என் மலர்
நீங்கள் தேடியது "Cash"
- ரூ. 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும், 14 லட்சம் ரொக்கமும் தப்பின.
- மர்ம நபர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து வங்கிக்குள் புகுந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது.
இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கனமழை பெய்து கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை.
இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து வங்கிக்குள் புகுந்தனர்.
இரண்டு பூட்டுகளை உடைத்து லாக்கரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது வங்கியின் காவலாளி முத்துகண்னு வந்தார்.
இதை பார்த்த கொள்ளையர்கள் முத்துகண்ணுவை தாக்கிவி ட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் வங்கியில் இருந்த சுமார் ரூ. 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும் 14 லட்சம் ரொக்கமும் தப்பின.
தகவலறிந்து பொதுமக்கள் வங்கியில் முன்பு திரண்டனர்.
தகவல் அறிந்து வந்த கூட்டுறவு வங்கி தலைவர் சோமசுந்தரம், செயலாளர் அசோக் ஆகியோர் வங்கியில் கொள்ளை போகவில்லை எனவும் நகைகள், பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்தனர்
இதனால் நிம்மதியடடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கேல்சிலிண்டரை விட்டு சென்று உள்ளனர்.
மேலும் சி.சி.டிஒயர்களை கட் செய்து ஹர்டுடிஸ்க் எடுத்து சென்று உள்ளனர்.
இது பற்றிய புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- சூதாட பயன்படுத்திய சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ .52 ஆயிரத்து100 ஐ கைப்பற்றினர்.
- வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள மேட்டுக்கடை டாஸ்மாக் அருகே காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது காசு வைத்து சூதாடி கொண்டிருந்த ஆறுமுகம் (வயது 56), ராமசாமி (59), பாலகிருஷ்ணன் (61), சதீஷ்குமார்(34), மணிகண்டன் (44), சரவணன் (45),சிவக்குமார் (46), காங்குசாமி (67), வேலுசாமி ,மற்றொரு மணிகண்டன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ .52 ஆயிரத்து100 ஐ கைப்பற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 10 பவுன் நகைகள் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி (வயது 23). இவருக்கும், சாப்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (27) என்ப வருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது ஜெகதீஸ்வரியின் பெற்றோர் 25 பவுன் நகைகள், ரூ. 2½ லட்சம் ரொக்கப்பணம் வரதட்ச ணையாக கொடுத்துள்ளனர். செல்வகுமார் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் அவர் தனது மனைவியுடன் சென்னையில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் அவர் பணி காரணமாக அமெரிக்கா செல்ல இருந்தார். ஆகவே அவர் தனது மனைவியை சாப்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, அமெரிக்கா சென்று விட்டார். மாமனார் மற்றும் மாமியாருடன் ஜெகதீஸ்வரி வசித்து வந்தார்.
அப்போது அவரிடம் ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 10 பவுன் நகைகள் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெகதீஸ்வரி கணவர் வீட்டில் இருந்து பேரையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனைத்தொடர்ந்து செல்வகுமார் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட தொல்லை தந்ததாக தனது கணவர் குடும்பத்தினர் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் ஜெகதீஸ்வரி புகார் செய்தார்.
அதன் பேரில் செல்வகுமார், அவரது தாய் மற்றும் தந்தை ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டு புடவைகள் ஆகியவை திருட்டு.
- நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
நீடாமங்கலம்:
திருவிடைமருதூர் உட்கோட்டம், நாச்சியார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட பழவாத்தான்கட்டளை, பாரதி நகர் தெற்கு, நேதாஜி தெருவை சேர்ந்தவர் முகில் (வயது 38).
இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு மாடியில் தூங்க சென்றுள்ளார்.
இந்நிலையில், காலை வீட்டின் கீழ் பகுதியில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டிருந்து.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டு புடவைகள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் நகை-பணம் திருட்டு போனது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுலோன் காலனியை சேர்ந்தவர் ராசய்யா (வயது 73). குடும்பத்துடன் மதுரைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் வெளி கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ராசய்யா உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி.
- 2022 -23-ம் ஆண்டிற்கு அம்ரூத் 2.0 குடிநீர் திட்டத்தில் ரூ.14.82 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது.
பாபநாசம்:
பாபநாசம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மன்ற கூட்ட அரங்கத்தில் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், துணைத் தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி, முத்துமேரி, ஜாபர் அலி, புஷ்பா, கீர்த்தி வாசன், சமீரா பர்வீன், பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கெஜலட்சுமி, கோட்டையம்மாள், துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
பேரூராட்சி தலைவர் செயல் அதிகாரி ஒவ்வொரு பேரூராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கைகள் முழுவதும் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 2023 -ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட உத்தரவிட்ட முதல்- அமைச்சருக்கு மன்றம் நன்றியை செலுத்துகிறது.
பாபநாசம் பேரூராட்சியில் 2022 - 23 ஆம் ஆண்டு கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்வது எனவும், பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தகுதியான தெருவோர வியாபாரிகளை கணக்கெடுப்பு செய்து அடையாள அட்டை வழங்குவது எனவும், பாபநாசம் பேரூராட்சிக்கு 2022 - 23 ஆம் ஆண்டிற்கு அம்ரூத் 2.0 குடிநீர் திட்டத்தில் ரூ.14.82 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது எனவும், உள்பட பேரூராட்சி வார்டுகளில் கோரிக்கை களை நிறைவேற்றுவது எனவும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.
- ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.
- திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.
சேலம்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.
இவருடன் பயணித்த, மற்றொரு பயணி 5 ரோடு பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து ரமேஷிடம் பணம் பறித்த மர்ம நபரை தேடி வருகிறார்.
- வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிராமத்தில் கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி விவசாயி வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.
- பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிரா மத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 42). கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அந்த பொருளை எடுக்காமல் விட்டால், உங்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுமெனவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.
இதனால் பதறிப்போன பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.
இது குறித்து பழனி யம்மாள் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தியதில் புதையல் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றியது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதி செல்வராஜ் (41) என்பவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ேபாலீசார், அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.
- வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
- ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் காணாதது கண்டு திடுக்கிட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஏ.வி.பி.அழகம்மாள் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.
இவரது மனைவி அனிதாராஜ் (வயது 31).
சம்பவத்தன்று அனிதாராஜ் வீட்டை பூட்டி விட்டு புதுக்கோட்டைக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்ததில் பீரோ உடைக்கப்பட்டு 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் காணாதது கண்டு திடுக்கிட்டார்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் சீலநாயக்கன்பட்டியில் திடீரென அங்கு வந்தபவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுப்பட்டார்.
- அவரிடமிருந்து ரூ.5000 பணத்தை பறித்துக் கொண்ட அவர், பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டம், பனம ரத்துப்பட்டி அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). கொத்தனார். இவர் நேற்று சீலநாயக்கன்பட்டி பைபாஸ் இரட்டைக் கோவில் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் மூர்த்தியை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கினார்.
பின்னர் அவரிடமிருந்து ரூ.5000 பணத்தை பறித்துக் கொண்ட அவர், பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது, சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த நிர்மல் தாஸ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
- வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார்.
- ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பூக்கார 1-ம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன் (வயது 36). தனியார் நிதி நிறுவன அதிபர்.
இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.
பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதேபோல் அதே பகுதியில் உள்ள மகேஸ்வரி என்பவரது வீட்டிலும் 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
மேலும் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- காருக்குள் கட்டுகட்டாக பணம் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைத்தனர்.
- உதவியாளர் குமார் கைது செய்த போலீசார் உதவி செய்ய பொறியாளர் ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (42). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் சொத்து வாங்கியுள்ளார். அதற்கான பத்திரப்பதிவுகளை, திருப்பூர் நெருப்பெரிச்சரில் பத்திரப்பதிவு ஜாயின்ட்-2 அலுவலகத்தில் மேற்கொண்டார். கட்டடத்தின் மதிப்பீட்டு அறிக்கை அளிக்க, களப்பணிக்காக, மதுரையில் உள்ள பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி., அலுவலகத்துக்கு பரிந்துரைத்தனர். மதுரையில் உள்ள உதவி செயற்பொறியாளர் (கட்டடம்) ராமமூர்த்தி, திருப்பூர் வந்து அக்கட்டிடத்தை கள ஆய்வு செய்தார்.
இதற்கான மதிப்பீட்டு அறிக்கையை அளிக்காமல் காலம் கடத்தியதோடு, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு கோபாலகிருஷ்ணன் கொடுக்க முன் வராததால் பின்னர் ரூ.75 ஆயிரம் ரூபாயாக குறைத்திருக்கிறார்.
இருந்த போதிலும் பணத்தை கொடுக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன் குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் லஞ்ச பணத்தை வாங்குவதற்காக, உதவி செயற்பொறியாளரின் உதவியாளர் குமார், (45) என்பவர் வந்துள்ளார். அவரிடம் கோபாலகிருஷ்ணன் பணத்தை வழங்கியபோது, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார் உதவியாளர் குமாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரது காரில் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் கட்டுகட்டாக பணம் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைத்தனர்.
அந்த பணம் குறித்து கேட்டபோது அதற்கான பதில் அவரிடம் இல்லை. இதனையடுத்து காரில் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ. 6 லட்சத்து, 48 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் உதவியாளர் குமார் கைது செய்த போலீசார் உதவி செய்ய பொறியாளர் ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.