search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burning"

    • இந்திய ஜனநாயக கட்சியினர் திடீரென மறைத்து வைத்திருந்த கர்நாடக முதல் மந்திரி உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர்.
    • தட்சிணாமூர்த்தி, சிவராமன், தியாகு, அந்தோணிசாமி, செந்தில், அபிமன்னன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.) சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தமிழ்நாடு, புதுவைக்கு காவிரி நீர் தராத கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக முதல் மந்திரி சித்தராமையாவை கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநில செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் தியாகு, தட்சிணாமூர்த்தி, சிவராமன், தியாகு, அந்தோணிசாமி, செந்தில், அபிமன்னன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் செய்த இந்திய ஜனநாயக கட்சியினர் திடீரென மறைத்து வைத்திருந்த கர்நாடக முதல் மந்திரி உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த உருவபொம்மையை அணைத்தனர்.

    • மக்கள் பலமுறை வட்டாட்சியர், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.
    • சுடுகாட்டு பிரச்சினை தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த காவல்பட்டியில் கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே சுடுகாடு உள்ளது. இங்கு இறந்தவர்கள் உடலை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை வட்டாட்சியர், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்து இருந்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை என்று தெரிகிறது.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் இறந்து போனார். அவரது உடலை சர்ச்சைக்குரிய சுடுகாட்டில் புதைத்து சென்றனர்.

    இதுபற்றி அறிந்ததும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தரப்பை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் சுடுகாட்டில் உடல்களை புதைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி -பழவேற்காடு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். காவல்பட்டியில் இருந்து உப்பளம் வரை ஏராளமான வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அணி வகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மெதூர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் பகுருதீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். சுடுகாட்டு பிரச்சினை தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறும்போது, கிராமத்திற்குள் வரும் சாலை அருகே சுடுகாடு உள்ளதால் அவ்வழியாக செல்லும் பள்ளிகுழந்தைகள், பெண்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே மாற்று சுடுகாட்டில் உடல்களை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்றனர்.

    • வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்து வருவதால் புற்கள் ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது காய்ந்து வந்தது.
    • வண்டியோ மற்றும் வனத்துறை ஊழியர்கள் வராததால் தொடர்ந்து அந்த பகுதியில் எரிந்து கொண்டே இருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி இருந்து வருகிறது.

    இந்த ஏரியிலிருந்து தண்ணீரை பாசனத்திற்காக வும் பறவைகள் சரணாலயத்திற்காகவும் பராமரித்து வருகின்றனர். இந்த பாகூர் ஏரி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

    கடந்த மழையில் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பிய நிலையில் தற்போது வரண்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்து வருவதால் புற்கள் ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது காய்ந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென புற்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த தீ மளமளவென ஏரி முழுக்க பரவி எரிந்து வந்தது. இந்த தீயை அணைக்க வழி இல்லா ததால் தீயணைப்பு வண்டிகள் எதுவும் வர வில்லை.

    2-வது நாளாகவும் எரிந்து வருகி றது. தகவல் அறிந்தவுடன் தமிழக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள மரக்கிளை மற்றும் செடி களையும் அகற்றி தீயை அணைத்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான தீ அணைந்து உள்ளது.

    ஆனால் புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஏரி பகுதியில் எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு நிலைய வண்டியோ மற்றும் வனத்துறை ஊழியர்கள் வராததால் தொடர்ந்து அந்த பகுதியில் எரிந்து கொண்டே இருக்கிறது.

    இந்த நிலையில் புதுச்சேரி வனத்துறை அதிகாரி வஞ்சலவள்ளி சம்பவ இடத்தில் வந்து ஆய்வு செய்தார்.

    அதன் பின்னரே புதுவை வனத்துறையினர் தீயை அணைத்து வருகிறார்கள்.

    • கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அதில் கொடியேற்றி வைத்தார்.
    • சண்முகம் ஆகியோர் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே காமராஜரின் முழு உருவச் சிலை உள்ளது. அதன் அருகே சமீபத்தில் பாரத் ஜோரா யாத்திரையின் நினைவு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அதில் கொடியேற்றி வைத்தார். அதன் அருகே வேறு சில கட்சிகளின் கொடிக்கம்பங்களும் உள்ளன.இந்த நிலையில் நேற்று மர்ம நபர்கள் காங்கிரஸ் கொடியை கம்பத்திலிருந்து அகற்றி கிழித்து தீ வைத்து எரித்துள்ளனர். இன்று காலை இதனைப் பார்த்த காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர் .

    இது குறித்து நகர காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் சிவராஜ் சண்முகம் ஆகியோர் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்ன குமார் விசாரணை நடத்தி வருகிறார். நாளை காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கொடி அறுக்கப்பட்டு எரிக்கப்பட்டது பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

    • வைக்கோல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம்

    பி.வாகைகுளத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 27). இவரது மனைவி அனிதா. அதே பகுதியைச் சேர்ந்தவர் அனிதாவின் பெரியப்பா கணேசன். இவர்களிடையே சொத்து பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அனிதா வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பு நேற்று நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தது.

    இதில் அருகில் இருந்த ஓட்டு வீடும் சேதமானது. சொத்து பிரச்சனையை மனதில் வைத்து தனது பெரியப்பா கணேசன் வைகோலுக்கு தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் அனிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசிய ஏனாம் ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப் பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்தப் போராட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் மங்கலம் சங்கர் என்ற ராதாகிருஷ்னன், கோட்டைமேடு கதிர், கணுவாபேட்டை ஆனந்த சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசிய ஏனாம் ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப் பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வில்லியனூர் அடுத்த மங்கலம் தொகுதிக்குட்பட்ட கோட்டைமேடு பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பா ட்டத்தில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து உருவபொம்மையை எரித்து கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில்

    என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் மங்கலம் சங்கர் என்ற ராதாகிருஷ்னன், கோட்டைமேடு கதிர், கணுவாபேட்டை ஆனந்த சங்கர், பொன் சுகுமார், தேவா, ஆச்சார்யாபுரம் மணிகண்டன், உறுவையாறு அழகர், திருகாஞ்சிபேட் அங்கப்பன், கலியமூர்த்தி, முருகேசன், ஆனந்தபுரம் ராஜாராம், அரியூர் பிரபா, திருமலைவாசன், பாரதி, ராஜேஷ், மகளிர் அணி பிரபாவதி, ஹேமாவதி மற்றும் தொகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

    • சுவரொட்டி கிழிப்பு, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை கிராமம் உள்ளது. வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் ஜெயந்தி விழாவையொட்டி அந்த கிராமத்தில் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

    மர்ம நபர்கள் அந்த பகுதியில் ஒட்டி இருந்த சுவரொட்டியை கிழித்தும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மோட்டார் சைக்கிளை எரித்தும் தப்பி சென்றுள்ளனர்.

    இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பரளச்சி விலக்கு என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த பகுதி வழியாக செல்ல வேண்டிய பஸ்கள், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மைதானத்தில் நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    • குப்பைகள் நிறைந்து நெருக்கடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை காடம்பாடி பகுதி யில் பழைய ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் குப்பைகள் நிறைந்து நெருக்கடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வானுயர பறந்த கரும்புகை மண்டலத்தை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விரைந்து வந்த 10-க்கும் மேற்பட்ட நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தீ விபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் கருகி நாசமானது. தீ விபத்து குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
    • அங்கு சிகிச்சை பெற்று வந்த டெல்பின் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே பட்டாண்டிவிளை நேரு தெருவை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி டெல்பின் (வயது 51).

    இவர்களது மகள் நியூனா (23). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 22-ந்தேதி டெல்பின் வீட்டு காம்பவுண்டக்குள் குப்பையை தீ வைத்து எரித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ டெல்பின் மீது பட்டு பலத்த தீகாயங்கள் ஏற்பட்டது. அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த டெல்பின் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மணல்மேல்குடி அரசு பள்ளி வளாகத்தில் குப்பைகளை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்

    புதுக்கோட்டை:

    அந்தாங்கி அருகே மணமேல்குடி அரசுப்பள்ளி பழைய கட்டிடத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இதே பள்ளி வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது, இக்கட்டிடம் விரிசலடைந்து கானப்படுவதால் கட்டிடத்தை அகற்றுவதற்காக அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஒப்பந்ததாரர்களிடம் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து பழை கட்டிடத்தில் ஏதேனும் பொருட்கள் இருந்தால் அகற்றும்படி ஒப்பந்ததாரர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வட்டாரக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் ஆட்களுடன் சென்று குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருடன் சென்றவர்கள் குப்பைகளை கூட்டி கட்டிடத்திற்குள்ளேயே தீ வைத்துள்ளனர். இதில் கட்டிடத்திலிருந்து புகை வெளியேறியுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி வளாகத்திலிருந்து புகை வருகிறதே என்ற அச்சத்தில் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் உள்ளே சென்று பார்க்கையில் குப்பைகள் எரிந்து கொண்டிருந்துள்ளது.அதனை தொடர்ந்து தீயை அணைத்த அவர்கள் குப்பைகளை கூட்டி வெளியே தள்ளியுள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் தீ விபத்து என்ற பொது மக்களின் அச்சத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




    • கொட்டாம்பட்டி அருகே இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்திருப்பது தெரியவந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியில் இருந்து பொட்டப்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு தென்னந்ேதாப்பில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் கருகிய நிலையில் நேற்று பிணமாக கிடந்தார்.

    இதனை அந்த தென்னந்தோப்பின் காவ லாளியான வெற்றிசெல்வம் என்பவர் பார்த்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பத்பநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்த அந்த பெண் சுடிதார் அணிந்திருந்தார். மேலும் அந்த பெண்ணின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்தது. ஆகவே அவரை யாரோ மர்மநபர்கள் தென்னந்தோப்புக்கு கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்திருப்பது தெரியவந்தது.

    அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இளம்பெண் கொன்று எரிக்கப்பட்ட தகவல் அறிந்த மதுைர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இதைதொடர்ந்து அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கொைல செய்யப்பட்ட பெண் யார்? என்பதை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று துப்பு துலக்கி வருகிறார்கள். அந்த பெண்ணை அடையாளம் காண்பதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்ட போலீஸ் நிலையங்களிலும் யாரேனும் மாயமாகி இருக்கிறார்களா? என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கு அருகே குப்பைகள், கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
    கம்பம்:

    கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலை யானைகுழாய் அருகே நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைக்கிடங்கில் நள்ளிரவு நேரங்களில் மர்மநபர்கள் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிவிட்டு தீவைத்து எரித்து விடுகின்றனர்.

    இதனால் ஏற்படும் புகை மண்டலத்தால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. இதற்கிடையே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பதற்காக அங்கு பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக குப்பைக்கிடங்கில் வெளிநபர்கள் நுழையாத வண்ணம் தடுக்க சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாதுகாப்பு பணியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளதால் தற்போது குப்பைக்கிடங்கில் தீ வைப்பது குறைந்துள்ளது.

    இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக குப்பைக்கிடங்கு அருகில் சாலையோரத்தில் உள்ள தனியார் நிலங்களில் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள், ஒர்க்‌ஷாப் கழிவுகள், ரெடிமேட் ஆடை கழிவுகள் ஆகியவற்றை கொட்டி தீவைத்து எரித்து விடுகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிப்பது மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கழிவுகளை கொட்டி தீ வைக்கும் மர்மநபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×