என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BasketBall"
- 7 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட அவர் மற்ற வீராங்கனைகளை விட கூடைப்பந்தாட்டத்தில் அசத்திய காட்சிகள் வீடியோவில் உள்ளது.
- வீராங்கனையின் உயரம் காரணமாக அவர் பந்தை எளிதில் பிடிப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் உள்ளது.
சராசரி உயரத்தைவிட அதிக உயரம் கொண்டவர்கள் மற்றவர்களால் அதிகம் கவனிக்கப்படுவார்கள். அந்த வகையில் சீனாவை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர் 7.3 அடி உயரத்துடன் கூடைப்பந்தாட்டத்தில் அசத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜாங்ஜியு என்ற பெயர் கொண்ட அந்த வீராங்கனை சீன தேசிய அணிக்கான 18 வயதிற்குட்பட்டோருக்கான பிபா மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் அறிமுகம் ஆனார். 7 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட அவர் மற்ற வீராங்கனைகளை விட கூடைப்பந்தாட்டத்தில் அசத்திய காட்சிகள் வீடியோவில் உள்ளது.
அந்த வீராங்கனையின் உயரம் காரணமாக அவர் பந்தை எளிதில் பிடிப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் உள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Zhang Ziyu is a cheat code ?
— NextGen Hoops (@NextGenHoops) June 24, 2024
The 7'3" (220cm) center hardly broke a sweat getting her first buckets for Team China ??#U18AsiaCup pic.twitter.com/1Vy9iecmXh
- மாநில கூடைப்பந்து போட்டி நாளை தியாகராயநகர் வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
- ரைசிங்ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் சம்பத் தெரிவித்துள்ளார்.
ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் அரைஸ் அறக்கட்டளை, காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ், பி.ஆர்.டி. ஆதரவுடன் 18-வது மாநில கூடைப்பந்து போட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 1-ந்தேதி வரை சென்னை தியாகராயநகர் வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
ஆண்கள் பிரிவில் ஐ.சி.எப். இந்தியன் வங்கி, எஸ்.ஆர்.எம்., சத்யபாமா பல்கலைக்கழகம் உள்பட 72 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், ஜே.ஐ.டி, எத்திராஜ். இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 26 அணிகளும் பங்கேற்கின்றன. இதில் இரு பாலரிலும் முதல் இடத்தில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.40 ஆயிரம், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரம். 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று ரைசிங்ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் சம்பத் தெரிவித்துள்ளார்.
- பள்ளி கல்வித்துறை அந்தந்த மாவட்ட விளையாட்டுத்துறையுடன் இணைந்து தேர்வு போட்டிகளை நடத்தி தகுதியான வீரர்களை தேர்வு செய்கிறது.
- இப்போட்டியில் 4 மாவட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
திருப்பூர்
பள்ளி கல்வித்துறை அந்தந்த மாவட்ட விளையாட்டுத்துறையுடன் இணைந்து தேர்வு போட்டிகளை நடத்தி தகுதியான வீரர்களை தேர்வு செய்கிறது. அவ்வகையில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூரை உள்ளடக்கிய கோவை மண்டல அணிக்கான தேர்வு குன்னூரில் துவங்கியது. செப்டம்பர் 9-ந்தேதி வரை நடக்கிறது.
4 போட்டிகளுக்கான அணிகளுக்கு வீரர், வீராங்கனைகள் திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்மாதம் 31ந் தேதி திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 14, 17 மற்றும், 19 வயது பிரிவுக்கான கூடைப்பந்து வீரர் அணி தேர்வு நடக்கிறது. செப்டம்பர் 4ந்தேதி, கூடைப்பந்து வீராங்கனைகள அணித்தேர்வு நடக்கிறது.
செப்டம்பர் 2-ந்தேதி நஞ்சப்பா பள்ளியில், மாணவர் கபடி அணித்தேர்வும், ஜெய்வாபாய் பள்ளியில் மாணவிகள் கபடி அணி தேர்வும் நடக்கிறது.
இப்போட்டியில் 4 மாவட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
- அகில இந்திய அளவில் 20 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
- கூடைப்பந்து போட்டியின் இறுதி போட்டிகள் இன்று மாலை நடக்கிறது.
கோவை,
கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 56-வது ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20-ம் ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கோப்பை போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இதில் அகில இந்திய அளவில் 20 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் அரையிறுதி போட்டி நேற்று மாலை நடந்தது. இதில் சென்னை வருமானவரித்துறை அணியை எதிர்த்து இந்தியன் ரெயில்வே அணி விளையாடியது. இதில் வருமானவரித்துறை அணி 67-58 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்தபடியாக ஆண்கள் பிரிவுக்கான 2-வது போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியை எதிர்த்து, பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 86-77 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வருமானவரித்துறை, இந்தியன் வங்கி அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.
இதேபோல சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் பெண்கள் பிரிவு அரையிறுதி போட்டியில் திருவனந்தபுரம் கேரள மின்சார வாரிய அணியை எதிர்த்து, ஹுப்ளி தென்மேற்கு ரெயில்வே அணி விணையாடியது. இதில் கேரள மின்சார வாரிய அணி 92-48 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணியை எதிர்த்து பூனே மேற்கு ரெயில்வே அணி விளையாடியது. இதில் கேரளா போலீஸ் அணி 64-61 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்கள் அணியில் கேரளா மின்சார வாரிய அணி, கேரளா போலீஸ் அணிகள் ஆகியவை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன. இறுதி போட்டிகள் இன்று மாலை நடக்க உள்ளது.
- மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
- இந்த போட்டிகளில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் கலந்து கொண்டன.
கோவை,
கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான 56-வது ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20-வது ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ. கோப்பை கூட்டைப்பந்து போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியத்துக்கு அருகே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது.
இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் கலந்து கொண்டன.
இதன் ஒருபகுதியாக ஆண்கள் பிரிவின் முதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் சென்னை வருமானவரி அணியை எதிர்த்து, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் வருமானவரி அணி 78-57 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
2-வது போட்டியில் கேரளா போலீஸ் அணியை எதிர்த்து, பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் பேங்க் ஆப் பரோடா அணி 82-72 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவுக்கான முதல் போட்டியில் மும்பை மத்திய ரெயில்வே அணியை எதிர்த்து, கோவை மாவட்ட கடைப்பந்து அணி விளையாடியது. இதில் மத்திய ரெயில்வே அணி 83-48 எனற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
2-வது போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து, சென்னை தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரள மாநில மின்வாரிய அணி 75- 32 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் சென்னை வருமான வரி அணியும், திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணியும் மோதின.
இதில் கேரளா போலீஸ் அணி 66-55 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு போட்டிகள் நடந்தன.
- மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
- கையுந்துபந்து மற்றும் செஸ் ஆகிய போட்டிகள் பிப்ரவரி 21-ந் தேதி அன்று நடத்தப்பட உள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்வது குறித்து, மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் லலிதா தலைமை தாங்கி பேசியதாவது ;-
இந்த கூட்டத்தில் போட்டிகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளுக்கு மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் 2.2.2023 முதல் 4.2.2023 வரை தேதிகளிலும்,
கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு (17 முதல் 25 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள், 13.02.2023 மற்றும் 14.02.2023 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.
பொதுப்பிரிவினர் ஆடவர் மற்றும் மகளிருக்கு (15 முதல் 35 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய போட்டிகள் 23.02.2023 அன்றும், மாற்றுத் திறனாளிகள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ ஓட்டம் மற்றும் இறகுபந்து போட்டிகளும், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம் அடாப்டட் வாலிபால் போட்டிகளும், மனவளர்ச்சி குன்றியோருக்கு 100 மீ ஓட்டம், எறிபந்து போட்டிகளும், செவிதிறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், கபடி ஆகிய போட்டிகள் 17.02.2023 அன்றும் நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்கள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து மற்றும் செஸ் ஆகிய போட்டிகள் 21.02.2023 அன்றும் நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களும், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ள www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர்குமரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
- செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும் பெற்று வெற்றி பெற்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குட் சாமரிட்டன் பள்ளியில் மாநில அளவில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான
6 ஆம் ஆண்டு கூடைபந்து தொடர் போட்டிகள் கடந்த 3 ஆம் துவங்கியது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து தொடர் போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் சேர்ந்த 192 ஆண்கள் அணி, 104 பெண்கள் அணியும் என மொத்தம் 296 கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
சீர்காழி மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் 5 விளையாட்டுமைதா னங்ளில் இரவுபகலாக நடைபெற்ற தொடர் போட்டிகள் நிறைவடை ந்தது.
மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும், கோபாலபுரம் டி.ஏ.வி.பி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில் பொன்னேரி வேலம்மாள் பள்ளி முதலிடமும், ஏற்காடு எம்ரால்ட் வேலி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற அணி களுக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் தலைவர் கே.வி ராதாகிருஷ்ணன், தலைமை வகித்தார். அனிதா ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் பிரவீன் வசந்த் ஜபேஷ், அனுஷா மேரி, அலெக்சாண்டர், ரெனிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிபிஎஸ்சி பப்ளிக் பள்ளி முதல்வர் ஆப்ரகாம் எனோக் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன் வெற்றி கோப்பையை வழங்கி அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். நிறைவில் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் நன்றி கூறினார்.
- வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுடன் கூடிய விளையாட்டின் முக்கியத்து வத்தைப் பற்றியும் அதனால் மாணவர்கள் அடையும் பலன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
- செங்கல்பட்டு மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய ஹரிச்சந்திரன் ராஜேஷ் ஆகிய பவுண்டேஷன் மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
தஞ்சாவூர்:
மாமன்னன் ராஜராஜ சோழன் பவுண்டேஷன்-நில் வாழ்க்கை திறன் மேம்பாட்டுடன் கூடிய கூடைப்பந்து பயிற்சி வகுப்பின் "இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய வீரர்களை பாராட்டு நிகழ்வும் தஞ்சாவூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பவுண்டேஷனின் மாணவன் ஸ்வேதன்ஷூ நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.
மாமன்னன் ராஜராஜ சோழன்பவுண்டேஷன் சேர்மன் பொறியாளர்இளவரசு முன்னிலை வகித்தார்.
ஜேசி பொறியாளர் சுரேஷ்குமார் தலைவர் தேர்வு, ஜேசிஐ தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜ சோழன் தலைமை உரையாற்றினார்.
மாமன்னன் ராஜராஜ சோழன் பவுண்டேஷனின் நிறுவனரும், முன்னாள் சர்வதேச கூடைப்பந்து நடுவ ருமான 'ஏசியாட்' முனைவர் ரமேஷ்குமார் துரைராஜு வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுடன் கூடிய விளையாட்டின் முக்கியத்து வத்தைப் பற்றியும் அதனால் மாணவர்கள் அடையும் பலன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
கௌரவ விருந்தினராக மேகளத்தூர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி ஜோஸ்பின் ஆல்பர்ட் மேரி, சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர்இன்னிசை சுகுமாரன் ஆகியோர் மாணவர்கள் எதிர்கா லத்தில் தலைசிறந்த தலைவர்களாக உருவாக தற்காலத்தில் எந்தெந்த பகுதியில் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று பேசினர்.
சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற 13 வயதுக்கு ட்பட்ட மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தஞ்சை மாவட்ட கூடைப்பந்து அணிக்கு தலைவராக விளையாடிய கனிஷ்கர் மற்றும் அனிருத்தன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய ஹரிச்சந்திரன் ராஜேஷ் ஆகிய பவுண்டேஷன் மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
முடிவில் பவுண்டேஷன் மாணவர் அமுதன் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
- மாணவர்கள் மிக மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும், மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்றனர்.
- கூடைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களைப் பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் இராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.
தென்காசி:
தென்காசி குறுவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டி செய்யது ரெசிடென்சியல் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
இப்போட்டியில் கலந்து கொண்ட இலஞ்சி பாரத் மாண்டிசோரி மாணவியர் பிரிவில் மிக மூத்தோர் முதலிடமும், மூத்தோர் 2-ம் இடமும் பெற்றனர்.
அதேபோல மாணவர்கள் மிக மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும், மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்றனர்.
மிக மூத்தோர் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவியர் தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கூடைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களைப் பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் இராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.
- அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடைப் பந்தாட்டப் போட்டிகள் நிறைவு விழா நடந்தது.
- இந்திய கடற்படை அணி அணி வெற்றி பெற்று கோப்பையையும், முதல்பரிசு தொகையான ரூ.1 லட்சத்தினையும் வென்றது.
சீர்காழி:
சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 50வது பொன்விழா ஆண்டையொட்டி அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடை பந்தாட்டப் போட்டிகள் நிறைவு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் அனிதாராதாகிருஷ்ணன், குட்சமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் இயக்கு னர்கள் பிரவீன்வசந்த், அனுஷா பிரவீன், அலெக்சாண்டர், ரினீஷாஜேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி முதல்வர் ஜாஸ்மின் வரவேற்றார். அகில இந்திய அளவில் 8 அணிகள் பங்கேற்று கடந்த 4 நாட்களாக நடைபெற்ற போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய கடற்படை அணி அணி வெற்றி பெற்று கோப்பையையும் முதல்பரிசு தொகையான ரூ.1 லட்சத்தினையும் வென்றது.
இரண்டாமிடத்தை இந்திய ராணுவ அணி (சிவப்பு) பெற்று பரிசு தொகை ரூ.75 ஆயிரத்தை வென்றது.
மூன்றாமிடத்தை இந்திய ராணுவம் (பச்சை) அணி பெற்று பரிசு தொகை ரூ.50 ஆயிரத்தையும், 4ம் இடத்தை ஜேப்பியார் அணி வென்று பரிசுதொகை ரூ.25 ஆயிரத்தை வென்றது.
வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை, பரிசு தொகையை தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழக தலைவர் ஆதவாஅர்ஜூன் வழங்கி பாராட்டினார்.
விழாவில் கல்வி நிறுவனங்களின் முதல்வ ர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
நிறைவில் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகரசிங் நன்றி கூறினார்.
- பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் கோடை கால கூடைபந்து பயிற்சி நடைபெற்றது.
- பயிற்சியில் கலந்து கொண்ட 50 வீரர்களுக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது.
நெல்லை:
கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் நெல்லையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் நடைபெற்றது. பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் கோடை கால கூடைபந்து பயிற்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
அதன் நிறைவு நாளையொட்டி நடந்த விழாவில் கல்லூரி முதல்வர் மரியதாஸ், செயலாளர் புஷ்பராஜ், சீனிக்குமார், பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் தினகரன், நெலலை மாவட்ட கூடைப்பந்தாட்ட பொருளாளர் செல்வகோபால், முன்னாள் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் சரவணமுத்து, கிருஷ்ணபிரபு, சாக்ரடீஸ், ஜேம்ஸ் ஜெப்ரி, சீனிவாசன், நித்திஷ், பாக்கியவதி, அருணாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பயிற்சியில் கலந்து கொண்ட 50 வீரர்களுக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்