search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cell phones"

    • இந்தியாவில் 6 மடங்கு அதிகமாக செல்போன்களை உற்பத்தி செய்கிறோம்.
    • சர்வதேச தொலைத்தொடர்பு கண்காட்சியை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார்.

    புதுடெல்லி:

    டெல்லி பாரத் மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் சபையையும் அவர் தொடங்கி வைத்து பார்த்தார்.

    இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 8-வது பதிப்பையும் மோடி தொடங்கி வைத்தார். இதில் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3 ஆயிரம் தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்றனர்.

    2014-ல் இந்தியாவில் 2 செல்போன் தயாரிப்பு யூனிட்டுகள் மட்டுமே இருந்தன. இன்று 200-க்கும் அதிகமானவை உள்ளன.

    முன்பெல்லாம் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு போன்களை இறக்குமதி செய்து வந்த நாம் இன்று முன்பைவிட 6 மடங்கு அதிகமாக செல்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறோம்.

    மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. மேட்-இன்-இந்தியா போன்களை உலகிற்கு வழங்குவதில் ஈடுபட்டுள்ளோம்.


    பூமிக்கும், சந்திரனுக்கும் இடையேயான தூரத்தை விட 8 மடங்கு அதிகமான ஆப்டிக் பைபரை இந்தியா அமைத்தது. உலகின் 2-வது பெரிய 5ஜி தொலைத்தொடர்பு சந்தையாக இந்தியா மாறியுள்ளது.

    டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை வெற்றிகரமாக உருவாக்குவதில் இந்தியா தனது அனுபவத்தை உலகின் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது

    டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உலகளாவிய கட்டமைப்பின் பொருள், உலகளாவிய வழிகாட்டுதல்கள், உலகளாவிய நிறுவனங்கள் உலகளாவிய நிர்வாகத்திற்கான முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

    உலக அளவில் தொழில்நுட்பத்திற்காக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை. அனைத்து டிஜிட்டல் கருவிகளும் மற்றும் இன்று கிடைக்கும் பயன்பாடுகள் எல்லைக்கு அப்பாற்பட்டவை, எனவே, எந்தவொரு நாடும் அதன் குடிமக்களை இணைய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க முடியாது.

    விமானப் போக்குவரத்துத் துறைக்கான உலகளாவிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியது போல், டிஜிட்டல் உலகத்திற்கும் இதேபோன்ற கட்டமைப்பைத் தேவை.

    இந்தியாவின் தரவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு உத்தி ஆகியவை பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன.

    மோதலில் இருந்து உலகை இணைப்பதில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • அனைத்துத் பகுதிகளையும் ஒரே நேரத்தில் சோதனையிட்டனர்.
    • 150 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம்அகர்வால் தலைமையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மங்களூரு நகர சிறை வளாகத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் 2 துணை கமிஷனர்கள், 3 உதவி கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 போலீசார் ஈடுபட்டனர். அவர்கள் சிறைச்சாலையின் அனைத்துத் பகுதிகளையும் ஒரே நேரத்தில் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

    இந்த சோதனையின் போது கைதிகளிடம் இருந்து 25 செல்போன்கள், 1 புளூடூத் கருவி, 5 இயர்போன்கள், 1 பென் டிரைவ், 5 சார்ஜர்கள், 1 கத்தரிக்கோல், 3 கேபிள்கள் மற்றும் கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் பிற போதைப்பொருள் பாக்கெட்டுகள் சிக்கியது.

    இந்த பொருட்கள் எப்படி சிறைக்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனை கடைசிவரை வெளியே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

    • மின்சார சாதனங்களை ஈரமான கைகளுடனோ அல்லது தண்ணீருக்கு அருகிலேயோ பயன்படுத்த கூடாது.
    • மின்கம்பிகளுக்கு அருகே பட்டங்களை பறக்கவிட கூடாது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் கீழ் இயங்கும் மின் ஆய்வுத்துறை சார்பில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி (இன்று) வரை தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், பள்ளியில் இருந்து பாதுகாப்பு தொடங்குகிறது' என்பதாகும். இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அரசு தலைமை மின் ஆய்வாளர் ஞா.ஜோசப் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:-

    இந்த ஆண்டு தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் கொண்டாட்டமாக, பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பாக மின்சாரத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடு, பள்ளி மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பான மின்சார பயன்பாட்டுக்கு பங்களிக்க இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி மின்சார சாதனங்களை ஈரமான கைகளுடனோ அல்லது தண்ணீருக்கு அருகிலேயோ பயன்படுத்த கூடாது. சுவிட்சை ஆப் செய்த பிறகே பிளக்கினை சொருகவோ, எடுக்கவோ வேண்டும். மின்கம்பங்கள் மீதோ, அதன் அருகேயுள்ள மரங்களின் மீதோ ஏறவேண்டாம். எச்சரிக்கை பலகைகள் இருக்கும் இடங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், கம்பி வேலிகள், மின் பெட்டிகளை தொடக்கூடாது.

    மின்கம்பிகளுக்கு அருகே பட்டங்களை பறக்கவிட கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளில் இருந்து விலகி இருக்கவேண்டும். ஒரே சாக்கெட்டில் அதிக சாதனங்களை சொருகுவதின் மூலமாக மின்சுமை ஏற்றுவதை தவிர்க்கவும். மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் வேலைசெய்யும் கிரேன்கள் மற்றும் மொபைல் பிளான்ட்களில் இருந்து விலகி இருக்கவேண்டும்.

    எலக்ட்ரிகல் சாக்கெட்டுகளில் விரல்களையோ, கம்பி, குச்சி போன்ற பொருள்களையோ சொருகவேண்டாம். சார்ஜ் செய்யும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. இடியுடன் கூடிய மழையின்போது திறந்தவெளிகள், மரங்கள் மற்றும் மின்கம்பி பாதைகளை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மசோதா ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
    • சட்டம் ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் விரைவில் நிறைவேற்றப்படுகிறது.

    தொழில் நிறுவனங்களில் வேலை மற்றும் பணியின்போது பயன்படுத்தும் செல்போன்களை பணி முடிந்ததும் 'சுவிட்ச் ஆப்' செய்துகொள்ளும்

    சட்டம் பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

    இதேபோல ஆஸ்திரேலிய நாட்டிலும் அலுவலக நேரத்திற்குப் பிறகு செல்போன்களை 'சுவிட்ச் ஆப்' செய்யும் உரிமை விரைவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 

    வேலைநேரத்திற்குப்பின் நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு அளிக்கும் புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

    இந்த மசோதா ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த சட்டம் ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் விரைவில் நிறைவேற்றப்படுகிறது.

    ஏற்கனவே பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியத்தில் இந்த புதிய சட்டம் அமலான நிலையில் உலகில் பல்வேறு நாடுகளும் இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.

    • பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • தங்களிடம் செல்போன்களை காணவில்லை என்று வந்த புகார்களை ஆய்வு செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சாலையில் செல்பவர்கள் செல்போன்களை தவற விட்டு சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்டெடு க்கப்பட்ட செல்போனை கும்பகோணம் போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.

    இதை தொடர்ந்து கும்பகோணம் குற்றப்பிரிவு போலீசார், தங்களிடம் செல்போன்களை காணவில்லை என்று வந்த புகார்களை ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட செல்போன் குறிப்புகளோடு ஒத்துப்பார்த்ததில் 15 பேருக்கு சொந்தமான செல்போன் பற்றிய விவரங்கள் ஒத்துப்போனது. பின்னர், புகார்தாரர்கள் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 15 செல்போன்களை உரியவ ர்களிடம் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் நிருபர்களிடம் கூறுகையில்:-

    செல்போன் வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கும்பகோணம் சரக பகுதியில் செல்போன் மட்டுமல்லாது திருட்டு போன அனைத்து பொருட்களையும் விரைவில் மீட்கப்படும் என்றார்.

    • மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
    • மாணவர்கள் திருடனை விரட்டிச் சென்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டியை சேர்ந்தவர் ரவி. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரை சேர்ந்தவர் கருப்பையா. இவர்கள் நாள்தோறும் மதுரைக்கு வேலைக்காக வந்து செல்கின்றனர்.

    அதன்படி இன்று காலை பெரியார் பஸ் நிலையம் வந்த 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ் வரும் வரை 2 பேரும் செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டி ருந்தனர்.

    அப்போது அவர்களை வடமாநில வாலிபர்கள் நோட்டமிட்டதாக தெரிகிறது. அதில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரவி, கருப்பையா கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கி ருந்து ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் திருடன்...திருடன்... என கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள், மாணவர்கள் திருடனை விரட்டிச் சென்றனர்.

    எல்லீஸ் நகர் பாலம் கீழ்ப்பகுதியில் பிடிபட்ட திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து செல்போன்களை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த வாலிபர் திடீர்நகர் போலீசில் ஒப்படைக்கப் பட்டார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன் பறிக்க அவருடன் மேலும் 4 பேர் வந்ததாக தெரிகிறது. அவர்கள் யார்? என்பது தொடர்பாகவும், வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பெரியார் பஸ் நிலையத்தில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • கடந்தவாரம் முதல்-மந்திரி அசோக் கெலாட் 1000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச மொபைல்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
    • திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களை டிஜிட்டல் கல்வியறிவுடன் இணைப்பதாகும்.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் நிறைவடைவதை தொடர்ந்து விரைவில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கவும், மீண்டும் ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் கட்சி பல்வேறு அதிரடி வியூகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது.

    அதே வேளையில் இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. இதனிடையே ஆளும் காங்கிரஸ் கட்சி பெண்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது. ஏற்கனவே வீடுகளுக்கு 200 யூனிட்டுக்கு கீழ் மின் கட்டணம் கிடையாது என அறிவித்துள்ள நிலையில் தற்போது அரசு செயல்படுத்தி வரும் இலவச செல்போன் திட்டம் பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்திரா காந்தி ஸ்மார்ட்போன் யோஜனா என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 40 லட்சம் பெண்களுக்கு இலவசமாக செல்போன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை கடந்தவாரம் முதல்-மந்திரி அசோக் கெலாட் 1000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச மொபைல்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மொபைலுடன் இலவச இணையமும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களை டிஜிட்டல் கல்வியறிவுடன் இணைப்பதாகும். இதனால் மாநில அரசு நடத்தும் பல்வேறு திட்டங்களைப் பற்றிய தகவல்களை அவர்கள் எளிதாகப் பெற முடியும் மற்றும் அவர்கள் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த மாநில அரசு தெரிவித்து உள்ளது.

    இந்த திட்டத்தில் பெண்களுக்கு ரியல்மி, ரெட்மி பிராண்டு ஸ்மார்ட் போன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு மொபைல்போனின் விலை ரூ.5,999 மற்றும் ரூ.6,499 என்கின்றனர்.

    அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள், அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு அல்லது ஐ.டி.ஐ. படிக்கும் மாணவிகள் மற்றும் அரசிடம் இருந்து சமூக ஓய்வூதியம் பெறும் விதவை பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பின்னர் படிப்படியாக அனைத்து பெண்களுக்கும் வழங்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    அசோக் கெலாட்டை வீழ்த்த பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை வகுத்த நிலையில் இந்த இலவச ஸ்மார்ட்போன் திட்டம் பெண்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு தனி மதிப்பை பெற்று கொடுத்துள்ளது. இதனால் பா.ஜ.க. திணறும் நிலை ஏற்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும்போது இரு கட்சிகளும் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபடும் என தெரிகிறது.

    • போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
    • டெல்லி, மும்பை நகரங்களுக்கு சென்றபோது நட்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அண்ணா சாலை யில் உள்ள செல்போன் கடைக்கு சில நாட்களுக்கு முன் 2 பேர் வந்தனர்.

    கடைக்காரரிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன்களை குறைவான விலையில் தருவதாக தெரிவித்தனர். சந்தேக மடைந்த கடைக்காரர் செல்போன் பெட்டியை திறந்துபார்த்தபோது சீனா தயாரிப்பு போனை வைத்திருந்தது தெரியவந்தது.

    கடைக்காரர் ஒருவரை மட்டும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். விசா ரணையில் பிடிபட்டவர், கேரளா மாநிலம் பாலக்காடை சேர்ந்த உமரூல் பரூக்(28) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து செல்போன், மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசா ரணையின் அடிப்படையில் தப்பியோடிய பாலக்காடை சேர்ந்த முகமது ஷூஹைப்பு(26), அவரின் நண்பர்கள் உத்திரபிர தேசத்தை சேர்ந்த முசையித் (30), டாலிப் சவுத்ரி, ஜிஸ்அன் சௌத்ரி, காஷிப் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் உமர்பாரூக், காஷூப், ஷூஹைப்பு ஆகியோரை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    விசாரணையில், அனைவரும் ஜவுளி உட்பட பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வந்தனர். டெல்லி, மும்பை நகரங்களுக்கு சென்றபோது நட்பு ஏற்பட்டுள்ளது.

    அப்போது போலி செல்போன்களை ஐபோன் எனக்கூறி வியாபாரம் செய்ய திட்டமிட்டனர். அதன்படி தமிழகம் உட்பட பல இடங்களில் மோசடியில் இறங்கியது தெரியவந்தது.

    இந்த வழக்கில் மேலும் பல மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் தகவலின்பேரில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 போலி ஐபோன், 35 போலி ஐபோன் ஏர்பாட், 15 போலி புளூடூத் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    போலீஸ் விசாரணைக்கு பின் குற்றவாளிகள் மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய போலீசார் விசா ரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    • ரூ.1½ கோடி மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • பல்வேறு வகையில் பணம் இழக்க நேர்ந்தால் சைபர் கிரைம் எண் 1930 என்ற இலவச அழைப்பில் அழைக்கவும்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையம் கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவான செல்போன்கள் திருட்டு தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு வந்தன.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் உத்தர வின்பேரில் மாவட்டத்தில் திருட்டுப்போன செல்போன் கள் குறித்து தீவிர விசா ரணை நடத்தப்பட்டது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் திருட்டுப்போன ரூ.13 லட்சத்து 81 ஆயிரத்து 750 மதிப்புள்ள செல்போன் கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ.1 கோடியே 58 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 1107 செல்போன்கள் கைப்பற்றப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வங்கி மோசடி தொடர்பான புகாரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 2 மாதத்தில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 406 ரூபாய் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. இது வரை ரூ.44 லட்சத்து 28 ஆயிரத்து 805 உரியவர்க ளுடைய வங்கி கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    வங்கியில் இருந்து பேசுவ தாக கூறி ஏமாற்றும் நபர்க ளிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், வங்கி கணக்கு எண், சிவிவி மற்றும் ஓடிபி போன்ற விபரங்களை முன் பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், பணம் இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் மொபைல் ஆப்களை நம்பி யும், ஆன்லைன் வேலை வாய்ப்பு வாக்குறுதியை நம்பியும், முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் பல்வேறு வகையில் பணம் இழக்க நேர்ந்தால் சைபர் கிரைம் எண் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார். அளிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் தெரி வித்துள்ளார்.

    • ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
    • சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கடைவீதியில் செல்போன் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் சிவக்குமார் (வயது48). இவர் நேற்று முன்தினம் இரவு செல்போன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    உடனடியாக தனது கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார். அதில் மணல்மேடு மாதாகோவில் தெருவை சேர்ந்த நிலவழகன் (40) என்பவர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து செல்போன்களை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து அவர் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளுடன் சென்று மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலவழகனை கைது செய்தனர்.

    • திருட்டுப்போன 75 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.
    • சுமார் 1½ ஆண்டுகளில் சுமார் ரூ.55½ லட்சம் மதிப்புள்ள 275 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மற்றும் திருட்டுப்போன செல்போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் கடந்த 2 வாரங்களில் சைபர் கிரைம் போலீசார் மூலம் 75 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உரிய நபர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று ஒப்படைத்தார்.

    சுமார் 1½ ஆண்டுகளில் சுமார் ரூ.55½ லட்சம் மதிப்புள்ள 275 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செல்போன் கண்டுபிடிப்பில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டி வெகுமதி வழங்கினார்.மேலும் செல்போன் சம்பந்தமான புகார்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் உடனடியாக ஒப்படைக்க அவர் அறிவுறுத்தினார்.

    • சில செல்போன்களை கீழே கிடந்ததாக கூறி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ,சைபர் கிரைம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன், காவலர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்களை கண்டுபிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் தஞ்சாவூர் நகரம் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் சில செல்போன்களை கீழே கிடந்ததாக கூறி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கடைகளில் விற்பனைக்கு இருந்த செல்போன் ஐ.எம்.இ.ஐ எண்ணையும், புகார் கொடுத்திருந்த ஐ.எம்.இ.ஐ எண்ணையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்து கடை உரிமையாளரிடம் இருந்து அந்த செல்போன்களை மீட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது செல்போனை விற்க வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    வெளியூரில் கண்டுபிடிக்கப்பட்ட சில செல்போன்கள் அவர்களாகவே கொரியர் மூலம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி விட்டனர்.

    இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.3 லட்சம் மதிப்புள்ள 25 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் , சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். அப்போது அவர் செல்போன்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

    ×