search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Caste wise census"

    • தனிப்பெரும் அடையாளங்களில் முதன்மையானது 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகும்.
    • 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 1980-ம் ஆண்டு முதல் 68சதவீத இட ஒதுக்கீடும், 1989-ம் ஆண்டு முதல் 69சதவீத இட ஒதுக்கீடும் நடைமுறையில் உள்ளன. இதற்கிடையே, 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தினேஷ் என்பவர் புதிய வழக்கை தொடர்ந்திருப்பதால் இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    மாராத்தா இட ஒதுக்கீடு செல்லாது என்று 2021-ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் மீதான சீராய்வு மனு கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப் பட்டு விட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு இம்மாதம் 8-ந்தேதி கோடை விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

    தமிழ்நாட்டில் தனிப்பெரும் அடையாளங்களில் முதன்மையானது 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகும். அதைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. அந்த கடமையை நிறைவேற்றும் வகையில், இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டின் சமூகநீதியை காப்பதில் திமுக அரசின் கையாலாகாத தனத்தையே அமைச்சரின் கருத்து காட்டுகிறது.
    • திறனற்ற திமுக அரசு, மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போகாத ஊருக்கு வழிகாட்டக் கூடாது.

    பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    சாதிவாரி விவரங்கள் வேண்டும் என்று என்று பாட்டாளி மக்கள் கட்சி விரும்பினால், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தும்படி கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவை பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் இரகுபதி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் சமூகநீதியை காப்பதில் திமுக அரசின் கையாலாகாத தனத்தையே அமைச்சரின் கருத்து காட்டுகிறது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இதற்காக 2008-ஆம் ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களவை உறுப்பினர்களின் கையெழுத்துகளை வாங்கி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழுவினர் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீலிடம் ஒப்படைத்தது, மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை ஒப்புக் கொள்ள வைத்தது போன்ற வரலாறுகள் எல்லாம் அந்த ஆட்சியில் திமுக சார்பில் மத்திய உள்துறை இணை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்த இரகுபதி போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?

    தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. அதற்காக மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்த வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் திமுக ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்? பதவி விலகி விடலாமே? நாடாளுமன்ற மக்களவையில் திமுக அணிக்கு 39 உறுப்பினர்கள் எதற்கு ? அவர்களும் பதவி விலகி விடலாமே? அதிகாரத்தை சுவைப்பதற்கு மட்டும் தான் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்களா?

    தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி கடமையை செய்ய திறனற்ற திமுக அரசு, மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போகாத ஊருக்கு வழிகாட்டக் கூடாது.

    பிகார், கர்நாடகம், ஒதிஷா, ஆந்திரம், தெலுங்கானா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என்று தட்டிக்கழிக்கவில்லை. அந்த அரசுகளே 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தியுள்ளன. அதே வழியில் பயணிக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம், சமூகநீதி வழங்க மாட்டோம் என்பது தான் தமிழக அரசின் கொள்கை என்றால் அதை வெளிப்படையாக அறிவித்து விடுங்கள்.

    தமிழ்நாட்டின் சட்ட அமைச்சராக இருக்கும் திரு. இரகுபதி அவர்கள் தமக்குத் தெரிந்த சட்ட அறிவை பயன்படுத்தி, மனசாட்சிக்கு அஞ்சி தமிழக அரசுக்கு சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதை விடுத்து திமுக தலைமை சொல்லிக் கொடுத்ததையே கிளிப்பிள்ளை போல மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

    • ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
    • "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது"

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது.

    இந்நிலையில், பீகார் மற்றும் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் சம்பாய் சோரன், "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கையை விரைந்து தயாரித்து மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்குமாறு பணியாளர் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாநில மக்கள்தொகையில் 63 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒருவரை சிறியவர் மற்றும் பெரியவர் எனக் கருதும் இந்த மனநிலையை மாற்றுவது முக்கியம்.
    • நாடு முழுவதும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'பாரத் ஜோடோ நீதி யாத்திரை'யின்போது அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எல்லோரது மனதிலும் ஒரு கேள்வி எழுகிறது. பிரதமர் மோடி தன்னை பாராளுமன்றத்தில் 'ஓபிசி' என்று கூறுகிறார். பின்னர் நாட்டில் பணக்காரர்கள் மற்றும் ஏழை 2 ஜாதிகள் மட்டுமே உள்ளன என்று சொல்லத் தொடங்கினார்.

    எனவே பிரதமர் முதலில் தெளிவான முடிவு செய்ய வேண்டும். நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

    ஒருவரை சிறியவர் மற்றும் பெரியவர் எனக் கருதும் இந்த மனநிலையை மாற்றுவது முக்கியம்.

    ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினராக இருந்தாலும் அவர்களை கணக்கிடாமல் அவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூகநீதியை வழங்க முடியாது.

    நாடு முழுவதும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு பிரதமர் ஏன் தயங்குகிறார்? இவ்வாறு கூறினார்.

    • சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கமாட்டார்கள்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும், கட்டமைப்பும் தமிழக அரசுக்கே இருக்கும் நிலையில், தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் என்று அறிவிக்காமல், மத்திய அரசு இந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரத மருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது தாம் விளையாட வேண்டிய பந்தை, பிரதமர் பக்கம் திருப்பி விடும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவும் அல்ல.

    இது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது. சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் மீண்டும், மீண்டும் கூறிக் கொள்வது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு, அதற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்பதைத் தான். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் கர்நாடகம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உள்ளன. எனவே, இனியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும் என்று அறிவித்து, செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம், குறித்த கருத்தரங்கம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் நவீன் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார்.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட ஓ.பி.சி. பிரிவு சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும், முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர் மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் டியூக் துரைராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட ஓ.பி.சி தலைவர் ஜான் கென்னடி, மாநகர் மாவட்ட ஓ.பி.சி. துணை தலைவர் ரிச்சர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் நவீன் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.சி. பிரிவு பொதுச்செயலாளர்கள் மோகன், குச்சூரி, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் நித்யபிரியா ரவி, மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் தனசிங் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினர்.
    • பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    மருத்துவர் சமுதாயத்தின் டீம் என்ற அமைப்பின் 10-வது ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட ஐம்பெரும் விழா வண்ணார்பேட்டையில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர் ரமேஷ் பாபு, அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் நமச்சிவாயம், செயலாளர் செல்வ சூடாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அமைப்பின் முன்னாள் பொருளாளர் மாயாண்டி உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாயாண்டி உருவப்படத்தை திறந்து வைத்து பேசினர். இதனைத் தொடர்ந்து மருத்துவ சமுதாயத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளாக தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கும் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

    தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு, கல்வி வேலைவாய்ப்பில் மருத்துவ சமுதாய மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் சித்த மருத்துவ படிப்பில் அந்த சமுதாயத்திற்கு சிறப்பு ஒதுக்கீடு வேண்டும். தியாகி விஸ்வநாததாசுக்கு சென்னை மற்றும் நெல்லையில் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×