என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bus station"
- ரெயில் நிலையம் ஆகிய இடங்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
- பஸ் நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பஸ் இயக்கங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் 3-ந் தேதி (நேற்று) பிற்பகல் முதல் 4-ந் தேதி (இன்று) பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 478 பஸ்களின் 3 ஆயிரத்து 529 பயண நடைகளுடன் கூடுதலாக 250 பஸ்களின் மூலம் ஆயிரத்து 113 பயண நடைகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
மேலும், தாம்பரம் ரெயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம், எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் ஆகிய இடங்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும், மேற்குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பஸ் இயக்கங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆந்திர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் குமாரிக்கு பிரசவம் பார்த்தனர்.
- பஸ் நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமாரி. கர்ப்பிணியான இவர் கரீம் நகர் பஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் குமாரிக்கு பிரசவ வலி அதிகரித்தது.
இதனை தொடர்ந்து ஆந்திர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் குமாரிக்கு பிரசவம் பார்த்தனர்.
இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
பஸ் நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பாஸ் வழங்கப்படும் என தெலுங்கானா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
- பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை.
- புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது. அப்போதைய காலத்தில் வருசநாடு பகுதிக்கு குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான இடத்தில் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வருசநாட்டில் இருந்து நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை. எனவே பஸ் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை. அதேபோல வருசநாடு கிராமத்தில் புதிய அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கும் இடங்கள் கிடைக்காத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் சின்னமனூரைச் சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தாமாக முன்வந்து வருசநாடு கிராமத்தில் பஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 2.36 ஏக்கர் நிலத்தை தானமாக ஆளுநர் பெயருக்கு பத்திரம் பதிவு செய்து வழங்கினார். அதற்கான ஆவணங்களை வருசநாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்துவிடம் வழங்கினார். பஸ் நிலையம் அமைக்க இடம் தானமாக வழங்கிய பரமசிவத்தின் செயலைக்கண்டு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.
- புகழ்பெற்ற நகராமான மாமல்லபுரத்தில் நவீன வசதியுடன் பஸ்நிலையம் இல்லாமல் உள்ளது.
- மாமல்லபுரம் பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு தற்போது நினைவாகி உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் புகழ்பெற்றவை. கடந்த 1984-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக புகழ் வாய்ந்த புராதன சின்னங்கள் அடங்கிய சுற்றுலா நகரமாக அங்கீகரிக்கப்பட்டது.
தினந்தோறும் உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து புராதன சின்னங்களை ரசித்து செல்கிறார்கள். புகழ்பெற்ற நகராமான மாமல்லபுரத்தில் நவீன வசதியுடன் பஸ்நிலையம் இல்லாமல் உள்ளது. இது கடந்த 50 ஆண்டு காலமாக அப்பகுதியில் பெரும் குறையாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் தற்போது நவீன வசதியுடன் புதிய பஸ்நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு கடந்த 27-ந் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதனால் மாமல்லபுரம் பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு தற்போது நினைவாகி உள்ளது.
இந்த புதிய பஸ் நிலையம் மாமல்லபுரத்தின் எல்லை பகுதியான கருக்காத்தம்மன் கோவில் எதிரில் 6.9 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு மாடி கட்டிடமாக ரூ.90.5 கோடி செலவில் நவீன வசதியுடன் கட்டப்பட உள்ளது. இது மாமல்லபுரம் கடற்கரை கோவிலை மாதிரியாக கொண்டு வடிவமைப்பட்டு உள்ளது.
தரைத்தளம் இ.சி.ஆர் புறவழி சாலையுடன் இணைக்கப்பட்டு அதில் 100 கார்கள், 300 மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ நிறுத்தும் இடமாகவும், முதல் தளம் இ.சி.ஆர் புதிய பாலத்துடன் இணைக்கப்பட்டு சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தட பஸ்கள் 50-க்கும் மேற்பட்டவை நின்று செல்லும் வசதியுடனும் அமைகிறது. மேலும் நேரக்காப்பாளர் அறை, சில்லரை கடைகள், கழிப்பறை, குடிநீர் சுத்திகரிப்பகம், டிக்கெட் கவுண்டர், சுற்றுலாத்துறை அறை, உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படுகிறது. இரண்டாவது தளத்தில் உணவகம், காவல் கட்டுப்பாட்டு அறை, ஓட்டுநர், நடத்துனர் ஓய்வு அறை, பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைகிறது.
அடுத்த ஆண்டு (2025) செப்டம்பர் 25-ந்தேதிக்குள் பணிகளை முடித்து புதிய பஸ் நிலையத்தை திறக்க சி.எம்.டி.ஏ. திட்டமிட்டு உள்ளது. வரும் காலங்களில் இந்த பஸ் நிலையம் கிழக்கு கடற்கரை சாலையின் முக்கிய போக்குவரத்து மையமாக அமையும். தொடர்ந்து மாமல்லபுரம் நகரத்திற்கான 100 சதுர கி.மீ., பசுமை மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணி களை அதற்கான நிபுணர்கள் குழுவுடன் அரசு ஆலோ சித்து வருவதாக தெரிகிறது.
- ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
- 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும்.
சென்னை:
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 2,310 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தினமும் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த பஸ் நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக பஸ் நிலையத்துடன் மின்சார ரெயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலைய கட்டுமான பணிகளை வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்.
ரெயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த ரெயில் நிலையம் புறநகர் மின்சார ரெயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும். கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையம் சில கிலோ மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நிற்கும் வகையில் நீண்ட நடைமேடை அமைக்கவேண்டிய அவசியமில்லை. இந்த ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும்.
மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரெயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை, ரெயில் நிலையத்துடன் இணைக்க 450 மீட்டர் நீளத்துக்கு ஆகாய நடை பாலமும் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.
- பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது ஊர்களுக்கு செல்ல பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் தினமும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களில் சில காதல் ஜோடிகள் பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் காதல் ஜோடிகள் அத்துமீறியதை கண்ட பொதுமக்கள் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நேரடியாக சென்று பார்த்த போதும் போலீசார் வருவது கூட தெரியாமல் கல்லூரி காதல் ஜோடி முத்தமழை பொழிந்து கொண்டிருந்தனர். இருவரையும் பிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பஸ் நிலையம் கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடந்தது.
- நிகழ்ச்சியில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என மாரிமுத்து எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
பின், புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆணையர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, அலுவலக ஊழியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பேரிடர் ஆலோசனை குழு உறுப்பினர் செல்வகணபதி, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், அனைத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகம், புதுவையில் விடுமுறை அளிக்கப்பட்டது.
- பணி நிமித்தமாக அவர்கள் ஊருக்கு சென்றனர்.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகை மறுநாளான நேற்று தமிழகம், புதுவையில் விடுமுறை அளிக்கப்பட்டது.
தீபாவளி விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து வந்தவர்கள் தங்கள் பணி நிமித்தமாக அவர்கள் ஊருக்கு சென்றனர். இதனால் புதிய பஸ்நிலையத்தில் அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. மழையை யும் பொருட்படுத்தாமல் பயணிகள் பஸ்களில் முண்டியடித்து ஏறினர். காலை 9 மணிக்கு மேல் கூட்டம் குறைய தொடங்கியது.
புதுவையிலிருந்து சென்னை செல்ல வேண்டிய ரெயில் மாலை 4 மணிக்கு இயக்கப்படும். இதுதவிர பொதுமக்கள் பஸ்சை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். இதனால் புதிய பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் ஏராளமாக இருந்தது.
பெங்களூரு, காரைக்கால், கோவை உட்பட பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் புதுவை புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
- சென்னையில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவை பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
- பயணிகள் வைத்திருக்கும் உடைமைகள் மற்றும் பைகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள்.
சென்னை:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்கிறார்கள். இதனால் சென்னையில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவை பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக நேற்று 1365 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக 1895 சிறப்பு பஸ்களும், நாளை கூடுதலாக 1,415 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் கோயம்பேடு, தாம்பரம், கே.கே.நகர், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் குவிந்து வருகிறார்கள்.
எனவே பயணிகளின் பாதுகாப்புக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 300 போலீசார் 2 ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பயணிகள் வைத்திருக்கும் உடைமைகள் மற்றும் பைகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனையும் மேற்கொண்டனர். இந்நிலையில் கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் டிரோன் கேமராவை பறக்க விட்டும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்றும், நாளையும் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
- ரோசாலியோ வில்லியம் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் அனை யேரி ஊராட்சியில் உள்ள சாலையை தரம் உயர்த்தி தார் சாலையாக அமைப்ப தற்கும் பூமி பூஜை விழா அனையேரி பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி ஆனந்தன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் அனையேரி ரவி வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் ஜெய பாலன், நெடுஞ்சா லைத்துறை உதவி பொறி யாளர் கிருஷ்ணகுமார் ஒன்றிய செயலாளர் விஜய ராகவன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய துணைச் செய லாளர்கள் குமார், தாட்சி யாணிகார்த்திகேயன் ஆவின் இயக்குனர் மாத்தூர் தாஸ் நிர்வாகிகள் எட்டி யான், தக்ஷிணாமூர்த்தி பாண்டுரங்கன், ரோசாலியோ வில்லியம் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது.
- திய பஸ்நிலைய திட்டம் ஷாப்பிங் மால் போல கட்டப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ராஜசேகர், தண்டபாணி, ஹரி, சசி, ஜெயபிரகாஷ், ராம்சங்கர் ஆகியோர் முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம்அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது. பஸ்நிலையத்தின் ஒரு பகுதி இடிக்கும் பணி நடக்கிறது. பஸ்நிலையத்துக்கு நாள்தோறும் 750 பஸ்கள் வந்து செல்வது கடினமாக உள்ளது.
புதிய பஸ்நிலைய திட்டம் ஷாப்பிங் மால் போல கட்டப்படுகிறது. பயணிகள், பஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கா மல், வணிக நோக்கில் 3 அடுக்கு மாடி கடைகள் ஆக்கிரமிக்கும் வகையிலும், பிளாட்பாரம் 22 பஸ்கள் நிறுத்தும் வகையிலும் சிறிதாக உள்ளது.
திட்ட கூட்டங்களில் பஸ் உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்காததால் இந்த குறைகள் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்தை யொட்டி உள்ள பி.ஆர்.டி.சி. பணி மனையை கிழக்கு கடற்கரை சாலையில் பஸ் நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு மாற்றி பி.ஆர்.டி.சி. டெப்போவை தற்காலி பஸ்நிலைய பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம். சென்னை செல்லும் பஸ்கள் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக டெப்போவுக்கு மாற்றலாம்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
- அறந்தாங்கி அருகே புதிய பேருந்து நிழற்குடையை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
- அமைச்சர் மெய்யநாதன் பள்ளி வளாகம், கழிவறைகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிட்டார்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காயக்காடு கிராமத்தில் புதிய பேருந்து நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு சுற்றுசுழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார். அதனை தொடர்ந்து ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பள்ளி வளாகம், கழிவறைகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிட்டார். அப்போது ஆசிரியர்களை பள்ளி வளாகத்தை வீட்டை போல தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் 156 மாணவ மாணவியர்கள் படிக்கின்ற பள்ளியில் போதிய வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது. அரசு வழங்குகின்ற சலுகைகளை அரசு அதிகாரிகள் செயல்படுத்தாமல் தயக்கம் காட்டக் கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலரை சாடிய அமைச்சர் கட்டிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளியில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பீர்களா எனவும் குற்றம் சாட்டினார். எனவே உடனடியாக போதிய கட்டிட வசதிகளுக்கு பரிந்துரைக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.
அமைச்சரின் செயலால் பொதுமக்கள் பெற்றோர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டாட்சியர் பாலக்கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்