search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dangerous"

    • தினமும் நூற்றுக்கணக்கானோா் சிகிச்சைக்காக வருகின்றனா்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் இந்த கட்டிடத்தின் அருகில் அமா்கின்றனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோா் சிகிச்சைக்காக வருகின்றனா். இங்குள்ள உள் நோயாளிகள் பிரிவு பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டிடம் மிகவும் சேதமடைந்து மேற்கூரைகள் பெயா்ந்து எப்போது கீழே விழுமோ என்ற நிலையில் இருந்தது.

    இதையடுத்து பொதுப்பணித்துறையின் அறிவுரைப்படி 2016-ம் ஆண்டு முதல் இந்தக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபா் 29--ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் ஆகியோா் இந்த சேதமடைந்த கட்டிடத்தை பாா்வையிட்டனா். அப்போது கட்டிடத்தை இடிக்க பொதுப்பணித்துறைக்கு பரிந்துரை செய்யுமாறு மருத்துவமனை நிா்வாகத்திடம் அறிவுறுத்தினா்.

    தொடா்ந்து கட்டிடத்தை இடித்து தருமாறு தாராபுரம் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) உதவிப் பொறியாளருக்கு கடந்த ஆண்டு நவம்பா் 3-ல் வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி. ராஜலட்சுமி கடிதம் எழுதினாா். ஆனால் 10 மாதங்களாகியும் இதுவரை இந்த கட்டிடத்தை இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் இந்த கட்டிடத்தின் அருகில் அமா்கின்றனா். இதனால் ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

    சேரன்மகாதேவியில் அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    சேரன்மகாதேவி:

    சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தினமும் பரபரப்பாக காணப்படும் இடத்தில் மிகவும் பழுதடைந்த ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. 

    இதனை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் பலரும் பாறைக்குழிகளுக்கு சென்று குளிக்கின்றனர்.
    • விவரம் அறியாத நீச்சல் தெரியாத சிலர் இறங்கி குளித்து புதை சேறில் சிக்கிக் கொள்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள பாறைக்கு ழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கறுகையில், திருப்பூரை சுற்றியுள்ள வீரபாண்டி, வெள்ளியங்காடு, போயம்பாளையம், சுகுமார் நகர், பாரப்பாளையம், பாப்பநாயக்க ன்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாறைக்குழிகள் உள்ளன. விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் பலரும் இந்த பாறைக்குழிகளுக்கு சென்று குளிக்கின்றனர். குளிர்ச்சி யான நீரைக் கண்டதும் குளிக்க வேண்டும் என்ற ஆசையில், விவரம் அறியாத நீச்சல் தெரியாத சிலர் இறங்கி குளித்து புதை சேறில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கொண்டவர்களும் பாறைக்குழிகளில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கி றார்கள். பாறை குழிகளுக்கு துணி துவைக்கச் செல்லும் பெண்களும் சில நேரங்களில் தண்ணீருக்குள் தவறி விழுந்து பலியாகின்றனர். அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மற்றும் குப்பைகள், இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி செல்வதால் சுகாதரா சீர்கேடு ஏற்படுகிறது. சில நேரங்களில் கால்நடை களும் தாகம் தணிக்கச் சென்று அதில் விழுந்து சிக்கிக் கொள்கின்றன. திருப்பூரை சுற்றியுள்ள பாறைக்குழி களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாறை குழிகளு க்கு பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். அல்லது முழுமையாக குழிகளை மூடி விட நடவடிக்கை வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து மேலும் பொதுமக்கள் கூறுகையில், திருப்பூர் நகராட்சி பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிக அளவிலான பாறைக்குழிகள் உள்ளன. மழைக்காலத்தில் பெய்யும் மழையால் தண்ணீர் தேங்குவதால் நீரோடை போல் காட்சியளிக்கிறது. இன்னும் சில நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விட இருப்பதால் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் சென்று குளிக்கிறார்கள். எளிதாக பாறைக்குழிகளில் ஆபத்தில் சிக்கிக்கொள்வார்கள். ஆகவே மாவட்ட நிர்வாகம் பாறைக்குழிகளை கணக்கெடுத்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- பாறைக்குழிகள் குறித்து அந்தந்த பகுதி மக்கள் புகார் அளித்தால் அது பற்றி மேயரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியே வெளியே அனுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

    • ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா.
    • இவர் தற்போது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படத்தை இயக்கியுள்ளார்.

    ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா, சூர்யாவின் ரத்த சரித்திரா படத்தையும் இயக்கி இருந்தார். ஆனால், சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என கவர்ச்சிகரமான படங்களை இயக்கி வருகிறார். அவரது இயக்கத்தில் விரைவில் லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் வெளியாக இருக்கிறது.

     

    சர்ச்சைக்கு பேர்போன இயக்குனர் ராம் கோபால் நடிகை ஒருவரின் காலை பிடித்து மசாஜ் செய்து கொண்டே பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்கிறேன் என புரமோஷனை ஆரம்பித்த அவரது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படம் சில காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது.

    ராம் கோபால் வர்மா, டேஞ்சரஸ் படத்திற்காக விதவிதமாக விளம்பரப்படுத்தி வருகிறார். படத்தின் நடிகையுடன் ராம் கோபால் வர்மா வினோதமான செயல்களைச் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன.

     

    அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி நடிப்பில் கவர்ச்சியாக உருவாகி உள்ள டேஞ்சரஸ் திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். தெலுங்கு பிக்பாஸ் பிரபலமான ஆஷு ரெட்டியின் கால்களை பிடித்து மசாஜ் செய்யும் வீடியோவை ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார். அதில், நடிகையின் உடலில் ஆபத்தான குறியீடு எங்கே என்பதை கேட்பது போல கேமராவைப் பார்க்கிறார். பிறகு நடிகையின் பாதத்தை கடிப்பது போன்று அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது. இந்த ஆபாசமான செய்கை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தனது படத்தை விளம்பரப்படுத்த இப்படி ஒரு செயலைச் செய்ததால் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

    • சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
    • மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    கோத்தகிரி

    கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் நடைபாதை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் நடப்பதற்கு இடையூறாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தவறி விழுந்து காயமடையும் அபாயம் நிலவுகிறது. இது மட்டுமின்றி பள்ளி கட்டிடத்தின் முன் பகுதியில் மின்மாற்றி ஒன்று உள்ளது. ஆனால் இதற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை. எனவே மழைக்காலங்களில் அதனருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிக்கு செல்லும் சாலையை புதுப்பிக்க வேண்டும், குடிநீர் குழாய்களை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும், மின்மாற்றியை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செல்லூர்-பந்தல்குடி சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் பாதாள சாக்கடையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 26-வது வார்டு செல்லூர்- பந்தல்குடி சாலையில் இருந்து நரிமேடு செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக திறந்த நிலையில் பாதாள சாக்கடை உள்ளது.

    அதிக வாகனங்கள் மற்றும் பள்ளிக்கு குழந்தை கள் செல்லும் சாலையில் திறந்த நிலையில் பாதாள சாக்கடை இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி சாலைகள் மோசமாக இருப்பதால் சாலையில் தண்ணீர் தேங்கி விடுவதால் பாதாள சாக்கடை இருப்பது தெரியாது.

    மாநகராட்சியில் இருந்து அதில் தடுப்பு அமைக்கப்பட்டாலும் வாகனம் செல்ல வழியின்றி யாராவது அதை நகர்த்தி விட்டால் பாதசாரிகள் அல்லது பள்ளி மாணவர்கள் பாதாள சாக்கடையில் விழும் நிலை உள்ளது

    மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை மூடி அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அரசரடியில் இருந்து காளவாசல் செல்லும் வழியில் எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் மெயின் ரோட்டில் சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.

    இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்புதான் அந்த தண்ணீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். இதனால் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாகிறது.

    இதை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து பெரிய அளவில் உடைப்பு ஏற்படும் முன்பு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    போச்சம்பள்ளி அருகே தென்னந்தோப்பில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பத்தை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது மஞ்சமேடு கிராமம். இந்த பகுதியில் அதிக அளவில் தென்னை மரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியாகவும் உள்ளது. இந்த நிலையில் அரசம்பட்டி மின் வாரியத்தால் தென்னந்தோப்புகளுக்குள் பல மின் கம்பங்கள் நடப்பட்டு அதன் மூலம் விவசாய மோட்டார்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக முன்பு நாகலிங்கம்(50) விவசாயிக்கு செந்தமான தென்னந்தோப்பில் ஆபத்தான நிலையில் 2 மின் கம்பங்கள் உடைந்த நிலையில் உள்ளது.

    தற்பொது, மழை காலம் என்பதால் காற்று, மழை எந்த நேரத்திலும் வரும். தென்னை தோப்புக்குள் பல இடங்களில் விவசாயிகள் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர்.இவர்கள் மின் கம்பங்களை கடந்துதான் செல்ல வேண்டும். இப்பகுதியில் உடைந்த ஒரு மின் கம்பத்தின் எர்த்து வயர் தென்னை மரத்தில் கட்டி விட்டு சென்றுள்ளனர். எர்த்து வயர்கள் எந்த நேரத்தில் அருந்து கிழே விழுமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர்.

    எனவே, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை உடனடியாக அகற்றிவேரு கம்பங்கள் நடவேண்டும் என்றும், மின் கம்பத்தின் எர்த்து வயர்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் இந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    கிருஷ்ணா கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கரையோர கிராம இளைஞர்கள் ஆபத்தை உணராமல் டைவ் அடித்து குளித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

    ஊத்துக்கோட்டை:

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நநி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்ட லேறு அணையில் இருந்து கடந்த 29-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் பாய்ந்து வருகிறது.

    தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ‘ஜீரோ’ பாயிண்டில் இருந்து பூண்டி வரை 25 கிலோ மீட்டர் தூரம் வரை கிருஷ்ணா கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் நெடுகிலும் 41 கிராமங்கள் உள்ளன.

    தற்போது கிருஷ்ணா கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கரையோர கிராம இளைஞர்கள் ஆபத்தை உணராமல் டைவ் அடித்து குளித்து வருகின்றனர்.

    சுமார் 15 அடி ஆழம் கொண்ட கால்வாயில் தண்ணீர் கரை புறண்டு ஓடுவதால் அவர்கள் நீரில் அடித்து செல்லபட்டு இறந்து போகும் அபாயம் உள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் ஊத்துக்கோட்டை, அம்பேத் கார் நகர், சிற்றபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம், மெய்யூர், தேவந்தவாக்கம் பகுதிகளை சேர்ந்த 15 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்துள்ளனர்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டிக்கு தண்ணீர் திறந்து விடும் போது கால்வாயை கண்காணிக்க கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்படுவது வழக்கம்.

    இதில் அங்கம் வகிப்போர் கால்வாய் நெடுகிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு கால்வாயில் யாராவது குளித்தாலோ அல்லது துணி துவைத்தால் எச்சரிக்கை செய்து அனுப்ப வேண்டும்.

    ஆனால் இவர்கள் சரியாக கண்காணிப்பில் ஈடுபடு வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உயிர் இழப்பு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இது போன்ற உயிர் பலி சம்பவங்களை தடுக்க கால்வாய் நெடுகிலும் இருபுறங்களில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமார் 5 அடி உயரத்துக்கு மதில் சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×