என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beach"

    • என்ஜின், 25 லிட்டர் டீசல் பறிமுதல்.
    • 5 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    வேதாரண்யம்:

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக தங்கு கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்களுக்கு கோடியக்கரை மீன்வள த்துறை அலுவலகத்தில் இருந்து 'வாக்கி- டாக்கி' மூலம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    எச்சரிக்கையை மீறி அதிராம்பட்டினத்தில் இருந்து செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கோடிய க்கரைக்கு வந்தனர்.

    இந்த படகை மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா, மீன்வள மேற்பார்வையாளர் விக்னேஷ் ஆகியோர் மற்றொரு படகில் கடலில் விரட்டி சென்று மடக்கி பிடித்து கரைக்கு கொண்டு வந்து படகை பறிமுதல் செய்தனர்.

    படகில் இருந்து என்ஜினையும், 25 லிட்டர் டீசலையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அறிவிப்பை மீறி கடலுக்கு சென்ற மேலும் 2 மீனவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    மீன்வளத்துறை அறிவிப்பை தொடர்ந்து வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதை அறிவிக்கும் வகையில் சிவப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிர த்துக்கும் அதிகமான மீனவர்கள் இன்று 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    அங்கு கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகு களை பாதுகா ப்பான இட ங்களில் நிறுத்தி உள்ளனர்.

    • கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்துக்குள் கடல்நீர் புகுந்தது.
    • கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான சந்திரபாடியில் 2500 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பியுள்ள இக்கிராமத்தில் மழை வெள்ளம், புயல் ஏற்படும் போதும் கடல் சீற்றமாக காணப்படும் காலங்களில் கடல்நீர் உட்புகுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதால், தங்கள் பகுதியில்கடல் சீற்றத்தி ன்போது கடல் நீர் உட்புகுந்து பாதிக்கப்படுவதாகவும் சந்திரபாடி கடற்கரையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.
    • கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், மருதம்பள்ளம்‌ ஊராட்சி, சின்னங்குடி மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் மாண்டஸ் புயல் சென்னையில் கரையை கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சின்னங்குடி கிராமம், மீனவர்கள் படகுகளை கரைகளில் வரிசையாக அடுக்கி வைத்து பாதுகாத்து வந்தனர்.

    புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.

    அது மட்டுமல்லாமல் மழைக்காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்போது கடல்நீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதற்கு தடுப்பு சுவர் அல்லது கருங்கல் கொட்டி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற நிலைகளில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு சின்னங்குடி கடற்கரையில் தடுப்புச் சுவர் அல்லது கற்களை கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்குமாறும், சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
    • சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆங்கில புத்தாண்டு இன்று இரவு 12 மணிக்கு பிறக்கிறது. 2023ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

    தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை, அண்ணா சாலையில் மாலை முதலே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • 600 கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டு களிக்கலாம்.
    • நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா நாளை (வெள்ளிக் கிழமை) சென்னை தீவுத் திடலில் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் உள்ள 16 இடங்களில் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது. 600 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டுகளிக்கலாம்.

    தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு திடல், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, ராகேஸ்வர ராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு திடல், அண்ணாநகர் டவர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, திருவான்மியூர் கடற்கரை சாலை, சைதாப்பேட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு திடல், தி.நகர் நடேசன் பூங்கா, எலியட்ஸ் கடற்கரை, மே தின பூங்கா, எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகிறது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.

    இந்த நம்ம ஊரு திருவிழாவில் கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம் பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    • கோடியக்கரை கடற்கரையில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
    • கோடியக்கரை மீனவர்கள், பாம்பன், காசிமேடு பகுதியில் இருந்து சுமார் 5 டன் வாலைமீன்களை இறக்குமதி செய்து செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் கடற்கரையில் குவிந்தனர்.

    இதனால் வழக்கத்திற்கு மாறாக மீன் விலை இரு மடங்காக உயர்ந்தது.

    இருப்பினும் இன்று அசைவம் சமைத்து உண்ண வேண்டும் என்பதால் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காலாமீன், ஷீலாமீன், திருக்கைமீன், வாலைமீன், வாவல் மீன், நண்டு, இறால் உள்ளிட்டைவைகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    பொதுமக்கள் தேவை அறிந்து கோடியக்கரை மீனவர்கள் பாம்பன் மற்றும் காசிமேடு பகுதியில் இருந்து சுமார் 5 டன் வாலைமீன்களை இறக்குமதி செய்து கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

    • புதிதாக அமைக்கப்படும் மீன் மார்க்கெட்டில் 1,240 சதுர மீட்டரில் மீன் கடைகளும், 164 சதுர மீட்டரில் மீன் கொட்டும் இடங்களும் அமைகிறது.
    • சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் ரூ.8.5 கோடி செலவில் அமையும் இந்த சந்தையில் 50 சதவீத மராமத்து பணிகள் நிறைவடைந்து உள்ளன.

    சென்னை:

    சென்னை கலங்கரை விளக்கம்-பட்டினப்பாக்கத்தை இணைக்கும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் 2 ஏக்கர் பரப்பளவில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி கூறியதாவது:-

    புதிதாக அமைக்கப்படும் மீன் மார்க்கெட்டில் உள்ள 366 கடைகள் இழுவிசை தன்மை கொண்ட கூரையுடன் செயல்படும். 1,240 சதுர மீட்டரில் மீன் கடைகளும், 164 சதுர மீட்டரில் மீன் கொட்டும் இடங்களும் அமைகிறது.

    இதனால் காற்றோட்டத்துடன் காணப்படும். இங்கு வாகன நிறுத்தும் வசதி மேம்படுத்தப்படும். ஒரே நேரத்தில் 155 மோட்டார் சைக்கிள்கள், 62 கார்களையும் நிறுத்த முடியும். பெண்களுக்காக 13 கழிப்பறைகளும், ஆண்களுக்காக 7 கழிப்பறைகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

    படகுகள் வந்ததும் இந்த மீன் மார்க்கெட்டில் வியாபாரம் தொடங்கிவிடும். மேலும் இரவு நேரத்தில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உயர் கோபுர மின்விளக்கு ஒன்றும் அமைக்கப்படும்.

    மேலும் மழைநீர் கட்டமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவையும் அமைக்கப்படும்.

    சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் ரூ.8.5 கோடி செலவில் அமையும் இந்த சந்தையில் 50 சதவீத மராமத்து பணிகள் நிறைவடைந்து உள்ளன. மீதமுள்ள பணிகள் அடுத்த 2 மாதங்களுக்குள் முடிவடை யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் புதிய சந்தை பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • வேதாரண்யம் கடலோர பகுதியில் சீனா நாட்டை இளைஞர்கள் 4 பேர் வருவதாக மத்திய, மாநில உளவு துறை எச்சரிக்கை விடுத்தனர்.
    • வேதாரண்யம் கடற்கரை முழுவதும் விடிய, விடிய போலீசார் ரோந்து பணியாற்றினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கடலோர பகுதியில் சீனா நாட்டை இளைஞர்கள் 4 பேர் வருவதாக மத்திய, மாநில உளவு துறை எச்சரிக்கையை அடுத்து வேதாரண்யம் ஆறுகாட்டு துறை,கோடியக்கரை, பெரியகுத்தகை, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர் மத்திய மாநில அரசுஉளவுத்துறை சீனா நாட்டை சேர்ந்த நான்கு போர் தமிழ் இளைஞர் படகை ஒட்டி வர அதில் தமிழகத்தை நோக்கி வருகிறார்கள.

    அதனை கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்திருந்தது.

    இதையொட்டி வேதாரண்யம் கடற்கரை முழுவதும் விடிய, விடிய ரோந்து பணியை வேதாரண்யம் போலிசார், கடலோர காவல் குழுமபோலீசார் சுங்கத்துறையினர் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் என்ன விடிய விடிய கடற்கரை பகுதிகளிலும், மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    இச்சோதனையால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது

    • கடல் பாசிகள் குவிந்து கடற்கரை மிகவும் தூய்மையற்ற நிலையில் காணப்படுகிறது.
    • மல்லிப்பட்டினத்தில் கடற்கரையில் முகாமிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் கடற்கரை துறைமுகமாக மாறிக்கொண்டு வருகிற இந்நிலையில் அதற்கான வேலைகளும் கட்டிட வசதிகளும் சென்ற ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

    மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலமான மனோரா செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு திண்பண்டங்களின் குப்பைகளை அங்கு விட்டுச்சென்றனர்.

    மேலும் கடல் பாசிகள் குவிந்து கடற்கரை மிகவும் தூய்மையற்ற நிலையில் காணப்படுகிறது. கடல்பாசிகளும், நெகிழி பொருட்களும், இதர தேவையற்ற பொருட்களும் கடற்கரையை சூழ்ந்து காணப்படுவதால் கடற்பகுதி மிகவும் அசுத்த நிலையில் காட்சியளித்தது.

    இதை அறிந்த தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மற்றும் நேரு யுகேந்திரா மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் இணைந்து மல்லிப்பட்டினத்தில் கடற்கரையில் முகாமிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.

    • பொதுமக்கள்அதிகமாக வந்து செல்வதால் தேவனாம்பட்டினம் கடற்கரையில் அதிக அளவில் குப்பை அதிகரித்து வந்தது.
    • இன்று காலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் தூய்மை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்

    கடலூர்:-

    கடலூரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து தற்போது கோடை விடுமுறை தொடங்கியதை முன்னிட்டு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுடன் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு நேரில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்வதால் தேவனாம்பட்டினம் கடற்கரையில் வழக்கத்தை விட அதிக அளவில் குப்பை அதிகரித்து வந்தன.

    இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாஃபர் முன்னிலையிலும் தூய்மை பணியாளர்கள் இன்று காலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் தூய்மை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து பாதுகாப்பாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு கடலூர் வசந்தராயன் பாளையம் பகுதிக்கு கொண்டு சென்றனர். மேலும் ஏற்கனவே விடுமுறை நாட்களிலும் , விழா நாட்களிலும் டன் கணக்கில் குவிந்திருந்த குப்பைகளை மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின்பேரில் உடனடியாக அகற்றி சுத்தமாக வைத்து நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    • பலர் பூங்கா, கடற்கரை மணலில் பொழுதை போக்கினாலும், சிலர், கடலின் ஆழம் தெரியாமல் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்
    • மதிய வேளையில், போலீசாருக்கு தெரியாமல் வெயிலின் தாக்கத்தை தணிக்க பலர் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    தொடர் விடுமுறை காரணமாக, காரைக்கால் மாவட்ட ஆன்மீக தலங்கள், கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. இவர்களில் பலர் பூங்கா, கடற்கரை மணலில் பொழுதை போக்கினாலும், சிலர், கடலின் ஆழம் தெரியாமல் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர். அண்மைக்காலமாக, காரைக்கால் கடலில் குளித்து, கடல் அலையில் சிக்கி பலர் இறந்துள்ளனர். இதன்காரணமாக, கடலில் குளிப்பதை போலீசார் அனுமதிப்பதில்லை. மதிய வேளையில், போலீசாருக்கு தெரியாமல் வெயிலின் தாக்கத்தை தணிக்க பலர் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர். நேற்று மாலை திரளான மக்கள் கூட்டம் கடலில் இறங்கி குளிப்பதை பார்த்த போலீசார், அவர்களிடம் கடலின் ஆழம் குறித்து எடுத்துகூறி,குளிக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தினர். போலீசாரின் அறி வுறுத்தலை பெரிதுபடுத்தாத சிலர், போலீசார் இல்லாத இடமாக பார்த்து குளிக்கத் தொடங்கினர்.

    இதனால், பொறுமை இழந்த போலீசார், கடலில் இறங்கி, குளிப்பவர்களை அப்புறப்படுத்தினர். கடல் ஆழம் என்றால் குறிப்பிட்ட தூரம் தடுப்பு வேலி அமைத்து, ஆழம் இல்லாத கரையில் குளிக்க போலீசார் அனுமதிக்கவேண்டும். வெயில் காலம் என்பதால் கடல் குளியல் அவசியம். இதை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    • காயல்பட்டினம் கடற்கரையில் தூய்மை பணி திட்ட முகாம் நடந்தது.
    • துணைத்தலைவர் சுல்தான் லெப்பை உள்ளிட்ட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

    ஆறுமுகநேரி:

    நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற நோக்கத்தை வலியுறுத்தி காயல்பட்டினம் கடற்கரையில் தூய்மை பணி திட்ட முகாம் நடந்தது. காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் குமார் சிங் வழிகாட்டுதலின்படி, நகராட்சி தலைவர் முத்து முகமது தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது.

    இதில் துணைத்தலைவர் சுல்தான் லெப்பை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் சுகு ரெங்கநாதன், கதிரவன், பூங்கொடி, சுயஉதவி குழுவினர், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். தூய்மை பணியில் கலந்து கொண்ட அனைவரும் தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றனர். இந்த சுகாதாரப் பணியின் போது காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 1 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

    ×