என் மலர்
நீங்கள் தேடியது "businessman"
- விசாரணையில் ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள மொபிகுல் ஆலம் முலா என்பவரது வங்கி கணக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
- சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது.
அங்கு சுவிகியா என்பவர் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்தது. அதில் அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலை உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதில் அரசு அதிகாரிகளிடம் ஒரு புதிய திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கிறேன். நமது அலுவலக வங்கி கணக்கில் உள்ள தொகையை மற்றொரு வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனை உண்மை என்று நம்பிய சுவிகியா ரூ.5 கோடியே 10 லட்சத்தை அந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் இது தொடர்பாக தனது உரிமையாளரிடம் பேசினார். அப்போது மர்ம ஆசாமிகள் உரிமையாளர் பெயரில் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் ரூ.5 கோடியே 10 லட்சம் தொகையில், ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள மொபிகுல் ஆலம் முலா என்பவரது வங்கி கணக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.
பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 2 கோடி பணத்தை போலீசார் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் மேலும் 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் வெளிநாட்டை சேர்ந்த கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இதுபோன்று பலரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட மொபிகுல் ஆலம் முலாவை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
- கேரள மாநிலம் திருச்சூர் மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 50).அலுமினிய வியாபாரி
- சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கண்டோன்மெண்ட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருச்சி,
கேரள மாநிலம் திருச்சூர் மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 50).அலுமினிய வியாபாரியான இவர் அவ்வப்போது திருச்சிக்கு வந்து செல்வார். கடந்த 17ம் தேதி கேரளாவில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு வந்தவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் இரு தினங்களாக அவரது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கண்டோன்மெண்ட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சப்- இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் பாபு பணமாக கிடந்தார்.
அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் போலீசார் நடத்திய சோதனையில் அதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. இரு தினங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றதற்கான சீட்டு மற்றும் மருந்து மாத்திரைகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆகவே உடல் நலக்குறைவால் இயற்கை மரணம் அடைந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விடுதி அருகில் வியாபாரி பிணமாக கிடந்த சம்பவம் அந்த விடுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
- தேவராஜ் அரசூர் பகுதியில் ஆயில் மில் கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.
- வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது தேவராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே பண்டரகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 55). தொழிலதிபர். இவர் அரசூர் பகுதியில் ஆயில் மில் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது தேவராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்த அதிர்ச்சடைந்த அவர்கள் இது குறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- நெல்லை மாவட்டம் ஏர்வாடி 6-வது தெருவை சேர்ந்தவர் சேக். தொழிலதிபர்.
- சிறுவர்களை வைத்து திருட்டு சம்பவத்தில் கும்பல் ஈடுபடுவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி 6-வது தெருவை சேர்ந்தவர் சேக்(வயது 60). தொழிலதிபர். சம்பவத் தன்று இவரது வீட்டில் பட்டப்பகலில் 15 வயது சிறுவன் ஒருவன் திருடும் நோக்கத்தில் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலை உடைக்க முயற்சி செய்துள்ளான்.
திருட முயற்சி
இந்த சத்தம் கேட்டு சேக் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை பார்த்துள்ளார். அப்போது சிறுவன் ஒருவன் வீட்டின் பின்புறம் ஜன்னலை உடைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அந்த சிறுவனை பிடிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றார்.
அப்போது ஆட்கள் வரும் சத்தம் கேட்ட சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 7-ந் தேதி ஏர்வாடி பகுதியில் ஒரு ஸ்டூடியோவில் புகுந்த சிறுவன், அங்கு உரிமையாளர் இல்லாததை அறிந்து பணத்தை திருடி சென்றுள்ளான்.
விசாரணை
இந்த 2 சம்பவங்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. ஏர்வாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர் களுக்கு கஞ்சா விற்பனை செய்த தாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் சிறுவர்களை வைத்து திருட்டு சம்பவத்தில் கும்பல் ஈடுபடுவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவர்களை போலீசார் பிடித்து, அவர்கள் மூலம் திருட்டு கும்பலை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சம்பவம் நடந்த ஓட்டல் முன்பு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
- பணத்தை பறித்து சென்ற 2 வாலிபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை:
தூத்துக்குடி சண்முகபுரம் புதுக்கிராமம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது 42). இவர் அரிசி, வெங்காயம், கிழங்கு வகைகளை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர் தனது நண்பரான தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த செல்வராஜ்(46) என்பவருடன் நேற்று முன்தினம் காரில் நாகர்கோவிலுக்கு சென்று, ஒருவரிடம் தொழில் தேவைக்காக ரூ.25 லட்சம் கடனாக வாங்கிக்கொண்டு தூத்துக்குடிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
பாளை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட நிறுத்தியபோது மர்மநபர் ஒருவர் காரில் இருந்த பணப்பையை திருடிச்சென்றார். இதுதொடர்பாக பாளை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த ஓட்டல் முன்பு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் சரவணகுமார் தனக்கு சாப்பாடு வாங்குவதற்காக கார் டிரைவரை அனுப்பி உள்ளார். காரின் முன் இருக்கையில் சரவணகுமாரும், பின் இருக்கையில் செல்வராஜூம் இருந்துள்ளனர். பணம் இருந்த பைபின் இருக்கையில் இருந்தது. அப்போது அங்குவந்த மர்மநபர் காரின் கதவை திறந்து பணம் இருந்த பையை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், சரவணகுமார் ஆகியோர் கூச்சல் போடுவதும், அந்த மர்மநபரோ சிறிது தூரத்தில் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மற்றொருவருடன் சேர்ந்து தப்பி சென்றதும் தெரியவந்தது.
இதற்கிடையே கார் டிரைவரான தூத்துக்குடி பி.என்.டி. காலனி 7-வது தெருவை சேர்ந்த செல்வசரவண கண்ணன்(25) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தனியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை திருடியது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், செல்வ சரவணகண்ணன் டிரைவராக வேலைக்கு சேர்வதற்கு முன்பாக பெயிண்டிங் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் ஒரு வாலிபர் என 2 பேருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொழிலுக்காக சரவணகுமார் குமரி மாவட்டத்திற்கு பணம் வாங்க செல்வதை அறிந்த செல்வசரவண கண்ணன் தனது நண்பர்களுடன் வாட்ஸ்-அப் மூலமாக போனில் பேசி உள்ளார்.
ஓட்டலுக்கு சாப்பிட செல்லும் நேரத்தில் வந்து பணத்தை திருடி செல்லுமாறும், அதன்பின்னர் அந்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழலாம் என முடிவு செய்திருந்ததாகவும் தெரியவந்ததது. அவரது தகவலின் அடிப்படையில் பணத்தை பறித்து சென்ற 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.
அவர்களை கைது செய்வதற்காக உதவி கமிஷனர் பிரதீப் மேற்பார்வையில் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் தலைமையில் ஒரு தனிப்படை, சப்-இன்ஸ்பெக்டர் விமலன் தலைமையில் ஒரு தனிப்படை என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- காரை ஓட்டிய சுஹில் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
- கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் கோவை தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவினாசி:
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 30). கோவையில் உள்ள பிரபல கிரைண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான இவர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.
இவருடன் அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுஹில், சேலத்தை சேர்ந்த ஜெய்சூர்யா (18), கோவையை சேர்ந்த மிதுன் (16) ஆகியோரும் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அய்யப்ப பக்தர்கள் பஜனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோகன்ராஜ் உள்பட 4பேரும் பவானிக்கு சென்றனர். அங்கு பஜனையை முடித்து விட்டு இன்று அதிகாலை கோவைக்கு காரில் புறப்பட்டனர். காரை சுஹில் ஓட்டினார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி பழங்கரை பகுதியில் வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மோகன்ராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 3பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரை ஓட்டிய சுஹில் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் கோவை தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தொழிலதிபரை ஏமாற்றி ரூ.13.5 லட்சம் மோசடி செய்த பெண் ஜிம் பயிற்சியாளர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்தநிலையில் ஸ்வேதா, அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்து ஜிம் ஒன்றை நடத்தலாம்,
மதுரை
மதுரை ஜரிகைக்கார தெருவை சேர்ந்தவர் அமீர்முகமது (வயது 37). தொழில் அதிபரான இவர் திடீர் நகர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது மனைவி உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்வது வழக்கம். அப்போது அவருக்கு ஜிம் பயிற்சியாளர் ஸ்வேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் ஸ்வேதா, அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்து ஜிம் ஒன்றை நடத்தலாம், இதில் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.
இதனை நம்பிய நான் அவர்களிடம் 11 லட்சம் ரூபாயை கொடுத்தேன். இது தவிர 2.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கொடுத்தேன்.
ஆனால் ஸ்வேதா குழுவினர் ஜிம் நடத்துவ தற்கான பணிகளில் ஈடுபட வில்லை. எனவே நான் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்வேதா, பிரியதர்ஷினி, ஸ்வேதா அத்தை, மற்றும் அவரது மகள் ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாடிப்பட்டி அருகே தொழிலதிபரை மிரட்டி நகை-பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் மோதிரம், ரூ.900 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மகாராணி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 53). இவர் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையில் தென்னை நார் கம்பெனி நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் ராமநாதன் காரில் தனது கம்பெனிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் ராமநாதனிடம் கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் மோதிரம், ரூ.900 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று போலீசார் வாகன சோதனையின்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது அவர்கள் ராமநாதனிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் பொன்பெரு மாள் கோவில்தெருவை சேர்ந்த பரட்டை ஆறுமுகம் (35), ராமநாயக்கன்பட்டி செல்லையா (28), பேட்டை புதூர் கோபிநாத்ராஜா (35) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- டீயில் போதை மருந்து கலந்து கொடுத்து தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் திருடப்பட்டது.
- தனியார் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை கோமதிபுரம் சன் ஸ்டார் தெருவை சேர்ந்தவர் சஞ்சய்குமார்(வயது56), தொழிலதிபர். இவர் திடீர்நகர் பகுதியில் பச்சை நாச்சியம்மன் தெருவில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரிடம் ஊழியராக வேலை பார்த்து பார்ப்பவர் ஜிஜேந்தர்(34). இவர் சம்பவத்தன்று டீயில் போதை மருந்து கலந்து முதலாளி சஞ்சய்குமாரிடம் கொடுத்துள்ளார். டீயை குடித்ததும் சஞ்சய்குமார் மயங்கி விட்டார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஜிஜேந்தர் திருடி விட்டு தப்பிச்சென்று விட்டார்.
இதுபற்றி சஞ்சய்குமார் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலதிபரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை திருடிச்சென்ற தனியார் ஊழியர் ஜிஜேந்தரை கைது செய்து அவர் திருடிய பணத்தை பறிமுதல் செய்தனர்.
- தொழிலதிபர் அடித்துக்கொலை? செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகிச்சை பலனின்றி பார்த்த சாரதி பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது48). இவர் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார். மேலும் கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.
சம்பவத்தன்று காலை பார்த்தசாரதி கார் வாங்க பைபாஸ் ரோட்டில் மெக்கானிக் ஷாப் நடத்தி வரும் முருகேசன் என்பவருடன் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனும் சுவீட்ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் பதட்டமடைந்த உறவினர்கள் பார்த்த சாரதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் அவர் முருகேசன் ஒர்க்ஷாப் பின்புறம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக மனைவி பிரியாவிற்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு சென்றார்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த கணவரை மீட்ட பிரியா அவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்த சாரதி பரிதாபமாக இறந்தார். பார்த்தசாரதி உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தன.
எனவே அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அவரது மனைவி பிரியாவும், கணவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வியாபாரியை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
- திருமணம் செய்து கொடுத்த விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
மதுரை
மதிச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 46). இவர் தெற்கு தெருவில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் கோவில் திருவிழாவுக்கு கணக்கு கேட்ட விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மாலை மகேஷ்குமார் கடையில் இருந்தார். அங்கு வந்த 2பேர் அவரை தாக்கிவிட்டு தப்பினர்.
இது தொடர்பாக மகேஷ்குமார் மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதிச்சியம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்(42), அவரது மகன் ஹரி ரஞ்சித்(23) ஆகியோரை கைது செய்தனர்.
ஜெய்ஹிந்த்புரம் இருதய நகரை சேர்ந்தவர் வாசு தேவன்(72). இவரது மகன் மாரிராஜா. இருவருக்கும் இடையே அனுமதியின்றி சகோதரியை திருமணம் செய்து கொடுத்த விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
சம்பவத்தன்று இரவு வாசுதேவன் வீட்டில் இருந்தார். அங்கு வந்த மாரிராஜா தந்தை என்றும் பாராமல் வாசுதேவனை தாக்கி விட்டு தப்பினார். இது தொடர்பாக வாசுதேவன், ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரி ராஜாவை கைது செய்தனர்.
- சீனிவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.
- இந்நிலையில் இன்று கோவில்பட்டி- மணியாச்சி இடையே ரெயில் முன் பாய்ந்து சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அண்ணாநகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது48). இவர் வெளிநாட்டில் கார்மெண்ட்ஸ் தொழில் பார்த்து வந்தார். கடந்த ஆண்டு சொந்த ஊர் வந்தார். இவரது மனைவி முருகலட்சுமி. இவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சீனிவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தான் தற்கொலை செய்ய போவதாக அவ்வப்போது கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று கோவில்பட்டி- மணியாச்சி இடையே ரெயில் முன் பாய்ந்து சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற தூத்துக்குடி இருப்பு பாதை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.