என் மலர்
நீங்கள் தேடியது "Car Driver"
- வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியபாளையத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் தினேஷ் (வயது 22 ). கார்டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தினேஷ் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல் நல பிரச்சினைகள் குறித்து பில்சுமியேல் கார் டிரைவருடன் உரையாடி உள்ளார்.
- அறுவை சிகிச்சை கடந்த வருடம் வெற்றிகரமாக நடந்தது. தற்போது சுமியேல் நன்றாக இருக்கிறார்.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் சம்பவங்களை பார்க்கும் போதும், படிக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த டிம் லெட்ஸ் என்ற ஊபர் டிரைவர் ஒருவர் தனது காரில் பயணித்த பில்சுமியேல் என்ற பயணிக்கு சிறுநீரக தானம் செய்தது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பில்சுமியேல் ஒருமுறை டயாலிசிஸ் மையத்திற்கு டிம்லெட்ஸ்சின் காரில் சென்றுள்ளார்.
அப்போது தனது உடல் நல பிரச்சினைகள் குறித்து அவர் டிரைவருடன் உரையாடி உள்ளார். அதை கேட்ட டிம்லெட்ஸ் மனமுருகி தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன் வந்துள்ளார்.
அதன்படி அவர் சுமியலுக்கு சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார். இதற்கான அறுவை சிகிச்சை கடந்த வருடம் வெற்றிகரமாக நடந்தது. தற்போது சுமியேல் நன்றாக இருக்கிறார். அவர் டிரைவர் டிம்லெட்சுடன் ஆஸ்பத்திரியில் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது வாழ்க்கை கதையை கூறி இருந்தார். அவரது இந்த பதிவு 1 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
- கார் டிரைவரிடம் நூதனமாக பேசி ரூ. 2.50 லட்சம் கொள்ளை நடந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நகரி காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் அருள் அன்பரசு (வயது 39). இவர் கோவையில் சொந்த மாக கார் வைத்து தொழில் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அங்குள்ள காந்தி நகர் விடுதியில் இருந்து பேசிய வாலிபர் சென்னைக்கு செல்ல வேண்டுமென்று கூறி யுள்ளார். அதன்படி ரூ. 8000 வாடகை பேசி அருள் அன்பரசு அந்த வாலிபரை சென்னை ஆலந்தூரில் இறக்கிவிட்டுள்ளார்.
அப்போது அந்த வாலிபர் தான் காரைக்குடி கழனி வாசலை சேர்ந்த சங்கர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் பேசிய வாடகை பணத்தை விட கூடுதலாக ஆயிரத்தை சங்கர் கொடுத்ததாக தெரிகிறது.
சில நாட்களுக்கு பின் மீண்டும் தொடர்பு கொண்ட சங்கர் 11 பவுன் ரூ. 2 லட்சத்து 62 ஆயிரத்திற்கு ஏலம் வருவதாகவும், அதனை வாங்கிக் கொள்ளு மாறும் அருள் அன்பரசு விடம் கூறியுள்ளார். அவரும் கூடுதல் லாபம் கிடைக்கும் என கருதி மனைவியின் நகைகளை அடகு வைத்து பணத்தை திரட்டி உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருமாறு அருள் அன்பரசு விடம் சங்கர் கூறியுள்ளார். அங்கு 2 பேரும் சந்தித்து பேசினர். அப்போது விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 2-வது மாடி அறையில் ஏலம் நடப்பதாகவும், தான் மட்டும் சென்று நகைகளை வாங்கி வருவதாக பணத்துடன் சங்கர் சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருள் அன்பரசு மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஏலம் நடைபெறவில்லை என தெரியவந்தது.
உடனே கலெக்டர் அலுவலக வளாகத்தில் வந்து பார்த்தபோது சங்கர் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பிச் செல்வது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருள் அன்பரசு 2 லட்சத்து 62 ஆயிரம் திருடு போனது தொடர்பாக சூலக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.
- திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
- வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
உடுமலை :
உடுமலை அடுத்த சேரன் நகரை சேர்ந்த சீரங்கன் என்பவரது மகன் சுதாகர் ( வயது 29), கார் டிரைவர்.
திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிலேயே தனக்குத்தானே தூக்கு போட்டுக் கொண்டு தொங்கியுள்ளார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பணம் கையாடல் செய்ததாக கார் டிரைவருக்கும், அ.தி.மு.க பிரமுகருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
- இந்நிலையில் சுரேஷ் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை எரித்தனர். புகாரின் பேரில் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சுரேஷ்(29). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் அதேபகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான நடராஜன் என்பவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 17-ந்தேதி நடராஜனின் நெய் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாக சுரேசை தனது வீட்டிற்கு வரவழைத்தார். அதன்பிறகு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் சுரேஷ் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை வீட்டில் கொண்டு சேர்த்தனர். அவரது தாயார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவித்து சுரேஷ் உடலை எரித்துவிட்டார். இந்நிலையில் சுரேஷ் அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், இது வெளியில் தெரியாமல் இருக்க அவரது உடலை எரித்து விட்டதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து எரிக்கப்பட்ட சுரேஷ் சாம்பலை போலீசார் எடுத்துச்சென்றனர். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காரை பெருமாநல்லூர் திருப்பூர் ரோட்டில் பூலுவபட்டி நால்ரோடு அருகே நிறுத்தி உள்ளார்.
- வாக்குவாதம் ஏற்பட்டு ஆட்டோ டிரைவர்கள் மணிகண்டனை தாக்கி உள்ளனர்.
அவினாசி:
அவினாசியை அடுத்து வாரணாசி பாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவர் டாக்சி டிரைவராக உள்ளார். தனது காரை பெருமாநல்லூர் திருப்பூர் ரோட்டில் பூலுவபட்டி நால்ரோடு அருகே நிறுத்தி உள்ளார். அப்போது அதே பகுதியில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மணிகண்டனிடம் இந்த பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது .
காரை நிறுத்தக்கூடாது என கூறியதாக தெரிகிறது .அதற்கு மணிகண்டன், பயணிகள் மொபைல் போன் மூலம் புக் செய்து தான் செல்கிறார்கள். எல்லோரையும் ஏற்றி செல்வதில்லை. எதற்காக இங்கு நிறுத்த வேண்டாம் என்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஆட்டோ டிரைவர்கள் மணிகண்டனை தாக்கி உள்ளனர். இதனை கண்டித்தும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவினாசி தாசில்தாரிடம் டாக்சி டிரைவர்கள் மனு கொடுத்தனர்.
- ராஜேஷ் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் ராஜேஷ்(24). இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ராஜேஷை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடன் தொல்லையும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சேலம் சூரமங்கலம் பெருமாம்பாளையம் ரோடு பகுதிைய சேர்ந்தவர் முருகானந்தம், இவர் சொந்த மாக கார்கள் வைத்து வாடகைக்கு இயக்கி வந்தார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் பெருமாம்பாளையம் ரோடு பகுதிைய சேர்ந்தவர் முருகானந்தம் (40), இவர் சொந்த மாக கார்கள் வைத்து வாடகைக்கு இயக்கி வந்தார்.
இந்த நிலையில் கடன் தொல்லையும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த மனைவி மற்றும் குழந்தைகள் கதறி துடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கார் ஒன்று இண்டிகேட்டர் போடாமல் இடப்புறம் திரும்பியதாக கூறப்படுகிறது.
- கார் ஓட்டுநர் காரை விட்டு இறங்காததால் ஆத்திரமடைந்த பைக் ஓட்டுநர் கார் கண்ணாடியை உடைத்தார்.
பெங்களூரு நகரின் தொட்டஹல்லி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று இண்டிகேட்டர் போடாமல் இடப்புறம் திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பாதிப்புக்குள்ளாகி, ஆத்திரத்தில் கார் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கார் ஓட்டுநர் காரை விட்டு இறங்காததால் ஆத்திரமடைந்த அந்த இருசக்கர வாகன ஓட்டி கார் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்த தம்பதியரிடம் ரகளை செய்தார். இது குறித்து கார் ஓட்டுனர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, பெங்களூரு போக்குவரத்து போலீசார், இரு சக்கர வாகன ஓட்டியை கண்டுபிடித்த கைது செய்துள்ளனர்.
இருசக்கர வாகன ஓட்டி ரகளை செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மேலாளர் அனிதா ஆனந்த் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம் செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக உள்ள அனிதா ஆனந்த் என்பவரை அதே அலுவலகத்தில் செயலாட்சியராக உள்ள தேவகி என்பவரின் கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் மேலாளர் அனிதா ஆனந்த் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் பணியாற்றும் செயலாட்சியர் தேவகிக்கு ஒப்பந்த முறையில் கார் ஓட்டும் கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதோடு அலுவலகத்தில் இருந்தபோது தன்னை ஒருமையில் பேசி, "என்னை ஒன்றும் செய்ய முடியாது நான் நினைத்தால் உன்னை கோயம்புத்தூருக்கு பணி மாற்றம் செய்துவிடுவேன்" என மிரட்டினார்.
மேலும், " பெண் என்றும் பாராமல் தன்னை அசிங்கமாக பேசியது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே கோகுல்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து வேப்பேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி கோகுல்ராஜ் மீது ஆபாசமாக பேசியது, பெண்ண அவமதிப்பு செய்வது, மிரட்டல், பெண் வன்கொடுமை என 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே சாதாரண ஒப்பந்த கார் ஓட்டுநர் அரசு ஊழியரை மிரட்டும் அளவிற்கு அவருக்கு தைரியம் கொடுத்தது யார் என சக அரசு ஊழியர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் செயலாட்சியர் தேவகியும், கைது செய்யப்பட்ட கோகுல்ராஜும் ஜூஸ் குடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
இதைதொடர்ந்து, ஒப்பந்த கார் ஓட்டுநர் அரசு பணியில் மேலாளராக உள்ளவரை மிரட்டுவதற்கு அதே அலுவலகத்தில் செயலாட்சியராக உள்ள தேவகி காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
- அசாம் முன்னாள் முதல்வரின் மகள், தனது கார் ஓட்டுனரை செருப்பால் அடிக்கும் வீடியோ வைரல்
- அதிக பாதுகாப்பு நிறைந்த எம்.எல்.ஏ .ஹாஸ்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அசாம் மாநில முன்னாள் முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தாவின் மகள் காஷ்யப், தனது கார் ஓட்டுநரை செருப்பால் வீடியோ வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், கார் ஓட்டுநர் மண்டியிட்டு அமர்ந்துள்ளார். அப்போது அவரை காஷ்யப், கடுமையாக திட்டி செருப்பால் அடிக்கிறார்.
அசாம் மாநிலத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த எம்.எல்.ஏ .ஹாஸ்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய முன்னாள் முதல்வரின் மகள், "எனது ஓட்டுநர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை பற்றி தவறாக பேசி வந்தான். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. இப்போது குடித்துவிட்டு என் வீடு கதவை தட்டினான்" என்று தெரிவித்தார்.
பிரபுல்ல குமார் மஹந்தா, 1985 முதல் 1990 மற்றும் 1996 முதல் 2001 வரையில் 2 முறை அசாம் முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மின் வாரிய அதிகாரி தங்கை வீட்டில் 12 பவுன் நகை திருடு போனது.
- இந்த சம்பவம் தொடர்பாக மதுரை கார் டிரைவரை போலீசார் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகப்பாண்டியன் மின்வாரிய அதிகாரி. இவரது தங்கை செல்வநயகி. இவர் மதுரை பரசுராமன்பட்டியை சேர்ந்த பாலாஜி என்பவரது காரில் வீட்டுக்கு பொருட்களை ஏற்றி சென்றுள்ளார். வீட்டில் சென்று பார்த்தபோது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகையை காணவில்லை.
இதுபற்றி திருத்தங்கல் போலீசில் சண்முகப்பாண்டியன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்தான் நகையை திருடியது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.