என் மலர்
நீங்கள் தேடியது "coconut"
- சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது சீசன் ஜனவரி 20 வரை நடக்கிறது.
- ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்வார்கள்.
புதுடெல்லி:
சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த சீசன் ஜனவரி 20-ந் தேதிவரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்வார்கள். பெரும்பாலானோர், தலையில் இருமுடி ஏந்திச் செல்வது வழக்கம்.
அந்த இருமுடி பையில், நெய் நிரப்பப்பட்ட தேங்காய் மற்றும் வழியில் உள்ள புனித இடங்களில் உடைப்பதற்கான சாதாரண தேங்காய்கள், இதர காணிக்கை பொருட்கள் ஆகியவை இருக்கும். ஆனால், எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்ற அடிப்படையில், விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால், அய்யப்ப பக்தர்கள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில், நடப்பு சபரிமலை சீசனில் ஜனவரி 20-ம் தேதிவரை விமானத்தில் தேங்காய்களை கொண்டு செல்ல சிவில் விமான போக்குவரத்து பிரிவு அனுமதி அளித்துள்ளது.
வழக்கமாக பயணிகள் அமரும் பகுதியில் குறிப்பிட்ட எடை அளவு கொண்ட கைப்பையை தங்களுடன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அப்படி தேங்காய்களை கொண்ட கைப்பையை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
எக்ஸ்ரே பரிசோதனை, வெடிகுண்டு கண்டறியும் டிடெக்டர் பரிசோதனை, வழக்கமான பரிசோதனை ஆகியவற்றுக்கு பிறகுதான் தேங்காய்களை கொண்டு செல்ல முடியும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- வாசுதேவநல்லூர் அருகே சங்கனாப்பேரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன் தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் அருகே சங்கனாப்பேரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ் மலர் தலைமை தாங்கி சங்கனாப்பேரி கிராம பஞ்சாயத்தில் உள்ள 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.
வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன், வேளாண்மை அலுவலர் கவுசல்யா, துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர்கள் முகம்மது சாகுல் ஹமீது, ஆனந்த், சங்கனாப்பேரி பஞ்சாயத்து தலைவர் சமுத்திரவேல், விவசாய உற்பத்தியாளர் குழு தலைவர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன் தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ் மலர் உணவு மற்றும் நுண்ணூட்ட சத்து விநியோகம் திட்டத்தின் கீழ் சுழற் கலப்பைகளை சங்கனாப்பேரி, திருமலாபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு வழங்கினார். திருமலாபுரம் விதைப் பண்ணைகளையும், தென்மலை மற்றும் ராமசாமி யாபுரம் பகுதி களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி தரிசு நில தொகுப்பு திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 7 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.
- முதற்கட்டமாக 1200 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்டாம்பாடி, வீசாணம், தளிகை, கோனூர், பெரிய
கவுண்டம் பாளையம், சிலுவம்பட்டி, மாரப்ப நாயக்கன்பட்டி ஆகிய 7 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.
கிராம ஊராட்சிக்கு ஒரு பண்ணைக்குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 300 பண்ணைக் குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டவுள்ளது. முதற்கட்டமாக 1200 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
தென்னங்கன்றுகள் வழங்கும் முகாம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது. அதுசமயம் நாமக்கல் வட்டார அட்மா தலைவர் பழனிவேல் தலைமையில் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது. இம்முகாமினை வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா, உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்தி ருந்தனர்.
- கிருஷ்ணராயபுரத்தில் தென்னை பராமரிப்பு பணிகள் நடைபெற்றது
- மரக்கன்றுகளுக்கு, பஞ்சாயத்தில் உள்ள நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது
கரூர்:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளுக்கு, பஞ்சாயத்தில் உள்ள நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது. மேலும், மரக்கன்றுகளை சுற்றி பாதுகாப்பு பணி செய்யப்பட்டது. பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
- தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை வழங்கினார்
- தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கி–ணைந்த முறையில் கட்டுப்படுத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை இணை இயக்கு–நர் மா.பெரி–யசாமி கூறியிருப்ப–தாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,505 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலை–யில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரண–மாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படு–கிறது. மேலும், தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்திடுமாறு கேட் டுக்கொள்ளப்படுகிறது.
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள் டிராக்டரில் இயங்கும் தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக இலையின் அடிப்புறத்தில் பீய்ச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு 8 எண்கள் மஞ்சள் ஒட்டுப்பொறிகளின் 5x1½ நீளமுள்ள மஞ்சள் ஒட்டுப்பொறிகளை தென்னை மரங்களுக்கு இடையே கட்டி அதன் மேல் விளக்கெண்ணெய் அல்லது பசை தடவிவைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். இயற்கை–யிலேயே காணப்படும் என் கார்சியா ஒட்டுண்ணி கூட்டுப்புழுக்களை கண்ட–றிந்து, கூட்டுப்புழுக்கள் காணப்படும் ஓலை துணுக் குகளை ரூகோஸ் வெள்ளை ஈக்கள் காணப்படும் தோப்புகளில் உள்ள தென்னை மரங்களில் பர–வலாக ஓலை–யில் பொருத்த வேண்டும்.
கிரைசோபெர்லா இரை விழுங்கி ஒரு ஏக்கருக்கு 400 எண்கள் வீதம் வெளி–யிடவேண்டும். கிரைசோ–பெர்லா இரை விழுங்கிகள், குடுமியான்மலை உயிரி–யல் கட்டுப்பாட்டு காரணி–கள் உற்பத்தி மையத்தி–லிருந்து தற்போது வழங் கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் வாங்கி பயன்படுத்த கேட்டுக்கொள் ளப்படுகிறது. ரூகோஸ் வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்பு–றத்தில் கூட்டமாக இருந்து சாறு உறிஞ்சும்போது தேன் போன்ற திரவத்தை வெளியிடுகிறது. இத்திரவம் கீழுள்ள மட்டைகளில் மேற்புறத்தில் படிந்து கருப்பு நிற பூஞ்சணம் வளர்வதால் இலைகள் கருப்பாக காணப்படும்.
இதனை கட்டுப்படுத்த 2 சதவீத ஸ்டார்ச் கரைசலை தெளிப்பதன் மூலம் இலைகளின் மேல் உள்ள கரும்பூசணம் காய்ந்து விழுந்துவிடும். தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது. தாக்குதல் மிக அதிகமாக இருந்தால் அசாடிராக்டின், வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையங்களை அணுகிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட தென்னை சாகுபடி–யாளர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை–களை கடைபிடித்து சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
- இதில் 7 ஆயிரத்து 857 கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
இதில் 7 ஆயிரத்து 857 கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.
இ-நாம் செயலி மூலம் ஏலம் நடைபெற்றது, விவசாயிகளுக்கு விற்பனை தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது
- ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா்.
வெள்ளகோவில் :
முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு 2,004 கிலோ எடையிலான தேங்காய் வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 23.55.
கொப்பரை 1,544 கிலோ வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 60.10 முதல் ரூ. 81.55 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 80.20.ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.67 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
- ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங் காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குனரும், முதுநிலை செயலாளர் தலைமையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது.
- மொத்தம் 2 டன் எடை யுள்ள கொப்பரை தேங்காய் ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப் பாளர் பிரபாவதி தெரிவித்தார்.
சேலம்:
சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங் காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குன ரும், முதுநிலை செயலாளருமான கண்ணன் தலைமை யில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் 20 விவசா யிகளும், சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட் சமாக 55 ரூபாய் 75 காசுக்கும், அதிகபட்சமாக 82 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 2 டன் எடை யுள்ள கொப்பரை தேங்காய் ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப் பாளர் பிரபாவதி தெரிவித்தார்.
- கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
- கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தேங்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது.
சேலம்:
தமிழகத்தில் பொள்ளாச்சி, சேலம், உடுமலைப்பேட்டை, பெருந்துறை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவிலும் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் அனைத்து பகுதிகளிலும் தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய் விலை சரிய தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ தேங்காய் ரூ.32 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து சேலம் தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இதனை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தேங்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து கூடியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு டன் தேங்காய் ரூ.30 ஆயிரத்திற்கு விற்றது. தற்போது டன்னுக்கு ரூ.4 ஆயிரம் சரிந்து ரூ.26 ஆயிரம் என விற்பனை செய்யப்படுகிறது. சில்லரையில் சிறிய அளவுள்ள தேங்காய் ரூ.8 என்றும், நடுத்தர அளவு ரூ.10 முதல் ரூ.15 என்றும், பெரிய தேங்காய் ரூ.18 முதல் ரூ.20 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தேங்காய் வரத்து அதிகரிக்கும். அப்போது மேலும் விலை சரிய வாய்ப்புள்ளது என்றனர்.
- கடந்த 3-ந்தேதி பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ேதங்காய் கொள்முதல் பணி தொடங்கப்பட்டது.
- இதில் 15 விவசாயிகளிடமிருந்து 5 மெ.டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் விற்பனனக்குழு செயலாளர் சரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட தஞ்சாவூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் நடப்பாண்டு அரவை கொப்பரை தேங்காய்யானது 6200 மெ டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிலோ ஒன்றிற்கு ரூ. 108.60 என்ற வீதத்தில் கொள்முதல் பணி கடந்த 1-ந்தேதி தொடங்கப்பட்டு வருகிற செப்டம்பர் 30-ந்தேதி வரை 6 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில், கடந்த 3-ந்தேதி பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ேதங்காய் கொள்முதல் பணி தொடங்கப்பட்டது.
இதில் 15 விவசாயிகளிடமிருந்து 5 மெ.டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
நிகழ்விற்கு அண்ணா துரை எம்.எல்.ஏ, தஞ்சாவூர் விற்பனைக் குழு செயலாளர் சரசு, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் மார்டின் எட்வர்ட் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை ேதங்காய் விற்பனை செய்ய முன்வரும் விவசாயிகள் கொப்பரை ேதங்காய்யின் ஈரப்பதம் 6 சதவீதற்கு குறைவாகவும், பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் 10 சதவீதத்திற்குள்ளும், சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லுகள் 10 சதவீதத்திற்கு குறைவாகவும் குறைந்தபட்ச சராசரி தரத்துடன் இருக்குமாறும் உறுதி செய்து சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் மேற்கூறிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி விற்பனை செய்து பயனடையலாம். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கொப்பரை க்குரிய கிரயத் தொகையானது தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இைணயம் மூலம் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று தேங்காய் பருப்பும், வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலமும் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
நேற்று 124 விவசாயிகள் கலந்து கொண்டு 51 ஆயிரத்து 850கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதிகளை சேர்ந்த 11 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.81.65-க்கும், குறைந்தபட்சம் ரூ.59.15-க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.37 லட்சத்து 39 ஆயிரத்து 804-க்கு ஏலம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
- விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
- தென்னங்கன்று மற்றும் வேளாண் கருவிகள் ஆகியவை உரிய நபர்களிடம் சேர்ந்துள்ளதா என ஆய்வு.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்ட திட்ட செயல்விளக்கங்களைகள ஆய்வு செய்து உதவி வேளாண்மை அலுவலர்கள் பணியை வேளாண்மை துணை இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் உதவி இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஏரி வேலூர் கிராமத்தில் பருத்தியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல்விளக்கம் திடல் ஆகியவற்றை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட விவசாயியிடம் திட்டம் பற்றி விளக்கி ஆலோசனை வழங்கினர்.
அரித்துவாரமங்கலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மேலும் ஆலங்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் ஆலங்குடி, நார்தாங்குடி, ஆகிய பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தென்னங்கன்று மற்றும் வேளாண் கருவிகள் ஆகியவை உரிய நபர்களிடம் சேர்ந்துள்ளதா ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது வலங்கைமான் வட்டார வேளாண்மை அலுவலர் சூர்யமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவலிங்கம், சரவணன், சிரஞ்சீவி, சப்தகிரிவசன் உடன் இருந்தனர்.