search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corporation office"

    • முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 4 மண்டலங்களிலும் தூய்மை தொழிலாளர்களாக பணி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் 4 மண்டலத்தை சேர்ந்த டிரைவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஒப்பந்த நிறுவனம் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூய்மை பாரத டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி டிரைவர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981-ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    தமிழக அரசாணை படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு 725-ம் ஓட்டுனருக்கு 763-/ம் வழங்க வேண்டும். பி.எப், இ.சி.ஐ. தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும்.

    ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், உள்ளிட்ட19 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, `கடந்த மாதம் 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

    ஆனால் கடந்த 5-ந் தேதி அனைத்து மண்டலத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது நிறைய பணியாளர்களுக்கு, குறைவாக சம்பளம் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த செயலை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதனால் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்ப்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்

    தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும், 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை திரும்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனை ஏற்று அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக பிரச்சினை காரணமாக போராட்டம் நடைபெற்றது. பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இ .எஸ்.ஐ. , பி.எப். பிடித்தம் கணக்கு காட்டவில்லை என்றனர். அது வழங்கப்படும்.

    பணியில் காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வழி வகை செய்யப்படும் என்று கூறிய நிலையில் தொழிலாளர்கள் அதனை ஏற்று கலைந்து சென்றனர் என்றார். அப்போது மேயருடன் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் மாநகராட்சி கல்வி குழு தலைவர் பவுல்ராஜ் தலை மையில் நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ல் கூறியுள்ள படி அனைத்து பள்ளி களிலும் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி வேளாண்மை குழு மற்றும் அதன் செயல்பாடு களை பற்றி புரிதல் ஏற்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு நகர்புற உள்ளாட்சி பிரதிநிதி களுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் மாநகராட்சி கல்வி குழு தலைவர் பவுல்ராஜ் தலை மையில் நடைபெற்றது.

    இதில் குழந்தை களுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ல் கூறியுள்ள படி அனைத்து பள்ளி களிலும் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி வேளாண்மை குழு மற்றும் அதன் செயல்பாடு களை பற்றியும், சட்டம் வலியுறுத்தும் குழந்தை களின் உரிமைகள் பற்றியும், மாநகர நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை பிரதிநிதிகளுக்கு எடுத்து கூறும் வகையிலும் பள்ளி வளர்ச்சி குழந்தை களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு குறித்து புரிதல் ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் பள்ளியில் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழுவில் நகர்புற ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பும், கட மையும் உணர்ந்து செயல்பட வலியுறுத்தவும், பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் பள்ளி வளர்ச்சி முன்னே ற்றம் மற்றும் பாதுகாப்பில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்கை மேம்படுத்தும் வகை யில் மாநகராட்சி கவுன்சி லர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடை பெற்றது.

    இக்கருத்தரங்கில் நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் துணைமேயர் கே.ஆர்.ராஜு,நிதிக்குழு தலைவர் சுதா மூர்த்தி, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி , கதீஜா இக்லாம் பாசிலா, ரேவதி மற்றும் கவுன்சிலர்கள் கோகுலவாணி சுரேஷ், உலகநாதன், ரவீந்தர், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கந்தன் ,இந்திரா மணி, சுந்தர், நித்ய பாலையா மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு , உதவி திட்ட அலுவலர் சிவராஜ் , நகர் வட்டார மேற்பார்வையாளர் செண்பகாதேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, ஆசிரியர் பயிற்று நர்கள் சுப்பிரமணியன், செல்வகுமார், மகளிர் திட்ட தொடர்பாளர் ரேவதி, பயிற்சியாளர் கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும்
    • தூய்மைப் பணியாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    ஈரோடு

    ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும். இதற்காக இன்று நடை பெறவுள்ள டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

    480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ. 725 ஐ ஏப்ரல் முதல் வழங்க வேண்டும்.

    மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., உள்ளிட்ட தொழி ற்சங்க ங்கள் சார்பில் கடந்த 23-ந் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டு னர்கள் உள்ளிட்டோர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி நோய் வரவும் அபாயம் ஏற்பட்டு ள்ளது.

    ஒவ்வொரு நாளும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். தூய்மை பணியா ளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 4 -வது நாளாக நீடித்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சி அலு வலக வளாகத்தில் இன்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் எம்.பி. சுப்பராயன் மற்றும் தோழமைச் சங்கங்க ளின் நிர்வாகிகள் முன்னி லை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    இதுகுறித்து, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி கூறுகையில், "தூய்மைப் பணியாளர்கள் 4-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.எங்களது தொடர் போராட்டத்தின் விளைவாக தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதன் முடிவைப் பொறுத்து பணியாளர்களின் அடுத்த கட்டப் போராட்டம் முடிவு செய்யப்படும்" என்றார்.

    • வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு கோம்பை தோட்டம் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நேற்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை கழிவுநீர் சுத்திகரிப்பு மைய எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் கூறியதாவது :- இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வரும் நிலையில், மேயர், எம்.எல்.ஏ., அமைச்சர் என 3 பேரும் தனித்தனியாக செயல்படுகின்றனர்.

    நாளை மாநகராட்சி மேயர்., எம்.எல்.ஏ, ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றால் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களை திரட்டி 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

    • மதுரையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். வடக்கு மண்டலத்திற்குட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின்ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம்.

    நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்த மங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகளை சேர்ந்த பொது மக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்று குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 750- க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சி பகுதியில் பணியாற்றி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கங்களின் தலைவர் மோகன் தலைமை யில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்க தலைவர் மோகன் கூறியதாவது:-

    நெல்லை மாநகராட்சி பகுதியில் 750- க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 15 வருடங்களுக்கு மேலாக சுய உதவிக்குழுக்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாநகராட்சி மூலம் நேரடியாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போது ஒப்பந்ததாரர்கள் மூலம் சுயஉதவிக்குழு தூய்மை பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அப்படி செய்தால் அவர்களுக்கு முழுமையான ஊதியம் கிடைக்காது. எனவே தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • குடியரசு தின விழாவையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் சரவணன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • விழாவில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை:

    குடியரசு தின விழாவையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் சரவணன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    விழாவில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர பொறியாளர் லெட்சுமணன் வரவேற்று பேசினார். வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு மேயர் சரவணன் மாலை செலுத்தினார். பின்னர் விழாவில் தலைமை தாங்கி பேசினார்.

    விழாவில் விருந்தினர்களை வரவேற்கும் விதமாக குழந்தை இயேசு பள்ளி மாணவிகளின் இசை வாத்தியம் இசைத்தனர். தூய யோவான் கல்லுரி 5-வது தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையினை மேயர் ஏற்றுக்கொண்டார்.

    டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி, மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    மேலும் மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலான்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகை யில் பேட்டரி மூலம் இயங்கும் 10 வாகனங்கள் வழங்கப்பட்டது.

    மாநகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை பாராட்டி மேயர் சரவணன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    இதில் மண்டல தலைவர்கள் ரேவதிபிரபு, கதிஜா இக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • இதனையொட்டி நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் பொங்கல் திருவிழா களை கட்டி வருகிறது.

    நெல்லை:

    தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் பொங்கல் திருவிழா களை கட்டி வருகிறது.

    மாநகராட்சி அலுவலகம்

    இதன் தொடர்ச்சியாக நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி நுழைவு வாயிலில் 5 பானை கள் வைத்து தூய்மை பணி யாளர்கள், அலுவலக ஊழி யர்கள் பொங்கலிட்டனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியா ளர்கள் மற்றும் கவுன்சி லர்களுடன் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

    கலைநிகழ்ச்சிகள்

    இதனை தொடர்ந்து சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்ட பரதம், சிலம்பம் உள்ளிட்ட பாரம் பரிய கண்கவர் கலைநிகழ்ச்சி களும் நடை பெற்றது.

    பொங்கல் விழாவின் முடிவில் பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்க ளுக்கு கரும்பு, பொங்கல் வழங்கப்பட்டது.

    இந்த பண்டிகை கொண் டாட்டத்தின் போது செண்டை மேளம் முழங்கப் பட்டது. அப்போது மேலப் பாளையம் மண்டல உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா மற்றும் அதிகாரி கள் செண்டை மேளம் இசைத்தனர். உற்சாக மிகுதி யில் சுகாதார அலுவலர் இளங்கோ உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் நடனம் ஆடினர்.

    விழாவில் நகர்நல அலுவலர் சரோஜா, கவுன்சிலர்கள் சந்திரசேகர், கிட்டு, அமுதா, முத்துலட்சுமி, உலகநாதன், ரவீந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • 15 -வது வார்டு பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாநகராட்சி உதவி கமிஷனர் (நிர்வாகம்்) வெங்கட்ராமன் கலந்து கொண்டு பொது மக்களிட–மிருந்து மனுக்களை பெற்றார்.

    15 -வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அந்த வார்டுக்கு உட்பட்ட வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பாளையங்கோட்டை நகர தொழில் வர்த்தக சங்கத்தினர் ஏராளமானார் திரண்டு வந்து அளித்த மனுவில் பாளை மார்க்கெட்டில் மொத்தம் 540 கடைகள் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தற்போது அந்த கடைகளை இடித்துவிட்டு புதிதாக கடைகள் கட்டும் பணி தொடங்க உள்ளது. இதனை ஒட்டி அங்குள்ள வியா பாரிகளுக்கு தற்காலி கமாக ஜவகர் மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. ஆனால் 170 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ளவர்களுக்கு கடை அமைக்கப்படவில்லை. தற்போது மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கடைகளை காலி செய்யும்படி வற்புறுத்துகின்றனர். எங்களுக்கு மாற்றுக் கடைகள் ஏற்பாடு செய்து தந்த பின்னரே கடையை காலி செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று அவர்கள் அதில் கூறியிருந்தனர்.

    தியாகராஜ நகரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவில், மகாராஜா நகர் மேம்பாலம் அமைந்துள்ள இடத்திற்கும் உழவர் சந்தை உள்ள இடத்துக்கும் இடையே செல்லும் பாதையில் சிலர் தள்ளு வண்டிகளில் கடைகள் போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    இதனால் தேவையற்ற சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே இது தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    திண்டுக்கல் நகரில்தொடரும் குடிநீர் பிரச்சனையால் 15-வது வார்டு பொதுமக்கள் குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் பழைய குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி ஜிகா பைப் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் போராட்டம், மறியல், முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    15-வது வார்டுக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் குடிநீர் முறையாக கிடைக்கவில்லை என கூறி ஏராளமான பெண்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் மாரியப்பன் தெரிவிக்கையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எம்.வி.எம். நகர், அண்ணா நகர், ஆர்.எம்.காலனி, பழையது மற்றும் புதிது, சந்தை பகுதி, சவேரியார் பாளையம், பூச்சிநாயக்கன்பட்டி, குள்ளனம்பட்டி, பழைய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டது. ஆர்.எஸ்.ரோடு, ரவுண்டு ரோடு, மலைக்கோட்டை, குடகனாறு உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு மாதத்துக்குள் பணிகள் நிறைவுற்று தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்ச முடியாது. எனவே அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்கும் என்று கூறினார். #tamilnews
    ×