search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "classroom"

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி கலெக்டர் பார்வையிட்டார்.
    • சத்துணவு கூட்டத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவுகளின் தரத்தை ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பதனிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் மாணவ, மாணவிகளின் ஆங்கிலத் திறன் பரிசோதிக்கும் வகையில் ஒவ்வொரு மாணவனாக ஆங்கில பாட நூலில் உள்ள வாக்கியங்களை படிக்க சொல்லி கேட்டறிந்து மாணவர்களை பாராட்டினார்.

    மேலும் ஊராட்சி தொடக்கப்பள்ளி சென்ற கலெக்டர் மகாபாரதி 1-ம் வகுப்பு மாணவர்களிடம் அவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்கும் வகையில் பள்ளி பாடல்கள் பாட சொல்லிகேட்டறிந்தார்.

    அப்போது மாணவ மாணவிகள் உற்சாகமாக பாடத்திட்டத்தில் உள்ள பாடல்களை கலெக்டர் முன்பு ஆடிப்பாடினர். தொடர்ந்து அங்குள்ள

    சத்துணவு கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாணவர்களுக்கு தயார் செய்து வைக்கப்பட்டி ருந்த உணவுகளின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் ரேஷன் கடையில் ஆய்வு செய்த ஆட்சியர் அரிசி,துவரம் பருப்பு, இருப்புகளை ஆய்வு செய்ததோடு எலக்ட்ரானிக் தராசின் பயன்படுத்தி பொருட்களை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறினார்.

    மேலும் அரிசி, சர்க்கரை ஆகியவை மூட்டைகளில் சேதம் அடைந்து சிந்தியிருப்பது குறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டபோது, எலிகள் நுழைந்து பொருட்களினை சேதம் ஏற்படுத்துவதாக கடை விற்பனையாளர் கூறினார்.

    எலிகள் நுழையா தவாறு பாதுகாப்பாக பொருட்களை வைத்திட தேவையான நடவடிக்கை களை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவு றுத்தினார்.

    ஊராட்சியில் புதிதாக ரூ. 28 .25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    அப்பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடிக்கு சென்ற ஆட்சியர் மகாபாரதி அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு குழந்தைகளிடம் காலை என்ன உணவு தரப்பட்டது என்று கேட்டறிந்து அந்த உணவினை வரவழைத்து அதன் ருசி, தரத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    முன்னதாக கீழையூர் காத்திருப்பு இழப்பு சாலை பாரத பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் பாலப்பணிகள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை ஆட்சியர் பார்வைக்கு ஆய்வு செய்தார் பின்னர் செம்பதனிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டின் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடம் பணிகளை பார்வையிட்டு ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார் ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், ஒன்றிய உதவி பொறி யாளர்கள் தெய்வானை, சிவக்குமார், கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி முத்துக்குமரன், அன்புமணி மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காசோலையை மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்கள்.
    • நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே குமரானந்தபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்காக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன் (22-வது வார்டு), பத்மாவதி (21-வது வார்டு), பள்ளி மேலாண்மை குழு, கிராம கல்விக்குழு, பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக நிர்வாகிகளின் பங்களிப்பு தொகையாக ரூ.20 லட்சத்து 7 ஆயிரத்துக்கான காசோலையை மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்கள்.

    இதில் 1-வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    • நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சாலியமங்களம் ஊராட்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு ஆய்வு செய்தார்.

    முன்னதாகநம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி, பிளாஸ்டிக் பயன்படுத்து வதை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.

    பின்னர் சாலியமங்களம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணி, புதுப்பிக்கும் பணிகளையும் கூடுதல் கலெக்டர் நேரில் பார்வையிட்டு கட்டிடத்தின் தரத்தையும் ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

    ஆய்வின்போது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன்.

    அமானுல்லா, உதவி பொறியாளர் கதிரேசன்,ஊராட்சி மன்ற தலைவர் சக்திசிவக்குமார், துணை தலைவர் செந்தில்கு மார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாமி நாதன். பணி மேற்பார்வையாளர் மீரா. ஒப்பந்ததாரர் சண்.சரவணன்,ஊராட்சி செயலாளர் ஜெகத்குருமற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர், ஊராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • உதயமார்த்தாண்டபுரம் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்வையிட்டார்.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஆய்வு செய்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் மற்றும் ஜாம்புவனோடை பகுதி வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவ தையும், உதயமார்த்தாண்டபுரம் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், பணிகள் குறித்த விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர், உதயமார்த்தா ண்டபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுப்பட்டு வருவதையும், அப்பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும், இடும்பவனம் பகுதியில் மானவாரி வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வி ன்போது மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, செயற்பொறியளர் (ஊரக வளர்ச்சித்துறை) சடையப்பன், தாசில்தார்கள் திருத்துறைப்பூண்டி காரல்மார்க்ஸ், முத்து ப்பேட்டை மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கலைச்செல்வன், செயற்பொ றியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • இப்பணியை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான இடத்தையும் எம்.எல்.ஏ பார்வையிட்டார்

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில், 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானியத்தின் கீழ், ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் வெள்ளத்திடல், வாணியத் தெரு, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் புதிய சமுதாயக் கூடம் கட்டுவதற்கான இடங்களை பார்வை யிட்டார்.திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான இடத்தையும் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முகம்மது சுல்தான், செய்யது ரியாசுதீன், ரிபாயுதீன், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் பொது மக்கள் உடனிருந்தனர்.

    • புனல்வாசல் ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.
    • பேராவூரணி அரசு பள்ளியில் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன நூலகம் கட்டிடம் கட்டப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் ரூபாய்.1 கோடியில் பள்ளி வகுப்பறைகள், அங்கன்வாடி, நவீன நூலகம் உள்ளிட்டவைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பேராவூரணி ஒன்றியம் இடையாத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம், புனல்வாசல் ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம்,

    சொர்ணக்காடு ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன நூலகம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆண்டிக்காடு ஊராட்சியில் ரூ.21.45 லட்சத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு கொறடா கோவி.செழியன் முன்னிலையில் திறந்து வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கனிமம் மற்றும் சுரங்கம் 2022-23 திட்டத்தின் கீழ் வகுப்பறைகள் சீரமைக்கப்பட்டது.
    • அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் நடுவேலம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுப்பணித்துறை ,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கனிமம் மற்றும் சுரங்கம் 2022-23 திட்டத்தின் கீழ் மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் சீரமைப்பு செய்து திறப்புவி ழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.என்.பிருந்தா தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்தலைவர் தலைவர் பி.சண்முகசுந்தரம் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னாள் மேற்கு ரோட்டரி சங்கத்தலைவர் கே.பாலசுப்பிரமணியம் திறப்பு விழா செய்யப்பட்ட வகுப்பறை கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றினார்.

    விழாவில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் 3 புதிய வகுப்பறை கட்டிடங்கள்.
    • ரூ. 7.50 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு 50 மேஜை- பெஞ்சுகளை வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 3 வகுப்பறை கட்டிடங்களை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    தொடர்ந்து, கும்பகோணம் பரஸ்பர நிதி லிமிடெட் சார்பில் ரூ. 7.50 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு 50 மேஜை- பெஞ்சுகளை மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. வழங்கினார்.

    தொடர்ந்து பொதுமக்கள் நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய கழிவறை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பேரூராட்சி துணை தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா, அரசு வக்கீல் விஜயகுமார், தலைமையாசிரியர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பா ளர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க், ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.
    • எங்களது பிள்ளைகள் இனி இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் பார்த்து கொள்கிறோம்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு முடிந்தது. பின்னர் அந்த மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க், ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.

    உடனே சத்தம் கேட்டு தலைமை ஆசிரியர் முத்துசாமி வந்து பார்வையிட்டார். அங்கு மாணவர்கள் மேசை, நாற்காலிகளை உடைத்து கொண்டிருந்தனர். உடனே தலைமை ஆசிரியர் மாணவர்களை சத்தம் போட்டு கண்டித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.

    அங்கு பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறி வகுப்பறையையும் தலைமை ஆசிரியர் காட்டினார். இதனை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். பின்னர் எங்களது பிள்ளைகள் இனி இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் பார்த்து கொள்கிறோம்.

    இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறினார். நடந்த இந்த சம்பத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறி பெற்றோர்கள் எழுதி கொடுத்தனர். இதனால் மாணவர்களிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பினர்.

    இதையடுத்து பள்ளி வகுப்பறையில் மேசை, நாற்காலி போன்ற பொருட்களை உடைக்கும் சம்பவத்தை ஒரு மாணவன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வரைலாக பரவி வருகிறது.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி கூறுகையில் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையில் மேசை, நாற்காலிகளை அடித்து உடைத்து நொறுக்கி யுள்ளனர்.

    இதனால் அவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களை எச்சரித்து எழுதி வாங்கியுள்ளோம். மேலும் இது சம்மந்தமாக முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். அவர் இந்த சம்பவத்தை விசாரித்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார். 

    • வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டது.
    • ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி, வவ்வாலடி நடுநிலைப் பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரண த்தால் முழுவதுமாக இடிக்க ப்பட்டுவிட்ட நிலையில், போதிய இடவசதி இன்றி பள்ளி இயங்கி வருவதை அறிந்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது, உடனடியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க ப்படுமென உறுதியளித்தார்.

    அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில், இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.

    • வீரமாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • விழாவிற்கு பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமை வகித்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் வீரமாங்குடி ஊராட்சியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு, குழந்தை நேய பள்ளி உட்கட்ட அமைப்பு மேம்பாடு, திட்டத்தின் கீழ் வீரமாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமை வகித்தார். பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வீரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கனகம் வரவேற்று பேசினார்.

    விழவில் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டும் பணியினை துவக்கி வைத்தார்.

    நிகழ்சியில் பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகன்யா ஆகிய கலந்து கொண்டனர்.

    முடிவில் வீரமாங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தவமணி நன்றி கூறினார்.

    • ரூ.24.15 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம்.
    • ரூ.13.37 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் சிவக்குமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த்ராஜ், மாவட்ட கவுன்சிலர் தாமரை செல்வன், ஒன்றிய குழு துணை தலைவர் தியாக பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பாபநாசம் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் ஊராட்சி பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

    கூட்டத்தில் பாபநாசம் ஒன்றியத்தில் சக்கராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம் ரூ.24.15 லட்சம் மதிப்பீட்டிலும், தியாகசமுத்திரம் ஊராட்சியில் உள்ள புள்ளபூதங்குடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டிடம் ரூ.13.37 லட்சம் மதிப்பீட்டிலும், உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    ×