என் மலர்
நீங்கள் தேடியது "corruption case"
- மொரிசியசில் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள்.
- அவர் பதவியில் இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தது.
போர்ட் லூயிஸ்:
இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்கா அருகே உள்ள தீவு நாடாக மொரிசியஸ் உள்ளது. குட்டித்தீவு நாடான மொரிசியசில் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அந்த நாட்டின் பிரதமராக பிரவிந்த் ஜக்நாத் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த பொது தேர்தலில் அவர் தலைமையிலான கட்சி தோல்வி அடைந்தது.
முன்னதாக பாதுகாப்பு, நிதித்துறை, உள்துறை மற்றும் வெளியுறவு மந்திரியாகவும் பிரவிந்த் ஜக்நாத் பொறுப்பு வகித்தார். இந்தநிலையில் அவர் பதவியில் இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.20 ¾ ஆயிரம் கோடி (2.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை அந்த நாட்டின் ஊழல்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து முறைகேடு செய்ததாக வழக்கு நடந்து வருகிறது.
- கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இதனிடையே கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.
இந்த வழக்கில் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
எனவே இந்த மூன்று வழக்குகளையும், ஒரே அமர்வில் விசாரிக்க நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நியூயார்க் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணையின்போது, அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த உதவுமாறு இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சக அதிகாரிகளின் உதவியை கோரியுள்ளதாக அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது.
மேலும் கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மீதான விசாரணையை தொடர தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக நியூயார்க் நீதிமன்றத்தில் பங்கு பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது.
- இந்த மனுவை நீதிபதிகள் திபாங்கர் தத்தா, சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.
- விசாரணை நடத்தாததற்காக வழக்கை ரத்து செய்ததன் மூலம் கர்நாடக உயர்நீதிமன்றம் தவறு செய்துள்ளது
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய வழக்கில் முதற்கட்ட விசாரணை கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகாவில் அரசு ஊழியர் ஒருவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக மாநில லோக் அயுக்தா போலீசார் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் முதல்கட்ட விசாரணை நடத்தாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறி இந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் திபாங்கர் தத்தா, சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், ஒவ்வொரு வழக்கிலும் முதற்கட்ட விசாரணையை கோருவதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிமை இல்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட சில வழக்குகளில் முதற்கட்ட விசாரணை தேவைப்பட்டாலும், குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும்போது அத்தகைய விசாரணை கட்டாயமில்லை.
முதல்கட்ட விசாரணையின் நோக்கம், பெறப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பது அல்ல. மாறாக அது ஒரு கைது செய்யக்கூடிய குற்றமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க மட்டுமே பயன்படும்.
வழக்கு தொடர்பான ஆதாரத்தை உயர் அதிகாரி ஒருவர் கைப்பற்றினால், அது விரிவானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால், முதல் பார்வையிலேயே குற்றம் வெளிப்படையாகக் கண்டுபிடிக்கப்பட்டால் முதல்கட்ட விசாரணையைத் தவிர்க்கலாம்.
இந்த விவகாரத்தில், முதல்கட்ட விசாரணை நடத்தாததற்காக வழக்கை ரத்து செய்ததன் மூலம் கர்நாடக உயர்நீதிமன்றம் தவறு செய்துள்ளது என்று தெரிவித்தனர். தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட அரசு ஊழியர் மீதான வழக்கை விசாரிக்க உத்தரவிட்டனர்.
- மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
- பாராளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்படுவது கடுமையானது என்றும், ஆறு ஆண்டுகள் தடை போதுமானது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும், நாட்டில் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அந்த பிரமாணப் பத்திரத்தில், தகுதி நீக்க காலத்தை முடிவு செய்வது முற்றிலும் பாராளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(1) இன் கீழ், அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றபின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலம் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
- தேனி மாவட்ட பேரூராட்சிகளில் கடந்த 2019-2020-ல் எல்.இ.டி பல்புகள் வாங்கப்பட்டதில் ஊழல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- தேனி லஞ்சஒழிப்புத்துறையினர் காண்ட்ராக்டர்கள் உள்பட 13 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.
தேனி:
தேனி மாவட்ட பேரூராட்சிகளில் கடந்த 2019-2020-ல் எல்.இ.டி பல்புகள் வாங்கப்பட்டது. இந்த பல்புகள் கூடுதல் விலைக்கு வாங்கி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. முன்னாள் பேரூராட்சி–களின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, 10 முன்னாள் செயல்அலுவலர்கள், காண்ட்ராக்டர்கள் என 13 பேர் மீது தேனி லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உதவி இயக்குனர் பணிபுரிந்த 2019-2020-ம் நிதியாண்டில் அவரின் ஒப்புதலுடன் பேரூராட்சிகளில் செயல்அலுவலர்களாக பணிசெய்த பாலசுப்பிர–மணியன் (ஆண்டிபட்டி), மகேஸ்வரன்(தென்கரை), செந்தில்குமார்(வீரபாண்டி), ஆண்டவர் (கம்பம்பு துப்பட்டி), பாலசுப்பிரமணி (உத்தமபாளையம்), ஜெயலட்சுமி (கோம்பை), பசீர்அகமது (ஓடைபட்டி), கார்த்திகேயன்(பூதிப்புரம்), கணேஷ்(தேவதானப்பட்டி), மணிகண்டன் (மேலசொக்கநாதபுரம்) ஆகியோர் இணைந்து கம்பம்புதுப்பட்டியை சேர்ந்த எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவன உரிமையாளரும், காண்ட்ராக்டருமான ஜமுனாவிடம் ஒரு எல்.இ.டி பல்ப் ரூ.9987 என மதிப்பீடு செய்து போலி ஆவணங்களை தயாரித்து பெற்றுள்ளனர்.
ஆனால் ஒரு எல்.இ.டி. பல்பின் விலை ரூ.1200 முதல் ரூ.2500 வரை மட்டுமே. கூடுதலாக கணக்கிட்டு அரசுக்கு சேரவேண்டிய ரூ.97 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைதொடர்ந்து தேனியை சேர்ந்த சரவணன் அளித்த புகாரின்பேரில் லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் ெஜயபிரியா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் விஜயலட்சுமி, செயல்அலுவலர்கள், காண்ட்ராக்டர்கள் உள்பட 13 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.
- சீனாவின் முன்னாள் நீதித்துறை மந்திரி பு ஜெங்குவா (வயது 67).
- இவர் ஊழல் செய்து சுமார் ரூ.138 கோடி மதிப்புள்ள பணம் பெற்றார் என்பதுதான் குற்றச்சாட்டு.
பீஜிங் :
சீனாவைப் பொறுத்தமட்டில் 2012-ம் ஆண்டு, ஜின்பிங் அதிபர் பதவி ஏற்றது முதல், ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறார். அவர் பதவிக்காலத்தில் இதுவரை சீன கம்யூனிஸ்டு கட்சியின் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சீன ராணுவத்தின் டஜன் கணக்கிலான அதிகாரிகள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், அதிபர் ஜின்பிங் தனது செல்வாக்கை, அதிகார தளத்தை வலுப்படுத்தி நிலைநிறுத்திக்கொள்ள உதவி இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சீனாவின் முன்னாள் நீதித்துறை மந்திரி பு ஜெங்குவா (வயது 67).
இவர் தனது பதவியை, அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி, பலரது தொழில், வணிக நடவடிக்கைகள், உத்தியோக நிலைகள், சட்ட வழக்குகளில் போன்றவற்றில் உதவிக்கரம் நீட்டி, அதற்காக ஆதாயங்கள் பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்தது.
பு ஜெங்குவா ஊழல் வழக்கில் சிக்கியது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக பீஜிங் மாநகராட்சி பொது பாதுகாப்பு பணியகத்தின் தலைவராகவும், பொது பாதுகாப்பு துணை மந்திரியாகவும், நீதித்துறை மந்திரியாகவும் பணியாற்றியபோது இவர் ஊழல் செய்து 17.3 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.138 கோடி) மதிப்புள்ள பணம், பரிசுகளை நேரடியாகவோ, தனது உறவினர்கள் மூலமாகவோ பெற்றார் என்பதுதான் குற்றச்சாட்டு.
இது தொடர்பான வழக்கை சாங்சூன் நகர இடைநிலை மக்கள் கோர்ட்டு விசாரித்தது.
விசாரணை முடிவில் பு ஜெங்குவா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கருதிய கோர்ட்டு, அவருக்கு 2 ஆண்டு கால அவகாசத்துடன் கூடிய மரண தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இதை அந்த நாட்டின் அரசு இணைய ஊடகம் உறுதி செய்துள்ளது. இந்த அதிரடி தீர்ப்பு சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் ஜின்பிங் பதவிக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு அடைய உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு அடுத்த மாதம் 16-ந் தேதி பீஜிங்கில் நடக்க உள்ளது. அதில் ஜின்பிங் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஊழல் வழக்குகளில் 275 வழக்குகள் 20 ஆண்டுகளாக தேக்கம்.
- சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு எதிராக 75 வழக்குகள் துறைசார் விசாரணையில் உள்ளன.
புதுடெல்லி :
சி.பி.ஐ. தொடுத்துள்ள 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதாகவும், 275 வழக்குகள் 20 ஆண்டுகளாக தேங்கி உள்ளதாகவும் மத்திய கண்காணிப்பு ஆணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) ஆண்டறிக்கை வெளியாகி உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* சி.பி.ஐ. தொடுத்துள்ள ஏறத்தாழ 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டு விசாரணையில் உள்ளன. அவற்றில் 275 வழக்குகள், 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கின்றன.
* 1,939 வழக்குகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரையும், 2,273 வழக்குகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையும், 811 வழக்குகள் 3 முதல் 5 ஆண்டுகள் வரையும், 1,399 வழக்குகள் 3 ஆண்டுகளுக்குள்ளும் தேங்கி உள்ளன. இது, கடந்த ஆண்டு டிசம்பர் 31 நிலவரம்.
* 9.935 மேல்முறையீட்டு வழக்குகளில் 9,698 ஐகோர்ட்டுகளிலும், 237 சுப்ரீம் கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளன. 1.099 மறு ஆய்வு முறையீடுகளும் ஐகோர்ட்டுகளில் தேங்கி உள்ளன.
* 10 ஆயிரத்து 974 அப்பீல் மற்றும் மறு ஆய்வு முறையீடுகளில் 361 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், 558 வழக்குகள் 15 ஆண்டுகளுக்கு மேலாகவும், 1,749 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 3,665 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும், 2,818 வழக்குகள் 2 ஆண்டுகளுக்கு மேலாகவும், 1,823 வழக்குகள் 2 ஆண்டுகளுக்குள்ளும் நிலுவையில் உள்ளன.
* 645 ஊழல் வழக்குகளில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இவற்றில் 35 வழக்குகளில் விசாரணை 5 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது.
* 2021-ம் ஆண்டு 549 சிவில் சர்வீசஸ் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ்) அதிகாரிகள் மீதும், 221 அரசிதழ் பதிவு பெற்ற (கெஜட்டட்) அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
* சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு எதிராக 75 வழக்குகள் துறைசார் விசாரணையில் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டாளியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
- ஐஏஎஸ் அதிகாரியின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாக சஞ்சய் பாப்லி லஞ்சம் வாங்கியதாக ஜூன் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கழிவுநீர் கால்வாய் அமைக்க டெண்டர் வழங்கியதில் 7 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சஞ்சய் பாப்லி மீது பஞ்சாப் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக அவரது கூட்டாளி சந்தீப் வாட்ஸ் என்பவரும் ஜலந்தரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சண்டிகரில் உள்ள சஞ்சய் பாப்லி வீட்டில் நேற்று அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஸ்டோர் ரூமில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் உள்பட மொத்தம் 12 கிலோ தங்கம், மூன்று கிலோ வெள்ளி, 4 ஆப்பிள் ஐபோன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இதனிடையே, ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் போப்லியின் மகன் துப்பாக்கிச் சூட்டில் சனிக்கிழமை உயிரிழந்தார். இதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இது குறித்த விசாரணையில் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரி சாஹல் தெரிவித்துள்ளார்.
அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா.
இந்திய லோக்தளம் கட்சியின் தலைவரான அவர் முதல்-மந்திரியாக இருந்த போது லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.
ஊழல் வழக்கில் அவர் டெல்லி திகார் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அரியானா மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலுக்காக ஓம்பிரகாஷ் சவுதாலா கடந்த மாதம் பரோல் கேட்டு இருந்தார். நிபந்தனையுடன் அவருக்கு பரோல் கொடுக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது பரோலை டெல்லி அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் சவுதாலா தரப்பில் முறையிட்டது.
அப்போது டெல்லி அரசு நிபந்தனைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது குறித்த நிபந்தனையை டெல்லி அரசு விலக்கிக்கொண்டது.
இதை தொடர்ந்து திகார் ஜெயில் நிர்வாகம் ஓம்பிரகாஷ் சவுதாலாவை நேற்று பரோலில் விடுத்தது. அவருக்கு 21 நாள் பரோல் வழங்கப்பட்டது. #OmPrakashChautala

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. பதவி வகித்த போது ரூ.22 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஒரு விசாரணை குழு அமைத்தது.
அந்த குழு சர்தாரி, அவரது சகோதரி பர்யால்தர்புர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.
அதுகுறித்த அறிக்கை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி சர்தாரி, அவரது தங்கை பர்யால் தர்பூர் மற்றும் சர்தாரி குரூப் சொத்துக்களை முடக்க பரிந்துரை செய்துள்ளது.
அவற்றில், சர்தாரி, பெயரில் உள்ள வங்கி கணக்குகள், கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற பிலாவல் ஹவுசுக்கு சொந்தமான 5 பிளாட்டுகள், அமெரிக்கா மற்றும் துபாயில் உள்ள சொத்துக்கள் அடங்கும். #AsifAliZardari