என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "decline"
- பாராளுமன்ற தோ்தலில் 797 பெண் வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
- பெண் எம்.பி.க்களின் விகிதம் 13.44 சதவீதத்துக்கும் மேலாகும்.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு பாராளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை பெண்களுக்கு ஒதுக்க வழிவகுக்கும் மகளிா் இடஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத்தொடா்ந்து, அந்த மசோதா சட்டமானது. எனினும் அந்த சட்டம் அமலுக்கு வரவில்லை.
இந்த நிலையில், 18-வது பாராளுமன்ற தோ்தலில் 797 பெண் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் அதிகபட்சமாக பா.ஜ.க. சாா்பில் 69 பெண்கள் போட்டியிட்டனா். அவா்களில் 30 போ் வெற்றிபெற்றனா். காங்கிரஸ் சாா்பில் 41 பெண்கள் போட்டியிட்ட நிலையில், அவா்களில் 14 போ் வெற்றி பெற்றனா்.
இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் சாா்பில் 11 பெண்கள், சமாஜவாடி சாா்பில் 4 பெண்கள், தி.மு.க. சாா்பில் 3 பெண்கள், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்) சாா்பில் தலா 2 பெண்கள் வெற்றி பெற்றனா்.
18-வது பாராளுமன்றத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மொத்த எம்.பி.க்களில் பெண் எம்.பி.க்களின் விகிதம் 13.44 சதவீதத்துக்கும் மேலாகும். எனினும், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தோ்தலில் 78 பெண்கள் எம்.பி.க்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சற்று சரிந்துள்ளது.
- தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
- நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.
மக்களவைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய தேசிய ஜனநாயகக்கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் முடிவுகள் குறித்து நிலையான யூகத்திற்கு வர முடியாததால் தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இறக்கத்துடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை சென்செக்சில் 2303.45 புள்ளிகளை இழந்து 74275.46 இறக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.
மேலும் இன்றைய பங்குச்சந்தை முடிவில் 3000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடன் மீன்களும், மேட்டூர், ஒகேனக்கல்லில் இருந்து ஆற்று மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
- புரட்டாசி மாதம் என்பதால் விற்பனை சரிந்துள்ளது. அதேவேளையில், கடல் மீன்களின் விலை ரூ.80முதல் ரூ.100 வரை குறைந்துள்ளது.
சேலம்:
சேலம் வ.உ.சி மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடியில் இருந்து கடன் மீன்களும், மேட்டூர், ஒகேனக்கல்லில் இருந்து ஆற்று மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கு தற்போது மீன் வரத்து அதிகரித்துள்ள நிலையில், புரட்டாசி மாதம் என்பதால் விற்பனை சரிந்துள்ளது. அதேவேளையில், கடல் மீன்களின் விலை ரூ.80முதல் ரூ.100 வரை குறைந்துள்ளது. கடந்த வாரம் கடல் மீன்கள் விற்கப்பட்ட விலையில் இருந்து ரூ.80 வரை சரிந்திருக்கிறது.
இதன்படி இன்றைய தினம் சங்கரா ஒரு கிலோ ரூ.300ம், கண்ணாடி பாறை ரூ.380, வளை மீன் ரூ.380, வஞ்சரம் ரூ.600, அயிலை ரூ.200, விற்பனையானது. இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், கடல் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், புரட்டாசி மாதம் என்பதால், விற்பனை மந்தமாக உள்ளது.
இதனால், விலை கிலோவுக்கு ரூ.80 வரை குறைந்துள்ளது அணை மீன்கள் விலை அப்படியே உள்ளது ஆனால் வரத்து குறைந்துள்ளது என்றனர்.
- கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
- நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை பள்ளிக்களுக்கான சத்துணவு முட்டைகள் தொடர்ந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படு கின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. பின்னர் தொடர்ந்து படிப்படியாக சரிவடைந்து கடந்த 8-ம் தேதி ரூ. 4.70 ஆக இருந்த முட்டை விலை மேலும் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ.4.50 ஆனது. நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 20 பைசா குறைக் கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் முட்டை விலை 120 காசுகள் குறைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மற்ற மண்டங்களில் முட்டை விலை சரிவடைந்து வருவதால், நாமக்கல் மண்டலத்தில் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ. 1.20 விலை சரிவு ஏற்பட்டதால் கோழிப் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு :-
சென்னை-500, பர்வாலா-392, பெங்களூர்-460, டெல்லி-410, ஹைதராபாத்-425, மும்பை-530, மைசூர்-480, விஜயவாடா-425, ஹொஸ்பேட்-420, கொல்கத்தா-490.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 98 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 82 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
முட்டைவிலை சரிவு குறித்து பண்ணையாளர்கள் கூறியதாவது:-
நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை பள்ளிக்களுக்கான சத்துணவு முட்டைகள் தொடர்ந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி சிறப்பாக கேரளாவில் பொழிந்து கொண்டிருப்பதால் கேரளா விற்பனை நன்றாக உள்ளது. ஏற்றுமதிக்கான முட்டைகளும் தொடர்ந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
வயது முதிர்ந்த கோழிகள் அதிக அளவில் பிடிக்கப்படுவதாலும் கடந்த காலங்களில் பண்ணைகளில் சராசரி அளவை விட குறைந்த கோழிக்குஞ்சு விடப்பட்டதாலும் முட்டை உற்பத்தி குறைந்து காணப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளில் முட்டை பற்றாக்குறை தொடர்வதால், வரும் நாட்களில் முட்டை விலை மேலும் ஏறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது, என்றனர்.
- கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
- நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 10 பைசா குறைக்க முடிவு செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப் படு கின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்று மதிக்கும் போக மீதமுள்ள முட்டை கள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்க ளுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்
படுகின்றன.
முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு (என்.இ.சி.சி), வியாபாரி களுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையா ளர்களும் பின்பற்றி வருகின்றனர்.
கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 10 பைசா குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
மீன்பிடி தடை காலம் முடிந்து மீன் வரத்து அதி கரித்து வருவதால் முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணை யாளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை -610, பர்வாலா -473, பெங்களூர் -600, டெல்லி -490, ஹைதராபாத் -540, மும்பை -605, மைசூர் -603, விஜய வாடா -535, ஹொஸ்பேட் -560, கொல்கத்தா -570.
- வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
- கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
இங்கு விற்பனைக்கு வரும் நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கிச் செல்வர். கடந்த வாரத்தைவிட இந்த வாரம், கோழிகள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று 280 ரூபாய்க்கு விற்பனையானது.
பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருவதால் பொதுமக்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். மேலும் வெயில் காலத்தில் நாட்டுக்கோழியை சமைத்து சாப்பிட்டால், உடல் சூட்டை அதிகரித்துவிடும் என்பதால், கோடைகாலத்தில் அவற்றை தவிர்க்கின்றனர்.
ஒரு சில வியாபாரிகள், பண்ணைக் கோழிகளை நாட்டுக்கோழி என ஏமாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர் என விவசாயிகள் தெரிவித்தனர்.
- நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது.
- இதனால் கிலோ 10 ரூபாயாக சரிந்துள்ளதால், பொதுமக்கள் அதிக அள வில் வாங்கி செல்கின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் உழவர் சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், பொது மக்கள் வாங்கி செல்கி றார்கள்.
இந்த நிலையில் தற்போது நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கிலோ 10 ரூபாயாக சரிந்துள்ளதால், பொதுமக்கள் அதிக அள வில் வாங்கி செல்கின்றனர்.
உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை விவரம்(ஒரு கிலோவுக்கு) வருமாறு:-
கத்தரி ரூ.20 முதல் 36, தக்காளி ரூ.10 முதல் 14, வெண்டைக்காய் ரூ.40 முதல் 48, அவரை ரூ.40 முதல் 50, கொத்தவரை ரூ.36, முருங்கைக்காய் ரூ.36, முள்ளங்கி ரூ.16, புடலங்காய் ரூ.32 முதல் 40, பாகற்காய் ரூ.32 முதல் 36, பீர்க்கன்காய் ரூ.40 முதல் 48, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.25, சுரைக்காய் (1) ரூ. 5 முதல் 8, மாங்காய் ரூ.30, தேங்காய் ரூ.30, எலுமிச்சை ரூ.130, கோவக்காய் ரூ.40-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் சி.வெங்கா யம் ஒரு கிலோ ரூ.25 முதல் 36, பெ.வெங்காயம் ரூ.16 முதல் 20, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.90 முதல் 100, கேரட் ரூ.45 முதல் 50, பீட்ரூட் ரூ.36 முதல் 40, உருளைக்கிழங்கு ரூ.20 முதல் 24, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.50-க்கு விற்கப்பட்டது.
கொய்யா ரூ.40 முதல் 50, மலை வாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.50, மல்லித்தழை ரூ.30, புதினா ரூ.30, இஞ்சி ரூ.120, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.40 முதல் 50, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.30 முதல் 36, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.40, கருணைக்கிழங்கு ரூ.40, பப்பாளி ரூ. 30, நிலக்கடலை ரூ.50, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரூ.50, மாம்பழம் ரூ.60, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ. 40-க்கு விற்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கோடை மழை பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் பெய்து பலத்த சேதம் ஏற்படுத்தியது. கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது முதல் மழை இல்லாமல் வெயில் 105 டிகிரி வரை கொளுத்தியது. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசியது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் வடபகுதியான சங்கரன்கோவில் பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. அப்போது இடி-மின்னலும் முழங்கியது. சங்கரன் கோவிலில் மட்டும் 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணை பகுதியில் 8 மில்லி மீட்டரும், சிவகிரியில் 7 மில்லி மீட்டரும், கருப்பாநதி பகுதியில் 4 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
சங்கரன்கோவிலில் இடி மின்னலுடன் மழை பெய்தபோது, மனோ கல்லூரியில் தேர்வு எழுதி முடித்த பி.ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகள் மகாலட்சுமி (19). பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு மாணவி அவசரம் அவசரமாக வகுப்பறையை விட்டு வெளியே வந்தார்.
அப்போது அந்த பகுதியில் சக்திவாய்ந்த இடி-மின்னல் தாக்கியது. இதில் கட்டிடத்தின் ஒரு சுவர் இடிந்து மாணவி மீது விழுந்தது. மேலும் மாணவி மகாலட்சுமி மீதும் மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மகாலட்சுமி பலியானார்.
இன்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. பல இடங்களில் இன்று பகல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
நகர்புறங்களில் மழை பெய்தாலும், பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 12.80 அடியாக மிகவும் குறைந்த நிலையில் உள்ளது. மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 70.07 அடியாகவும், சேர்வலாறு அணையில் 47.51 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று 51 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு வரும் தண்ணீர் மிக குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
நேற்று 51.62 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 51.47 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது. #MetturDam
சமூக ஊடகங்களில் குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக தகவல் தொடர்பு துறைக்கான நாடாளுமன்ற குழு விசாரணை ஒன்றை நடத்துகிறது.
பாரதீய ஜனதா கட்சி எம்.பி. அனுராக் தாக்குர் தலைமையிலான இந்தக்குழு கடந்த 7-ந் தேதி கூட இருந்தது. இதில் கலந்து கொள்வதற்கு ‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு 1-ந் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.
பின்னர் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மூத்த அதிகாரிகள் வந்து கலந்து கொள்வதற்கு வசதியாக இந்த கூட்டம் 11-ந் தேதிக்கு (நாளை) ஒத்தி போடப்பட்டது.
ஆனாலும் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக முடியாது என ‘டுவிட்டர்’ தலைமை செயல் அதிகாரியும், மூத்த அதிகாரிகளும் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறைந்த கால அவகாசத்தில் வர முடியாது என அவர்கள் கூறி உள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. #TwitterCEO #ParliamentaryPanel
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத வகையில் உச்சத்துக்கு சென்றது. அதன் பின்னர் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. நேற்றும் அதன் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு லிட்டர் 73 ரூபாய் 27 காசுக்கு விற்பனையான பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 16 காசு குறைந்து, 73 ரூபாய் 11 காசுக்கு விற்பனை ஆனது.
ஒரு லிட்டர் 69 ரூபாய் 31 காசுக்கு நேற்று முன்தினம் விற்பனையான டீசல், நேற்று லிட்டருக்கு 11 காசு குறைந்து 69 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். #Petrol #Diesel
வடகிழக்கு பருவமழை காலம் தமிழகத்தில் முடியும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவாக 57 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 11 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.
இது தவிர 5 மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதம் வரை குறைவாக உள்ளது. 4 மாவட்டங்களில் 20 முதல் 30 சதவீதம் வரை குறைவாக மழை பெய்துள்ளது.
15 மாவட்டங்களில் 1 முதல் 19 சதவீதம் வரை குறைவாக பெய்துள்ளது. பொதுவாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை மிகவும் குறைந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை இயல்பைவிட 55 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வழக்கமாக 79 செ.மீ. மழை பதிவாகும் ஆனால் இந்த ஆண்டு 35 செ.மீ. மழையே பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் மழை இல்லை.
கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்றுவிட்டதால் மழை இல்லை.
பொதுவாக ‘எல்நினோ’ உருவானால் தான் மழை பெய்யும். அது உருவாகாமல் தள்ளி போய்விட்டதும் வானிலை நிகழ்வுகள் சாதகம் இல்லாததும், வடகிழக்கு பருவமழை குறைவுக்கு காரணமாகும்.
இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது தவறாகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார். #NorthEastMonsoon #Rain
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்