என் மலர்
நீங்கள் தேடியது "cbi"
- சிபிஐ இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பணிக்காலம் மே 25 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
- கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தை பாதுகாக்கும் பணியில் பிரவீன் சூட் ஈடுபட்டு வருவதாக டிகே சிவகுமார் குற்றம்சாட்டி இருந்தார்.
கர்நாடக டிஜிபியாக இருந்த பிரவீன் சூட், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-இன் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய சிபிஐ இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பணிக்காலம் மே 25 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து பிரவீன் சூட் பதவியேற்க இருக்கிறார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே வழக்கு தொடர்ந்து வருவதாகவும், கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தை பாதுகாக்கும் பணியில் பிரவீன் சூட் ஈடுபட்டு வருவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவவர் டிகே சிவகுமார் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தியாவில் சிபிஐ இயக்குனரை பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவை எதிர்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய குழு நியமனம் செய்து வருகிறது. சிபிஐ இயக்குனரின் பதவிக்காலம், இரண்டு ஆண்டுகள் ஆகும். இதனை அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
- ரெயில்வே பணி நியமனத்தில் நடந்த இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
- ராஷ்டிரிய ஜனதாதள எம்.எல்.ஏ. கிரண்தேவி, மேல்சபை பிரேம்சந்த் குப்தா ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
புதுடெல்லி:
ராஷ்டிரிய ஜனதாதள (ஆர்.ஜே.டி.) கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார்.
அப்போது ரெயில்வேயில் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதாகவும், அவர்களிடம் இருந்து அதற்கு பிரதிபலனாக லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் தள்ளுபடி விலையில் நிலங்களை பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
ரெயில்வே பணி நியமனத்தில் நடந்த இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. லல்லு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக அவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.1 கோடி பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி இருந்தது. தேஜஸ்வி யாதவ், மிசா பாரதியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில் ரெயில்வே பணிக்கான நிலம் பெற்ற ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்கள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.
பீகார், அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் 9 இடங்களில் இந்த அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.
ராஷ்டிரிய ஜனதாதள எம்.எல்.ஏ. கிரண்தேவி, மேல்சபை பிரேம்சந்த் குப்தா ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
- விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ அலுவலா்கள் பிடித்து விசாரணை நடத்தினா்.
- தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள பூண்டி தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் விக்டா் ஜேம்ஸ் ராஜா (வயது 35). இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் குறித்து ஆராய்ச்சி படிப்பு (பி.எச்.டி) படித்து வந்தார்.
இவர் சிறுமிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்தது சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.
இதனை தொடர்ந்து விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ அலுவலா்கள் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் விக்டா் ஜேம்ஸ் ராஜா பல்வேறு நாடுகளில் உள்ள நண்பா்களுடன் இணைந்து சிறுமிகள் பாலியல் படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்தாா். இதை இண்டா்போல் அமைப்பினரின் தரவுகளும் உறுதிப்படுத்தின. பாதிக்கப்பட்ட சிறுமிகளில் பெரும்பாலானவா்கள் 12 வயதுக்கு உள்பட்டவா்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, விக்டா் ஜேம்ஸ் ராஜா மீது போக்சோ, கூட்டு சதி, தகவல் தொழில்நுட்ப சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ அலுவலா்கள் வழக்குப்பதிவு செய்து, தஞ்சாவூா் போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜா்படுத்தினா். பின்னா், விக்டா் ஜேம்ஸ் ராஜா தஞ்சாவூா் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக, தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தஞ்சாவூரில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ அலுவலா்கள் தாக்கல் செய்தனா்.
- ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர்.
- மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. பாலசோர் மாவட்டம் பஹனகா ரெயில் நிலையம் அருகே மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லூப் லைனில் திடீரென சென்று சரக்கு ரெயில் மீது மோத, எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள மற்றொரு மெயின் லைனில் விழுந்துள்ளன. அந்த சமயத்தில் வந்த பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரெயில், தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.
ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். 1175 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. நிர்வாகத்திற்கு கிடைத்த தகவல்கள் மற்றும் பிற கேள்விகளையும் கருத்தில் கொண்டு, இந்த விபத்து தொடர்பாக மேல் விசாரணை செய்வதற்காக, முழு வழக்கையும் விசாரிக்கும்படி சிபிஐக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்திருப்பதாக ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு தி.மு.க. அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- செந்தில் பாலாஜி குணமாகி வர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது.
சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு தி.மு.க. அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல் செயல்படுகின்றன.
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கு எடுத்துக்காட்டு. செந்தில் பாலாஜி குணமாகி வர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற வேலைகளை மத்திய அரசு செய்யும், இது எதிர்பார்த்த ஒன்றுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
- இந்நிலையில், சி.பி.ஐ. விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.
சென்னை:
தமிழ்நாட்டில் சி.பி.ஐ. அமைப்பு விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி மாநிலத்திற்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை தமிழ்நாடு அரசு இன்று ரத்து செய்துள்ளது. சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இதன்மூலம் இனி தமிழ்நாட்டில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும். முன் அனுமதி பெற்ற பின்னே தமிழ்நாட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த முடியும்.
ஏற்கனவே மேற்கு வங்காளம், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் சிபிஐ விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒட்டுமொத்த தமிழகமே பா.ஜ.க.வை எதிர்க்கத்தான் செய்யும்.
- தமிழ்நாட்டின் பெயரை கவர்னர் மாற்ற நினைக்கிறார்.
மயிலாடுதுறை :
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறையில் நேற்று நடந்தது.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழியும், மாற்றுத்திறனாளிகள் 60 பேருக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் 300 பெண்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கினார்.
முன்னதாக அவர் பேசியதாவது:-
நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். இதை பொறுக்க முடியாத மத்திய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தி வருகிறது. நாங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தையே சந்தித்தவர்கள். இதற்கு அச்சப்பட மாட்டோம்.
அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து நமது முதல்-அமைச்சர் மத்திய அரசை எதிர்ப்பதால் இதுபோன்ற அழுத்தத்தை மோடி அரசு கொடுக்கிறது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனக்கு கொடுத்த வேலையை விட்டுவிட்டு, கொடுக்காத வேலைகளையும் செய்து வருகிறார். தமிழ்நாட்டின் பெயரை கவர்னர் மாற்ற நினைக்கிறார். கவர்னருக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தவர் தான் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மத்திய அரசு அ.தி.மு.க.வை தங்கள் அடிமை கட்சியாக வைத்துள்ளது. தி.மு.க.வையும் அடிமைப்படுத்த நினைத்தால் அது நடக்காது. என்னை சின்னவர் என்று பட்டப்பெயர் வைத்து அழைக்காதீர்கள். நான் உண்மையாகவே அரசியல் அனுபவம் உள்ளிட்ட அனைத்திலும் சின்னவன்தான். அந்த பட்டப்பெயரை தவிர்த்து விட்டு கலைஞர் வைத்த அழகான உதயநிதி என்ற பெயரை கூறி அழைத்தாலே போதும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் மெய்யநாதன், ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிவடைந்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ.க., தி.மு.க.வை தொடர்ந்து எதிர்ப்பது தி.மு.க. நல்ல பாதையில் போய்க் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். ஒட்டுமொத்த தமிழகமே பா.ஜ.க.வை எதிர்க்கத்தான் செய்யும். எந்த காலத்திலும் பா.ஜ.க.வை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
அமலாக்கத்துறை சோதனையை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு ஜாலியாக போய்க் கொண்டிருப்பதாக பதில் அளித்தார்.
- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
- அரசியல் தலையீடு இன்றி விசாரணை நடக்க இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சி காலத்தில் எப்போதும் இல்லாத அளவில் நில மோசடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரெயின்போ நகரில் உள்ள ரூ.50 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு தொடர்பாக சார்பு பதிவாளர் சிவசாமி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இதேபோல் காரைக்காலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் நில மோசடியில் திருநள்ளாறு சார்பு பதிவாளர் உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு ள்ளனர்.
ஆனால் இதற்குப் பின்புலமாக இருக்கும் அரசியல் பிரமுகர்கள் அதிகார மையத்தில் உள்ளவர்கள் யாரும் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சியின் கீழ் ஒட்டு மொத்தமாக நிலப்பதிவேடு மற்றும் பத்திர பதிவுத்துறை லஞ்சம் ஊழல் மோசடிகளின் கூடாரமாக மாறிவிட்டது. சில இடங்களில் போலீஸ்துறையும் நில மோசடிக்கு உடந்தையாக உள்ளது தெரிய வருகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் பெரும்பாலோர் நில வணிகர்கள் என்பதனால் மோசடிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது.
எனவே காமாட்சி அம்மன் கோவில் இடத்தை அபகரித்த அனைவரையும் விசாரணை வளை யத்திற்குள் கொண்டு வந்து எந்தவித அரசியல் தலையீடு இன்றி விசாரணை நடக்க இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், 2011 முதல் 2023 வரையில் பத்திர பதிவுத்துறையில் நடந்துள்ள மோசடிகள், நடவடிக்கைகள் குறித்தும், விடுதலைக்குப் பிறகு மாநில அரசின் வசம் இருந்த மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள், தற்போது உள்ள நிலங்கள் குறித்து ஆளும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்படுவதை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாம் இங்கு குடும்பமாக இருப்பதை கேட்டால் பிரதமருக்கு கோபம் வந்துவிடும்.
- இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடே தி.மு.க.வின் கட்சிதான் தமிழ்நாடே கலைஞரின் குடும்பம்தான்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சகோதரர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி இல்லத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலையில் நடைபெற்றது.
மணமக்கள் சாரங்க ராஜன்-கீர்த்தனா ஆகியோரது திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
வழக்கமாக தொடர்ந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற காரணத்தால், பெரும்பாலும் குடும்பத்தாருடன் அதிக நேரம் எங்களை போன்றவர்கள் செலவிட முடியாது என்கிற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் இந்த திருமணத்தின் மூலமாக அந்த ஆதங்கம் குறைந்திருக்கும் என்று நான் கருதுகிறேன். இருந்தாலும், எல்லோரும் சொல்வது போன்று இது கழக குடும்பம்.
தி.மு.க.வை பேரறிஞர் அண்ணா துவக்கிய காலத்திலேயே தம்பி என்றுதான் எல்லோரையும் அழைத்து ஒரு குடும்ப பாச உணர்வோடு பேசுவார்.
அதேபோன்று கலைஞரும் அனைவரையும் உடன் பிறப்பே என்று அழைத்து ஒரு குடும்ப பாச உணர்வோடு நம்மை எல்லாம் உருவாக்கி இருக்கிறார்.
ஆகவே என்னை பொறுத்தவரை இதுவும் ஒரு கழக குடும்பம் என்ற வகையில் இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து நானும் வாழ்த்துவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
எனது மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தியின் சிறப்புக்களை பெருமையாக இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். நான் ஒரு பட்டியலோடு வந்திருக்கிறேன்.
அவர் ஒரு பன்முக திறமையாளராக, பன்முகம் கொண்டவராக இருக்க கூடியவர். குழந்தைகள் நல மருத்துவராக இ.எஸ்.ஐ. மருத்துவமனை இயக்குனராக, தமிழ் பற்று கொண்டவராக, முற்போக்கு சிந்தனை கொண்டவராக, பட்டிமன்ற பேச்சாளராக பன்முகம் கொண்டவராக டாக்டராக மூர்த்தி திகழ்கிறார்.
ராஜமூர்த்தியை பொறுத்தவரை கம்பரை பற்றியும் பேசுவார். வள்ளலாரை பற்றியும் பேசுவார். அந்த அளவுக்கு ஆற்றல் பெற்றவர்.
இன்றைக்கு வள்ளலாரை பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். அப்படி அல்ல புலம்பிக் கொண்டிருக்கிறார். உளறிக்கொண்டு இருக்கிறார். அவர் யார் என்பது பற்றி நான் பேச விரும்பவில்லை. அது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அவருக்கெல்லாம் நேர்மாறாக வள்ளலாரை பற்றி ஆழ்ந்த பற்றுதலையும், புரிதலையும் கொண்டு பேசக்கூடியவர், அதைப்பற்றி கட்டுரையாக எழுதக் கூடியவர், அந்த அளவுக்கு ஆற்றல் கொண்டவராக விளங்கிக் கொண்டிருக்க கூடியவர் தான் டாக்டர் ராஜமூர்த்தி.
இவரது ஆற்றலை பற்றி தலைவர் கலைஞர் வள்ளல் நேசன் என்று ராஜமூர்த்திக்கு பாராட்டு பத்திரம் தந்திருக்கிறார்.
அப்படிப்பட்டவரின் மகன் திருமணத்தில் பங்கேற்று உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். இன்று நாடு போய்க் கொண்டிருக்கிற நிலை உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரையிலே ஒரு நல்லாட்சி தருவதற்கு நீங்கள் எந்த அளவிற்கு துணை நின்றீர்களோ, அந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக இன்றைக்கு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் வழங்கிய உறுதி மொழிகளை வாக்குறுதிகளை எந்த அளவுக்கு தொடர்ந்து நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். அதுபோல் இந்திய நாட்டிற்கு ஒரு ஆட்சி தேவை.
காரணம் இன்றைக்கு ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பி.ஜே.பி. ஆட்சி. அந்த பி.ஜே.பி. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முன்வரவில்லை. அதற்கு நேர்மாறாக மக்கள் விரோத போக்கோடு மதத்தை சனாதனத்தை இன்று மக்களிடத்தில் திணித்து ஒரு சர்வாதிகார ஆட்சியை இன்றைக்கு நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் கூட ஒரு சட்டத்தை கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். பொது சிவில் சட்டம்.
இந்த பொது சிவில் சட்டம் என்பது நாட்டில் ஏற்கனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என்று இருக்கிறது. அதை நீக்கி விட்டு பொது சிவில் சட்டமாக கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை, அந்த ஆட்சியை எதிர்க்க கூடியவர்களை எல்லாம் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்திலே மக்களுக்கு துன்பங்களை, கொடுமைகளை கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்கிற தீய சக்தியோடு இன்றைக்கு அவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஏற்கனவே அரசியல்வாதிகளில், அவர்களை எதிர்க்க கூடியவர்களை எல்லாம் சி.பி.ஐ., ஐ.டி., இ.டி. என்ற அந்த துறைகளை எல்லாம் வைத்து மிரட்டி கொண்டிருக்கிற ஒரு ஆட்சி இன்றைக்கு ஒரு ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது.
நாம் இங்கு குடும்பமாக இருப்பதை கேட்டால் பிரதமருக்கு கோபம் வந்துவிடும். ஏனென்றால் மத்திய பிரதேசத்தில் போய் பிரதமர் என்ன பேசி இருக்கிறார் என்றால், குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சியில் இருக்கிறார்கள். கட்சி நடத்துகிறார்கள் என்று விமர்சனம் செய்து பேசி இருக்கிறார்.
இதுபற்றி இதே மண்டபத்தில் நான் பேசும் போது கூறி இருக்கிறேன். இது குடும்ப கட்சிதான், அண்ணாவால் உருவாக்கப்பட்ட கலைஞரால் வளர்க்கப்பட்ட இந்த கட்சி குடும்ப கட்சிதான்.
இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடே தி.மு.க.வின் கட்சிதான் தமிழ்நாடே கலைஞரின் குடும்பம்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.
- குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான சில ஆவணங்கள் சிக்கின.
- 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி அனுமதி வழங்கியது.
சென்னை:
சென்னை செங்குன்றம் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான சில ஆவணங்கள் சிக்கின. அதில், அப்போதைய அமைச்சர்கள், சென்னை போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் இருந்தன.
இதுகுறித்து, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து, குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்று 6 பேரை முதலில் கைது செய்தது.
இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை முதலில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்பட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி அனுமதி வழங்கியது.
இதன்படி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறைபாடுகள் இருப்பதாக கூறி திருப்பிக்கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. அதிகாரி ஆஜராகி, "அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு இன்னும் அனுமதி தரவில்லை. அதனால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ஆகஸ்டு 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி முதல் நேற்று வரை 11 முறை வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பாரதிய ஜனதா அரசு, நீண்ட நெடுங்கால பாரம்பரியமிக்க அமைப்புகளான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது.
- பாரதிய ஜனதா அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் உள்நோக்கம் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது ஓபன் சீக்ரெட் ஆகும். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராகவும், டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற மாநிலங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.
பாரதிய ஜனதா அரசு, நீண்ட நெடுங்கால பாரம்பரியமிக்க அமைப்புகளான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது. பாரதிய ஜனதா அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இவ்வாறு சோதனை நடத்தப்படவில்லை. இந்த சோதனைகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
தமிழக கவர்னர் ரவி ஏராளமான கோப்புகளில் கையெழுத்து போடாமல் உள்ளார். தி.மு.க., மிசா உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளை கண்ட கட்சியாகும். எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது. தி.மு.க. எதனை கண்டும் அஞ்சப்போவதில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியாக இதை அணுகுவார்கள்.
இந்த சோதனைகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநரும், மத்திய அரசும் தேர்தல் பிரசாரத்தை தி.மு.க.விற்கான தேர்தல் பிரசாரமாக செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.