என் மலர்
நீங்கள் தேடியது "Computer"
- விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.
- கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வைத்து எனது தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி கம் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறி யியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிய கழகம், கூட்டுறவு நிப்பாசனம், கால்நடை, மிஸ்சாரம் போன்ற விவ சாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவி க்குமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறார்கள்.
விவசாயிகள் குறைதீ ர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து க்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டு க்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்கும்படி கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெறலாம்.
கொரோனாதொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் சமூக இடைவெ ளியுடன், முகக்கவசம் அணிந்து அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.1 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், பிரிண்டர் எந்திரம் வாங்க காசோலை வழங்கப்பட்டது.
- காசோலையை கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.ஆர்.எழிலி தலைமையில் கல்லூரி பேராசிரியைகள் பெற்றுக்கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கபடிக்கழகத்தின் சார்பில் திருப்பூர் எல்.ஆர்.ஜி.அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், பிரிண்டர் எந்திரம் வாங்க காசோலை வழங்கப்பட்டது. காசோலையை மாவட்ட கபடிக்கழக செயலாளரும், மாநில கபடிக்குழு பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகத்திடம் இருந்து கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.ஆர்.எழிலி தலைமையில் கல்லூரி பேராசிரியைகள் தமிழ்மலர், நளினி, அனுராதா, ஜெ.யுவராணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
உடன் மாவட்ட நடுவர் குழு தலைவர் நல்லாசிரியர் ஆர்.முத்துசாமி, மாவட்ட கபடிக்குழு கவுரவ உறுப்பினர் சச்சின் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் மாடல்கள் உருவாக்கப்பட்டு வருவது சமீபத்தில் அம்பலமாகி இருக்கிறது.
- புதிய ஆப்பிள் மேக் சாதனம் M2 மேக்ஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய அடுத்த தலைமுறை மேக் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய சாதனங்கள் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என புளூம்பர்க் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருந்தார். புது மேக் மாடல்கள் வெளியீடு பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், இதுவரை ஆப்பிள் அறிவிக்காத M2 மேக்ஸ் பிராசஸர் கொண்ட புது மேக் மாடல் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கீக்பென்ச் 5 டேட்டாபேசில் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய மேக் மாடல் "Mac14.6" எனும் பெயர் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ஆப்பிள் M2 மேக்ஸ் CPU கொண்டிருக்கும்.

பென்ச்மார்க்கிங் வலைதள விவரங்களின் படி M2 மேக்ஸ் பிராசஸரில் 12-கோர் CPU, 3.54GHz மற்றும் 96 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் சிங்கில் கோரில் 1853 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 13 ஆயிரத்து 855 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. மேக்புக் ப்ரோ மாடலில் உள்ள M1 மேக்ஸ் பிராசஸரில் 10-கோர்கள், 3.2GHz டியூனிங்கில் இயங்குகின்றன. இவை சிங்கில் கோரில் 1746 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டிங்கில் 12 ஆயிரத்து 154 புள்ளிகளை பெற்று இருக்கிறது.
அந்த வகையில் கீக்பென்ச் முடிவுகளின் படி புதிய M2 மேக்ஸ் பிராசஸர் அதன் முந்தைய வெர்ஷனை விட 14 சதவீதம் வேகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய M2 மேக்ஸ் முந்தைய M1 மேக்ஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்த M2 சிப் புதிய மேக்புக் ஏர் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸரின் வேகம் மற்றும் செயல்திறன் அசாத்தியமாகவே உள்ளது.
- மத்திய, மாநில அரசு மற்றும் பெட்கிராட் இணைந்து தையல் மற்றும் டி.டி.பி. கம்ப்யூட்டர் 4 மாத இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
- பயிற்சிக்கு பின் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.
வாடிப்பட்டி
மத்திய, மாநில அரசு மற்றும் பெட்கிராட் இணைந்து மதுரை எஸ்.எஸ் காலனியில் தையல் மற்றும் டி.டி.பி. கம்ப்யூட்டர் 4 மாத இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் அடிப்படை கணினி பயிற்ச்சி, பேஜ் மேக்கர் கோரல்டிரா, போட்டோசாப், ஸ்போக்கன் இங்கிலீஷ், திறன் மேம்பாட்டு பயிற்சியும், அடிப்படை தையல் முதல் பவர் மெஷினில் அனைத்து விதமான ஆடைகளும் மற்றும் ஆரி ஜர்தோசி, எம்பிராய்டிங் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதில் 18 வயது 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரும் கணினி பயிற்சிக்கும், பெண்கள் தையல் பயிற்சிக்கும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியாளர்களுக்கு இலவச சீருடை, பாட புத்தகம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சிக்கு பின் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, பெட்கிராட், வடக்கு வாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை.தொடர்புக்கு 89030 03090.
- சியோமி நிறுவனம் சீன சந்தையில் ஏராளமான புது சாதனங்களை ஒரே நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது.
- சியோமி 13 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் சியோமி மினி PC அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி சியோமி பட்ஸ் 4, சியோமி 10 ஜிகாபிட் ரௌட்டர் உள்ளிட்ட சாதனங்களும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. ஏராளமான புது சாதனங்களில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகவும் சக்திவாய்ந்த கம்ப்யூட்டரை சியோமி நிறுவனம் அளவில் சிறியதாக உருவாக்கி அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய சியோமி மினி PC அளவில் 112x112*38mm ஆக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த எடை 437 கிராம்கள் ஆகும். இதன் மெயின் பாடி அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் CNC, மெட்டல் சாண்ட்பிலாஸ்டிங் மற்றும் அனோட் ஆக்சிடேஷன் என ஏராளமான வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக சியோமி மினி PC தோற்றத்தில் மிகவும் எளிமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது.

மினி PC மாடலில் சியோமி நிறுவனம் 12th Gen இண்டெல் கோர் i5 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக் சப்போர்ட் வழங்கி இருக்கிறது. இத்துடன் 16 ஜிபி 3200MHz DDR4 ரேம், 512 ஜிபி PCIe NVM2 SSD, பின்புறம் 2x HDMI 2.1 இண்டர்ஃபேஸ், 1x 2.5G நெட்வொர்க் போர்ட், 1x யுஎஸ்பி 3.0 ஜென் 2, 1X யுஎஸ்பி 2.0 போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் 2x யுஎஸ்பி 3.0 ஜென் 2 போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி மினி PC விண்சோஸ் 11 ஹோம் சைனீஸ் எடிஷன் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் 100 வாட் வரையிலான பவர் இன்புட் வசதி உள்ளது. இதன் விலை 531 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 43 ஆயிரத்து 906 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இதன் விற்பனை சீன சந்தையில் துவங்குகிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் மினி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
- புது மேக் மினி மாடல்களில் M2 மற்றும் M2 ப்ரோ சிப்செட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடல்களுடன் புது மேக் மினி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது மேக் மினி மாடல்களில் M2 மற்றும் M2 ப்ரோ சிப்செட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அடுத்த தலைமுறை சிபியு மற்றும் ஜிபியு, அதிக மெமரி பேண்ட்வித், சக்திவாய்ந்த மீடியா என்ஜின் உள்ளது.
M2 சிப்செட்-இல் 8-கோர் சிபியு, நான்கு அதீத செயல்திறன் கோர்கள், 10-கோர் ஜிபியு உள்ளது. இது புது மேக் மினி மாடலில் ப்ரோ-ரெஸ் அக்செலரேஷன் வழங்குகிறது. புதிய M2 பிராசஸர் ஒரே சமயத்தில் இரண்டு 8K ப்ரோ-ரெஸ் 422 வீடியோ, அதிகபட்சம் 12 4K ப்ரோ-ரெஸ் 422 வீடியோ ஸ்டிரீமிங் செய்ய முடியும்.

இதனுடன் அறிமுகமாகி இருக்கும் புது M2 ப்ரோ சிப்செட் அதிகபட்சம் 12-கோர் சிபியு மற்றும் எட்டு அதீத செயல்திறன் கோர்கள், அதிகபட்சம் 19-கோர் ஜிபியு, 200 ஜிபி மெமரி பேண்ட்வித் மற்றும் அதிகபட்சம் 32 ஜிபி மெமரி உள்ளது. அடுத்த தலைமுறை நியூரல் என்ஜின் M1 மாடலை விட 40 சதவீதம் வேகமானது ஆகும்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
மேக் மினி M2 8-கோர் சிபியு, 10-கோர் ஜிபியு, 8 ஜிபி யுனிஃபைடு மெமரி, 256 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 59 ஆயிரத்து 900
மேக் மினி M2 8-கோர் சிபியு, 10-கோர் ஜிபியு, 8 ஜிபி யுனிஃபைடு மெமரி, 512 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 79 ஆயிரத்து 990
மேக் மினி M2 ப்ரோ 10-கோர் சிபியு, 16-கோர் ஜிபியு, 16 ஜிபி யுனிஃபைடு மெமரி, 512 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900
புதிய மேக் மினி மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஜனவரி 24 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு ஆப்பிள் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம், ஆப்பிள் ஸ்டோர் ஆப் உள்ளிட்டவைகளில் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட உலகம் முழுக்க 27 நாடுகளில் புது மேக் மினி மாடல்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன.
- ஜாதி சான்றிதழ், வருமானம் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெற்று தரப்படும்.
- கணினி செயலில் உள்ளீடு செய்தால் மாநகராட்சியால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாநக ராட்சி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று இ -சேவை மையம் தொடங்கப்பட்டது.
இதனை ஆணையர் சரவணக்குமார் முன்னிலையில் மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-
இ சேவை மையத்தில் ஆதாரில் பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், குடும்ப தலைவர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, அட்டை நகல், சிறுபான்மையினருக்கான உதவித்தொகை, முன்னாள் ராணுவத்திற்கான உதவித்தொகை, தேசிய கல்வி உதவித்தொகை பெறுதல், வேலைவாய்ப்பு பதிவு மற்றும் வேலை வாய்ப்பு பதிவை புதுப்பித்தல், ஜாதி சான்றிதழ், வருமானம் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெற்று தரப்படும்.
பொது மக்களுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
தங்களது வார்டுகளில் ஏற்படும் அனைத்து விதமான கோரிக்கைகள் மீது தொடர்ந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திடவும் சரி செய்திடவும் ஸ்மார்ட் தஞ்சை என்ற கணினி செயலில் உள்ளீடு செய்தால் மாநகராட்சியால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, கண்காணிப்பாளர் ஜெயக் குமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.4.88 லட்சம் மதிப்பில் டெஸ்க், கம்யூட்டர்ஸ் பிரிண்டர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
- ரூ.4.25 மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மேஜை பென்ஞ்ச், பீரோ போன்றவை வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
கொரடாச்சேரி ஒன்றியம், எருக்காட்டூர் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.4.53 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.2.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையையும் கொரடாச்சேரி ஒன்றிய துணை தலைவர் பாலசந்தர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ராஜா, ஆசிரியர் மன்ற மாநில தலைவர் ரவி, ஓ.என்.ஜி.சி பொது மேலாளர் சரவணன், துணை பொது மேலாளர் வேணுகோபால், சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி சந்திரசேகரன், தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியை புவணா, சமூக பொறுப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், எருக்காட்டூர் ஊராட்சி துணை தலைவர் கீதா சங்கர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், கே.ஆர்.டி.எஸ். நிறுவன பொறுப்பாளர் கோவிந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் ஒன்றியம், அடியக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.4.88 லட்சம் மதிப்பில் டெஸ்க், கம்யூட்டர்ஸ் பிரிண்டர், பீரோ தொலைக்காட்சி போன்ற பொருட்கள் அர்ப்பணா என்.ஜி.ஓ. மூலம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சத்திய நாராயணன், தலைமை ஆசிரியரும், பள்ளி மேலான்மைக்குழு தலைவருமான ஆயிஷத்துல் ஜாமியா மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
புலிவலம் தொடக்கப்ப ள்ளிக்கு ரூ.4.25 மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மேஜை பென்ஞ்ச், டி.வி நாற்காலி, மின்விசிறி, பீரோ போன்றவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் கார்த்தி, ஊராட்சி செயலாளர் தங்கதுரை, தலைமை ஆசிரியர் வடுகநாதன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து நிகழ்ச்சியிலும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- இ-சேவை மையத்துக்கான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது.
- மாவட்டத்தில் உள்ள 350 இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கான பயிற்சிக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 350 இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள். அரசு கேபிள் டி.வி.வாரியம், தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கம், கிராம தொழில் முனைவோர் சார்பில் நடக்கும் இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள்.
மாவட்ட மின்னாளுமை முகமை மேலாளர் முத்துக்குமார் பயிற்சி அளித்தார். கூட்டத்தில் அவர் பேசும்போது, மாவட்டத்தில் இ-சேவை மையம் அதிகரித்து வருவதால் போட்டியும் அதிகரித்துள்ளது. இ-சேவை மையத்தினர் அதற்கு தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு சான்றிதழுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. அனைத்து மையங்களிலும் இரண்டு திரைகளை கொண்ட கணினியை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் விண்ணப்பதாரர் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, இ-சேவை மையத்தினர் தட்டச்சு செய்யும்போது, அதை எதிர்புறம் உள்ள விண்ணப்பதாரர் பார்த்து தவறு இருந்தால் அதை கூறி திருத்த முடியும். சான்றிதழுக்கான கட்டண பட்டியலை இ-சேவை மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றார்.
- பள்ளியின் அலுவலக கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தனர்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை சீவலப்பேரி அருகே உள்ள தோணிக்கரையில் ஆர்.சி. மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக அலெக்ஸ் ஜெரால்டு வேதநாயகம் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியின் அலுவலக கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது புகாரின்பேரில் சீவலப்பேரி போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கம்ப்யூட்டர், ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு கணினி சான்றிதழ் தேர்வு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) நடத்தப்படுகிறது.
- 2023-ம் ஆண்டின் ஆகஸ்டு பருவ தேர்வுக்கான அறிவிப்பை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.
சேலம்:
அரசு கணினி சான்றிதழ் தேர்வு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டின் ஆகஸ்டு பருவ தேர்வுக்கான அறிவிப்பை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.
அதன்படி, அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தை பயன்படுத்தி வருகிற ஜூன் 14-ந்தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க லாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்து ெகாள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் உதவி சுற்றுலா தேர்வுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கணினி அறிவியல் பட்டதாரியாக இருந்தால் மட்டுமே கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய மேக் ப்ரோ அறிமுகம்.
- 2023 மேக் ப்ரோ மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய M2 அல்ட்ரா பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது M சீரிஸ் பிராசஸர்களுடன் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்திய சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2023) தனது சக்திவாய்ந்த மேக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. புதிய மேக் ப்ரோ மாடலில் M2 அல்ட்ரா சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. M2 அல்ட்ரா பிராசஸர் கொண்ட ஆப்பிள் மேக் ப்ரோ மாடல்களின் பென்ச்மார்க் விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி 2023 மேக் ப்ரோ மாடல் வீடியோ எடிட், 3டி ரென்டரிங் மற்றும் அறிவியல் கணினியியல் என்று தொழில்ரீதியாக அதிக திறன் கொண்ட சாதனங்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் M2 அல்ட்ரா பிராசஸர் கொண்டிருக்கிறது. இது ஆப்பிள் இதுவரை உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகும்.

M2 அல்ட்ரா பிராசஸரில் 24 சி.பி.யு. கோர்கள், அதிகபட்சம் 76 ஜி.பி.யு. கோர்கள் மற்றும் 32-கோர் நியூரல் என்ஜின் உள்ளது. இதன் மூலம் இந்த பிராசஸர் புதிய மேக் ப்ரோ மாடலை சந்தையில் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த கணினியாக மாற்றியுள்ளது. இது எந்த அளவுக்கு சக்தி கொண்டிருக்கிறது என்பதை விளக்கும் வகையில் பென்ச்மார்க் டெஸ்டிங் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன்படி கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில், M2 அல்ட்ரா சிப்செட் கொண்ட புதிய மேக் ப்ரோ மாடல் சிங்கில் கோர் டெஸ்டில் 2 ஆயிரத்து 794 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 21 ஆயிரத்து 453 புள்ளிகளையும் பெற்று அசத்தி இருக்கிறது. இது முந்தைய தலைமுறை மேக் ப்ரோ மாடலை விட அதிவேகமானது ஆகும்.
முந்தைய தலைமுறை ஆப்பிள் மேக் ப்ரோ மாடல் சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 1,378 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டிங்கில் 10 ஆயிரத்து 390 புள்ளிகளையும் பெற்றது. அதன்படி புதிய 2023 மேக் ப்ரோ அதன் முந்தைய வெர்ஷனை விட சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 20 சதவதீம், மல்டி கோர் டெஸ்டிங்கில் 25 சதவீதம் அதிக திறன் கொண்டிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய M2 அல்ட்ரா சிப்செட்டில் இரண்டு M2 மேக்ஸ் பிராசஸர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இதற்காக அல்ட்ரா-ஃபியுஷன் ஆர்கிடெக்ச்சர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய 2023 மேக் ப்ரோ மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.