என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "business man"
- காரில் காத்திருந்த சிவஞானம் முன்னிலையில் ஜானகியிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார்.
- ஜானகி பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறி சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.
ராசிபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, அறிஞர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் (வயது49) . தொழில் அதிபரான இவர் பத்திர பதிவு தொழில், ஆர்.ஓ. வாட்டர் உற்பத்தி தொழில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறார்.
இவருக்கும், திருப்பூரை சேர்ந்த ஜெய், சேலத்தை சேர்ந்த தனசேகர் ஆகியோருக்கும் இடையே தொழில் நிமித்தமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் இவர்கள் 2 பேரின் மூலமாக நாமக்கல் மாவட்டம் வெப்படை பாரதி நகரை சேர்ந்த சிவஞானம் (50) என்பவருக்கு ஜெகநாதனுடன் பழக்கம் ஏற்பட்டது.
சிவஞானம் நூல் மில் சூப்பர்வைசராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவஞானம், ஜெகன்நாதனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா மகாதேவி கிராமத்தை சேர்ந்த ஜானகி என்கிற புவனேஸ்வரி (26), 25 தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைமை பொறுப்பு வகித்து வருவதாகவும், கொரோனா காலத்தில் அடமானம் வைத்த நகைகளை ஏலம் விட இருப்பதாகவும், இந்த நகைகளை ஏலம் எடுத்து அதில் 135 பவுன் தங்க நகைகளை உங்களுக்கு குறைந்த விலையில் தருவதாகவும், அதற்கு ரூ. 30 லட்சம் கொடுக்குமாறும் கூறியுள்ளார். மேலும் ராசிபுரம் நகராட்சி அலுவலகம் அருகே நானும், ஜானகியும் காரில் தயார் நிலையில் இருப்பதாகவும், பணத்துடன் அங்கு வந்து கொடுக்குமாறும் கூறியுள்ளார்.
அதன்படி ஜெகன்நாதன் நேற்று முன்தினம் ராசிபுரம் வந்து அங்கு காரில் காத்திருந்த சிவஞானம் முன்னிலையில் ஜானகியிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார்.
இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட ஜானகி, அருகில் உள்ள ஆர்.சி.எம்.எஸ். கூட்டுறவு வங்கியில் நகைகளை வாங்கி விட்டுவதாக கூறி பணத்துடன் சென்றார். அப்போது ஜானகி சுடிதார் அணிந்திருந்தார். ஆனால் வெகுநேரமாகிவும் அவர் திரும்பி வரவில்லை. சந்தேகம் அடைந்த ஜெகநாதன், அங்கு சென்று விசாரித்தார். அப்போது ஜானகி பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறி சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகன்நாதன் தன்னை நூதனமாக ஏமாற்றியுள்ளதை அறிந்து ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவஞானம், ஜானகி, உடந்தையாக இருந்த நாமக்கல் பொன்விழா நகரை சேர்ந்த சத்யா (35), சங்ககிரியை சேர்ந்த ராமச்சந்திரன் (55), அவரது மனைவி கஜலட்சுமி (43) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம், ஒரு சொகுசு கார் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்று 24 மணி நேரத்தில் இந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
- ராஜ்குமாரின் பயணத்தை ரத்து செய்து அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- தனது பாதுகாப்புக்காக முறைப்படி லைசென்சு பெற்று, கை துப்பாக்கி வைத்திருப்பதாக கூறினார்.
ஆலந்தூர்:
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும், பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரான ராஜ்குமார் என்பவரின் கைப்பையை மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில், 7 துப்பாக்கி குண்டுகள் இருந்தன. இதைத்தொடர்ந்து ராஜ்குமாரின் பயணத்தை ரத்து செய்து அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், தனது பாதுகாப்புக்காக முறைப்படி லைசென்சு பெற்று, கை துப்பாக்கி வைத்திருப்பதாகவும், பயணத்தின்போது, தவறுதலாக கார் டிரைவர் துப்பாக்கி குண்டு இருந்த கைப்பையை மாற்றி வைத்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அமெரிக்க நிறுவனத்தினர் கேட்ட தரச்சான்றுகளுடன் மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தார்.
- போலி சான்றிதழ் தயாரித்து ஆடைகளை அனுப்பி வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூரை சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர் பிரபுதரன். தொழிலதிபரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கையுறை, முககவசம் உள்ளிட்ட மருத்துவ கவச உடைகளை சர்வதேச தரச்சான்றுடன் கொடுப்பதற்கு ஆர்டர் எடுத்தார். பின்னர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பனியன் வர்த்தகரான சினேகாஷிஸ் முகர்ஜி (வயது 36) என்பவர் மூலமாக அமெரிக்க நிறுவனத்தினர் கேட்ட தரச்சான்றுகளுடன் மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து சினேகாஷிஸ் முகர்ஜி, சம்பந்தப்பட்ட ஆடைகளை பிரபுதரனுக்கு அனுப்பி வைத்தார். கடந்த 2019 முதல் 2020-ம் ஆண்டு காலகட்டத்தில் இதற்காக ரூ.4 கோடியே 10 லட்சத்தை பிரபுதரன், சினேகாஷிஸ் முகர்ஜிக்கு அனுப்பிவைத்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கையுறை, முக்கவசம் உள்ளிட்ட மருத்துவ ஆடைகள் உரிய தரத்தில் இல்லை என்றும், அவை போலியான சான்றிதழ் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தினர் பிரபுதரனுக்கு ஆடைகளை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபுதரன், சினேகாஷிஸ் முகர்ஜியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. அதன்பிறகே போலி சான்றிதழ் தயாரித்து ஆடைகளை அனுப்பி வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து பிரபுதரன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சினேகாஷிஸ் முகர்ஜி, அவரது மனைவி, தந்தை உள்பட 4 பேர் மீது மோசடி வழக் குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்தநிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக் டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் கொல்கத்தா சென்று முகாமிட்டு, மோசடி சம்பவம் தொடர்பாக சினேகா ஷிஸ் முகர்ஜியை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
இன்றைய நவீன உலகத்தில் தகவல்களை வேகமாக பரிமாறிக்கொள்ள சமூக வலைதளங்கள் உதவுகின்றன. உலகின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில் சமூக வலைதளங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் இதில் சிலர் அவதூறு கருத்துக்கள், வீடியோ பரப்புவதால் பல்வேறு பிரச்சினைகளும் எழுகின்றன.
குறிப்பாக சட்டம்- ஒழுங்கு பெரிய அளவில் சீர்கெட்டுப்போய் வருகிறது. சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் உண்மை தானா? என்பதை அறிவதற்குள் அடி-தடியில் இறங்கி விடுகின்றனர்.
எனவே சமூக வலை தளங்களில் அவதூறு செய்திகளை கட்டுப்படுத்திட தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த நிலையில் விருதுநகரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், தன்னை பற்றிய அவதூறு வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வருகின்றன. இதனை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி பதிவுகள் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்துமாறு மேற்கு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த சூழலில் மேற்கு போலீசில் மேலும் 2 தொழில் அதிபர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், நண்பர்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு நாங்கள் நடனமாடினோம்.
அதனை 3 பேர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த புகார்கள் மீது போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டப்பட்டு வருகிறது. இரு தரப்பிலும் பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
சமூக வலைதளங்களில் வெளியாகும் அவதூறு செய்திகளால் சட்டம்- ஒழுங்கு கெட்டுப்போகும் அளவுக்கு விளைவுகள் ஏற்படுகிறது.
எனவே இது விஷயத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது. பாரபட்சமற்ற நடவடிக்கையால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு, குற்றங்களும் தடுக்கப்படும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை சேர்ந்த தொழிலதிபர்களான கவுதம்குமார், அரவிந்த் குமார். 2 பேரும் சகோதரர்கள். ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள்.
கவுதம்குமாருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். 2-வது மகள் பிரெக்ஷா (வயது 26). அரவிந்த் குமாருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். 2-வது மகள் ஸ்வேதா (26). பிரெக்ஷாவும், ஸ்வேதாவும் ஜெயின் மதத்தில் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள உள்ளனர்.
இதுகுறித்து 2 பேரின் தந்தையும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
எங்களது மகள்கள் இருவரும் பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். பிரெக்ஷா எம்.பி.ஏ. படித்துள்ளார். ஸ்வேதா சி.ஏ. படித்துள்ளார்.
இருவரும் 22 வயது இருக்கும்போது ஜெயின் மதத்தில் துறவரம் போகப்போவதாக கூறினர். நாங்கள் அதை முதலில் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் துறவரம் செல்வதிலேயே உறுதியாக இருந்தனர். எங்களது கண்ணீர் அவர்கள் மனதை மாற்றவில்லை. அன்பாகவும், மிரட்டியும் பார்த்தோம் எனினும் அவர்கள் இருவரும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.
துறவரம் செல்வது என்பது சாதாரண விஷயம் அல்ல... அதில் முள்பாதைகள் அதிகம், கட்டுப்பாடுகள் அதிகம் என்று குடும்பத்தினர் எடுத்துக்கூறியும் அவர்கள் தங்களது முடிவை மாற்றி கொள்ளவில்லை. பின்னர் நாங்கள் அவர்களின் முடிவை ஏற்றுக்கொண்டோம். முதலில் வேதனையாக இருந்தது. பின்னர் அதை நாங்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டோம். துறவரம் செல்ல வேண்டும் என்றால் அதற்கான எம்.ஏ.ஜெயினினாலஜி படிக்க வேண்டும். அவர்களை ராஜஸ்தானில் உள்ள மத கல்லூரியில் சேர்த்தோம். 3 ஆண்டுகள் 8 மாதம் படித்தனர். படிக்கும் போது அவர்களின் மனநிலையை மூத்த துறவிகள் ஆராய்ந்து இருவரும் துறவரத்திற்கு தகுதியானவர்கள் என்று சான்று அளித்தனர்.
ஜெயின் மதத்தில் துறவிகள் ஆக வேண்டும் என்றால் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தங்களது துணிகளை தாமே சுமக்க வேண்டும். எங்கு சென்றாலும் நடந்தே செல்ல வேண்டும். பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் உணவு உண்ணக்கூடாது. 3 ஆடைகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
குடும்பத்தினருடன் பாசப்பிணைப்பு இருக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒருமுறை தங்களது தலைமுடியை தாங்களாகவே எடுத்துவிட வேண்டும். வெயிலோ, மழையோ, குளிரோ வேறு உடைகளை அணியவே கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது. இவை அனைத்தையுமே எங்களது மகள்கள் ஏற்றுக்கொண்டனர். சிறுவயதில் இருவரும் பெண் துறவிகளுக்கு சேவகம் செய்யும் போது, துறவி ஆக வேண்டும் என்ற எண்ணம் பிறந்துள்ளது.
இவர்களை வழியனுப்பும் விழா திருவண்ணாமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்கு மாவட்ட நீதிபதி, மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள் உள்பட பலர் வருகை தர உள்ளனர். முன்னதாக ஊர்வலம் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலையில் முதன் முறையாக ஜெயின் மதத்தில் துறவரம் செல்வது இவர்கள் தான். இதையடுத்து நவம்பர் மாதம் 11-ந் தேதி சென்னை மாதவரத்தில் இவர்களின் குரு ஆச்சார்யா ஸ்ரீமகாஸ்ரமன் ஆசியோடு ஆன்மிக வாழ்க்கையில் பயணம் செல்ல உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #nuns
கோவை குனியமுத்தூர் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 44). இவர் பெண்களுக்கான உள்ளாடை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சசிகலா (36). இவர்களுக்கு சினேகா (16), ஹேமாவர்ணா (14) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
ஜானகி ராமன் தனது தொழில் தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததல் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.
இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்த ஜானகி ராமன் குடும்பத்துடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.
அதன்படி தனது குடும்பத்தினருடன் பாலில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து குடித்தார். பின்னர் தனது உறவினர்களுக்கு குடும்பத்துடன் தற்கொலை செய்வதாக செல்போன் மூலம் கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக ஜானகிராமன் வீட்டுக்கு விரைந்து வந்து பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்த 4 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜானகிராமனின் மனைவி சசிகலா பரிதாபமாக இறந்தார். ஜானகிராமன், அவரது மகள்கள் சினேகா, ஹேமாவர்ணா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடன் தொல்லை காரணமாக ஜானகிராமன் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
ஜானகிராமன் தனது தொழில் தேவைக்காக யார்? யாரிடமெல்லாம் வட்டிக்கு பணம் வாங்கினார். அவர்களில் யாராவது ஜானகி ராமனிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டி நெருக்கடி கொடுத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் ஜானகிராமனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
சென்னை அண்ணா சாலை ஸ்டேட் பேங்க் தெருவை சேர்ந்தவர் ஷிவ் ரத்தன் கன்னா (வயது 56). தொழில் அதிபரான இவர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து ஏற்கனவே ஒரு புகார் மனு கொடுத்திருந்தார்.
அதில் தனது நெருங்கிய உறவினரான மைலாப்பூர் தொழில் அதிபர் சுமித் மல்கோத்ரா (வயது 47)வும் நானும் பங்குதாரர்களாக சேர்ந்து, அலங்கார மின் விளக்குகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தோம்.
கடையை பெரும்பாலும் சுமித் மல்கோத்ராதான் கவனித்து வந்தார். எனக்கு ‘லைட்டிங்’ தொழில் தெரியாது என்பதால் என்னை நம்ப வைத்து கடை வருமானத்தில் ரூ.40 கோடியை சுருட்டி அம்பத்தூரில் தனக்கென தனியாக ஒரு கடையை தொடங்கி விட்டார்.
இந்த மோசடியை கண்டு பிடித்த நான், அவரிடம் பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றியது மட்டுமின்றி பணம் தராமல் மோசடி செய்கிறார்.
எனவே சுமித் மல்கோத்ரா மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி பூஜா மல்கோத்ரா, ரேவதிராமன் மல்கோத்ரா, உமேஷ் மல்கோத்ரா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை கமிஷனர் மல்லிகா, உதவி கமிஷனர் சச்சிதானந்தம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தினார்.
பணம் மோசடி, கையாடல் நடந்தது தெரிய வந்துள்ளதால் இந்திய தண்டனை சட்டம் 406, 420, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தொழில் அதிபர் சுமித் மல்கோத்ராவை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
சுமித் மல்கோத்ரா ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்திருந்தார். அந்த மனுவும் தள்ளுபடி ஆகிவிட்டது.
பூஜா மல்கோத்ரா, உமேஷ் மல்கோத்ரா, ரேவதிராமன் மல்கோத்ரா ஆகியோர் ஐகோர்ட்டில் முன்ஜாமீனுக்கு முயற்சி செய்து வருகின்றனர்.#tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்