என் மலர்
நீங்கள் தேடியது "companies"
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
- பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் 103-வது ஆண்டு அமைப்பு நாள் நிகழ்ச்சி மாவட்டத்தில் அனைத்து சங்க கிளைகள் முன்பாகவும் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
தஞ்சையில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்சேவையா தலைமை வகித்தார். மாநில செயலாளர்சந்திரகுமார் அமைப்பு நாள் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து கீழவாசல் கட்டுமான சங்க கொடியினை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன் ஏற்றி வைத்து சிறப்பித்தார்.
அரசு போக்குவரத்துக் கழகம் கரந்தை புறநகர் பணிமனை, அரசு போக்குவரத்து கழகம் ஜெபமாலைபுரம் தஞ்சை நகர கிளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏ. ஐ .டி. யூ. சி. அமைப்பு நாள் கொடியேற்றப்பட்டது.
இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் துரை மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, தலைவர் மல்லி ஜி.தியாகராஜன், அரசு போக்குவரத்து கழக சங்க பொதுச் செயலாள ர்தாமரைச்செல்வன், பொருளாளர்ராஜமன்னன்,
- ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் பொங்கல் விளையாட்டு விழா நடந்தது
- அனைத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.
ராஜபாளையம்,
ராம்கோ குரூப் பஞ்சாலை பிரிவை சேர்ந்த ராஜபாளையம் மில்ஸ், ஸ்பின்டெக்ஸ்ட், ராஜபாளையம் டெக்ஸ்டைல்ஸ் (பெரு மாள்பட்டி), ராஜபாளையம் மில்ஸ் -பேப்ரிக் டிவிசன், ஸ்ரீவிஷ்ணு சங்கர் மில், ஸ்ரீராம்கோ ஸ்பின்னர்ஸ், சந்தியா ஸ்பின்னிங் மில், ராஜபாளையம் டெக்ஸ்டைல் (சுப்பிர மணியபுரம்) ஆகிய நிறுவனங்களுக்கான பொங்கல் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் மனமகிழ் மன்றத்தின் விளையாட்டு மைதானத்தில் நடந்தன.
ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் பி.வி.நிர்மலா ராஜூ, இயக்குநர்கள் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா, என்.ஆர்.கே.ராம்குமார் ராஜா, ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் நிறு வனங்களின் இயக்குநர்கள் மற்றும் ராம்கோ குரூப் நூற்பாலைகளின் தலைவர் என்.மோகனரங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் 15 வருடம் முதல் 40 வருடம் வரை சர்வீஸ் பூர்த்தி செய்த தொழிலாளர்கள் மற்றும் அதிக வருடம் ஊதிய இழப்பின்றி பணியாற்றிய 1226 தொழிலாளர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 41.93 லட்சம் வழங்கப்பட்டது. அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 2176 தொழிலாளர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
ராம்கோ குரூப் நூற்பாலைகளின் துணை தலைவர் (மனிதவளம்) என்.நாகராஜன் வரவேற்றார். தொழிற்சங்கத் தலைவர்கள் என்.கண்ணன் (எச்.எம்.எஸ்.), ஆர்.கண்ணன் (ஐ.என்.டியூ.சி.), பி.கே.விஜயன் (ஏ.ஐ.டி.யூ.சி.), எஸ்.கிருஷ்ணசாமி (எஸ்.வி.எஸ்.எம். மில் யூனியன்) ஆகியோர் பேசினர்.
உற்பத்தித் திறன் அதிகரிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, செலவினங்களை கட்டப்படுத்துதல் ஆகி யவற்றின் அடிப்படையில் எக்செல் அவார்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பேசுகையில், நூற்பாலைகள் தற்போது மோசமான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறது. இருந்தாலும் ராம்கோ நிறுவனத்திற்கு என்று மதிப்பு உள்ளது. கடந்த முறை ஐரோப்பா நாடுகளான இத்தாலி, ஜெர்மன் நாட்டிற்கு சென்று வாடிக்கையாளர்களை சந்தித்தபோது, நல்ல தரம், குறித்த காலத்தில் டெலிவரி மற்றும் தொடர்ச்சியான சேவைகளை நாம் செய்து வருவதால்தான் நம்மிடம் வணிகம் செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்கள் என்றார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜபாளை யம் மில்ஸ் துணை தலைவர் (மனிதவளம்) நாகராஜன் மற்றும் அனைத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.
- 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகை புரிகின்றன.
- தஞ்சையை சுற்றியுள்ள பிற கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்ப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக மாணவர் நல மையமும் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையமும் அஸ்கார்டியா பவுண்டேசன் நிறுவனமும் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மொழிப்புலத்தில் நடை பெறுகிறது.
இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகை புரிகின்றன.
இதில் தமிழ்ப் பல்கலை க்கழக மாணவர்களும், தஞ்சை யைச் சுற்றி யுள்ள பிற கல்லூரி, பல்கலைக்கழக மாணவ ர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
- வணிகவரி 10 சதவீத்தில், 9 சதவீதம் திரும்ப வழங்கப்பட்டது.
- நிலுவை வரியை செலுத்த கேட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
திருப்பூர் :
திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பனியன் வர்த்தகம் நடக்கும் போது சி-பார்ம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் செலுத்திய வணிகவரி 10 சதவீத்தில், 9 சதவீதம் திரும்ப வழங்கப்பட்டது. நடைமுறை சிக்கலால் சி-பார்ம் வழங்குபவர், 1 சதவீதம் மட்டும் வரி செலுத்த வழிவகை செய்யப்பட்டது.
கடந்த 2019 முதல் ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்ததால் சி-பார்ம் பிரச்னை மறைந்தது. சிறு, குறு உற்பத்தியாளர்களும், முறையாக ஜி.எஸ்.டி., பதிவு செய்து வர்ததகம் செய்து வருகின்றனர். பழைய கணக்குகளை சரிபார்த்த வணிகவரித்துறை, சி-பார்ம் கொடுக்காமல் ஒரு சதவீதம் மட்டும் வரி செலுத்தியவர்கள், நிலுவை வரியை செலுத்த கேட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் நோட்டீஸ் அனுப்பி வருகிறது.இது குறித்து திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கூறுகையில், சி-பார்ம் சமர்ப்பிக்காத நிறுவனங்கள் வரி நிலுவையை செலுத்த வேண்டுமென வணிக வரித்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒரு சதவீத வரியை செலுத்திவிட்டன. பல்வேறு காரணத்தால் சி-பார்ம் சமர்ப்பிக்க இயலவில்லை. அதாவது அரசுக்கு வழக்கமாக செலுத்த வேண்டிய வரியை செலுத்திவிட்டனர். எனவே சி-பார்ம் பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என்றனர்.
- இயக்க விவரங்களை தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து முன் அனுமதி பெறவேண்டும்.
- வணிக நிறுவனம், உணவு நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
திருப்பூர்:
தேசிய விடுமுறை நாட்களில் இயங்கும் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும். அல்லது மாற்று விடுப்பு வழங்கவேண்டும். இயக்க விவரங்களை தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து முன் அனுமதி பெறவேண்டும்.
மே தினமான கடந்த 1ந் தேதி, அனுமதி பெறாமல் இயங்கிய நிறுவனங்கள் குறித்து, திருப்பூர் தொழிலாளர் துறை அமலாக்க உதவி கமிஷனர் (பொறுப்பு) செந்தில்குமரன் தலைமையில் தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் நகர், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதி கடைகள், வணிக நிறுவனம், உணவு நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 35 கடைகள், நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 23 நிறுவனங்கள், 38 உணவு நிறுவனங்களில் நடத்திய ஆய்வில், 30 என 53 நிறுவனங்கள் முறையான அனுமதி பெறாமல் இயங்கியது கண்டறியப்பட்டது. அந்நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும்
- 95 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 53 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்
தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோர் அறிவுரையின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருப்பூர் மாநகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய பண்டிகை விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று, பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அவ்வாறு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என்று ஆய்வு நடத்தினார்கள்.
இதில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 52 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 32 உணவு நிறுவனங்கள், 11 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 95 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 53 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- கடந்த ஒரே மாதத்தில் [ஜூலையில்] சுமார் 380 நிறுவனங்களில் இருந்து 1,90,9049 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- Unacademy, Pocket FM,WayCool உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக பணி நீக்கத்தில் ஈடுபட்டுள்ளன.
தொழிநுட்ப நிறுவனங்களில் லே ஆப் எனப்படும் ஊழியர்கள் பணி நீக்கம் சர்ச்சைக்குரிய நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் தங்கள் பணியின் நிலைத்தன்மை குறித்த அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர்.
மறுபுறம் இந்தியா போன்ற இளம் தலைமுறையினர் அதிகம் இருக்கும் ஒரு நாட்டில் பட்டதாரிகளைக் குறைந்த சம்பளம் கொடுத்து பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் செயல் என்ற விமர்சங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
ஆனால் அரசுகளுக்கும் அதிகார மையங்களுக்கும் மிகவும் நெருக்கமாக உள்ள இந்நிறுவனங்கள் லே ஆப்களை தொடரவே செய்கிறது. அந்த வகையில் உலகம் முழுவதிலும்கடந்த ஒரே மாதத்தில் [ஜூலையில்] சுமார் 380 நிறுவனங்களில் இருந்து 1,90,9049 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஒரே மாதத்தில் 34 நிறுவனங்களால் மொத்தம் 8,383 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக Unacademy, Pocket FM,WayCool உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக பணி நீக்கத்தில் ஈடுபட்டுள்ளன.
பொருளாதார நிச்சயத் தன்மை இல்லாதது, கொரோனா காலத்தில் நடந்த அதிக ஊழியர் சேர்க்கை , வணிக லாப நோக்கம் உள்ளிட்ட காரணங்களாலேயே சமீப காலங்களாக பணிநீக்கம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
- இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை பார்க்கும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
- இத்திட்டம் ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் என நிறுவனங்கள் கூறியுள்ளது.
வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.
அவ்வகையில், இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்தில் இந்த திட்டம் வெற்றிபெற்றுள்ள நிலையில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பிரிட்டனை சேர்ந்த 200 நிறுவனங்கள் நிரந்தரமாக நடைமுறைப்படுத்தி உள்ளன. இந்த 200 நிறுவனங்களில் மொத்தமாக 5000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரத்திற்கு 4 நாட்கள் பணிபுரிவதால் ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாகவும், நிறைவுடனும் வாழ முடியும் என தெரிவித்துள்ள நிறுவனங்கள், இது ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளது.
- தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டப்படி, தொழில் நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.
- முறைப்படி தகவல் தெரிவிக்காமல், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தால் அந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை அரசு முதன்மை செயலாளரும் தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் உத்தரவிட்டிருந்தார்.
நெல்லை:
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டப்படி, தொழில் நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பீடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், தொழிலாளர் துணை ஆய்வர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு முறைப்படி தகவல் தெரிவிக்காமல், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தால் அந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை அரசு முதன்மை செயலாளரும் தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் மற்றும் நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி தேசிய விடுமுறை நாளான கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தலைமையில் துணை ஆய்வர்கள், உதவி ஆய்வர்களுடன் கூட்டா்வு நடத்தப்பட்டது. 79 கடைகள், நிறுவனங்கள், 57 உணவு நிறுவனங்கள், 15 மோட்டார் நிறுவனங்கள், 15 பீடி நிறுவனங்கள் என மொத்தம் 166 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 105 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தெரிவித்து உள்ளார்.
- மதுரை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 125 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்தார்.
மதுரை
தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர்/தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், உத்தரவின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின் படியும் மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுரை மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேசிய விடுமுறை தினங்களில் கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் உரிய படிவத்தில் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
அவர்களுக்கு வேலை அளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும். தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வின் போது மேற்கண்ட சட்ட விதிகளை அனுசரிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 78 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 47 உணவு நிறுவனங்கள் ஆக மொத்தம் 125 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- தொழில் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என தொழில் முனைவோர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
- 2 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தை ஆடை தயாரிப்புக்காக இந்த ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
கொரோனா தொற்று, அபரிமிதமாக உயர்ந்த நூல் விலை, ரஷ்யா - உக்ரைன் போர் என அடுத்தடுத்து தொடரும் பிரச்சினைகளால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை குறைந்துள்ளது.இருப்பினும் தொழில் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என தொழில்முனைவோர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அதற்கு அச்சாரமாக பிரான்ஸ் நாட்டு வர்த்தகரிடமிருந்து, 2023ம் ஆண்டுக்கான கோடை காலத்துக்காக 1.75 லட்சம் எண்ணிக்கையில் ஆடை தயாரிப்பு ஆர்டர் திருப்பூருக்கு கிடைத்துள்ளது. ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு வர்த்தக முகமை நிறுவனம் பிரான்ஸ் வர்த்தகரிடமிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு இந்த ஆர்டரை பெற்று தந்துள்ளது.ஆர்டர் வழங்கிய பிரான்ஸ் வர்த்தகரின் தர ஆய்வு குழுவினரான சில்வின் மார்ட்டின், எலிஸ் பெலாட், லாரா ஆகியோர் திருப்பூர் வந்து பின்னலாடை தயாரிப்பு பணிகள், துணி, ஆடையின் தரத்தை ஆய்வு செய்தனர்.
இது குறித்து வர்த்தக முகமை நிறுவன பிரதிநிதி சசீதரன் கூறியதாவது:-
வழக்கத்தைவிட 30 சதவீதம் குறைவாக 2023 ம் ஆண்டு கோடைக்கான ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வழங்கியுள்ளனர். 2 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தை ஆடை தயாரிப்புக்காக இந்த ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஸ்டைலுக்கும் வெவ்வேறு வண்ணம் என்கிற நிலை மாறி, ஒரு ஸ்டைலில் இரண்டு வண்ணங்களில் ஆடை தயாரிக்க கோருகின்றனர். இதனால் டிசைன்களை உருவாக்கும் செலவினம் குறைகிறது. நூல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆடை விலையையும் சற்று உயர்த்தி வழங்குகின்றனர். எத்தகைய சூழலிலும் குழந்தைகளுக்கான ஆடை தேவை குறைவதில்லை என்றனர்.
- தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நவீன சலவையகங்கள் அமைக்கப்பட உள்ளது. இதன்படி நவீன சலவையகங்கள் ஏற்படுத்த சலவைத் தொழில் தெரிந்த 10 நபர்களைக் கொண்ட குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது.
இந்த குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர் மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள இத்தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த மக்கள் ஒரு குழுவாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.