என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cancellation of license"
- வட்டார போக்குவரத்து அலவலர் நடவடிக்கை
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் இருந்து வேலூர் செல்லும் தனியார் பஸ்சை டிரைவர் ஓட்டி சென்றார். அப்போது அவர் பஸ்சை செல் போனில் பேசியபடி வெகுதூரம் ஓட்டி சென்றுள்ளார்.
இதனை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரு கிறது. இந்நிலையில் இந்த விதிமீறல் வீடியோவை பார்த்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர், சம்மந்தப்பட்ட பஸ் டிரைவரை அழைத்து விசாரணை நடத்தி சோதனை அறிக்கை வழங்கியுள்ளார்.
மேலும் வட்டார போக்குவரத்து அலவலர் வெங்கடேசன்(பொறுப்பு) விதிமீறிய பஸ் டிரைவரின் லைசென்சை 3 மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.
- வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- எந்திரங்கள் மூலமாக கழிவுகள் அகற்றும் உபகர ணங்கள் இல்லாதது தெரிய வந்தது.
கடலூர்:
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் கமிஷனர் கிருஷ்ண ராஜன் தலைமையில் பொறியாளர் பாரதி, சுகா தார ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், நகரமைப்பு ஆய்வாளர் சேகர், வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கழிவுகள் அகற்றும் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது நகராட்சியில் உரிய அனுமதி பெறாமலும், எந்திரங்கள் மூலமாக கழிவுகள் அகற்றும் உபகர ணங்கள் இல்லாதது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகன உரிமை யாள ருக்கு அபராதம் விதித்தும், வருங்காலங்க ளில் இது போன்ற நட வடிக்கை யில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்து போலீஸ் நிலை யத்தில் ஒப்படைக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்த னர்.
பின்னர் கமிஷனர் கிருஷ்ணராஜன் கூறுகை யில் , நெல்லிக்குப்பம் நகராட்சியில் வீடுகள், கடைகள் வணிக வளா கங்கள் மற்றும் தொழிற்சா லைகளில் கழிவு தொட்டி களை சுத்தம் செய்ய நகராட்சியிடம் அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மனிதக் கழிவு களை மனிதனே அகற்றி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது போன்ற செயல்களை தடுக்க நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் 8 பேர் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். இதனை தவிர்த்து யாரே னும் அனுமதி பெறாமல் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்வதோடு, தண்ட னையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு நிரந்தர விற்ப னையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது,
பட்டாசு உற்பத்தியா ளர்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி மட்டுமே வெடி மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் வழங்கபட வேண்டும். மேலும் பட்டாசு தொடர்பான பணிகளில் அனுபவமில்லாத உள்ளுர் ஆட்களை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்த கூடாது. உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றிட வேண்டும். பட்டாசு தயாரிப்பு தொடர்பான பணிகளில் அனுமதிக்கப்பட்ட அளவு நபர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். உரிமத்தில் குறிப்பிட ப்பட்டுள்ள இடஅமைப்பில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். தீ அணைப்பான்களை பயன்படுத்தக் கூடிய நிலையில் வைத்திருக்க வேண்டும் முறையாக அதனை தகுந்த காலத்திற்குள் புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும். உற்பத்தி நிலையத்திற்குள் எந்த ஒரு வாகனத்தினையும் நிறுத்தக் கூடாது உற்பத்தி நிலையத்திற்கு வெளியில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். இதனை தொடர்ந்து கண்கா ணித்திடும் பொருட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
உரிமதாரர்கள் உரிமத்தி ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிக்க ப்படாமல் மற்றும் மேற்கூடிய நெறிமுறைகளை பின்பற்றாத நேர்வுகளில் உரிமம் ரத்து செய்யப்ப டுவதுடன் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க ப்படும் எனவும், உரிமம் இன்றி புதுப்பிக்கப்படாமல் உற்பத்தி அலகுகள் மற்றும் விற்பனைக்கடைகள் செயல்படுவது தெரிய வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்அம்பிகா, அரசு அலுவலர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள், நிரந்தர விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சாலை விதி மீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
- செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்றவற்றுக்கு 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் சரகத்தில் அதி வேகமாக வாகனம் ஓட்டு வது, சிவப்பு விளக்கு மீறு வது, அதிகபாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொது மக்களை ஏற்றுவது போன்ற சாலை விதி மீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வரு கிறது. இதேபோல் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதை யில் வாகனம் ஓட்டுவது போன்றவற்றுக்கு 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இதனை அந்தந்த மாவட்ட போலீசார், விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். போதையில் வாகன ஓட்டியவர்களின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்க ளுக்கு போலீ சார் பரிந்துரை செய்கின்ற னர். மேலும் போதையில் வாகனம் ஓட்டு பவர்களுக்கு ரூ.10,000 அப ராதம் விதிக்கப்படுகிறது.
5 மாதங்களில்...
அந்த வகையில், கடந்த 5 மாதங்களில் சேலம் சரகத்தில் வாகன விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 175 டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதே போல் சேலம், தர்மபுரி மாவட்டத்தில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 5 மாதத்தில் 305 பேரின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இயற்கை விவசாயம் மற்றும் அங்கக வேளாண்மைக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.
- இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்து வதன் மூலம், நிலம் மற்றும் சுற்றுப்புறம் மாசபடுவதை தவிர்த்து, மண் வளத்தை மேம்படுத்துவதுடன், உற்பத்தி செலவையும் குறைக்கலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில், நெல், கரும்பு, மக்காச்சோ ளம், பருத்தி, தென்னை, வாழை, மரவள்ளி, வெங்கா யம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை விவசாயம் மற்றும் அங்கக வேளாண்மைக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து, இயற்கை விவசா யத்தை ஊக்குவித்து வருகிறது.
விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்க ளுக்கு, அதிக அளவில் இயற்கை உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் (டிரைக்கோ விரிடி, சூடோ மோனாஸ், மெட்டாரை சியம், பிவேரியா, டிரைக்கோகிரம்மா, கிரை சோபெர்லா) ஆகியவை, வேளாண் துறையின், அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்து வதன் மூலம், நிலம் மற்றும் சுற்றுப்புறம் மாசபடுவதை தவிர்த்து, மண் வளத்தை மேம்படுத்துவதுடன், உற்பத்தி செலவையும் குறைக்கலாம். மேலும், நஞ்சில்லா உணவையும் மக்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியும்.
அதனால், விவசாயிகள் வேளாண் துறை மூலம் தங்கள் வயல்களில் மண்பரிசோதனை செய்து பரிந்துரைக்கப்படும், அளவிற்கு மிகாமல் ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும்.
உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகள் வாங்கும்போது, லைசென்ஸ் பெற்ற உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்களிடம், உரிய விற்பனை ரசீது பெற்று வாங்க வேண்டும்.
போலி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்தாலோ அல்லது அதிக விலைக்கு விற்றாலோ, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- விடுதிகளில் தங்கும் வாடகை கட்டண பட்டியல் வைக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தாசில்தார் கூறினார்.
- கீழக்கரை தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தற்போது சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் தர்காவிற்கு வந்து தங்கி இருந்து நேர்த்திகளை செலுத்தி விட்டு செல்கின்ற னர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில தனியார் தங்கும் விடுதி களில் மற்ற நாட்களை விட பல மடங்கு அதிகம் பணம் வசூல் செய்து வருவதாக கீழக்கரை தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் ஏர்வாடி தர்காவில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதி களுக்கு சென்று அங்குள்ள பதிவு புத்தகத்தை எடுத்து சோதனை செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், அப்போது வாடகை கட்டண பட்டி யலை தங்கும் விடுதிகளில் பயணிகளின் பார்வைக்கு தெரியும் அளவிற்கு வைக்க வேண்டும். முறையான பணம் வாங்கிய பிறகு பயணிகளுக்கு ரசீது வழங்க வேண்டும். கூடுதல் பணம் வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், வெளி யூர் மற்றும் வெளி மாநி லங்களில் இருந்து வரக் கூடிய யாத்ரீகர்கள் தங்கும் விடுதிகளை தூய்மை யாக வைத்திருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் விடுதி யின் உரிமம் ரத்து செய்யப் படும் என்றார்.
- கொள்முதல் செய்த விதைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
- விதை சட்ட விதிகளை மீறுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மொத்த மற்றும் சில்லரை விதை விற்பனையாளர்கள் தரமான சான்று பெற்ற விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வினியோகிக்க வேண்டும்.
வெளி மாநிலங்களில் இருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம், தனியார் ரக உண்மை நிலை விதைக ளுக்கான பதிவு சான்று, பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகலை, உற்பத்தி யாளரிடம் பெற்று ஆய்வி ன்போது காண்பிக்க வேண்டும்.
புதிய ரகங்கள் இந்த பருவத்துக்கு ஏற்றவைதானா என்பதை அறிந்து கொள்முதல் செய்து விற்க வேண்டும்.
பருவத்துக்கு ஏற்பில்லாத ரகங்களை சாகுபடி செய்வதால் நட்டவுடன் விரைவில் கதிர் வருதல், கதிர் வராமல் இருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே கொள்முதல் செய்த விதைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது விதை விற்பனை தடை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவறிக்கை, கொள்முதல் பட்டியல், பதிவு சான்று, விற்பனை பட்டியல் ஆகிய ஆவணங்கள், பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். விதை சட்ட விதிகளை மீறுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரம் விற்பனை உரிமம் ரத்து என்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி தகவல் தெரிவித்துள்ளார்.
- அதிகபட்ச சில்லரை விலை ப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயி களின்பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து ள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி, மக்காச்சோளம், நெல், கம்பு போன்ற பயிர்களு பயிர் செய்து வருகிறது. மேலும் ஏற்க னவே உள்ள பயிர்க ளுக்கு விவசாயிகள் உர ங்கள்இட்டும் பராமரித்து வருகின்றனர். தற்சமயம் இம்மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 1189 மெ.டன், டி.ஏ.பி 939 மெ.டன். பொட்டாஷ் 1421 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 889 மெ,டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 5362 மெ.டன் அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விவசா யிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இரசாயன உரங்களின் இருப்பு மற்றும் அதிகபட்ச சில்லரை விலை ப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயி களின்பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும். உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்ப த்திற்கு மாறாக உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்கிட கட்டாயப்படுத்த கூடாது. மேலும் உர விற்பனை யாளர்கள் உரங்களை விற்பனை செய்யும் போது விற்பனை ரசீது வழங்கிட வேண்டும். மேற்கண்ட அரசு விதிகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது 1985- உரச்சட்டத்தின் அடிப்படையில் கடுமை யான நடவடிக்கை மேற்கொ ள்வதுடன் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்