search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Civil Service"

    • கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர்.
    • தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக ஓம் பிர்லா செய்யப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பல்ராம் ஜாகருக்கு பிறகு 39 வருடங்கள் கழித்து இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆகும் பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார்.

     

    இந்நிலையில் மக்களவையில் சபாநாயகராக பதவியேற்றுள்ள பாஜக மூத்த தலைவர் ஓம் பிர்லா கடந்த நாட்களில் பேசுபொருளாக மாறியுள்ளார். நீண்ட நெடிய அரசியல் பின்னணி கொண்ட ஓம் பிர்லா ராஜஸ்தானை சேர்நதவர் ஆவார். கடந்த 2003 முதல் 2013 வரை ராஜஸ்தான் மாநில கோட்டா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஓம் பிர்லா கடந்த 2014 தேர்தலில் பாஜக சார்பில் கோட்டா தொகுதியின் எம்.பியாக தேர்வாகி பாராளுமன்றம் சென்றார்.

    கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அகாடெமியில் பயிற்சி பெற்று ஐஏஎஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின்கீழ் பணியாற்றி வருகிறார்.

     

     தனது வெற்றி குறித்து தற்போது PTI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அஞ்சலி பிர்லா, தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டு மக்களுக்காக தனது தந்தை செய்து வரும் சேவையைபோல தானும் இந்த சமுதாயத்துக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் ஆவதற்கு முன்னதாக அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். மேலும்  தேர்வு எழுத்தமேலேயே அஞ்சலி பிர்லா ஐஏஎஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டப்பட்டது வருவது குறிப்பிடத்தக்கது.

     

     

    • சிவில் சர்வீஸ் தேர்வு கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது
    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது வினாத்தாள்களை எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம்

    ஐ ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதியளித்துள்ள நிலையில், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கின் விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம் என யோசனை தெரிவித்தனர்.

    இந்த மொழி பெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம் எனவும், இது சம்பந்தமாக நேர்மறையாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது.
    • தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இன்று மாலை 6 மணி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

    விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைய இருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இன்று மாலை 6 மணி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் upsconline.nic.in இணைய தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மே மாதம் 26-ந்தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற இருக்கிறது. சுமார் 1056 இடத்திற்காக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    • மத்திய அரசு துறைகளில் உள்ள குரூப்- சி, டி தரத்திலான பதவிகளுக்கு இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) போட்டி தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்து வருகிறது.
    • ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு 2022-க்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    சேலம்:

    மத்திய அரசு துறைகளில் உள்ள குரூப்- சி, டி தரத்திலான பதவிகளுக்கு இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) போட்டி தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் 12-ம் வகுப்பு தரத்திலான பதவி இடங்களை நிரப்புவதற்கு ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு 2022-க்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதையடுத்து டயர் -1 தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தக்கட்ட தேர்வான டயர் -2 தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். டயர் -2 தேர்வு கடந்த மாதம் 26-ந்தேதி நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் எழுதினர்.

    இந்த நிலையில் தேர்வர்கள் தாங்கள் எழுதிய டயர்-2 விடைத்தாள் மற்றும் கேள்விக்கான அதிகாரபூர்வ விடைகள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள இவற்றின் லிங்கை கிளிக் செய்து, பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தேர்வின்போது ஒவ்வொரு கேள்விக்கும் தாங்கள் எழுதிய விடைகள் இதில் சரிபார்த்து கொள்ளலாம். இதைத்தவிர தேர்வர்கள் எழுதிய தங்களது பதில் தாள்களை பிரிண்ட் அவுட் எடுக்கலாம்.

    இந்த வசதி நாளை (6-ந்தேதி) மாலை 6 மணி வரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு விடைத்தாள், கேள்விக்கான விடைகள் ஆகியவற்றை இணைய தளத்தில் பார்க்க முடியாது.

    • மதுரையில் 17 மையங்களில் குடிமைப்பணி தேர்வு நடந்தது.
    • 15 கல்வி மையங்களில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    மதுரை

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு மதுரை மாவட்டத்தில் 17 மையங் களில் இன்று நடந்தது. இதில் 6 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். மதுரை மாவட்டத்தில் 15 கல்வி மையங்களில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 9.30 முதல் 11.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடந்தது.

    • 18 தேர்வு மையங்களுக்கு 682 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • தேர்வு மையங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

    கோவை,

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நாளை நடக்கிறது. இத்தேர்வு கோவை மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 7,742 நபர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் மிகுந்த கவனத்துடனும் வெளிப்படை தன்மையுடனும் நடத்தப்படுகிறது.

    இத்தேர்வினை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணை கலெக்டர் நிலையில் 7 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 18 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 39 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 341 அறைகண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், மேலும் 341 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் மொத்தம் 682 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

    மேலும், தேர்வை பார்வையிடும் வகையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை இயக்குநர் நிலையில் அலுவலர் ஒருவரும் மற்றும் மாநில அரசின் சிறப்பு கண்காணிப்பாளர் ஒருவரும் தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடை பெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன. தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும், தேர்வு மையங்களுக்கு போதுமான அளவில் உக்கடம், கவுண் டம்பாளைம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் காந்திபுரம் போன்ற புறநகர் பேருந்து நிலையங்களிலிருந்தும் வெளி மாநில மற்றும் மாவட்ட தேர்வர்களுக்கும் பேருந்து வசதிகள் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்தேர்வு எழுதும் தேர்வர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுடன் வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    • கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்க லஞ்சம் கேட்ட அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிய வேலம்மாள் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இவரது பணியை கருணை அடிப்படையில் வழங்குமாறு மகள் சீனியம்மாள் மனு செய்தார். இந்த நிலையில் சீனியம்மாளுக்கு வேலை வழங்குவது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் சீனியம்மாளின் மகனிடம் பேசும் அதிகாரி ரூ. 15 ஆயிரம் கொடுத்தால் கருணை அடிப்படையில் வேலை வழங்குவதாக கூறுகிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

    கலெக்டர் அலுவலக அதிகாரியே லஞ்சம் கேட்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×