search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "canals"

    • 4,000 சாலைப் பணியாளர்களை கொண்டு மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • மாநகராட்சியின் 1,480 கிலோமீட்டர் நீளம் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படுகிறது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    பருவமழையை எதிர் கொள்ள ஏதுவாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 33 கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் துவங்கி உள்ளது.

    தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் நோக்கில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கால்வாய்கள் நீர்நிலைகள் மற்றும் மழை நீர் வடிகால்களை தூர்வாருதல், ஆகாயத்தாமரை அகற்றி தயார்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

    இதற்காக 15 மண்டலங்களுக்கும் தலா ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆம்பிபியன்ஸ், ரோபோடிக் எக்ஸ் கேவேட்டர்கள் மற்றும் மினி-ஆம்பியன்கள் போன்ற நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    ஓட்டேரி நல்லான் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், மாம்பலம் கால்வாய், ராஜ்பவன் கால்வாய், பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு, கூவம் ஆறுகளிலும் ஆகாயத்தாமரை மற்றும் தூர்வாரும் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற உள்ளன.

    முதல் கட்டமாக ஜூன் 30-க்குள் பணிகள் முடிக்கப்படும். தென்மேற்கு பருவமழைக்குப் பிறகு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக மீண்டும் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு அக்டோபருக்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    4,000 சாலைப் பணியாளர்களை கொண்டு மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மாநகராட்சியின் 1,480 கிலோமீட்டர் நீளம் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படுகிறது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

    • கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் மற்றும் ராமநாதபுரம் வட்டத்தில் பொதுப்பணித்துறையில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மராமத்து பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமக்குடி வட்டம், பாண்டியூர், சிறகிக்கோட்டை, தொருவர், காரேந்தல் ஆகிய பகுதிகளுக்கு சென்று வைகை ஆற்றில் இருந்து பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய கால்வாய்கள் மற்றும் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளில் கரைகள் வலுப்படுத்தும் பணி, தடுப்பணைகள் கட்டும் பணி மற்றும் பாசன கண்மாய்களில் கழுங்குகள், மடைகள் புதிதாக கட்டும் பணி ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து வரும் மழை கலத்திற்குள் முடித்திட வேண்டும்.

    வைகை ஆற்றில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரக்கூடிய தண்ணீர் பாசன கண்மாய்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் கால்வாய்களை சீரமைக்க குறித்து சிறப்பு கவனம் அளிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார்.

    மேலும் மழைக்காலம் துவங்குவதற்குள் கருவேல மரங்களை அகற்றி கால்வாய்களை சீரமைத்திட பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் சென்று முழு கொள்ளளவை எட்டியதும் அதனை ஒட்டி யுள்ள கிராம பகுதிகளில் உள்ள பாசன கண்மாய்க ளுக்கு தண்ணீர் கொண்டு சென்று முழுமையாக நிரப்பிட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாமல் தடுத்து விவசாயிகளுக்கு பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஆனந்த் பாபு, வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உசிலம்பட்டியில் உள்ள 58 கிராம பாசன கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறந்து விட வேண்டும்என விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • 58 கிராமபாசன கால்வாயை நீர்பாசன திட்டமாக அறிவிக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன சங்க விவசாயிகள் கூட்டம் நடந்தது. தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர்கள் மகாராசன், சன்னாசி, துணைச் செயலாளர்கள் பொன் ஆதிசேடன், இரும்புத்துரை தலைமை ஆலோசகர் சின்னான், மாவட்ட கவுன்சிலர் காசிமாயன், விருவீடு ஊராட்சி தலைவர் தருமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    58 பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், முதல்வ ருக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

    28.10.2022 அன்று வைகை அணையில் திறக்கப்பட்ட 58 கிராம பாசன கால்வாய் தண்ணீர் இடதுபுற கால்வாயில் ரெட்டியபட்டி, அய்யம்பட்டி, இன்னொரு பிரிவான பாறைப்பட்டி பிரிவில் போடுவார்பட்டி, புதுக்கோட்டை பிரிவில் சடச்சிபட்டி, கீரிப்பட்டி பிரிவில் பூதிப்புரம், கிருஷ்ணாபுரம், கட்டக்கரு ப்பன்பட்டி, போத்தம்பட்டி பிரிவில் வடுகபட்டி போன்ற கண்மாய்கள் பயனடையவில்லை.

    மேற்கண்ட கண்மாய்க ளுக்கு மீண்டும் வைகை அணையில் 67 அடி தண்ணீர் வரும்பொழுது தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    58 கிராம பாசன கால்வாயில் பயன்பெறும் கண்மாய்களில் தண்ணீர் திறப்பின் போது முழுமையாக தண்ணீர் பெற வாய்ப்புள்ள கண்மா ய்களுக்கு தனிமடை அமைக்க அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 58 கிராம பாசன கால்வாயில் அனைத்து கண்மாய்களும் பயன்பெற உறுதிப்படுத்தப்பட்ட, நிரந்தரமாக்கப்பட்ட நீரை பெற உரிய ஆணையை அரசு பிறப்பிக்கவும், 58 கிராமபாசன கால்வாயை நீர்பாசன திட்டமாக அறிவிக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வி.எம்.சத்திரம் அருகே மூர்த்தி நயினார்குளத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
    • நெல்லை மாவட்டம் முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை யொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்து வருகிறார்.

    கலெக்டர் ஆய்வு

    வி.எம்.சத்திரம் அருகே மூர்த்தி நயினார்குளத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி களை இன்று கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்டுப்பாட்டு அறை

    நெல்லை மாவட்டம் முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது. 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் புகார் செய்ய 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் தேங்கும் மழை நீர் குறித்து புகார் செய்வதற்காக பிரத்யேக செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

    நீர் இருப்பு

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 3 வகைகளில் வெள்ளப் பெருக்கு ஆபத்து ஏற்படலாம். இதில் தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை 60 ஆயிரம் அடி வரை கொள்ளளவு கொண்டது. மேலும் தற்போது பாபநாசம் அணையில் 42 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணையில் 29 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    எனவே கனமழை பெய்தாலும் ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

    கடந்த ஆண்டு மாநகர பகுதியில் உள்ள குளங்களில் இயற்கையான திசை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் தற்போது அவற்றை சரி செய்துள்ளோம். மேலும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேய்ந்தான்குளமும் தூர்வாரப்பட்டு உள்ளது.

    மழை குறைவு

    இதனால் மாநகர பகுதியில் வெள்ளப் பெருக்கு பாதிப்பு குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. நெல்லை மாவட்டத்தில் தற்போது வரை மழை பாதிப்பு இல்லை. கடந்த ஆண்டை விட தற்போது 60 சதவீதம் மழை குறைவாகவே பெய்து உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் 20 சதவீதம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    மானூர், ராதாபுரம் வட்டார பகுதிகளில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளது. இந்த வட்டாரங்கள் 'ரெட் பிளாக்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக 3 புதிய திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் இடங்கள் என 74 இடங்கள் கண்டறியப்பட்டிருந்தன. தற்போது அவை 63 ஆக குறைந்துள்ளது.

    பொதுமக்கள் கால் வாய்களில் குப்பைகளை கொட்டுவதால் மழை நீர் செல்லும் பாதை அடைத்து வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கால்வாய்களில் குப்பை களை கொட்ட வேண்டாம் என பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மாரியப்பன், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், பேரிடர் மீட்பு தாசில்தார் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஊட்டி முத்தோரை பகுதியில் சேதடைந்த சாலையில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்தது.
    • அதிக அளவில் மழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.

    ஊட்டி

    ஊட்டியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரணப் பணிகளை வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் ேநரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    ஊட்டி- அவலாஞ்சி சாலையில் முத்தோரை பகுதியில் சேதடைந்த சாலையில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி, வேளாண் பொறியியல் துறை சாா்பில் பைகமந்து முதல் பாலாடா வரை கால்வாய் தூா்வாரும் பணி, கல்லக்கொரை கிராமத்தில் அபாயகரமான மரங்களை தேசிய பேரிடா் மீட்பு குழுவினா் அகற்றும் பணி, பாலகொலா ஊராட்சிக்குள்பட்ட பி.மணியட்டி, துளிதலை சாலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு பணிகளை விரைவாக முடித்திட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

    பின்னா் அவா் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மழையினால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், நிவாரண பணிகளை கண்காணிக்கவும் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக ஆனந்தகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருடன் மாவட்ட கலெக்டர் அம்ரித்தும் பருவ மழை பாதிப்புகளை எதிா்கொள்ள தீவிரமாக பணியாற்றி வருகின்றாா்.

    நீலகிரி மாவட்டத்தில் இயல்பை காட்டிலும் அதிக அளவில் மழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. கால்வாய்கள், ஓடைகள் முன்கூட்டியே தூா்வாரப்பட்டதால், மிகப்பெரிய பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் 283 அபாயகரமான பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றைக் கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 456 பேரிடா் நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. தேவையான அளவு அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள் தயாா் நிலையில் வைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது என்றாா்.

    நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்துவருகிறது. நீா்நிலைகள் முற்றிலும் நிரம்பியுள்ளன.

    தாழ்வான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கூடலூருக்கு வந்துள்ள பேரிடா் மீட்பு படையினா் தொடா்ந்து பல பகுதிகளுக்கும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனா். கூடலூா் ஓவேலி சாலையில் கெவி ப்பாறா பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா்.

    • அனைத்து வரத்துக்கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
    • ஆண்டு கடன் திட்டமான ரூ.6060.71 கோடியில் விவசாயத்திற்காக ரூ.2765.27 கோடி 45.63 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021-22-ன் கீழ் தொடர்புடைய துறைகளின் மூலம் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டப்பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்திற்கான ஆண்டு கடன் திட்டமான ரூ.6060.71 கோடியில் விவசாயத்திற்காக ரூ.2765.27 கோடி 45.63 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த அகில உலக இயற்கை வேளாண்மை குறித்த நடைபெற்ற உலக அளவிலான கண்காட்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு 2-ம் பரிசை பெற்ற விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கும், வேளாண்மை துறை அலுவலர்களுக்கும் பாராட்டுக்கள்.

    இதே போன்று வேளாண் விற்பனை துறை மற்றும் வணிகத்துறையின் சார்பில் டெல்லியில் நடந்த ஆகார் விழாவில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்ட கவுசிகா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கலந்து கொண்டதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைத்து விவசாயிகளும் விவசாய கடன் அட்டை பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டு வருகின்றது. நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் 2-ம் போக சாகுபடிக்கு 10 இடங்களில் தொடங்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மாதமும் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டங்களில் நடைபெறும் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தவறாது கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×