என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Awareness programme"
- பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை ஒருங்கிணைப்பாளர் புனிதா செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி அருகே பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் கிளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக அணுமின் உற்பத்தி நிலையத்தில் பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்வி குழுமத்தின் இயக்குனர் விக்னேஸ்வரி அருண் குமார் தலைமை தாங்கினார். மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் முனிராஜ் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி டீன் மாரிச்சாமி வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக கூடங்குளம் அணுமின் நிலையம் கூடுதல் முதன்மை பொறியாளர் சுரேஷ் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அணு மின் நிலையங்களில் முக்கியத்துவம், அணு மின் நிலையங்களில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள், கேட் தேர்வின் முக்கியத்துவம் முதலான தகவல்களை மாணவர்களிடம் விளக்கி கூறினார்.
நிகழ்ச்சியில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் மின்னணு தொடர்பு மற்றும் உயிர் மருத்துவ பொறியியல் மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை ஒருங்கிணைப்பாளர் புனிதா செய்திருந்தார். இணை பேராசிரியர் அருணா நன்றி கூறினார்.
- அரசு மேல்நிலைப் பள்ளியில் ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் நிலையம் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.எஸ். நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் நிலையம் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் நிஷாந்த், சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தண்டவாள பகுதியில் மாணவர்கள் விளையாட வேண்டாம். உரிய பாதையை பயன்படுத்த வேண்டும். தண்டவாள பகுதியை தாண்டி செல்ல வேண்டாம். சிக்னலை மதித்து நடக்க வேண்டும். செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க கூடாது. தண்டவாளப் பகுதியில் கற்கள் வைத்து விளையாடுவதும், ஓடும் ரயில் மீது கற்களை எரிந்து விளையாடுவதும் கூடாது. அது தண்டனைக்குரிய குற்றம் என எடுத்துக் கூறி மாணவர்களுடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் ஆனந்தன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் வில்லேஜ் விசிலன்ஸ் கமிட்டி கலந்தாய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
டி.என்.பாளையம்:
பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் 3 பேரூராட்சி மற்றும் 8 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு ஊரில் நடக்கும் குற்ற நிகழ்வு குறித்து "வில்லேஜ் விசிலன்ஸ் கமிட்டி" கலந்தாய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாணிப்புத்தூர், கே.என்.பாளையம், பெரிய கொடிவேரி பேரூராட்சிகள் மற்றும் அரக்கன்கோட்டை, புஞ்சை துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும். புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தாலோ, சந்தேகத்தின் பேரில் புதிய நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டாலோ சம்பந்த ப்பட்ட போலீஸ் நிலை யத்தில் தகவல் கொடுக்கு மாறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்க ளுக்கு போலீசார் அறிவுறுத்தி பேசினர்.
தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்போர் குறித்து தகவல் தெரியும் பட்சத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ள ப்பட்டது. மது போதையில் பொதுமக்களிடத்திலோ, பொது இடங்களிலோ இடையூறு மற்றும் தகராறில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசில் தலைவர்கள் தகவல் கொடுக்க வேண்டுமாறு நிகழ்ச்சியில் போலிசார் பேசினர்.
இந்த குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், தனிப்பிரிவு போலீசார் உடன் இருந்தனர்.
- கமுதி அருகே இயற்கை பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பூக்குளம் கிராமத்தில் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இயற்கை பேரிடர் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியை செல்வின் சாக்ரோஸ் முன்னிலை வகித்தார். கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் இயற்கை பேரிடர் கள் குறித்தும், மாணவ- மாணவிகள் தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும், பொதுமக்களை எப்படி காப்பாற்ற வேண்டும், எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.
இதில் தீயணைப்பு வீரர்கள் உத்தண்ட சாமி, நாகச்சந்திரன், காந்தி, தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் சின்ன உடப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு பேரிடர் விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
- மோகனூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோகனூர் போலீசார் சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மோகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழகன் பங்கேற்று மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவுறைகளை வழங்கினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோகனூர் போலீசார் சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மோகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழகன் பங்கேற்று மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவுறைகளை வழங்கினார்.
பெண் குழந்தைகளை பாதுகாப்பாகவும் இயல்பாகவும் வாழ்வதை உறுதி செய்வது குறித்தும் விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை ரேவா குமாரி மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
- அரசு பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
- ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எம்.எம்.டி மற்றும் நர்ச்சர் என்ற தன்னார்வ இயக்கம் மூலம் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்தும், அப்படிப்பினை படிக்க ஏதுவாக உள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எம்.எம்.டி மற்றும் நர்ச்சர் என்ற தன்னார்வ இயக்கம் மூலம் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சி, நாளை 27-ந் தேதி மாலை 3 மணிக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- பிளாஸ்டிக் தவிர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- கேசா இளம்படை அமைப்பின் எதிர்கால திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜீவலதா பேசினார்.
ராஜபாளையம்
ஜெ.சி.ஜ. ராஜபாளையம் கேசா டி மிர் மற்றும் புதுயுகத்தின் கேசா இளம்படை இணைந்து பிளாஸ்டிக் தவிர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவள்ளுவர் நகரில் நடத்தியது. கேசா இளம்படையின் துணை ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா பேசினார். சிறப்பு விருந்தினர்களாக எல்.ஜ.சி. காப்பீடு ஆலோசகர் திருமுருகன், திருவள்ளுவர் நகர மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ், 2-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வள்ளிமயில் ராஜா, யூனியன் வைஸ் சேர்மன் துரைகற்பகராஜ் ஆகியோர் பேசினர்.
மாணவி சிவதர்ஷினி வரவேற்றார். பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்ற தலைப்பில் மாணவன் நரேஷ், பிளாஸ்டிக்கை குறைப்போம் என்ற தலைப்பில் சிவதர்ஷினியும், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வோம் என்ற தலைப்பில், காவ்ய தர்ஷினியும் பேசினர். கேசா இளம்படை அமைப்பின் எதிர்கால திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜீவலதா பேசினார். துணை ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா வாழ்த்துரை வழங்கினார். மாணவி ஹாஜிரா பர்ஹின் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெ.சி.ஜ ராஜபாளையம் கேசா டி மிர் தலைவர் பானுபிரியா, மாலா, அழகுராஜா, சத்யா ஆகியோர் பள்ளியின் தாளாளர் திருப்பதி செல்வன், முதுநிலை முதல்வர் அருணாதேவி வழிகாட்டுதலின் படி செய்திருந்தனர்.
- கபிலர்மலை பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கூலி தொழிலாளர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து மாவட்ட மன நல திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது.
- போதைப் பழக்கம் ஒரு மனநோய் என உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்கிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கூலி தொழிலாளர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து மாவட்ட மன நல திட்டத்தின் சார்பில் விழிப்பு ணர்வு ஏற்படுத் தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட மனநல மருத்துவர் ஜெயந்தி மற்றும் மன நல ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், போதை மருந்து பழக்கம் ஒருவரின் உடல் நலத்தையும், மன நலத்தையும் வெகுவா கப் பாதிக்கும். இளைய சமுதாயத்தினரிடையே வேகமாக பரவும் போதை பழக்கம் புற்றுநோயை விடக் கொடியது.
போதை மருந்துப் பழக்கத்தினால் ஈரல் கோளாறுகள், தூக்க மின்மை, குற்றம் புரிதல், சமூக விரோத நடவடிக் கைகள் ஏற்படுகிறது. போதைப் பழக்கம் ஒரு மனநோய் என உலக சுகாதார நிறுவனம் வரை யறை செய்கிறது.
எனவே தக்க ஆலோ சனை மற்றும் சிகிச்சை எடுத்தால் போதை பொருள் தாக்கத்தில் இருந்து விடு படலாம். அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெண்கள் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறை உதவிப்பேராசிரியை தர்ஷனா நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி உள்தர உத்தரவாத அமைப்பு மற்றும் மாண வர்கள் ஆலோசனை அமைப்பு இணைந்து கல்லூரி பெண்களுக்காக "மனம் மற்றும் ஆரோக்கியம்'' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
கணினிப் பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியை மகாலட்சுமி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் மற்றும் மாணவர்கள் ஆலோசனை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, சிவகாசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். கலுசிவலிங்கம், சிவகாசி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலக நேர்முக உதவியாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு "பொது சுகாதார பிரச்சினைகள்" என்ற தலைப்பில் பேசினர்.
விருதுநகர் சுகாதார பணிகள் துணை இயக்கு நர்-தேசிய வளர் இளம் பருவத்தினருக்கான நலத்திட்ட ஒருங்கி ணைப்பா ளர் உதயசங்கரி பேசினார் ''வளரும் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகள்" என்ற தலைப்பில் பேசினர். தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய ஊட்டச்சத்து குறைபாடு- பிரச்சினைகளை மாணவர்களுக்கு விளக்கினார்.
மேலும் இந்த வயதில் ரத்த சோகை, அதிக எடை மற்றும் குறைந்த எடை போன்ற முக்கிய பிரச்சினைகளை விவரித்தார். இன்றைய சூழலில் மாணவர்கள் உட்கொள்ளும் உணவு முறை ஆரோக்கிய மற்ற உணவுமுறை என்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு திட்டங்கள் அவசியம் என்றும் எடுத்துரைத்தார்.
திருத்தங்கல் அரசு மருத்துவமனை ஆலோசகர் சங்கர் "இளம் பருவ மனநலப் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் பேசினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தழுவி நல்வாழ்வுக்காக மாணவர்களை வழி நடந்தியது. மேலும் ஆரோக்கி யமான வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் நினைவாற்றலை மதிப்பீடு செய்ய இது மாணவர்களை ஊக்கப்படுத்தியது.
சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறை உதவிப்பேராசிரியை தர்ஷனா நன்றி கூறினார்.
- அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சங்ககிரி ஆர்.எஸ். கட்டுமான அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சிக்கு சங்ககிரி அரசு மருத்துவமனை ஐ.சி.டி.சி ஆலோசகர் கோபால் தலைமை வகித்தார்.
சங்ககிரி:
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை சென்னை - கன்னியாகுமரி தொழில் தடத் திட்டம் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சங்ககிரி ஆர்.எஸ். கட்டுமான அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சங்ககிரி அரசு மருத்துவமனை ஐ.சி.டி.சி ஆலோசகர் கோபால் தலைமை வகித்தார். இதில் சாலை பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ், கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சங்ககிரி நெடுஞ்சாலைத் துறை துணை கோட்ட பொறியாளர் தாரகேஸ்வரன், துணை பொறியாளர் தினகரன், ஏ.ஜி.இ.இ.எஸ் கள மேற்பணியாளர் தேவன், கட்டுமான பொறுப்பாளர் மற்றும் முதுநிலை மேலாளர் முத்துக்குமரன் மற்றும் கட்டுமான பணியாளர்கள் சுமார் 150 பேர் இதில் கலந்துகொண்டனர்.
- புகை யில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமையில் நடந்தது.
- சேலம் தூய்மை இந்தியா திட்ட அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு நகராட்சி சார்பில் புகை யில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமையில் நடந்தது. மகாதேவ வித்யா லயா பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி யின் உதவி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், சேலம் தூய்மை இந்தியா திட்ட அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கணேசன் பேசியதாவது:-
காற்றை மாசுபடுத்தும் வகையில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து புகையை உண்டாக்குவதால் பொது மக்கள் மூச்சுத் திணறல் நோய்க்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது . எனவே இதனை களைய புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்பதை பெரிய வர்களுக்கு அறிவுறுத்த இளைய சமூகத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பள்ளி மாணவ- மாணவிகளான உங்களிடம் இந்த திட்டம் குறித்து விளக்கி கூறியுள்ளோம். இதனை உங்கள் பெற்றோர், உங்களுக்கு தெரிந்த அக்கம்பக்கத்தினரிடம் எடுத்துக் கூறி புகையில்லா போகி கொண்டாடவும் நகராட்சி பணியாளர்களிடம் தேவையற்ற பொருட்களை ஒப்படைக்கவும் விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ- மாணவிகளை நகராட்சி ஆணையாளர் பாராட்டி வாழ்த்தினார்.
முடிவில் மாணவ- மாணவிகள் புகையில்லா போகி கொண்டாடுவோம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
- மாணவ-மாணவிகளுடன் காவல் துறையும் நட்புறவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸ் நிலையத்திலும் பள்ளியிலும் நடந்தது.
- போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள், போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடிப்பது, பொது இடங்களில் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்படுவது போன்றவற்றை பற்றி எடுத்துரைத்தனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் காவல் துறையும் நட்புறவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸ் நிலையத்திலும் பள்ளியிலும் நடந்தது.
போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்த மாணவ-மாணவிகளிடம் துணை போலீஸ்சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுவனம், போக்குவரத்து பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசிங் ஆகியோர் போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள், போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடிப்பது, பொது இடங்களில் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்படுவது போன்றவற்றை பற்றி எடுத்துரைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்