என் மலர்
நீங்கள் தேடியது "ayyappa devotees"
- ஏராளமான கன்னிசாமிகளும் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
- கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.
திருப்பூர்:
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
மண்டல பூஜை
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கார்த்திகை முதல் நாளான இன்று தொடங்கியது. இவ்விழா இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 27-ந்தேதி சபரிமலை அய்யப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
இதில் பங்கேற்க செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி துளசி மணி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.
சரண கோஷம் முழங்க மாலை அணிந்த பக்தர்கள்
தமிழகத்தில் இருந்தும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக சபரிமலை செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் குருசாமிகள் முன்னிலையில் பக்தர்கள் மாலை அணிந்தனர்.
இதுபோல ஏராளமான கன்னிசாமிகளும் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
திருப்பூர் மாநகரில் அய்யப்பன் கோவில், விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஈஸ்வரன் கோவில் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.
- பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணியில் இருந்து அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
- கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு:
சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து கோவிலுக்கு செல்வது வழக்கமாகும்.
இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டலபூஜைகளுக்காக நேற்று நடைதிறக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, ஈரோடு, கோபி, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அய்யப்ப பக்தர்கள் இன்று கார்த்திகை 1-ந் தேதியையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணியில் இருந்து அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. இதேபோல ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து கொண்டனர்.
இதேபோல் கோபி பகுதியில் உள்ள பச்சைமலை பவளமலை முருகன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவி ல்களில் இன்று காலை அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் மாலை அணிவித்து கொண்டனர்.
- சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
- சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
திருப்பூர்:
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கர்நாடக மாநிலம் பெல்காம்-கொல்லம், ஹூப்ளி-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. பெல்காம்-கொல்லம் சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி காலை 11.30 மணிக்கு பெல்காமில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரெயில் ஈரோடுக்கு காலை 5.10 மணிக்கும், திருப்பூருக்கு காலை 6 மணிக்கும், போத்தனூருக்கு 6.45 மணிக்கும் செல்லும்.
கொல்லம்-பெல்காம் சிறப்பு ரெயில் வருகிற 21-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 11 மணிக்கு பெல்காம் சென்றடையும். இந்த ரெயில் போத்தனூரில் நள்ளிரவு 1 மணிக்கும், திருப்பூரில் 1.50 மணிக்கும், ஈரோடுக்கு 3 மணிக்கும் செல்லும்.
ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் வருகிற 27-ந் தேதி ஹூப்ளியில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 3.15 மணிக்கு கொல்லத்துக்கு சென்றடையும். இந்த ரெயில் ஈரோட்டுக்கு காலை 5.10 மணிக்கும், திருப்பூருக்கு 6 மணிக்கும், போத்தனூருக்கு 6.45 மணிக்கும் செல்லும்.
கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி கொல்லத்தில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 8 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். பெல்காம்-கொல்லம் சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 15-ந் தேதி இயக்கப்படுகிறது. கொல்லம்-பெல்காம் சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொல்லம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07130) கொல்லத்தில் வருகிற 19-ந் தேதி, 26-ந் தேதி மதியம் 3 மணிக்கு புறப்ட்டு சனிக்கிழமை நள்ளிரவு 12.35 மணிக்கு கோவைக்கும், 1.20 மணிக்கு திருப்பூருக்கும், 2.15 மணிக்கு ஈரோட்டுக்கும், 3.25 மணிக்கு சேலத்துக்கும் சென்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு சென்று சேரும்.
ஆந்திர மாநிலம் நரசப்பூர்-கொல்லம் சிறப்பு ரெயில் (07131) நரசப்பூரில் வருகிற 21 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு சேலத்துக்கும், 9.10 மணிக்கு ஈரோட்டுக்கும், 10.10 மணிக்கு திருப்பூருக்கும், 11.20 மணிக்கு கோவைக்கும் சென்று இரவு 7.35 மணிக்கு கொல்லம் சென்று சேரும்.
கொல்லம்-நரசப்பூர் சிறப்பு ரெயில் (07132) வருகிற 22-ந் தேதி மற்றும் 29-ந் தேதி கொல்லத்தில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கோவைக்கும், 5.05 மணிக்கு திருப்பூருக்கும், 6 மணிக்கு ஈரோட்டுக்கும், 7 மணிக்கு சேலத்துக்கும் சென்று புதன்கிழமை இரவு 10 மணிக்கு நரசப்பூர் சென்று சேரும்.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சபரிமலை சீசனையொட்டி மதுரைக்கு அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
- கோவில்கள்-கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்தும் இடத்தில் காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்.
....................
மதுரை
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்குவார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்வார்கள். அதே போல் சபரிமலைக்கு செல்லும் போதும், சபரிமலையில் சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பும் போதும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வார்கள். இதனால் சபரிமலை சீசன் தொடங்கியதில் இருந்தே பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ள ஊர்களில் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும்.
மதுரைக்கும் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியதில் இருந்தே மதுரை மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இதன் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதி, மாசி வீதிகளில் காலை முதல் இரவு வரை அய்யப்ப பக்தர்களாக காட்சி அளிக்கின்றனர். அவர்கள் கோவிலை சுற்றியுள்ள கடைகளில் சுவாமி படங்கள், பூஜை பொருட்கள், ஆடைகள் மற்றும் பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் மதுரையில் உள்ள கடைகளில் சபரிமலை சீசன் விற்பனை அதிகரித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பஸ், வேன், கார் உள்ளிட்ட கனரக வாகனங்களில் வரக்கூடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களை எல்லீஸ் நகரில் உள்ள கோவில் வாகன காப்பகத்தில் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும்.
தற்போது அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வர தொடங்கி இருப்பதால் மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகம் வாகனங்களால் நிரம்பி வழிகிறது. அந்த பகுதியில் உள்ள சாலையில் நாள் முழுவதும் அய்யப்ப பக்தர்களாக காட்சி அளிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான கடைகள் தோன்றி உள்ளன.
இதே போன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில், அழகர்கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. காலையில் வானம் மேகமூட்டத்துடன் சேர்ந்து பனிமூட்டமாகவும் காட்சி அளித்தது
- நேற்று இரவு மூலக்கரைப்பட்டி, களக்காடு, பாளை, நெல்லை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இன்றும் அதிகாலை 3 மணி முதல் விட்டு விட்டு சாரல் அடித்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. காலையில் வானம் மேகமூட்டத்துடன் சேர்ந்து பனிமூட்டமாகவும் காட்சி அளித்தது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் அடிக்காமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மட்டும் அல்லாமல் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.
இந்நிைலயில் நேற்று இரவு மூலக்கரைப்பட்டி, களக்காடு, பாளை, நெல்லை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இன்றும் அதிகாலை 3 மணி முதல் விட்டு விட்டு சாரல் அடித்தது.
சிரமம்
மாநகர், புறநகர் பகுதிகளில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. சாலைகளை மறைக்கும் அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் காலையில் பணிக்கு புறப்பட்டு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக களக்காட்டில் 4.8 மில்லிமீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 4 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கன்னடியன் பகுதியில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளில் மழை குறைவால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை முதலே மெயினருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சாரல் மழை
அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற அணைகளில் மழை இல்லை.
மாறாக மாவட்டம் முழுவதும் வானம் இருண்டு காணப்பட்டது. குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆலங்குளம், கடையம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
- அப்பம் மற்றும் அரவணை தயாரிப்பதற்கு மாவு ஆலை அமைக்கப்படுகிறது.
- பம்பை நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டவும் முடிவு.
சபரிமலை:
மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட நிலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று வரை 16.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நடப்பாண்டில் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் ரூ.15 கோடி மதிப்பில் அப்பம் மற்றும் அரவணை தயாரிப்பதற்கு தேவையான மாவு ஆலை அமைக்கப்பட உள்ளது.
மேலும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க குன்னூர் அணையில் இருந்து சபரிமலைக்கு குழாய் பதிக்கும் திட்டம், பம்பை நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டுவது, நிலக்கல் அடிவாரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் புதிய பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது உள்பட 5 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
- ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது.
- குற்றாலநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
குற்றாலநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.
- டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
- சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார்.
கடலூர்:
சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வேனை சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சுதாகர் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (30), பிரவின் (33), ராஜகோபால் (33), பந்தல்ராஜன் (48), நரேஷ் (37), அணீஷ் (28), சதீப் (42), காந்தி (55) ஆகியோர் சபரிமலைக்கு சென்று திரும்ப வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் திட்டக்குடி அடுத்த திருமா ந்துறை சுங்கச் சாவடி அருகில் காலை உணவை சாப்பிட்டனர். பின்னர் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டனர். திட்டக்குடி-வெங்கனூர் ஆவடி கூட்ரோடு அருகே வரும் போது டெம்போ டிராவலர் வேன் திடிரென தீப்பிடித்தது. உடனடியாக சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார்.
இதைச் சற்றும் எதிர்பாராத அய்யப்ப பக்தர்கள் வேனில் இருந்து வெளியில் குதித்து உயிர் தப்பினர். வேன் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் அப்பகுதியே புகை மூட்டமாக மாறியது. தகவலறிந்து திட்டக்குடி, வேப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மேலும், ராமநத்தம் போலீசார் வேன் தீப்பிடித்த தற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அய்யப்பன் கோவில் உள்ளது.
- இந்த கோவிலில் கார்த்திகை மாதம் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அய்யப்பன் கோவில் உள்ளது.
பூக்குழி இறங்கும் விழா
இந்த கோவிலில் கார்த்திகை மாதம் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது.
இதையொட்டி அய்யப்ப சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அய்யப்ப பக்தர்களின் சிறப்பு பஜனை இடம்பெற்றது. அய்யப்ப பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். அதன் பின் கோவில் முன்பு பிரமாண்ட பூக்குழி தயார் செய்யப் பட்டது. விஷேச அலங்கார தீபாராத னைகளுக்கு பின்னர் திரளான அய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
- சபரிமலையில் விளக்கு பூஜையை மானாமதுரை அய்யப்ப பக்தர்கள் நடத்தினர்.
- விளக்கு பூஜை நிறைவாக மங்களாராத்தி முடிந்து பக்தர்கள் எடுத்துச் சென்ற விளக்குகள் அவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டது.
மானாமதுரை
மானாமதுரை வைகை ஆற்றுகரையில் உள்ள தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவிலைச் சேர்ந்த குருசாமிகள் சோடா மணி, அணைக்கட்டு பாண்டி ஆகியோர் தலைமையில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு யாத்திரை புறப்பட்டனர்.
இவர்கள் சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்த பின்னர் சன்னிதானம் அருகே தாங்கள் கொண்டு சென்ற இருமுடிகளை பிரித்து அதில் இருந்த காமாட்சி விளக்குகளை எடுத்து வரிசையாக வைத்து விளக்குகளுக்கு முன்பு அமர்ந்து விளக்கில் தீபம் ஏற்றி பூஜை செய்தனர்.
அதன் பின்னர் அய்யப்பன் புகழ் பாடும் பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர். விளக்கு பூஜை நிறைவாக மங்களாராத்தி முடிந்து பக்தர்கள் எடுத்துச் சென்ற விளக்குகள் அவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டது.
இது குறித்து குருநாதர்கள் அணைக்கட்டு பாண்டி, சோடா மணி கூறுகையில், உலக நன்மைக்காகவும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் சுபிட்சமாக வாழவும், கொடும் நோய்தொற்றுகள் அழியவேண்டியும் முதல் முறையாக சபரிமலையில் எங்கள் குழு சார்பில் விளக்கு பூஜை நடத்தினோம் என்றனர்.
- ஸ்ரீஐயப்ப பூஜையையும் முறையாக செய்ய வேண்டும்.
- ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்பவர்களுக்கு அனைத்து இன்பமும் கிடைக்கும்.
நாளை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் தினமாகும். நாளை காலை குரு மூலம் துளசி அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து முறையாக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருப்பார்கள். மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சில அடிப்படையான பழக்க வழக்கங்களை யும் கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு ஜந்துவையும் உடலாலோ மனத்தாலோ துன்புறுத்தக்கூடாது. பேச்சு, எண்ணம், செயல் ஆகியவற்றில் உண்மையாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குச் சேர வேண்டிய பொருளை தான் எடுத்துக் கொள்ளுதல் அல்லது அனுபவிக்கக் கூடாது.
தினசரி அதிகாலை நேரத்தில் குளித்து தூய ஆடை அணிந்து அவரவர்களுக்கு உண்டான நித்ய கர்மாக்களை செய்து ஸ்ரீஐய்யப்ப பூஜையையும் முறையாக செய்ய வேண்டும். கண்ட காட்சிகளை கண்களால் காணாதிருத்தல், கெட்ட சத்தங்களையே காதால் கேட்காது இருக்க வேண்டும். இவ்வாறு தவம் இருந்து ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்பவர்களுக்கு அனைத்து இன்பமும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை.
- குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.
- ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சரிய விரதமாகும்.
1. ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகை மாதம் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19-ந்தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னி தானத்திற்குச் செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருக்கும்படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.
2. துளசி மணி அல்லது உருத்திராட்ச மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.
3. பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த மூத்த ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில் களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும். அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து வணங்கி ஆசி பெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நிமிடத்தில் இருந்து குருசாமியை முழு மனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
4. நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும்போதும், யாத்திரையின்போதும் முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.
5. மலைக்குச் செல்லக் கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமும் இல்லாமல் தர்மசாஸ்தாவிடம் முழுப்பொறுப்பினையும் வைத்து, முக மலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
6. மேற்கொள்ள வேண்டிய விரதங்களை மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.
7. காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனைகளில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ் பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.
8. படுக்கை, தலையணைகளை நீக்கி, தான் அணியும் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்க வேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்க்கவேண்டும்.
9. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.
10. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.
11. மற்றவர்களிடம் பேசும் போது, `சாமி சரணம்' எனத் தொடங்கி, பின் விடை பெறும் பொழுதும் `சாமி சரணம்' என சொல்ல வேண்டும்.
12. விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாக தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை அணிந்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணம் கொண்டும் உணவு அருந்தக்கூடாது.
13. பக்தர்கள் மாலை அணிந்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை `ஐயப்பா' என்றும், பெண்களை `மாளிகைப்புரம்' என்றும், சிறுவர்களை `மணிகண்டன்', சிறுமிகளை `கொச்சி' என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.
14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் `நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம்' என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும் பொழுது, `போய் வருகிறேன்' என்று யாரிடமும் சொல்லிக்கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.
15. மாலை அணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டும்.
16. மாலை அணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.
17. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்ப பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. ஐயப்பமார் ஒருவருக்காவது அன்னமிடுதல் மிக்க அருள்பாலிக்கும்.
18. மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்பமார்களும், அவர்கள் குடும்பத்தினரும் கலந்து கொள்ளக் கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மரணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டியதிருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்து கொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறு வருடம் சென்று வரவேண்டும்.
19. எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமானதாகும். எனவே எந்தப்பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக்கூடாது.
20. இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டில், இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும்.
21. கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்தில் இருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையில் இருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற மூத்த ஐயப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.
22. 12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும், ருதுகாலம் நின்ற வயதான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.
23. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டுயானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். சரணம் கூறுதல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.
24. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.
25. பம்பையில் சக்தி பூஜையின்போது ஐயப்பமார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப் பெறுவதுதான் சபரிமலை பஸ்பம். இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
26. இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் இந்த நெய்யையும், விபூதி பிரசாதங்களையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.
27. ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத்தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக்கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.
28. குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களில் எல்லாம் ஐயப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஐயப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும்பொருளாக ஏற்று குருவின் குருவான ஐயப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.