என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "awareness"

    • கழிவு நீர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
    • பழைய டயர்கள் கொசு உற்பத்தியாகும் பொருட்களை வைத்து கொள்ளக் கூடாது.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் அக்க ரைவட்டம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையுடன் இணைந்து அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர், கண்ணையன் தலைமையில், அதம்பை சுகாதார ஆய்வாளர், எஸ், ராமநாதன் மற்றும் குழுவினர் இணைந்து ஊராட்சியில் இயந்திரம் மூலம் கொசு மருந்து 6 வார்டுகள் முற்றிலும் அடிக்கப்பட்டு கொசு ஒழிப்பு நடவடிக்கை, மற்றும் வீடுகளில் ஆங்காங்கே கழிவு நீர்களை உடனடியாக அகற்ற வேண்டும் வீட்டின் அருகே பழைய டயர்கள் கொசு உற்பத்தி ஆகும் பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • குடும்பத்தினரிடம் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
    • சிறுநீரகங்கள் மற்றும் இதய வால்வுகள் ஆகிய உறுப்புகள் தானமாக பெற்றுக் கொள்ளப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று டீன் பாலாஜிநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிரு ப்பதாவது

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க ஆண் கடந்த 3-ம் தேதி சாலை விபத்து ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளை செயலிழப்பு ஏற்பட்டு மூளை சாவு அடைந்தார்.

    இதையடுத்து மருத்துவ மனை சார்பாக அவரது குடும்பத்தினரிடம் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. அவர்க ளும் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அடைந்தனர்.

    இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்து ஒப்புதல் அளி த்தனர்.

    அதன்படி அவரது கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதய வால்வுகள் ஆகிய உறுப்புகளை தானம் பெற்றுக் கொள்ளப்பட்டது.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாகதமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    எனது தலைமையிலான மருத்துவ குழு மற்றும் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட குழுக்களுடன் ஒருங்கிணைந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு பொருத்தப்பட்டது.

    இதய வால்வுகள் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சாலை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு சாலை மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

    சோதனையான காலகட்ட த்திலும் இறந்தவரின் குடும்பத்தினர் இறந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்தது பாராட்டுக்கு உரியது. உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் பலரை வாழ வைக்கலாம். உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் மருது துரை, பாலகிருஷ்ணன், லியோ, கந்தசாமி, காந்தி மற்றும் பல டாக்டர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

    தஞ்சை மருத்துவ கல்லூரியில் முதன் முதலில் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து 1585 பேரிடம் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 9483 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுதல் குறித்து விழிப்புணர்வு.
    • போதை பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து ஆசிரியர் பேசினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்பு துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காவல்துறையின் சார்பில் மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    தலைமையாசிரியர் ஆனந்தன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கவிநிலவன் முன்னிலை வகித்தார்.

    ஆசிரியர் அறிவழகன் வரவேற்றார்.வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் பள்ளியில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு உறுதிமொழி படித்து ஏற்க செய்தார். முடிவில் ஆசிரியர் ரெங்கசாமி நன்றி கூறினார்.

    இதே போல்வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் எழிலரசன் தலைமை வகித்தார்.

    ஆசிரியர் ஆதவன் வரவேற்றார். போதைப் பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து ஆசிரியர் நாகராஜன் பேசினார்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். முடிவில் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது
    • காவல் துறையினர் சார்பில் நடந்தது

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த மணக்குடி கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன் தலைமையிலான காவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும், அவசரகால உதவி எண்கள் 100,1098, 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • 16-ந் தேதி மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
    • 19-ந் தேதி கால்நடை மருத்துவ முகாம்.

    தஞ்சாவூர்:

    கூட்டுறவு வார விழாக்குழு தலைவரும், தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளருமான தமிழ்நங்கை வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    69-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    விழாவின் முதல் நாளான இன்று கொடியேற்றுதல், உறுதிமொழி எடுத்தல் மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது.

    நாளை 15-ந் தேதி விற்பனை மேளா, 16-ந் தேதி மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, 17-ந் தேதி உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் கருத்தரங்கம், 19-ந் தேதி கால்நடை மருத்துவ முகாம், 20-ந் தேதி விற்பனையாளர், வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளது.

    மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா வருகிற 18-ந் தேதி மாலை 4 மணி அளவில் கும்பகோணம், மூர்த்தி கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
    • அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் நல அலுவலர் ராமு, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, குழந்தைகள் நல அறக்கட்டளையை சேர்ந்த முரளீஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் இம்மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

    • செல்போன் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ- மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகள் அளித்தார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கூன வேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு செல்போன் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் ஜெயந்தி, மனநல ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத ஆப்களை பயன்படுத்துவது, செல்போ–னுக்கு அடிமை ஆவதை தவிர்க்க வேண்டும் என பேசினர். மனநல ஆலோசகர் ரமேஷ் மாணவ- மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகள் அளித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் விஜி மற்றும் மாணவ- மாண–விகள் கலந்து கொண்டனர்.

    • நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்குட்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • விழிப்புணர்வு பேரணி நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்று பேரூராட்சி அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது.

    ராசிபுரம்:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்குட்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்று பேரூராட்சி அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சென்பக வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ -மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், இயன்முறை டாக்டர் சுஷ்மிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குளம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
    • கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் கொரோனா, டெங்கு குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் ஜான் ரவி, கவுன்சிலர்கள் சாலமோன்ராஜா, பழனி சங்கர், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இளநிலை உதவியாளர் முகைதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைக்குழுவினர் ஆடல் பாடலுடன் பொதுமக்களுக்கு கொரோனா, டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள் செல்வின்துரை, ஆனஷ்ட் ராஜ் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் பரமத்தியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
    • பேரணி, மோகனூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் பரமத்தியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

    பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை, பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம் தொடங்கி வைத்தார். பரமத்தி வட்டார கல்வி அலுவலர் கவுரி, பொறுப்பாசிரியர் தேவப்பிரியா, வட்டார வளமைய மேற்பார்வை யாளர் (பொறுப்பு) சுபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி முன்பு இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிதல், கண்டறியப்பட்ட குழந்தை களை முறையாக பள்ளியில் சேர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தி மாணவர்கள் பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.

    பேரணியில் பரமத்தி வட்டார வளமைய ஆசிரியர்கள் பார்வதி, செல்வராணி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி ஆயத்த முகாம் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அருணாசலம் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் லாவண்யா கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி, மோகனூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • ஆனங்கூர் கிராமத்தில் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையில் மண் மாதிரி சேகரித்தல், ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் பரிசோதனை வாகனம் மூலம், விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்து ஆய்வறிக்கை வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம், ஆனங்கூர் கிராமத்தில் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னதுரை தலைமையில் மண் மாதிரி சேகரித்தல், ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் பயிர்கள் பற்றி கூறப்பட்டது.

    திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் பரிசோதனை வாகனம் மூலம், விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்து ஆய்வறிக்கை வழங்கப்பட்டது.

    அறிக்கையில் பயிர் சாகுபடி செய்ய உள்ள நிலத்தின் கார, அமில தன்மை, தொழு உரம், பயிருக்கு தேவையான உரங்கள், நுண்ணூட்டச் சத்து மற்றும் பேரூட்டச்சத்துகள் விபரம் தெரிவிக்கப்பட்டு, அவற்றை பயன்படுத்தும் அளவு ஆகிய விபரங்களை மூத்த வேளாண்மை அலுவலர் சவுந்திரராஜன் விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் அருள்ராணி, உதவி வேளாண்மை அலுவலர் ஜெயமணி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு பாட்டுப்போட்டி நடந்தது.
    • வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பாடல்களை பாடினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தேர்தல் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு பாட்டுப்போட்டி நடந்தது.

    இதில் மாணவிகள் பங்கேற்று தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு, வாக்களிக்க பணம் பெறக்கூடாது, வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பாடல்களை பாடினர். சிறப்பாக பாடல் வரிகள் அமைத்து, பாடிய மாணவிகளின் பெயர்கள் இளையான்குடி வட்டாட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளையும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோரையும் முதல்வர் அப்பாஸ் மந்திரி பாராட்டினார்.

    ×