என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death penalty"

    • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது அதிதீவிர குற்றம் ஆகும். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகின்றன. எனினும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. அந்தவகையில் இந்தியர்களான ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அந்த 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    • இந்த பிரச்சினையில் இந்தியா தனது நிலைப்பாட்டை முறையாக வைத்துள்ளது.
    • 8 இந்தியர்களை அங்கிருந்து மீட்டெடுப்பதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

    கத்தாரில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு நேற்று அங்குள்ள நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    தனியார் நிறுவனமான அல் தஹ்ராவில் பணிபுரிந்த இந்திய பிரஜைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கத்தார் அதிகாரிகளோ அல்லது புது டெல்லியோ பகிரங்கப்படுத்தவில்லை.

    கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களையும் இந்தியா திரும்பக் கொண்டுவர சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

    கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக், வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே இந்த விஷயத்தை ஆராய்ந்து வருகிவதாகவும் கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இந்த பிரச்சினையில் இந்தியா தனது நிலைப்பாட்டை முறையாக வைத்துள்ளது.

    இதுபோன்ற சம்பவங்களும் நடப்பதை கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் சட்டப் போராட்டம் நடத்துவோம். சர்வதேச நீதிமன்றம் உள்ளது.

    இந்திய அரசு தனது நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்களை அங்கிருந்து மீட்டெடுப்பதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 8 அதிகாரிகளும் இந்திய கடற்படையில் உயர் பதவி வகித்தவர்கள்
    • விரைவில் கத்தார் நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணைக்கு தேதி நிர்ணயிக்கும்

    கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மேற்காசிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இந்திய கடற்படையை சேர்ந்த 8 அதிகாரிகள், அந்நாட்டிற்கு எதிராக உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த 8 அதிகாரிகளும் பல முறை ஜாமின் மனு அளித்தும் அவை அந்நாட்டு நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.

    கைது செய்யப்பட்ட 8 அதிகாரிகளும், இந்திய கடற்படையில் 20 வருடத்திற்கும் மேல் உயர் பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் என்பதும், அவர்களில் சிலர் கடற்படையில் பயிற்சியாளர் பதவியும் வகித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கடந்த மாதம், கத்தார் நாட்டின் முதல் நிலை நீதிமன்றம், அந்த 8 அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமின்றி, இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களை விடுவிக்க சட்டபூர்வ வழிமுறைகளில் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இப்பின்னணியில், இந்திய அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் ஏற்று கொண்டுள்ளது. இது குறித்த அடுத்த கட்ட விசாரணைக்கு கத்தார் நீதிமன்றம் விரைவில் தேதி நிர்ணயிக்கும் என தெரிய வந்துள்ளது.

    மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்ட செய்தி வெளியானதில் இருந்து 8 அதிகாரிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 12.5 பில்லியன் டாலர் மோசடி செய்ததாக 67 வயதான ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்
    • 12.5 பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ஆகும்

    வியட்நாம் நாட்டில் 12.5 பில்லியன் டாலர் நிதி மோசடி செய்ததாக 67 வயதான ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    12.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி) என்பது வியட்நாம் நாட்டின் 2022 ஜிடிபியில் கிட்டத்தட்ட 3% ஆகும்.

    2012 முதல் 2022 வரை சைகோன் ஜாயின்ட் ஸ்டாக் கமர்ஷியல் வங்கியை அவர் சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி, ஆயிரக்கணக்கான போலியான நிறுவனங்கள் மூலமாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலமாகவும் இந்த நிதி மோசடியை அவர் செய்துள்ளார் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது

    இந்த வழக்கை தெற்கு வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் விசாரித்தது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    வியட்நாமில் நடைபெற்று வரும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தீவிரமடைந்த நிலையில் தான் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். இவரின் கைதை அடுத்து அப்போது ஜனாதிபதி பதவியில் இருந்த வோ வான் துவாங் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய ஊழல்களால் வியட்நாமில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1,300 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அந்நாட்டின் சந்தையில் இருந்து விலகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    • 1987 ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞரான ஸ்டார்மர், மனித உரிமைகளில் நிபுணத்துவம் பெற்றார்
    • ஆப்பிரிக்கா, கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளுக்காக வாதாடினார்.

    பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தம் உள்ள  650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று 14 வருடங்கள் களைத்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. கடந்த 2010 முதல் ஆட்சியில் இருந்த ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு மிகவும் பின்னடைவை சந்தித்து படுதோல்வி அடைந்துள்ளது. தற்போது வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிராமராக பதிவியேற்க உள்ளார்.

    61 வயதாகும் கெய்ர் ஸ்டார்மர் தனது இளமைப் பருவத்தில் ப்ளூட், பியானோ, வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞராக இருந்துள்ளார். தனது இளம் வயதிலேயே சோசியலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட கெய்ர் தனது 16 வயதில் தொழிலாளர் கட்சியின் இளம் சோசியலிஸ்ட் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்கிறார்.

    லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற கெயர் ஸ்டேமர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயின்றார். 1987 ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞரான ஸ்டேமர், மனித உரிமைகளில் நிபுணத்துவம் பெற்றார். ஆப்பிரிக்கா, கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளுக்காக வாதாடினார்.

    1990 களில் மெக் லைப்ல் என்ற நிறுவனம் சுற்றுசூழல் முறைகேடுகளில் ஈடுபட்டதை எதிர்த்தவர்களுக்காக வாதாடினார். பின்னர் 2008 ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் வேல்ஸ் அரசு வழக்கறிங்கர்களுக்கான இயக்குனர் பதவியில் அமர்ந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டிலே அவரின் முழுமையான அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. 2015 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு லண்டலில் உள்ள ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கார்பினுக்கு மிகவும் நெருக்கமானவராக கெய்ர் ஸ்டார்மர் இருந்தார்.

    கடந்த 2019 பாரளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிட்டு கெய்ர் வெற்றிபெற்றார். கெய்ரின் வெற்றியுடன் தொழிலாளர் கட்சியின் புதிய சகாப்தம் தொடங்கியது.

    கடந்த 2020 ஆம் ஆண்டு பிரெக்ஸிட் என்ற திட்டத்தின்மூலம் பிரிட்டன் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது. ஆனால் அதற்கு எதிரின நிலைப்பாட்டை கொண்டவர் கெய்ர். கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணியிடன் கிநைட்ஹூட் மற்றும் சர் பட்டம் பெற்றார். கெய்ர் ஸ்டார்மர் எப்போதும் தான் ஒரு உழைப்பாளி வர்க்கப் பின்னணி கொண்ட நபர் என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போராட்டத்தை கைவிட்டு, மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • போராடிவரும் மருத்துவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது.

    மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வழிசெய்யும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா அறிவித்துள்ளார்.

    மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் இன்று பந்த் நடைபெறும் நிலையில் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் பேரணியில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

    குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அடுத்த வாரம் கூடும் சட்டத்தொடரிலேயே மாநில சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார்.

    மேலும், போராட்டத்தை கைவிட்டு, மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    போராடிவரும் மருத்துவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

    • சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை கூறியதாக இர்பான் கைது செய்யப்பட்டார்.
    • முகமது நபியை அவமதிப்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

    சமூக ஊடகங்களில் முகமது நபியை அவமதித்ததற்காக பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த இர்பான் என்ற நபருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

    லாகூரிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சராய் ஆலம்கிர் என்ற இடத்தில் வசிக்கும் இர்பான், இந்தாண்டு சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    நீதிமன்றம் இர்பானுக்கு மரண தண்டனை விதித்ததுடன் இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

    இஸ்லாம் மதத்தின் கடைசி இறைதூதரான முகமது நபியை அவமதிப்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?
    • அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    உச்சநீதிமன்றத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பக (NJMA) திறப்பு விழாவின் போது இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஏஐ (AI) வழக்கறிஞரை அறிமுகப்படுத்தினார்.

    இதைத் தொடர்ந்து இந்தியாவில் மரண தண்டனை குறித்த கேள்வியைக் கேட்டு ஏஐ வழக்கறிஞரின் அறிவை சோதிக்க தலைமை நீதிபதி முடிவு செய்தார். "இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?" என்று தலைமை நீதிபதி கேட்டார்.

    இதற்கு பதில் அளித்த ஏஐ வழக்கறிஞர், "ஆம், இந்தியாவில் மரண தண்டனை என்பது அரசியலமைப்புச் சட்டம். இது உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட அரிதான வழக்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு குற்றம் மிக கொடூரமாக இருக்கும் போது அத்தகைய தண்டனைக்கு உத்தரவாதம் அளிக்கிறது" என்று கூறியது.

    இந்த பதில் சந்திரசூட் மற்றும் மற்ற வழக்கறிஞர்களை கவர்ந்தது. அருங்காட்சியக திறப்பு விழாவில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த அருங்காட்சியகத்தின் கருத்தாக்கம் மற்றும் திட்டமிடலுக்கு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் எடுத்ததாக கூறினார். இந்த அருங்காட்சியகம் நம் தேசத்தின் வாழ்க்கைக்கு நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது."

    "இங்குள்ள எனது சகாக்கள் அனைவரின் சார்பாகவும், இந்த அருங்காட்சியகத்தை இளைய தலைமுறையினருக்கு இந்த அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று கூறினார்.

    தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் 65 வயதை எட்டியவுடன் பதவியில் இருந்து விலக உள்ளார். இதற்கு மறுநாளான நவம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார்.



    • கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை விட இது மூன்று மடங்கு அதிகமாகும்
    • சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா 3 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது..

    வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரங்களுக்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மத்திய கிழக்கில் செல்வச்செழிப்பான நாடக விளங்கும் சவூதி அரேபியாவில் பலர் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்குச் சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏமன் நாட்டவர் ஒருவருக்கு சனிக்கிழமையன்று சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த வருட மரண தண்டனை எண்ணிக்கை குறித்த தரவுகள் வெளியாகி உள்ளது.

    அதன்படி இந்த ஆண்டில் [2024 இல்] இதுவரை மொத்தமாக 274 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதில் 101 வெளிநாட்டவர்கள் ஆவர். இது கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை விட இது மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

     

    பாகிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், ஏமன் - 20 பேர், சிரியா - 14 பேர், நைஜீரியா - 10, எகிப்து - 9 பேர், ஜோர்டான் - 8 பேர், எத்தியோப்பியா - 7 பேர், சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா 3 பேர், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தலா ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் கடந்தால் தொடர்பாக வழக்குகள் இந்த ஆண்டு மரண தண்டனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.  இந்த ஆண்டு போதைப்பொருள் வழக்குகளில் 92 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதில் 69 பேர் வெளிநாட்டவர்கள். ஒரு வருடத்தில் இந்த அளவிலான எண்ணிக்கையில் வெளிநாட்டவர்களுக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றுவது இதுவே முதல் முறை.

     

    சவுதி இளவரசர் - முகமது பின் சல்மான் அல் சவுத் 

    முன்னதாக 2023ல் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனையை நிறைவேற்றிய நாடாக சவுதி அரேபியா இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த மரண தண்டனைகள் சர்வதேச அரங்கில் கவலையளிப்பதாக உள்ளது.

    • வழக்கை விசாரித்து 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    • சிறுமியின் உடலில் 45 காயங்கள் இருந்ததாகவும் கண்டறியப்பட்டது.

    மேற்கு வங்கத்தில் சவுத் 24 ஜேநகர் பகுதியில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி 9 வயது சிறுமி டியூஷன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, முஸ்தகின் சர்தார் என்ற நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். மறுநாள் காலை குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் உள்ளூர் வாசிகள் வாகனங்களுக்கு தீ வைத்தனர், போலீஸ் நிலைகளை சேதப்படுத்தினர்.

    சிறுமியின் சடலம் ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலைக்கு பின் நடந்த இந்த மற்றொரு சம்பவம் பொதுமக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. குற்றவாளிக்கு விரைந்து தண்டனை வழங்கப்படும் என மம்தா உறுதியளித்தார்.

    அதன்படி மேற்கு வங்க போலீஸ் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) வழக்கை விசாரித்து 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் சிறுமியின் உடலில் 45 காயங்கள் இருந்ததாகவும் குற்றவாளி முஸ்தகின் சர்தார் தான் எனவும் உறுதி செய்யப்பட்டது

    விசாரணையின் போது 36 சாட்சிகள் ஆஜரான நிலையில், பருய்பூர் விரைவு நீதிமன்றம் நேற்று [வியாழக்கிழமை] முஸ்தாகின் சர்தாருக்கு மரண தண்டனை விதித்தது. குற்றம் நடந்து 61 நாட்களில் மரண தண்டனை வழங்கப்படுவது மேற்கு வங்கத்தின் நீதித்துறை வரலாற்றில் அரிதானதாகப் பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இரண்டு மாதங்களில் இதுபோன்ற ஒரு வழக்கில் தண்டனை அதுவும் மரண தண்டனை வழங்கப்படுவது மாநில வரலாற்றில் முதல் முன்னோடியாக அமைந்துள்ளது . இந்த சிறந்த சாதனைக்காக மாநில காவல்துறை மற்றும் வழக்குத் தொடர்பாக பணியில் ஈடுபட்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன், என்று தெரிவித்துள்ளார். 

    • கதவருகே அவன் முகத்தை வைத்து கண்களை மூடிக்கொண்டு அவனை பலாத்காரம் செய்யும்படி ஒரு பெரிய கைதியிடம் கேட்பார்கள்
    • கைதிகளின் கண்ணியம் மற்றும் நம்பிக்கையை சுவடே இல்லாமல் அழிப்பதே இந்த சித்திரவதையின் நோக்கமாகும்.

    சிரியாவில் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உள்நாட்டு போர் 13 வருடங்கள் கழித்து வெற்றி பெற்றுள்ளது. தலைநகர் டமாஸ்கஸ் - ஐ நேற்று கைபற்றிய கிளர்ச்சியாளர்கள் வெற்றியை அறிவித்துள்ளனர்.

    ஆசாத் குடும்பத்துடன் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா இதே போன்றதொரு  முடிவை எட்டினார்.

    ஷேக் ஹஸீனாவின் ரகசிய சிறைகளாக கண்ணாடிகளின் வீடு திகழ்ந்து வந்த நிலையில் அவற்றில் சித்திரவதை செய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டனர். history repeats itself என்ற கூற்றுக்கு இணங்க தற்போது வீழ்ந்துள்ள சிரியாவின் ஆசாத் அரசும் வீழ்ந்துள்ளது.

     

    மனித கசாப்பு முகாம்

    டமாஸ்கஸ், ஹமா மற்றும் அலெப்போவிற்கு அருகிலுள்ள அரசாங்க சிறைகளில் பல ஆண்டுகளாக சித்திரவதைகளை அனுபவித்த கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுத்துள்ளனர்.

    இந்த சிறைச்சாலைகளில், மிகவும் பிரபலமானது 'சைட்னயா' [sednaya]. இது வெகுஜனத்தால் "மனித கசாப்பு கூடம்" [ human slaughterhouse] என்று குறிப்பிடப்படுகிறது.

    இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகளுக்கான Syrian Observatory இன் 2021 அறிக்கையின்படி, சிறைகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தூக்கிலிடப்பட்டும் வேறு வழிகளில் உயிரிழந்தும் உள்ளனர்.

    இதில் மனித கசாப்பு கூடம் என்று அறியப்படும் சைட்னயாவில் மட்டுமே 30,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

     

    2011 ஆம் ஆண்டு முதல் சைட்னாயாவில் நடத்தப்பட்ட கொலை, சித்திரவதை, காணாமல் ஆக்கப்படுத்தல் ஆகியவை பொதுமக்களுக்குக் கட்டுக்குள் வைக்க ஆசாத் அரசு மேற்கொண்ட அடக்குமுறையின் ஒரு பகுதியாகவும் அரசின் கொள்கையாகவுமே இருந்தது என்றும் சைட்னாயாவில் நடந்தவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.

    சைட்னயா

    சைட்னயா ராணுவ சிறைச்சாலையில் சிவப்பு நிற மற்றும் வெள்ளை நிறம் கொண்ட இரண்டு தடுப்பு மையங்கள் இருந்ததாக அம்னெஸ்டி அறிக்கை கூறுகிறதது.   

     2011 இல் கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து கைது செய்யப்பட்ட பொதுமக்கள் ஒரு சிவப்பு கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ராணுவத்தினர் வெள்ளை கட்டிடத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

    சிவப்பு கட்டிடத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் ரகசிய மரணதண்டனையில் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறுகிறது

    டமாஸ்கஸின் அல்-கபூன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள இராணுவக் கள நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படும்

    சிறை அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நாளை 'பார்ட்டி' என்று குறிப்பிடுகின்றனர்.

    பார்ட்டி

    மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிவப்பு கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு அறைக்கு கொண்டு வரப்படுவார்கள், அங்கு அவர்கள் நள்ளிரவில் இரண்டு அல்லது மூன்று மணிநேரங்களில் கடுமையாக தாக்கப்படுகிறார்கள்.

    அதன்பின் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு டெலிவரி டிரக்குகள் அல்லது மினிபஸ்களில் வெள்ளை கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறார்கள். அங்கு அடித்தளத்தில் உள்ள ஒரு அறைக்குள் இறுதியில் அவர்கள் தூக்கிலிடப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது

    இது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை நடக்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், 20 முதல் 50 பேர் வரை தூக்கிலிடப்படுகிறார்கள். இந்த செயல்முறை முழுவதும், பாதிக்கப்பட்டவர்கள் கண்கள் மூடப்பட்டிருக்கும். மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று மட்டும் கூறப்படும்.

     

    அவர்களின் மரணதண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பது அவர்களுக்குத் தெரியாது. உடல்கள் ஒரு டிரக்கில் ஏற்றப்பட்டு, திஷ்ரீன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன

    செப்டம்பர் 2011 முதல் டிசம்பர் 2015 வரை சைட்னாயாவில் 5,000 மற்றும் 13,000 பேர் சட்டத்திற்கு புறம்பாக தூக்கிலிடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    சைட்னாயாவில் மரணதண்டனை செயல்முறை இரகசியமானது மற்றும் நேரடியாக அதிகாரிகளுக்கும் சிரியாவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும். சிவப்பு கட்டிடத்தில் அவர்கள் அடிக்கப்படுவதை பார்க்கும் சாதாரண சிறைக் காவலர்களுக்கு நள்ளிரவில் வெள்ளை கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு கைதிகளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி தெரியாது. 

     சித்ரவதை

    சைட்னயாவில் உள்ள சிவப்பு கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விதவிதமான சித்திரவதைகள் நடக்கின்றன. வழக்கமாக கடுமையான அடித்தல் மற்றும் பாலியல் வன்முறை மூலம் அவர்கள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.

    அவர்களுக்கு போதுமான உணவு, தண்ணீர், மருந்து, மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மறுக்கப்படுகின்றன, இது தொற்றுநோய் மற்றும் நோய் பரவுவதற்கு வழிவகுத்தது. சித்திரவதை செஷன்களின்போது அமைதி கடைப்பிடிக்கப்படுகிறது. பல கைதிகள் தீவிர மனநோய்களுக்கு ஆளாகின்றனர் .

    அதிகபட்ச உடல் மற்றும் உளவியல் துன்பங்களை ஏற்படுத்தும் வகையில் சைட்னயாவின் சித்திரவதை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கைதிகளை அவமானப்படுத்தி அவர்களின்கண்ணியம் மற்றும் நம்பிக்கையை சுவடே இல்லாமல் அழிப்பதே இந்த சித்திரவதையின் நோக்கமாகும்.

    சைட்னயாவில் இருந்து வெளியே வந்த கைதிகள் 

     

    கைது செய்யப்பட்டபோது உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்த கைதி ஒருவர், சைடன்யாவில் தங்களுக்கு என்ன நடந்தது என எந்த கைதியும் கூற முன்வர மாட்டார்கள். அந்த அளவுக்கு அவமானகரான செயல்களை அவர்கள் சந்தித்துள்ளனர் என்று தெரிவிக்கிறார்.

    காவலர்கள் , அனைவரையும் எங்கள் ஆடைகளை களைந்துவிட்டு ஒவ்வொருவராக குளியலறைக்குச் செல்லச் சொல்வார். நாங்கள் குளியலறைக்குச் செல்லும்போது, அவர்கள் ஒரு சிறிய வயது வாலிபனை தேர்ந்தெடுத்து அவனை கதவருகே நிற்கச் சொல்வார்கள்.

    கதவருகே அவன் முகத்தை வைத்து கண்களை மூடிக்கொண்டு அவனை பலாத்காரம் செய்யும்படி ஒரு பெரிய கைதியிடம் கேட்பார்கள்.. இது தங்களுக்கு நடந்ததென்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆனால் அது அடிக்கடி நடந்தது. மற்றும் இதை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட கைதிகள் யாரும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று அந்த கைதி கூறுகிறார்.

    சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு மத்தியில், கிளர்ச்சிப் போராளிகள் சைட்னயா உள்ளிட்ட சிறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கைதிகளை விடுவித்துள்ளனர். சைட்னாயாவிலிருந்து ஒருவர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் அவரது குடும்பத்தைப் பற்றி அவரிடம் கேட்கும்போது அவர் குழப்பமடைந்து பேசுவதற்கு சிரமப்படுவது பதிவாகி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளும் சிறையில் இருந்து வெளிவந்துள்ளனர்.

    இதற்கிடையே ரஷியா தப்பிச் சென்ற ஆசாத்தின் அதிபர் மாளிகை சூறையாடப்பட்ட நிலையில் அங்குள்ள சுரங்கப்பாதை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    • குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் தற் போதைய அதிபர் ஜோபைடன் அமெரிக்க கோர்ட்டுகளில் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 40 கைதிகளில் 37 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வேதனையை பகிர்ந்து கொள்கிறேன். ஜோபைடன் நமது நாட்டில் மிக மோசமான கொலையாளிகள் 37 பேரின் மரண தண்டனையை குறைத்து உள்ளார்.

    ஒவ்வொருவரின் செயல்களை கேட்டால் அவர் ஏன் இதை செய்தார் என நீங்கள் கேள்வி எழுப்புவீர்கள். எந்த அர்த்தமும் இல்லை. உறவினர்கள், நண்பர்கள் கூட இதனை நம்பமாட்டார்கள். நான் பதவிக்கு வந்தவுடன் மீண்டும் மரண தண்டனையை கொடுக்க வலியுறுத்துவேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×