search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cut"

    • நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பெயிண்ட் கடை முன்பு பிரபு நின்று கொண்டு இருந்தார்.
    • அப்போது அங்கு வந்த சுரேஷ், தன் மனைவியின் மொபைல் போனில் பேசுவது குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பிரபு (வயது 38). இவர் மீது, காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவர் காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

    இந்த நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி உமாராணி (25) என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கடந்த சில நாட்களாக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து உமாராணி தன் கணவர் சுரேசிடம் தெரிவித்தார். நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பெயிண்ட் கடை முன்பு பிரபு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ், தன் மனைவியின் மொபைல் போனில் பேசுவது குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவின் தலையில் அறிவாளால் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை அந்த பகுதியினர் மீட்டு சேலத்தில் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரவுடியை வெட்டி விட்டு தப்பி ஓடிய சுரேஷ் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஆறுமுகநேரியில் இளம்பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி காணியாளர் தெருவில் வசித்து வருபவர் ராஜா (வயது 35). இவரது மனைவி முத்துசெல்வி (33). இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாரியப்பன் (23). மாரியப்பன் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ராஜாவிடம் அடிக்கடி பண உதவி பெற்று வந்தாராம். இதனிடையே இருவருக்குமிடையே கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு நடந்து விரோதம் ஏற்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த முத்துசெல்வியிடம் மாரியப்பன் உனது கணவனை எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துசெல்வி, அவர் கடைக்கு சென்றுள்ளார் என்று பதில் கூறியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மாரியப்பன் தான் வைத்திருந்த கத்தியால் முத்து செல்வியை குத்தியுள்ளார். கையில் பலத்த காயமடைந்த முத்து செல்வி சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்து பலரும் திரண்டு வந்தனர். இதனால் மாரியப்பன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    உடனடியாக முத்துசெல்வி காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்- இன்ஸ்பெக்டர் பிரபகுமார், இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் மாரியப்பனை தேடி வருகின்றனர்.
    கயத்தாறு அருகே உள்ள இலந்தைகுளத்தில் தோட்டத்தில் வாழைமரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஊருக்கு தெற்கு பகுதியில் ஆதிநாராயணன் என்பவரது மகன் மாரியப்பன் மோட்டார் பம்ப்செட் கிணறு உள்ளது.

    இந்த கிணற்றில் அவரது உறவினர்கள் மாரியப்பன், அய்யாத்துரை, சங்கர், குருசாமி ஆகியோர் வாழை பயிரிட்டிருந்தனர். 

    இந்த வாழை தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை  வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த இந்த வாழை வெட்டப்பட்டதால், வாழை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டனி திலீப், ஆறுமுகம், காசிலிங்கம், மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடததிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு யெ்து வாழைகளை வெட்டிய மர்ம நபர்கள் யார்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    • வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கும்பல் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
    • முத்தம்மாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து கும்பலை தேடி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள அத்திமரப்பட்டியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் காம்பவுண்ட் அருகே சிலர் மதுகுடித்து வந்துள்ளனர். இது தொடர்பாக அசாம் மாநிலம் மொரிக்கன் மாவட்டத்தை சேர்ந்த முகுதுகில் இஷாம் (வயது 24) என்பவர் ஒப்பந்ததாரரிடம் புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து அவர் மதுகுடிப்பது குறித்து தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு முகுதுகில் இஷாம் மீது ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று மாலை முகுதுகில் இஷாம் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், எப்படி எங்கள் மீது புகார் கூறலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கும்பல் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முத்தம்மாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து கும்பலை தேடி வருகிறார்.

    • கொச வப்பட்டியில் சுமார் 3 ஏக்கரில் குட்டை மற்றும் சுடுகாடு உள்ளது.
    • இந்த நிலையில் வருவாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் பனை மரத்தை வெட்டியுள்ளனர்.

    காகாபாளையம்:

    சேலம் அருகே உள்ள இடங்கணசாலை நக ராட்சிக்கு உட்பட்ட கொச வப்பட்டியில் சுமார் 3 ஏக்கரில் குட்டை மற்றும் சுடுகாடு உள்ளது.

    இந்த குட்டையில் மழை காலங்க ளில் தண்ணீர் தேங்கும். இந்த குட்டையின் கரை யோரத்தில் பனை மரங்கள் உள்ளது. இந்த குட்டையை யும், அருகாமையில் உள்ள சுடுகாட்டையும் பிரிக்கும் வகையில் நடு பகுதியில் ரோடு செல்கிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு குட்டையில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டி ருந்தன. தற்போது அவற்றை அகற்றி விட்டு, அங்கு தற்போது பொது மக்கள் நடந்து செல்ல நடைமேடை, நீர்த்தேக்க குட்டை மற்றும் சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக குட்டையில் இருந்து லாரிகளில் 250 லோடு மண் வெட்டி எடுக்கப்பட்டது. மேலும் இங்கு கடந்த வாரம் சுமார் 30 ஆண்டுகள் பழ மையான இச்சி மர கிளை களை வெட்டி அகற்றி னார்கள். அதனை தொடர்ந்து, அரசு அனுமதி யின்றி கரையோரமாக நின்ற 15 ஆண்டுகள் பழமையான பனைமரத்தை வேரோடு வெட்டி சாய்த்துள்ளனர்.

    மேலும் குட்டையின் கரையோரம் கட்டப்பட்டி ருந்த தானியகளத்தை இடித்து அகற்றினர். இத னால் சுற்று வட்டார மக்கள் தங்கள் தோட்டங்க ளில் விளையும் ராகி, சோளம், கம்பு, கடலை ஆகிய தானி யங்களை காய வைக்க இடம் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள சுடுகாட்டை அகற்றும் முயற்சியில் நக ராட்சியினர் ஈடுபட்டு வரு வதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசு செலவில் மரக்கன்றுகள் நடவு செய்துவிட்டு, அதன் பிறகு அந்த மரக்கன்று களை, பிடிங்கி அகற்றுவது தொடர் கதையாக உள்ளது. பனை மரங்களை பாது காக்கும் வகையில் அவற்றை வெட்ட கூடாது என தமிழக அரசு ஏற்க னவே உத்தரவிட்டு இருக்கி றது. மேலும் பல்வேறு இடங்களில் பனை மர விதைகளை அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நட்டு ஊக்கவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் வரு வாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் பனை மரத்தை வெட்டியுள்ளனர். இது பற்றி அதே பகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவர் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை என குமுறலுடன் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • ஆனந்தராஜ் அரிவாளால் அக்பர் அலியை வெட்டியதாக தெரிகிறது.
    • தலைமறைவான லோகப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே உள்ள தத்துவாஞ்சேரி காயிதேமில்லத் தெருவை சேர்ந்தவர் அக்பர்அலி (வயது 50). விவசாயி. இவரது சகோதரர் ரொஜப்தீன்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிதம்பரநாதபுரம் பழைய தெருவை சேர்ந்த லோகப்பனுக்கும் (52) முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் சிதம்பரநாதபுரம் பகுதியில் உள்ள பயிரை பார்வையிடுவதற்காக நேற்று மாலை அக்பர் அலி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது லோகப்பன், அவரது மகன் அரவிந்தன், லோகப்பனின் தம்பி ஆனந்தராஜ் ஆகியோர் அக்பர்அலியை மறித்தனா். பின்னர் லோகப்பன் மற்றும் அவரது மகன் அரவிந்த் ஆகியோர் அக்பர்அலியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் ஆனந்தராஜ் அரிவாளால் அக்பர்அலியை வெட்டியதாக தெரிகிறது.

    இதில் அக்பர்அலி படுகாயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ்(48), அரவிந்த்(28) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான லோகப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தாரமங்கலம் நகராட்சி 18-வது வார்டு முத்து முனியப்பன் கோவில் தெருவில் வசிக்கும் நெசவு தோழிலாளிக்கு அரிவாள் வெட்டு.
    • இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சந்தான கோபால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி 18-வது வார்டு முத்து முனியப்பன் கோவில் தெருவில் வசிக்கும் நெசவு தோழிலாளி கங்காதரன் (வயது30). இவருடைய தங்கையை தாரமங்கலம் சக்கரை விநாயகர் கோவில்

    பகுதியை சேர்ந்த சந்தான கோபால் (38) என்பவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து

    வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சந்தான கோபால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    மேலும் பணம் வாங்கி வரச்சொல்லியும் தொந்தரவு செய்து வந்துள்ளார். கங்காதரன் இதனை கண்டித்து வந்த தால் ஆத்திரம் அடைந்த சந்தானகோபால் நேற்று மதியம் கங்காதரன் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் பேசி, பின்னர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து கங்காதரன் வெட்டி யுள்ளார்.

    கங்காதரன் அங்கி ருந்து தப்பி ஓடிய போது அவரை தொடர்ந்து விரட்டி சென்று வெட்டியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே சந்தானகோபால் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் உறவினர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி கங்காதரனிடம் வாக்கு மூலம் பெற்று தாரமங்கலம் போலீசார் சந்தானகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குடும்ப தகராறில் மைத்துனரை அரிவா ளால் வெட்டிய சம்பவம்

    தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் நிர்வாண நிலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
    • குடிபோதையில் கொலை செய்த நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடை பகுதியில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் நிர்வாண நிலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து ராஜபாளை யம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் நெல்லை பாளை யங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பாஸ்கர் டேனியல் வெள்ளைதுரையின் மகன் இமானுவேல் ராஜா என்பது தெரியவந்தது.

    தென்காசி மாவட்டம் முறம்பு அருகில் உள்ள வேலாயுதபுரம் பகுதியில் இவரது தாத்தா முத்துச்சாமி வீடு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு வந்த இமானுவேல் ராஜா சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் காளி ராஜ், பொன்னுச்சாமி, அருண்கு மார், தங்கபாண்டி, மருது பாண்டி ஆகியோருடன் மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது குடிபோதை யில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 5 பேரும் சேர்ந்து இமானுவேல் ராஜாவை கொலை செய்ததாக சந்தே கிக்கப்படுகிறது. இதுகுறித்து அவரது தாத்தா முத்துச்சாமி கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.

    • இரு நபர்களுக்கும் சொத்து தகராறு பிரச்சினை நிலுவையில் உள்ளது.
    • செல்வகுமாரை அம்மாபேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நீடாமங்கலம்:

    அம்மாபேட்டைஅருகே உள்ள புலவர் நத்தம், குடியான தெருவை சேர்ந்த வர் ஜவகர் என்பவரது மகன் ராஜ்மோகன் (39).

    இவருக்கும்அவரது உறவினரான அவளிவ நல்லூரை அடுத்த சடையங்கால் கிராமத்தைச் சேர்ந்த முருகையன் என்ப வரது மகன் செல்வ க்குமாருக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    அதன் காரணமாக ராஜ்மோகனை, செல்வக்குமார் கடத்தி வந்து அவளிவநல்லூர் கடைத்தெருவில் வெட்டியு ள்ளனர்.

    இதனால் சம்பவ இடத்திலேயே ராஜ்மோகன் துடிதுடித்து இறந்துள்ளார்.

    இறந்த ராஜ்மோகன் உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்க்காக அனுப்பி வைத்து தப்பி ஓடிய செல்வகுமாரை அம்மாபேட்டை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • மது குடித்த பூமிநாதன் தகராறு செய்து மனைவியை அரிவாளால் வெட்டினார்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள உழுத்திமலையை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகள் கற்பகமும், சிவகங்கை மேலபசலையை சேர்ந்த பூமிநாதனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கற்பகம் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள்.

    அங்கு மது குடித்த பூமிநாதன் தகராறு செய்து மனைவியை அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க வந்த அவரது பெற்றோர் பாக்கியம்-காமாட்சிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 3பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதனை கைது செய்தனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
    • மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.

    நெல்லை:

    மானூர் கிராமப்புற கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதனையொட்டி மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டான்குளம், பிள்ளையார்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றையதினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக நெல்லை கோட்ட செயற்பொறியாளர் ஜான்பிரிட்டோ தெரி வித்துள்ளார்.

    • அரிவாளால் வெட்டி விட்டு தப்பியதில் அய்யப்பனின் இடதுகை முழுவதும் துண்டாகி கீழே விழுந்தது.
    • அப்பகுதியில் இருந்தவ–ர்கள் மீட்டு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 38) கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ் (24). இவர்களிடையே கடந்த 2 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்த–ன்று அய்யப்பனை, ஞான–பிரகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களான செல்வமணி (26), முருகதாஸ் (23) பாலகிருஷ்ணன் (25) ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் அய்யப்பனின் இடதுகை முழுவதும் துண்டாகி கீழே விழுந்தது.

    அப்பகுதியில் இருந்தவ–ர்கள் மீட்டு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானபிரகாஷ், பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முருகதாஸ், செல்வமணியை தேடி வருகின்றனர்.ள

    ×