என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Constable"
- 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு டி.எஸ்.பி. கிருபா சங்கர் எடுத்திருந்தார்.
- ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பிக்பூர் சர்க்கிள் அதிகாரியாக இருந்தவர் டி.எஸ்.பி. கிருபா சங்கர். இவர் 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தார்.
ஆனால் அப்போது அவர் வீட்டிற்கு வராமல், கான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்துள்ளார். அப்போது அவரது சொந்த மற்றும் அலுவலக மொபைல் போனை அவர் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
அந்த சமயம் தனது கணவனின் போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்ததால் சந்தேகப்பட்ட அவரது மனைவி தனது கணவனை காணவில்லை என்று உன்னாவ் எஸ்.பி.யிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது டி.எஸ்.பி. கிருபா சங்கரின் மொபைல் நெட்ஒர்க்கை சோதித்த போது கான்பூர் ஓட்டலில் அவரது நெட்ஒர்க் செயலிழந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
உடனே கான்பூர் ஓட்டலுக்கு விரைந்த காவல்துறையினர் ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உத்தரபிரதேச அரசு டி.எஸ்.பி. கிருபா சங்கரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.
- காவலர் செந்தில் குமார் சேர்ந்து பாஸ்கரை சரமாரியதாக தாக்கியதாக தெரிகிறது.
- சம்பந்தப்பட்டபோலீசார் மீது உயர் அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த முகவனூர் அருகே உள்ள பாம்பாட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 23). இவரின் தாத்தா மருதை என்பவர் அவரின் சகோதரியான பெரியக்காள் (85) என்பவரை பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த பேரன் பாஸ்கர் பாட்டியை எப்படி முதியோர் இல்லத்தில் சேர்த்தீர்கள் என கேட்டு மருதையிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மருதை வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் மீது புகார் அளித்தார். அதன்படி வையம்பட்டி போலீசார் பாஸ்கரிடம் விசாரித்து உள்ளனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், காவலர் செந்தில் குமார் சேர்ந்து பாஸ்கரை சரமாரியதாக தாக்கியதாக தெரிகிறது.
பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். மறு நாள் பாஸ்கர் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டார். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் சம்பவம் பற்றி கூறி உள்ளார். பாஸ்கரின் தொடை பகுதியில் போலீசார் தாக்கியதில் ரத்த உறைந்து காப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மண ப்பாறை அரசு மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தாத்தா பேரன் தகராறில் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வாலிபரின் காலில் ரத்தம் உறைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டபோலீசார் மீது உயர் அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், காவலர் செந்தில் குமார் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
- 484 ஆண் பயிற்சி காவலர்களுக்கு மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் நேற்று பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.
- பயிற்சி வகுப்புகளை டி.ஜிபி. சைலேந்திரபாபு சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
மேட்டூர்:
தமிழகத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்ற வர்களில் 484 ஆண் பயிற்சி காவலர்களுக்கு மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் நேற்று பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. பயிற்சி வகுப்புகளை டி.ஜிபி. சைலேந்திரபாபு சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
அப்பொழுது அவர் பேசியதாவது:-
பயிற்சி வகுப்புக்கு வந்துள்ள அனைவரும் ஏழை எளிய குடும்பத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளீ ர்கள். பயிற்சிப் பள்ளியில் அளிக்கப்படும் கவாத்து பயிற்சி, சட்ட பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளையும் சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் படித்து சப் -இன்ஸ்பெக்டர், துணை கண்காணிப்பாளர் போன்ற உயர் பதவிகளில் தேர்ச்சி பெற வேண்டும். பொது மக்களிடம் அன்போடு பழக வேண்டும். காவல் நிலையங்களில் பணிபுரியும் பொழுது புகார் தரும் பொதுமக்களிடம் பணிவு டன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
21 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்
பயிற்சி வகுப்பில் தர்மபுரி, தூத்துக்குடி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உட்பட 21 மாவட்டங்களில் இருந்து பயிற்சி காவலர்கள் கலந்து கொண்டார்கள். 7 மாத அடிப்படை பயிற்சியாக கவாத்து பயிற்சி, சட்ட பயிற்சி, துப்பாக்கி சூடு பயிற்சி, ஒழுக்கம், பொது மக்களிடம் அணுகுமுறை பற்றிய சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு அதன் பிறகு தமிழக காவல் துறையில் பணியாற்றுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் ராஜேந்தி ரன் தலைமையில் துணை முதல்வர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் பங்கேற்றனர்.
- சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு படைவீரர் மற்றும் வனக் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கியது.
- தொடர்ந்து வருகிற 11-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.
சேலம்:
சேலம் குமாரசாமிப்பட்டி போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு படைவீரர் மற்றும் வனக் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து வருகிற 11-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னாள் ராணுவத்தினரும் இதில் பங்கேற்கிறார்கள். இன்று முதல் 8-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்த்தல் உள்ளிட்ட முதல் கட்ட தேர்வு நடக்கிறது.
பின்னர் ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தகுதியான தேர்வர்கள் 9-ந்தேதி முதல் நடக்க உள்ள கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வில் பங்கேற்பதற்கு முன் பலத்த சோதனைக்கு பிறகே தேர்வர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் கலந்து கொள்ள வருவோர் செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் கருவிகள் தேர்வு வளாகத்திற்கு எடுத்து வரக்கூடாது, காலம் தாமதம் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தேர்வில் கலந்து கொள்ளுங்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஆற்றில் திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக மூன்று பேரும் அடித்துச் சென்றனர்.
- அற்றில் அடித்துச் செல்லப்பட்ட 12 வயது சிறுவவை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உமரியா மாவட்டத்தில் 6 நாட்களுக்கு முன்பு மகாநதி ஆற்றில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட மூன்று பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஆற்றில் ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக மூன்று பேரும் அடித்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு படையினரின் உதவியுடன் ஒருவரை பத்திரமாக மீட்டனர்.
மேலும் அடித்துச் செல்லப்பட்ட இருவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், போலீஸ் கான்ஸ்டபிள் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மகாநதி ஆற்றின் அருகே, 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டில் கான்ஸ்டபிளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில், சடலமாக மீட்கப்பட்ட கான்ஸ்டபிள் பெயர் ப்ரிடாம பைகா (23) எனவும், அவருடன் அற்றில் அடித்துச் செல்லப்பட்ட 12 வயது சிறுவனை தேடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி உள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி கூறியிருந்தார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் என விவசாய சங்கத்தினரும், பா.ஜனதாவினரும் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும், அருண் டோலின் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்-மந்திரிக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். விவசாய கடனை தள்ளுபடி செய்யாத குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வது எப்போது? என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த தார்வார்-உப்பள்ளி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.நாகராஜூ, அருண் டோலினை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அருண் டோலின் இதற்கு முன்பும் இதுபோல் குமாரசாமி அரசை விமர்சித்து முகநூலில் சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Kumaraswamy #Constable #Suspended
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் உதய் நகர் காவல் நிலையத்திற்கு நேற்று இரவு பா.ஜ.க. எம்.எல்.ஏ. சம்பாலால் தேவ்டாவின் உறவினர் வந்துள்ளார். நள்ளிரவைத் தாண்டி காவல் நிலையத்திற்குள் நுழைந்த அவர், தடை செய்யப்பட்ட அறைக்குச் சென்று ஒரு நபரிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை பிடுங்கி உள்ளார். இதனை பணியில் இருந்த கான்ஸ்டபிள் சந்தோஷ் தடுத்து நிறுத்தி திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.வின் உறவினர், எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ. சம்பாலால் தேவ்டா உடனடியாக தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். வந்த வேகத்தில் கான்ஸ்டபிளிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கான்ஸ்டபிளை மாறி மாறி கன்னத்தில் அறைந்தார். கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின.
அதன் அடிப்படையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சம்பாலால் தேவ்டா மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. எம்.எல்.ஏ. அடிக்கும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக எம்.எல்.ஏ.விடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், தவறு செய்திருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி தலைமை கூறியுள்ளது. #BJPMLASlappedConstable
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்