என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினத்தில் 100 இடங்களில் சிறப்பு தொழுகை
- பெண்கள் வழிபடும் தைகாக்கள் உள்பட 100 இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை மற்றும் பிரசங்கம் நடந்தன.
- இன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரை பூங்காவில் அனைவரும் குடும்பத்தின ருடன் கூடி மகிழ்வர்.
ஆறுமுகநேரி:
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் கிளை தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். செயலாளர் மக்கின், பொருளாளர் பஷீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பேச்சாளர் ஷரீப் குத்பா பிரசங்கம் நடத்தினார்.
தொழுகையில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனிடையே காயல்பட்டினம் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசல், முகைதீன் பள்ளி, புதுப்பள்ளி, மரைக்கார் பள்ளி, பிலால் பள்ளி உள்பட 30 பள்ளிவாசல்கள், பெண்கள் வழிபடும் தைகாக்கள் உள்பட 100 இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை மற்றும் பிரசங்கம் நடந்தன. பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரை பூங்காவில் அனைவரும் குடும்பத்தின ருடன் கூடி மகிழ்வர்.