search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess tournament"

    • செஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்லன், குகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
    • போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார்.

    போலந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடந்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் என உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த 9வது சீசனில் போலந்து, ருமேனியா, குரோஷியா ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டியும், அமெரிக்காவில் இரண்டு போட்டி என இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 5 போட்டிகள் நடக்கும். இப்போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார்.

    இந்த நிலையில் போலாந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் டூர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்லன், குகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஏழாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த ஆட்டம் 49வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மீண்டும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா களமிறங்கினார். இதில் மேக்னஸ் கார்ல்சனை எளிதாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார். இதன் மூலமாக பிரக்ஞானந்தா புள்ளிப்பட்டியலில் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    முதலிடத்தில் 20.5 புள்ளிகளுடன் சீனாவின் வெய் இ முதலிடத்திலும், மேக்ன்ஸ் கார்ல்சன் 18 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளனர். நாளை கடைசி நாள் ஆட்டம் நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
    • மொத்த பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.

    சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி இம்மாதம் 15- 21ம் தேதி வரை சென்னை லீலா பேலஸில் நடைபெறவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும், இப்போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இப்போட்டியின் மொத்த பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.

     

    • 7-ம் வகுப்பு மாணவி ஹன்சிகா வெள்ளிப்ப தக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
    • ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் பாராட்டினார்.

    புதுச்சேரி:

    மாநில அளவிலான செஸ் போட்டி புதுச்சேரியில் நடந்தது. இதில் சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    இந்த போட்டியில் புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி ஹன்சிகா வெள்ளிப்ப தக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் ஆந்திராவில் நடைபெற உள்ள 36-வது தேசிய செஸ் போட்டி, டெல்லியில் 67-வது மாநில அளவில் நடைபெறும் போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

    மாநில அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவி ஹன்சிகாவுக்கு ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியின்போது மாணவியின் பெற்றோர் உடனிருந்தனர்.

    • போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுப்பிரிவினர் என 331 பேர் பங்கேற்றனர்.
    • இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 60 கோப்பைகள், 30 தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன் வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. ஆதித்தனார் கல்லூரி செஸ் கிளப், செந்தூர் தாலுகா செஸ் கழகம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுப்பிரிவினர் என 331 பேர் பங்கேற்றனர். 10 மற்றும் 15 வயதுக்கு உட்பட்டோர், பொதுப்பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் வரவேற்று பேசினார். செந்தூர் தாலுகா செஸ் கழக தலைவர் டாக்டர் வெற்றிவேல் வாழ்த்தி பேசினார். மாவட்ட செஸ் கழக செயலாளர் கற்பகவல்லி முதன்மை நடுவராக செயல்பட்டார்.

    பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 60 கோப்பைகள், 30 தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன் வழங்கினார். பொதுப்பிரிவினருக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆலோசனையின்பேரில், செஸ் கிளப் இயக்குனர் மோதிலால் தினேஷ் மற்றும் செஸ் கிளப் மாணவ உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

    • தென்பரை அரசு பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை அரசு உயர்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது.

    இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை ராசாத்தி தலைமை தாங்கினார். கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மாநில சதுரங்க கழக துணைத்தலைவர் பாலகுணசேகரன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழும் வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை தென்பரை அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பஞ்சாபிகேசன், பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நத்தத்தில் லாண்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தது
    • வெற்றி பெற்று தகுதி அடைந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

    நத்தம்:

    நத்தத்தில் லாண்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளை லாண்டீஸ் பள்ளியின் தாளாளர் நிக்சன்லாண்டீஸ் தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார அளவில் இருந்து 33 அணிகள் கலந்து கொண்டன. முடிவில் 14 வயதிற்குட்பட்டோருக் கான போட்டியில் துரைக்கமலம் மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியும், 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் கொசவபட்டி புனித செயின்ட் ஜோசப் பள்ளியும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.

    தொடர்ந்து வெற்றி பெற்று தகுதி அடைந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் சோலமலை, சுரேஷ், ஜோதிமுருகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

    • தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.
    • கமுதி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சதுரங்க போட்டி யுடன் தொடங்கியது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ராமநாதபுரம் வருவாய் மாவட்டம், கமுதி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சதுரங்க போட்டி யுடன் தொடங்கி யது.

    இந்த போட்டியில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 220 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் ஆயிஷா பீவி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாதுஷா முன்னிலை வகித்தார்.துணை முதல்வர் சர்மிளா வரவேற்று பேசி னார். கமுதி காவல் ஆய்வாளர் விமலா விளை யாட்டுப்போட்டிகளை தொடங்கி வைத்தார்.நிர்வாக அலுவலர் முகமது இர்ஷாத், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகர், தாமரைக்கண்ணன் ஆகியோர் போட்டிகளுக் கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    முன்னதாக பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி காவல் ஆய்வாளர் விமலா நிலையில் எடுக்கப்பட்டது.

    • கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகட மியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.
    • கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதியரின் மகன் கவிரூபன் (வயது 6). இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பாலகிருஷ்ணன் அவருடைய மகன் கவிரூபனை அழைத்துச் சென்றுள்ளார். போட்டியை நேரில் பார்த்த அந்த சிறுவனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகட மியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    பின்னர் கவிரூபன் செஸ் விளையாட கற்றுக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் திருவாரூர், கரூர் ஆகிய இடங்களில் நடந்த மாநில போட்டிகளிலும், திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை மாணவன் கவிரூபன் தன்னுடைய பெற்றோருடன் சந்தித்தார். அப்போது அந்த மழலையிடம் கலெக்டர் பாசத்துடன் உரையாடினார்.

    பின்னர் கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார். மேலும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடை பெற இருக்கும் சுதந்திர தின விழாவில் செஸ் போட்டியில் அசத்தி வரும் அந்த சிறுவனுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார். பின்னர் கபிரூபன் மழலைச் சொல்லில் கூறும்போது:

    செஸ் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் கலந்து கொண்டு பல்வேறு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன். இதில் சர்வதேச புள்ளி வாங்குவதே என்னுடைய லட்சியம் என்றார்

    • இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதியரின் மகன் கவிரூபன் (வயது 6). இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பாலகிருஷ்ணன் அவருடைய மகன் கவி ரூபனை அழைத்துச் சென்றுள்ளார். போட்டியை நேரில் பார்த்த அந்த சிறுவனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகடமியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    பின்னர் கவிரூபன் செஸ் விளையாட கற்றுக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் திருவாரூர், கரூர் ஆகிய இடங்களில் நடந்த மாநில போட்டிகளிலும், திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை மாணவன் கவிரூபன் தன்னுடைய பெற்றோருடன் சந்தித்தார். அப்போது அந்த மழலையிடம் கலெக்டர் பாசத்துடன் உரையாடினார்.

    பின்னர் கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார். மேலும் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவில் செஸ் போட்டியில் அசத்தி வரும் அந்த சிறுவனுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார்.

    பின்னர் கபிரூபன் மழலைச் சொல்லில் கூறும்போது:-

    செஸ் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் கலந்து கொண்டு பல்வேறு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன். இதில் சர்வதேச புள்ளி வாங்குவதே என்னுடைய லட்சியம் என்றார்.

    • ஓசூர் அதியமான் கல்லூரியில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களிடையிலான சதுரங்க போட்டி நடந்தது. போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்து 537 மாணவர்கள் பங்கேற்றனர்.
    • இதே போட்டியில் புதுவை மாணவன் வருண் பிரபாகரன் 13 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 15-வது இடமும், கனிஷ்வர்மா 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 9-வது இடமும் பெற்றனர்.

    புதுச்சேரி:

    ஓசூர் அதியமான் கல்லூரியில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களிடையிலான சதுரங்க போட்டி நடந்தது.

    போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்து 537 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டி 7 ,9 ,11 ,13, மேற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நடந்தது.

    போட்டியில் 11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் புதுவை மாணவர் மாதேஷ் குமார் 9-க்கு 8 புள்ளிகள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.

    இதே போட்டியில் புதுவை மாணவன் வருண் பிரபாகரன் 13 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 15-வது இடமும், கனிஷ்வர்மா 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 9-வது இடமும் பெற்றனர்.

    • 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி அரியலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிகள் 9, 11, 13 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் ஓபன் பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினார்கள். இந்த போட்டிகள் ஸ்விஸ் பேரிங் முறையில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

    • மாநில அளவிலான சிறப்பு சதுரங்க போட்டி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.
    • போட்டிகளை நெல்லை தெட்சணமாறநாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    மும்பை இந்திய பேனா நண்பர் பேரவையின் இணை அமைப்பான ஐ.பி.எல். செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான சிறப்பு சதுரங்க போட்டி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.

    போட்டிகளை நெல்லை தெட்சணமாறநாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார். 3 பிரிவுகளில் 6 சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து 150 வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக இசக்கி, சதீஷ்குமார், வைதேகி ஆகியோர் செயல்பட்டனர்.

    முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. விழாவில் குலசேகரபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், சதுரங்க ஆர்வலர் சிவா, செஸ் அகாடமி தலைவர் இசக்கி, சென்னை மாவட்ட சதுரங்க வீரர் ஜெப்ரீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஐ.பி.எல். செஸ் அகாடமி இயக்குனர் கண்ணன் செய்திருந்தார்.

    ×