search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bakrit"

    • பெண்கள் வழிபடும் தைகாக்கள் உள்பட 100 இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை மற்றும் பிரசங்கம் நடந்தன.
    • இன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரை பூங்காவில் அனைவரும் குடும்பத்தின ருடன் கூடி மகிழ்வர்.

    ஆறுமுகநேரி:

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் கிளை தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். செயலாளர் மக்கின், பொருளாளர் பஷீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பேச்சாளர் ஷரீப் குத்பா பிரசங்கம் நடத்தினார்.

    தொழுகையில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனிடையே காயல்பட்டினம் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசல், முகைதீன் பள்ளி, புதுப்பள்ளி, மரைக்கார் பள்ளி, பிலால் பள்ளி உள்பட 30 பள்ளிவாசல்கள், பெண்கள் வழிபடும் தைகாக்கள் உள்பட 100 இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை மற்றும் பிரசங்கம் நடந்தன. பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரை பூங்காவில் அனைவரும் குடும்பத்தின ருடன் கூடி மகிழ்வர்.

    • தமிழகமெங்கும் ஹஜ் பெருநாள் அன்று ஆடு, மாடுகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம்.
    • நோன்புப் பெருநாளும், ஹஜ் பெருநாளும் ஏழைகளுக்கு தர்மம் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன.

    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மசூதிகள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லரியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டபம் வளாகத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் தஞ்சை மாநகர கிளையில் இமாம் சேக் அப்துல் காதர் பெருநாள் குத்பா எனப்படும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

    அப்போது அவர் பேசும்போது,

    இஸ்லாமிய மார்க்கத்தின் இரு பெருநாட்களும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாளும், ஹஜ் பெருநாளும் ஏழைகளுக்கு தர்மம் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. இஸ்லாத்தின் இந்தப் போதனைகளைப் பின்பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு அறப் பணிகளைச் செய்து வருகின்றது.

    இந்த நாளில் ஏழைகள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக ஆடு, மாடுகளைக் குர்பானி கொடுத்து அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கட்டளையிட்டுள்ளது.

    இதை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழகமெங்கும் ஹஜ் பெருநாள் அன்று ஆடு, மாடுகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு இறைச்சிகளை வழங்கி உள்ளோம் .

    மேலும் இந்த ஆடு, மாடுகளின் தோல்களை விற்று அதிலிருந்து கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏழைகளுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு சேவைகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செய்து வருகின்றோம் என்றார்.

    இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமாக இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாநகர கிளை தலைவர்அப்துல்லாஹ்,

    செயலாளர் ஜியாவூதின், பொருளாளர் சலீம்,துணைதலைவர் ஹலித் ,துணை செயலாளர்

    சர்தார் பாட்ஷாமற்றும் அனைத்து நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதேப்போல் பாபநாசம், அய்யம்பேட்டை, வல்லம், அம்மாபேட்டை, கும்பகோணம், மதுக்கூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    • திருப்பத்தூரில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை செய்தனர்.
    • ஆண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பெரிய பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்பு அங்கிருந்து நடை பயணமாக அச்சுக்கட்டு ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி முகமது பாரூக் ஆலிம் தலைமையில் இந்த தொழுகை நடைபெற்றது. ஆண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகைக்கு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    • 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரம்

    இறைத்தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும் துல்ஹஜ் மாதம் பிறை 10-ல் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

    இன்று காலை 7 மணிக்கு தக்பீர் முழக்கத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரத்தில் அனைத்து ஜமாத் சார்பில் ராமநாதபுரம் - மதுரை சாலையில் உள்ள ஈதுகா மைதானத்தில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கீழக்கரையில் உள்ள 13-க்கும் ேமற்பட்ட பள்ளிவாசல்களில் பெரு நாள் சிறப்பு தொழுகை நடந்தது. ஏர்வாடி, பெரிய பட்டினம், ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, ராம நாதபுரம் வெளிப்பட்டினம், பாரதி நகர், தங்கப்பா நகர் மதரஷா, பனைக்குளம், தேவிபட்டினம், இருமேனி, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசு வரம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, அழகன்குளம், பெருங்குளம், சித்தார்கோட்டை உள்பட மாவட்டத்தின் அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல் களிலும் பெருநாள் தொழுகை நடந்தது.

    முன்னதாக பள்ளிவாச லில் பேஷ் இமாம்கள் பக்ரீத் பண்டிகையின் சிறப்புகளை பயான் (சொற்பொழிவு) செய்தனர். தொழுகைக்கு பின் உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொடரவும், தண்ணீர் தட்டுப்பாடு நீங்கவும், மழை வேண்டியும் சிறப்பு துவா நடந்தது. தொழுகை முடிந்ததும் உறவினர்களும், நண்பர்களும் ஒரு வருக்கொருவர் கட்டி யணைத்து பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல், மதரஸா மற்றும் வீடுகளில் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வீடுகளில் ஆடு, மாடுகள் ஆயிரக்கணக்கில் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை உறவினர்க ளுக்கும், ஏழைகளுக்கும் வழங்கினர். மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏராளமான இடங்களில் திறந்த வெளி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

    சொந்த ஊரில் நடை பெறும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குடும்பத்துடன் பெருநாள் கொண்டாட வளைகுடா நாடுகளிலிருந்தும், மலே சியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் ஏராள மானோர் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள மலுங்கு ஒலியுல்லா தர்ஹா வளாகத்திடலில் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் தொழுகை நடத்தினர்.முன்னதாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைத்து இஸ்லாமியர்களும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து உற்சாகமாக தொழுகைக்கு வந்தனர். தொழுகை முடிந்து ஒருவரையொருவர் கட்டி அனைத்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து குர்பானி கொடுக்கப்பட்டது.

    • அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர்.
    • இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் பக்ரீத் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது.

    சிறப்பு தொழுகை

    இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது. அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர். இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசர் தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார்.

    இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் மற்றும் டவுன் கிளை நிர்வாகிகள் அப்துல் ஜப்பார், செய்ப்பு மைதீன், சம்சுதீன், செய்யது மசூது, துராப்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை சார்பில் ஜாபர்,அப்துல் அஜீஸ்,மர்வான் தலைமையிலான தொண்டரணியினர் செய்து இருந்தனர்.

    9 இடங்களில் நடைபெற்றது

    இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந்நூர் தவ்ஹீத் திடலில் அஸ்கர், ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் செய்யது அலி, மக்காநகர் தவ்ஹீத் திடலில் ஹாமித் , தவ்ஹீத் நகர் அல் ஹிதாயா திடலில் தென்காசி அப்துல் அஜீஸ் , பாத்திமா நகர் பள்ளி திடலில் சம்சுத்தீ,இக்பால் நகர் ரய்யான் திடலில் அப்துல் அஜீஸ், மஹ்மூதாநகர் தவ்ஹீத் திடலில் யாசிர் மதினா நகர் பள்ளி திடலில் அப்துல் ஸலாம் என நகரில் 9 இடங்களில் நடை பெற்றது.

    இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் அரவிந்த் மேற்பார்வையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

    தொழுகைக்கு பின்பு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆடுகள் மற்றும் மாடுகளை இறைவனுக்காக பலியிட்டனர்.

    அதன் பின்னர் அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    அதை போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, வீரணம், சங்கரன்கோவில் , புளியங்குடி, வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிகள் அதிகம் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.


    ×