என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chief Minister M.K.Stalin"
- நிதி ஆயோக் அமைப்பு 4-வது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.
- தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தலைசிறந்து விளங்குகிறது.
சென்னை:
2023-24-ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் பற்றிய 4-வது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
நிதி ஆயோக் நிறுவனத்தின் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்றாண்டுகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக் குறியீடுகளை எல்லாம்விட, இந்த 2023-24-ம் ஆண்டிற்கான அறிக்கை திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்பதைப் பறைசாற்றியுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி தொலைநோக்குச் சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே முதல் இடம் பெற்றுச் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.
காலநிலை மாற்றம்-சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது. மேலும்,
* பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு,
* மக்கள் நலம் மற்றும் சுகாதார வாழ்வு,
* தொழில் வளர்ச்சி-புத்தாக்கத் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்,
* தூய்மையான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல்,
* அமைதியைக் காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்கள்
* பாலின சமத்துவம், ஆகிய இனங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்து சிறந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களான, மகளிர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மகளிர்க்குக் கட்டணமில்லாப் பேருந்து விடியல் பயணத் திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், சமத்துவத்தை நிலைநாட்டும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கேற்ற திறன்களை வழங்கும் நான் முதல்வன் திட்டம் முதலான சமூகநீதித் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களால் குடும்பப் பொருளாதாரம் உயர்ந்து வறுமை ஒழிப்பில் கடந்த காலங்களைவிட மாபெரும் வளர்ச்சி கண்டு இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை இந்த நிதி ஆயோக் அறிக்கை நிரூபித்துள்ளது.
அதாவது, வறுமை ஒழிப்புத் திட்டத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தலைசிறந்து விளங்குகிறது என்பது உட்பட
11 இனங்களில் தமிழ்நாடு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகளில் தேசிய சராசரியைவிட அதிகமாக வளர்ச்சி பெற்று முன்னணி மாநிலமாகவும், இரண்டு இனங்களில் தேசிய சராசரிக்கு இணையாகவும் வளர்ச்சி பெற்று 13 இனங்களில் மிகவும் சிறந்துள்ளது தமிழ்நாடு.
இவையெல்லாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியின் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் கூடிய சிறந்த சீரிய திட்டங்களால் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சிக்கான சான்றுகளாகும் என்று பலரும் பாராட்டுகின்றனர்.
- மூத்த வழக்குரைஞர் கபில் சிபலுக்கு வாழ்த்துகள்!
- பாதுகாப்பான கரங்களில் இருப்பதை அவரது வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் கபில் சிபலுக்கு வாழ்த்துகள்! வழக்கறிஞர்கள் சங்கத்தின் சுதந்திரமும் நமது அரசியலமைப்பின் மாண்புகளும் பாதுகாப்பான கரங்களில் இருப்பதை அவரது வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.
நீதியையும் இந்திய மக்கள் மிகவும் போற்றும் மக்களாட்சி விழுமியங்களையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் கபில் சிபல் அவர்களது தலைமை அமையும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.
- 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்திட ஆணை வழங்கப்பட்டது.
- தொழிற்பிரிவுகளின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 128 பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களி லும் மாறி வரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வாறு மாற்றிட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் நுட்ப மேம்பாட்டு மையங்களாக 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்திட ஆணை வழங்கப்பட்டது.
முதற்கட்டமாக தற்போது தமிழகத்தில் 22 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெல்லை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் அமையப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில் நுட்ப மையமும் இதில் அடங்கும். அங்கு நடந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ, மண்டல துணை இயக்குனர் செல்வ குமார், உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்கிளின், பேட்டை ஐ.டி.ஐ. முதல்வர் லட்சுமணன், பொறியாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினர். பின்னர் ஐ.டி.ஐ வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் மாணவ- மாணவிகள், ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-
இக்கல்வியாண்டில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள இந்த தொழில் 4.0 தொழில் நுட்ப மையத்தின் மூலம் புதிதாக மேலும் 4 தொழிற்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட சி.என்.சி எந்திர தொழில் நுட்ப பணியாளர், அடிப் படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர், உற்பத்தி கட்டுப்பாடு மற்றும் தன்னியக்குமயம், தொழில்துறை எந்திரனியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்ப பணியாளர் ஆகியவை இந்த 4 புதிய தொழில் பிரிவுகள் ஆகும்.
இத்தொழிற்பிரிவுகளின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 128 பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறுவதின் மூலம் தகுந்த வேலைவாய்ப்பினை பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.
மேலும் நாட்டின் உற்பத்தி திறன் அதிகரித்து வளமான இந்தியாவை உருவாக்கவும் இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தூத்துக்குடி மாநகர ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் ராஜீவ்நகரில் நடைபெற்றது.
- தூத்துக்குடி விமான நிலையம் , துறைமுகம் என அனைத்து வகையிலும் வளர்ச்சியடைவதற்கு முழுமையாக உழைக்கும் கனிமொழி எம்.பி. மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று சண்முகையா எம்.எல்.ஏ. பேசினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் ராஜீவ்நகரில் நடைபெற்றது.
சண்முகையா எம்.எல்.ஏ.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன், ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. செயலாளர் ஆர். ஆஸ்கர் வரவேற்று பேசினார். பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் திருமணி ஆனந்த், காளிதாசன், மாரிச்செல்வம், கார்த்தி, ரூபன், ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் மாலாசின்கா, சித்திரை புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. நிறைவேற்றி உள்ளது. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டது. தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் அளித்த 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.
கனிமொழி எம்.பி. மீண்டும் போட்டி
கொரோனா காலக்க ட்டத்தில் 4 ஆயிரம் உதவித் தொகை, பால்விலை குறைப்பு, இலவச பஸ் பயணம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், கல்வி உதவித்தொகை, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி விமான நிலையம் துறைமுகம் என அனைத்து வகையிலும் வளர்ச்சியடைவதற்கு முழுமையாக உழைக்கும் கனிமொழி எம்.பி. மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிடுவார். அவருக்கு வெற்றியை வழங்கி மேலும் சாதனை பணிகள் தொடர வாய்ப் பளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் செந்தூர்பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கோட்டாளம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், அனஸ், பாலமுருகன், வக்கீல் அணி ரகுராமன், ஸ்பிக்நகர் பகுதி நிர்வாகிகள் வெள்ளைபாண்டி, அந்தோணிகுரூஸ், கல்பனா, ரகு, காளி, ஆனந்த், விவேகானந்தன், வட்ட செயலாளர் வசந்தி பால்பாண்டியன், பாஸ்கர், முத்துமாணிக்கம், அற்புதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.
- முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நெல்லை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் ஆய்வு கூட்டங்களும் நடத்தி வருகிறார்.
நாகர்கோவில் பயணம்
அதன்படி இன்று மதுரைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சாலை மார்க்கமாக அங்கிருந்து நாகர்கோவிலுக்கு புறப்படுகிறார். நெல்லை வழியாக செல்லும் அவர் இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை சென்றடைகிறார்.
தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் புதிய மாநகராட்சி கட்டிடம் திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். அதன்பின்னர் மதியம் 2 மணியளவில் காரில் தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார்.
போலீஸ் பாதுகாப்பு
இதனையொட்டி விருதுநகர் மாவட்ட எல்கையில் இருந்து குமரி மாவட்ட எல்கை வரையிலும் நெல்லை, தென்காசி,தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்ட எல்கையான ஸ்ரீவைகுண்டம் வட்டம் வசவப்பபுரம் கிராமத்தில் இருந்து மறவன்மடம் வரை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையிலும் நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் ராஜா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மார்ச் 1-ந்தேதி பிறந்தநாள் காணும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை மார்ச் மாதம் முழுவதும் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்.
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்குவது, காச நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, ரத்ததானம் செய்வது, மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்குவது, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும்.
பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது, தமிழக முதல்-அமைச்சரின் திறமையான ஆட்சியின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்த வேண்டும். நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் முதல்-அமைச்சர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாலை 5 மணி அளவில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு 8-ந் தேதி தென்காசி வருகை தர உள்ளார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.
தென்காசி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிற 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார்.
ஆய்வு கூட்டம்
இதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் தலைமையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு முதன்முறையாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு 8-ந் தேதி வருகை தர உள்ளார். நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி இம்மாவட்டத்தில் நடை பெறும் அனைத்து நிகழ்வு களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். இவ் விழா சிறப்பாக நடைபெறும் வகையில், அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில் தனிக்கவனம் செலுத்தி, ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்
கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ஆகாஷ், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயனுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) மைக்கேல் ஆண்டனி பெர்னாண்டோ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், அனைத்துத்துறை முதல் நிலை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராமகிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
- இதில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் வருகை தருகிறார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராமகிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் வருகை தருகிறார். முன்னதாக 11-ந்தேதி காலையில் கரூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அதனைதொடர்ந்து அங்கிருந்து கார்மூலம் திண்டுக்கல் வருகை தரு கிறார். முதல்-அமைச்சருக்கு திண்டுக்கல் மேற்கு, கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட எல்லையான வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மாநகர, நகர பகுதிபேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
திண்டுக்கல் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் செந்தில்குமார் ஆகியோரும் தெரி வித்துள்ளனர்.
- நெல்லை விருந்தினர் மாளிகையில் இருந்து விழா மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புறப்பட்டு சென்றார்.
- 7 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரங்களில் ஏராளமான பெண்களும், பொதுமக்களும் திரண்டு நின்று முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
நெல்லை:
நெல்லை விருந்தினர் மாளிகையில் இருந்து விழா மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புறப்பட்டு சென்றார்.
7 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரங்களில் ஏராளமான பெண்களும், பொதுமக்களும் திரண்டு நின்று முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் 25 இடங்களில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு கொடுத்தனர். காரில் முதல்-அமைச்சர் சென்றபோது சாலையில் பெண்கள் ஏராளமானோர் நின்று இருந்தனர். அப்போது காரை நிறுத்தி அதிலிருந்து இறங்கி சென்று முதல்-அமைச்சர் மனுக்களை பெற்றார்.
இதேபோல் மாற்று திறளாளிகள் நின்றிருந்தனர். அவர்களை பார்த்ததும் அருகில் சென்று நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் பாளை மார்க்கெட் பகுதியில் சென்றபோது ஏராளமான சிறுவர், சிறுமிகள், திருவள்ளுவர், அன்னை தெரசா உள்ளிட்டவர்களின் வேடம் அணிந்து நின்றிருந்தனர்.
அவர்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி சென்ற முதல்-அமைச்சர் அவர்களுக்கு கை கொடுத்து அவர்களுடன் சிறிது நேரம் கொஞ்சி பேசினார். இதேபோல் விழா மேடை வரை பல்வேறு இடங்கிளில் காரில் இருந்து இறங்கி சென்ற முதல்-அமைச்சர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்