோர் பேசுகையில், பட்டாசுகளை வெடிக்க செய்யும் பொழுது எதிர் பாராமல் ஏற்படக்கூடிய தீ விபத்துக்களை தடுக்கும் வண்ணம் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக அருகில் மணல் மற்றும் தண்ணீர் நிரம்பிய வாளி களை வைத்துக்கொள்ள வேண்டும். நமது உடைக ளையும் பாதுகாப்பான முறையில் அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.
வீட்டில் தீபாவளி பலகாரங்கள் செய்யும் பொழுது எண்ணெய் சட்டியில் ஏற்படும் தீயை அணைக்க தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. அடுப்பை உடனடியாக அணைத்துவிட்டு எண்ணை சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி வேண்டும் என தெரிவித்தனர்.
முன்னதாக கல்லூரியின் தமிழ்த்துறை தலைவரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான முனியாண்டி வரவேற்புரை ஆற்றினார். கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் 400 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
- அசம்பாவித சம்பவங்கள் இனிவரும் நாட்களில் நடைபெறாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஆனங்கூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் இனிவரும் நாட்களில் நடைபெறாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஆனங்கூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.
போலீஸ் சூப்பிரண்டு
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆனங்கூர் ஊராட்சித் தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலர் சந்திரன், ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
முற்றுப்புள்ளி
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பேசியதாவது:-
ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று வரும் வன்முறை, அசம்பாவித சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆங்காங்கே வாழை மரங்களை வெட்டுதல், டிராக்டர்களுக்கு தீ வைத்தல், பாக்கு மரங்களை வெட்டுதல் போன்றவை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜ், கிராம நிர்வாக அலுவலர், ஆனங்கூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கொத்தமங்கலம், வடகரையாத்தூர், அ.குன்னத்தூர், பிலிக்கல்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- குற்றச்செயல்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
- அச்சம் போக்க இரவு நேர ரோந்து பணி தீவிரம்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட திருப்பாற்கடல் மற்றும் அத்திபட்டு கிராமங்களில் நேற்று காவேரிப்பாக்கம் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு குற்றசம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார்.
கடந்த 2 நாட்களாக திருப்பாற்கடல் மற்றும் அத்திபட்டு ஆகிய கிராமங்களில் முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக வதந்திகள் பரவி வருகிறது.
முகமூடி கொள்ளையர்கள் பற்றிய வீண் வதந்தியை நம்பவேண்டாம் மேலும் அதுபோன்ற சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. குற்ற செயல்களை போலீசாரால் மட்டுமே தடுத்து விட முடியாது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். இருப்பினும் பொதுமக்களின் அச்சம் போக்க இரவு நேர ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடிப்பதற்கு வசதியாக தெருக்கள் மற்றும் வீடுகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க முன் வர வேண்டும்.
மேலும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.