என் மலர்
நீங்கள் தேடியது "construction work"
- டி.பி. சோலார் நிறுவன கட்டுமான வளாகத்தில் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
- மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ராஜசேகரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.
நெல்லை:
தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளில் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டு தலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்று வரும் டி.பி. சோலார் நிறுவன (தி டாடா பவர் நிறுவனம்) கட்டுமான வளாகத்தில் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ராஜசேகரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.
இதில் டி.பி. சோலார் நிறுவன கட்டுமான பணியிடத்தின் 100 தொழிலாளர்கள், நெல்லை தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு), டாடா புரொ ஜெக்ட்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்பு நிபுணர் கலந்து கொண்டனர். இதில் கட்டுமான பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலா ளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொழி லாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவரின் கடமை என்றும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
இத்தகவலை நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் சஜின் தெரிவித்தார்.
- தேவிபட்டணம் ஊராட்சியில் தையல் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே தேவிபட்டணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தையல் கூடம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் ராமராஜ், துணைத்தலைவர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், தென்மலை கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர் முருகன், ஊராட்சி செயலர் பொன் செந்தில்குமார், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராமராஜ், ஆர்.தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்துலட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனகஜோதி, முத்துமணி, பொன்ராஜ், நிர்வாகிகள் பரமேஸ்வரன், பொன்னுச்சாமி, பால்துரை, டேவிட், வைரசாமி, பாலகிருஷ்ணன், தங்கராஜ், இசக்கிமுத்து, மகாலிங்கம், விஜய்குட்டி, சின்னப்பராஜ், உள்ளார் விக்கி மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ரூ.7.43 லட்ச மதிப்பில் கட்டப்படுகிறது
- பூமி பூஜை போடப்பட்டது
சோளிங்கர்:
சோளிங்கர் ஒன்றியம் வாங்கூர் ஊராட்சியில் எடையந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் புதிய சமையலறை ரூ.7.43 லட்ச மதிப்பில் கட்டும் பணிக்காக பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.
வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி தலைமை தாங்கினார் சோளிங்கர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மதிவாணன் கரடிகுப்பம் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் சோளிங்கர் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கனகராஜ் சமூக சேவகர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ரமேஷ் கோதண்டராமன் பிரபு மற்றும் இடையதாங்கல் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
- ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
- ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை உயர்ந்த மலைப் பகுதியில் 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக உள்ளது.
இந்நிலையில் புங்கனூர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்படுத்த ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
பின்பு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நமக்கு நாமே திட்டத்தின் மூலம் நேற்று ஏலகிரி புங்கனூர் பகுதியில் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க ஊராட்சி மன்றம் சார்பில் பணியை தொடங்கி வைத்தார்.
ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், ஜவ்வாது மலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிவனேசன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் ஆய்வு
- தரமானதாக கட்டிடங்கள் கட்டவேண்டும் என தெரிவித்தார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் நாட்டறம்பள்ளி அருகே மல்லபள்ளி ஊராட்சி ஏரியூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையலறை கட்டுமான பணியை கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பணிகள் விரைந்து கட்டவும் தரமானதாக கட்டிடங்கள் கட்டவேண்டும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யாசதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதிஷ் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு கால்நடை மருந்தகத்தில் ரூ.1 கோடியில் புதிய மருந்தக கட்டிடம் கட்டப்படுகிறது.
- கட்டுமான பணிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அரசு கால்நடை மருந்தகத்தில் ரூ.1 கோடியில் புதிய மருந்தக கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜபாளையம் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் சேத்தூரை தலைமை இடமாக கொண்டு கால்நடைகளுக்கு ஆண்டாண்டு காலமாக மருத்துவம் பார்த்து கால்நடைகளின் பெருக்கத்திற்கு பெரிதும் உதவியது சேத்தூர் கால்நடை மருத்துவமனை ஆகும்.
இந்த மருத்துவமனை குறித்து கால்நடைத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தி மருத்துவமனை வளாகம் முழுவதும் பேவர் பிளாக் தளம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை உதவி இயக்குநர் ராஜராஜேசுவரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவிப் பொறியாளர் பால சுப்பிரமணியன், பேரூர் சேர்மன் பால சுப்பிர மணியன், பேரூர் செய லாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி மாரிச் செல்வம் மற்றும் பேரூர் கவுன்சி லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் 35 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.
- குடியிருப்பு ஒன்றுக்கு தற்போது 1.66 லட்சம் ரூபாய் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
பல்லடத்தை அடுத்த பெரும்பாளியில் 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் 35 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.கடந்த 2019ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு க்கான கட்டுமான பணிகள் துவங்கின. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவடையவுள்ள சூழலில் பயனாளிகள் யார், எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
வீட்டு வசதி வாரிய அதிகாரிஒருவர் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் 60 சதவீதம்வரை நிறைவடைந்துள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்க ப்படும். மொத்தமுள்ள 432 குடியிருப்புகளுக்கு, நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஏற்க னவே பெறப்பட்டுள்ளன. குடியிருப்பு ஒன்றுக்கு தற்போது 1.66 லட்சம் ரூபாய் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வரும் சூழலில் கலெக்டர் உத்தர வின்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
- ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணியை ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டாா்.
- திராவிடன் வசந்த், சிவபிரகாஷ், பால்ராஜ், பொதுப்பணித் துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அவினாசி:
அவிநாசி அரசு மருத்துவமனையில் ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மகப்பேறு மருத்துவப் பிரிவு கட்டுமானப் பணியை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டாா்.மகப்பேறு மருத்துவப் பிரிவில் தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களும், 16 அறைகளில் 64 படுக்கைகளும் அமைக்கப்பட உள்ளன.ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணியை ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அங்கு வந்த சோலை நகா் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்கள், அப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தினா்.தற்காலிக நடவடிக்கையாக நாள்தோறும் வெளியாகும் கழிவுநீா் லாரிகள் முலம் வெளியேற்றப்படும் என்று ஆ.ராசா உறுதியளித்தாா்.
ஆய்வின்போது பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, பொறுப்பாளா்கள் சரவணன்நம்பி, திராவிடன் வசந்த், சிவபிரகாஷ், பால்ராஜ், பொதுப் பணித் துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- சோழவந்தான் அருகே காடுபட்டியில் ஊராட்சி செயலக கட்டுமான பணி தொடக்கப்பட்டது.
- தனிநபர் ஆக்கிரமிப்பு கழிவறை கட்டிடங்களை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஊராட்சி வளாக கட்டுமான பணிகள் தொடங்கியது.
இதில் பி.டி.ஓ. கதிரவன், உதவிப் பொறியாளர் பூம்பாண்டி, வி.ஏ.ஓ., மணிவேல், ஊரா.சி தலைவர் ஆனந்தன்.செயலர் ஓய்யணன். பணியாளர் சக்திவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் போலீசார் காடுபட்டியில் பயன்பாடின்றி இருந்த ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம், தனிநபர் ஆக்கிரமிப்பு கழிவறை கட்டிடங்களை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர்.
- விக்கிரவாண்டியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார்.
- குழந்தை களை சரியான முறையில் பராமறிக்கின்றனரா என்பதை பார்வையிட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேற்று பிற்பகல் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ரெட்டிக் குப்பம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்படு கின்ற ரேஷன் கடை கட்டு மான பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மேலும், கயத்துார் கிராமத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமான பணிகளையும், துவக்க பள்ளி வகுப்பறை கட்டிட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கன் வாடி மையத்திற்கு சென்ற கலெக்டர், குழந்தை களை சரியான முறையில் பராமறிக்கின்றனரா என்பதை பார்வையிட்டார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலி பேக், ஒன்றிய பொறி யாளர்கள் இளையராஜா, நடராஜன், கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கமலக்கண்ணன், செல்வி முருகையன், ஊராட்சி செய லாளர்கள் வெங்கடேசன், சித்ரா உட்பட பலர் இருந்த னர்.
- குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும், 2,500 கல் குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும், கனிம வளத்தொழில் மூலம் கிடைக்கும் ஜல்லி கற்கள் அடிப்படை ஆதாரமாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது.
தற்போது, பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை, சிறிய மினரல் என்றழைக்கப்படும், கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது. அதனால், ஏற்கனவே தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.
சமூக விரோதிகள் சிலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் அச்சுறுத்துவதாகவும், கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என தகவல்கள் பரவுவதாகவும், அதன் காரணமாக, குவாரி மற்றும் கிரஷர் தொழில் பாதிக்கப்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.
சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 75-க்கும் மேற்பட்ட கல் குவாரி மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தேவையான ஜல்லி கற்கள் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் நடக்கின்ற அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளை, தங்கள் சுயலாபத்திற்காக முடக்கும் வகையில், தமிழக கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், கடந்த, 26-ந் தேதி முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழகம் முழுவதும், முற்றிலும் முறைகேடாக நடந்து வரும் கல்குவாரி, கிரஷர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கல்குவாரி, கிரஷர்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் கயல்விழி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
- கட்டுமான பணிகளுக்கு தரமான சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு கட்ட வேண்டும்.
தாராபுரம்
தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிக்கு அரசு ரூ.12½ கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான கட்டுமான பணிகளை தாராபுரம் ஐ.டி.ஐ. வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர். அதன் முதற்கட்ட பணி தொடங்கி நடந்து வருகிறது. கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் கயல்விழி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு கலைக்கல்லூரி கட்டிடம் நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். மேலும் கட்டுமான பணிகளுக்கு தரமான சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு கட்ட வேண்டும். நீங்கள் கட்டும் கல்லூரி கட்டிடம் 100 ஆண்டுகளை கடந்தாலும் உறுதி தன்மையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது ஆர்.டி.ஓ.செந்தில் அரசன், தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, தாராபுரம் தி.மு.க ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவருமான எஸ்.வி.செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் வக்கீல் கே.செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.