என் மலர்
நீங்கள் தேடியது "Consecrated"
- பாலாபிஷேகம் செய்து வழிபாடு
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி,
வாணியம்பாடி தொகுதி புல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த மேல்பள்ளத்தூர் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் மண்டல பூஜை நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊர் கவுண்டர் டி.தங்கவேல், தர்மகர்த்தாக்கள் பி.கே. ரவி, மகேந்திரன், ரமேஷ், பூஜாரி பெரிய மாணிக்கம், கோல்கார் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அருள்நாதன், துணைத் தலைவர் செல்லப்பன், வார்டு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்து விழாவை நடத்தினர்.
சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு பால்குடம் ஊர்வலமாக கொண்டு வந்து பாலாபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள சுண்டிவாக்கம் கிராமத்தில் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலை ஊர் மக்கள் சார்பாக புதுப்பிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத 3 கால யாகசாலை பூஜை செய்து, பின்னர் யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் கலசங்களை சுமந்து கொண்டு மேள வாத்தியம் முழங்க வலம் வந்த சிவாச்சாரியார்கள் முத்து மாரியம்மன் கோவில் கோபுரத்தில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
நிகழ்ச்சியை காண சுற்று வட்டார கிராம மக்களும் திரளாக வந்து கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- பல்வேறு பூஜைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் சுண்ணாம்புப்பேட்டையில் வினைதீர்க்கும் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோபூஜைகள் விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட இந்நிகழ்ச்சியில் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவில் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் கள்ளூர்ரவி, நத்தம்பிரதீஷ், ரோட்டரி சங்க ஆளுநர் ஜே.கே.என்.பழனி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை மாயகேசவலுநாயுடு குடும்பத்தினர்கள், விழா குழுவினர் பிரதர்ஸ் ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
- விநாயக பெருமானுகுகு பிம்ப சுத்தி, அதிவாச கிரியைகள், சயனாதி வாசம் ,மதியம் 2மணிக்கு கரியுருவான அண்ணலுக்கு யந்திர பிரதிஷ்டை நடைபெற்றது.
- கும்பஸ்தாபனம், கணபதிக்கு கலாகர்ஷனகனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.
வீரபாண்டி:
திருப்பூர் தெற்கு வட்டம் வீரபாண்டி கிராமம் ஏ. பி. நகர் கிழக்கில் ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூர்த்திகளாக விளங்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்க்கை அம்மன், ஸ்ரீ மகாவிஷ்ணு ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நாளை 7-ந்தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி இன்று 6ந்தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் அனுக்ஞை, விக்னேஷ்வர பூைஜ, தன பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. 9 மணிக்கு மூஷிகவாகனனுக்கு முளைப்பாரி எடுத்து உலா வருதல் , காலை 11 மணி முதல் 12 மணிக்குள் சுவாமி கணேசருக்கு கோபுர கலசம் நிறுவுதல், விநாயக பெருமானுகுகு பிம்ப சுத்தி, அதிவாச கிரியைகள், சயனாதி வாசம் ,மதியம் 2மணிக்கு கரியுருவான அண்ணலுக்கு யந்திர பிரதிஷ்டை நடைபெற்றது.
மாலை 4மணி முதல் விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, ம்ருத் சங்கிரஹணம், முளைப்பாரிக்கு பாலிகாஸ்தாபனம், சோமகும்ப ஆவாஹனம், ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல், கும்பஸ்தாபனம், கணபதிக்கு கலாகர்ஷனகனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.
மாலை 6மணி முதல் யாகசாலபிரவேசம், த்வஜ, த்வார, தோரண, கும்ப ஆராதனம், ஆனைமுகனுக்கு அக்னி பிரதிஷ்டை, பிள்ளையாருக்கு முதல் கால ஹோமம், மூலமந்த்ர,தத்வ,நியாச, ஹோமங்கள், திரவியா குதி,பூர்ணாஹூதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை 7-ந்தேதி (திங்கட்கிழமை) காலை7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், த்வஜ, த்வார, தோரண, கும்ப ஆராதனம், நான்மறைகள் போற்றும் நாயகனுக்கு இரண்டாம் கால ஹோமம், பிராண பிரதிஷ்டா ஹோமம், நாடிசந்தானம், ஸ்பர்ஸாஹூதி, மகா பூர்ணா ஹூதி, க்ரஹப்ரீதி, யாத்ராதானம் நடக்கிறது.
காலை 9மணி முதல் ஸ்ரீசெல்வசித்தி விநாயகர் மூலவர், விமானம், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீமகா விஷ்ணு, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, மூஷிகர், பலி பீடம் ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் அபிஷேகம், மகா தீபாராதனை, தசதரிசனம், சங்கடங்கள் தீர்க்கும் சங்கரன் புதல்வனுக்கு சதுர் அன்ன மகா நைவேத்யம்,கஜகர்ணனின் திருச்செவிகளுக்கு கற்கண்டு ,தமிழில் திருமறை விண்ணப்பம், மகா தீபாராதனை, தீர்த்தம், பிரசாதம் வழங்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10-30மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறும். யாகசாலை பூஜைகளை தொட்டம்பட்டி ஜெகநாத அய்யங்கார் மற்றும் குழுவினர் நடத்துகின்றனர்.
- புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது
- ஏராளமானோர் பங்கேற்பு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா கருப்பனூர் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ லட்சுமி நாராயணர் கோவில் மகா கும்பாபிஷேகம் நகராட்சி கவுன்சிலர் குட்டி என்கிற சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஷ்வர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்துபுண்யாஹம், வாஸ்து சாந்தி, கலசஸ்தாபிதம், அங்குரார்பனம், முதல் கால கலச பூஜை, விசேஷ திரவ்ய ஹோமங்கள். பூர்ணாஹுதி, வேதம், கீதம் தீபாராதனை, 2, கால பூஜை, புண்யாஹம், 3 ம் கால கலச பூஜை, மஹா சாந்தி ஹோமங்கங்கள தம்பதிகள் சங்கல்பம், மஹா பூர்ணாஹுதி, மேளதாளங்களுடன் கலசம் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து முக்கிய நிக ழ்வாக கோபுரகலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
அப்போது கூடி இருந்த பக்தர்கள் நாராயணா, கோவிந்தா, என கோஷமிட்டனர், நிகழ்ச்சியில் எம் எல்ஏ க்கள், ஏ. நல்லதம்பி, மதியழகன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம், ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். பின்னர் லட்சுமி நாராயணர் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சாமி திருக்கல்யாணம் வானவேடிக்கைகள் நடைபெற்றது.
- 3 கால யாக பூஜைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அடுத்த புதுப்பட்டி, கிராமத்தில் கூழ் மாரியம்மன், விநாயகர், முருகர், சிவன், நவகிரக, கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன்மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு 108 கலசம் வைத்து ஆனந்த் ஷர்மா, அய்யர் குழுவினர் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து, 3 கால யாக பூஜைகள் செய்தனர்.
பின்னர் புனித நீர் கலசத்தை மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தில் நீரை ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். பின்னர் சூரிய பகவானுக்கு கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.
- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை பட்டாபிஷேகம் நடக்கிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், அன்னம், வெள்ளி பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (5-ந் தேதி) மாலை 7 மணி அளவில் கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. 6-ந்தேதி காலையில் கார்த்திகை தேரோட்டம் நடைபெறும்.
இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சிறிய வைர தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடிக்க சுவாமி ரத வீதிகள் வழியாக தேர் சுற்றி வந்து நிலைைய அடையும். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றி மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
- அன்னதானம் வழங்கப்பட்டது
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அடுத்த வயலூர், கிராமத்தில் ஐம்பொன் ஐயப்ப சிலை நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. வயலூர் கிராமத்தில் உள்ள திரௌ பதி அம்மன் கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து நவகிரக, மற்றும் ஐயப்ப, விநாயகர், உள்பட 12 புனித நீர் கலசங்களை வைத்து. பல்வேறு மூலிகைகள் மூலம் யாகம் வளர்க்க ப்பட்டு, புனித நீர் கலசங்களை கோவிலை சுற்றி வந்து கோவில் வளாகத்தில் ஐம்பொன் ஐயப்பன் சிலை மீது புனித நீரை ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.
இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு 18 படி கன்னிசாமி பூஜை மற்றும் தெய்வீக நாடகம் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை வயலூர் கிராம ஐய்யப்ப சாமிகள், மற்றும் ஊர் பொதுமக்கள், செய்திருந்தனர்.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
- அன்னதானம் வழங்கப்பட்டது
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த செம்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ தீப்பாஞ்சம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கோபுர கலசம் நிறுவுதல், சுவாமி சிலைகள் நிறுவுதல், முதல் கால வேள்வி பூஜை உள்ளிட்டவை நடந்தது.
இதனைத் தொடர்ந்து கோவில் கோபுர கலசங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
பின்னர் ஸ்ரீசெல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீதீப்பாஞ்சம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
- கொட்டும் மழையில் ஏராளமானோர் தரிசனம்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த வேலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பரமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் ஒன்றியம் வேலூர் கிராமத்தில் சுமார் 1747 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ பரமேஸ்வரர் ஆலயம் 2-ம் நந்திவர்மன் என்ற அரசனால் கட்டப்பட்டது. இந்த ஆலயம் மிகவும் பழமையான ஆலயமாகும் இதனை கிராம பொதுமக்கள் சீர் செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
8-ந் தேதி விக்னேஸ்வர பூஜையும் மற்றும் கணபதி பூஜை உடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் இரண்டு நாள் காலை மாலை யாக பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை யாகசாலை பூஜை முடிவுற்றவுடன் அலங்கரிக்கப்பட்ட கலசங்களில் சேகரிக்கப்பட்ட புனித நீர் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டு கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பிரமேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அருள் சித்தர் அன்பு செழியன் முன்னிலையில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சாமந்தி பார்த்திபன், கவுன்சிலர் சுமதி முனுசாமி, ஆலய உறுப்பினர்கள் சரவணன், ரமேஷ் மோகன்வேல், மோகன், பாஸ்கரன், குமார், நாகப்ப ரெட்டி, ராஜ்குமார், பாண்டியன் நாட்டார், கோவிந்தசாமி, பாபு மற்றும் விழா குழுவினர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
மழை பெய்தாலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஏராளமானோர் தரிசனம்
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
சோளிங்கர்
சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் ஸ்ரீ சவுந்தரநாயகி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோ பூஜை கலசபூஜை யாக பூஜை பூர்ணாஹீதி நடைப்பெற்றது.தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் கோவில் கோபுர கலசத்திற்கும் மூலவர் சுந்தரேஸ்வரர், சவுந்தரநாயகி சாமிக்கு பூஜை செய்யப்பட்ட கலச புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, தொழிலதிபர் பூபாலன், சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் மற்றும் கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- விநாயகர் பூஜை, தீபாராதனை, கோபூஜை, 2-ம் கால யாகபூஜை நடைபெற்றது.
- கருட பகவான் கலசத்தை சுற்றிவர புனிதநீர் கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
மதுக்கூர்:
பட்டுகோட்டை அருகே அருள்மிகு பூர்ணாம்பிகா புஷ்கலாம்பிகை சமேத அருள்மிகு சிந்தாமணி கூத்த அய்யனார் மற்றும் பிடாரி அம்பிகையின் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்தி ற்குட்பட்ட பெரியக்கோட்டை கிராமத்தில் அருள்மிகு பூர்னாம்பிகா, புஷ்கலாம்பிகை அருள்மிகு சிந்தாமணி கூத்த அய்யனார் பிடாரி அம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த திருக்கோயில் சிலை ஒரே கல்லில் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு யாகசாலை உள்ளிட்ட விநாயகர் பூஜை மஹகணபதி ஹோமம் விநாயகர் பூஜை தீபார்த்தனை, கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.
இதையடுத்து பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட கலச நீர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.
இந்த புனித நீரை மங்கல இசையுடன் சிவாச்சாரியார்கள் தலைமையில் சுமந்தபடி கருட பகவான் கலசத்தை சுற்றிவர புனித நீர் கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
நிகழ்ச்சியை பெரிய கோட்டை மதுக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரங்களில் இருந்த பொதுமக்கள் நிறைய பேர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.