என் மலர்
நீங்கள் தேடியது "deer"
- காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு முன் தென்னை, வாழை, மஞ்சள், நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தாற்போல் லேசான காற்றுக்கு பயிர்கள் அசைவது ரம்மியமாக காட்சியளிக்கும். காலப்போக்கில் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் நலிவடைந்த நிலையில் பலர் திருப்பூர் போன்ற நகரங்களில் வெவ்வேறு தொழில்களை நாடிச்சென்றனர். இருப்பினும் பழமையை மறவாமல் விவசாயம்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அங்கம் என்ற நோக்கில் பல இன்னல்களுக்கிடையே சில விவசாயிகள் மனம் தளராமல் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பயிர்களை நல்லமுறையில் பாதுகாத்து இரவு விடியவிடிய கண்விழித்து தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து நல்லமுறையில் பயிர்களை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் தோட்டம் ,காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில் ,முன்பெல்லாம் தோட்டம், காடுகளில் விவசாயதொழிலுடன் ஆடு,மாடு, கோழிவளர்ப்பில் ஈடுபடுவார்கள். நாகரீக உலகத்தில் தற்போது நாட்டுக்கோழி, ஆடுகள் வளர்ப்பது மறைந்துவருகிறது. அதேசமயம் மான், மயில்கள் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயபயிர்களை நாசம் செய்துவிடுகிறது. அரும்பாடுபட்டு வளர்த்த பயிர்கள் நாசமாவதுடன் எங்கள் பாடு வீணாகி பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மட்டுமே மான்கள் இருந்த நிலையில் இப்போது அவினாசி ஒன்றியத்தில் 40 கி.மீ சுற்றளவிற்கு தோட்டம் ,காடுகளில் மான்கள், மயில்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது. எனவேதான் சிறுத்தை நடமாட்டம் தொடங்கிவிட்டது. வாழ்நாள் முழுவதும் மான், மயில்களுடன் போராடுவது போதாதென்று தற்போது எந்த நேரத்தில் தோட்டப்பகுதிக்குள் சிறுத்தை வருமோ என்ற அச்சத்தில் உள்ளோம்
மான், மயில்களின்தொந்தரவை கட்டுப்படுத்த அரசு,விவசாயத்துறை, தோட்டக்கலை துறையினரிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் அதற்குஎந்த முயற்சியும் எடுப்பதில்லை. அரசும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் இதற்கு தீர்வுகாண அவினாசி ஒன்றியத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றுதிரண்டு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒன்றுதான் வழிஎன்றனர்.
- அபிராமம் பகுதியில் காட்டுப்பன்றி, மான்கள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அச்சங்குளம், பாப்பனம், நகரத்தார் குறிச்சி, பள்ளபச்சேரி, உடையநாதபுரம், விரதக்குளம், காடனேரி, பொட்டகுளம் உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெல், பருத்தி, மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த பயிர்களை காட்டுப் பன்றி, மான்கள் சேதப்படுத்தி நாசம் செய்து வருகிறது. இது குறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.
பி்ன்னர் வன விலங்கு களிடம் பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அப்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து விவசாயி விரதக்குளம் கர்ணன் கூறுகையில், மான், காட்டுப்பன்றி, முயல், நரி போன்ற வன விலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான கிராமங்களில் நிலக்கடலை, பயிறு வகைகள், கேப்பை போன்ற பயிர்களை சாகுபடி செய்யாமல் விட்டுவிட்டனர். வனத்துறையினர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதுடன் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- வனக்காப்பாளரிடம் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது.
- கண்மாய் கரையில் புள்ளிமான் செத்து கிடந்தது.
புதுக்கோட்டை,
காரையூர் அருகே அரசமலை சம்புருதி கண்மாய் கரையில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற அரசமலை வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் ஆகியோர் கிராம உதவியாளர்களுடன் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனக்காப்பாளர் கனகவள்ளியிடம் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது.
- ஜனவரி 27 -ந்தேதியன்று ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த 2 நபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
- சிவகிரி அருகே மான்களை வேட்டையாடியது சம்பந்தமாக இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகிரி:
சிவகிரி வனத்துறை ரேஞ்சர் மவுனிகா தலைமையில், கடந்த மாதம் 17-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முருகன் என்பவரின் தோட்டத்தில் மான்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாக 5 நபர்களையும், இதனை தொடர்ந்து ஜனவரி 27 -ந்தேதியன்று ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த 2 நபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த ராஜதுரை மகன் சதீஸ்குமார் (வயது 28) என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி அருகே மான்களை வேட்டையாடியது சம்பந்தமாக இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுசம்பந்தமாக சில நபர்களை வனத்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
- ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது.
- மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
ஏற்காடு:
ஏற்காடு வனப்பகுதியில் மான்கள். காட்டெருமை, குரங்கு போன்ற வனவிலங்குகள் இருக்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. இதை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதை தொடர்ந்து வனவர் சக்தி வேல் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
இது குறித்து ஏற்காடு வனக்காப்பாளர் பழனிவேல் கூறுகையில், இறந்த மானுக்கு சுமார் 4 வயது இருக்கும். மர்ம விலங்கு கடித்ததில் மான் இறந்துள்ளது. மர்ம விலங்கு வீடுகளில் வளர்க்கப்படும் நாயாக இருக்கலாம். எனி னும் கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தால் தான் அந்த மான் இறப்பு குறித்து தெரியவரும் என்றார்.
- வாகனம் மோதி மான் பரிதாபமாக இறந்தது.
- நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேவகோட்டை
தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் அதிக அளவில் மான்கள் நடமாட்டம் உள்ளது. நகரின் எல்லை பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.இதில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர்.
அமராவதி புதூரில் இருந்து புளியால் வரை உள்ள காட்டுப் பகுதிகளில் மான்கள் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு தண்ணீர் குடிப்பதற்காக மான்கள் நெடுஞ்சாலையைக் கடந்து வருவது வழக்கம்.
அப்படி கடந்து வரும் போது வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசு வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாரிச்சான்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மான் ஒன்று இறந்து கிடந்தது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மானின் உடலை மீட்டுச் சென்றனர்.
மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், நெடுஞ்சாலை ஓரங்களில் மான்கள் நடமாட்டம் குறித்தும், வேகக்கட்டுபாடுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தும் வகையிலும் எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன.
- மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
காங்கயம் :
காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூா் மலையில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன. இந்நிலையில் ஊதியூா் வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு வெளியேறிய புள்ளிமான் குண்டடம் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குடிநீர் தேடி வனங்களில் இருந்து வெளியேறும் விலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. எனவே வனங்களில் குடிநீா்த் தொட்டி அமைத்து தண்ணீா் நிரப்ப வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- கர்நாடக எல்லை நுழைவாயிலில் கர்நாடக வனத்துறை சார்பில் சோதனைசாவடி அமைக்கப்பட்டுள்ளது.
- சாலை அருகே வனத்துறை கட்டிடம் அமைந்துள்ளதால் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த கடமான் அழகை ரசித்து செல்கிறார்கள்.
மேட்டூர்:
தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதி பாலாறு ஆகும். இங்குள்ள கர்நாடக எல்லை நுழைவாயிலில் கர்நாடக வனத்துறை சார்பில் சோதனைசாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடி அருகே வனத்துறைக்கு சொந்தமான அலுவலகம் கட்டிடம் அமைந்துள்ளது.
இதனை சுற்றியும் வனப் பகுதி என்பதால் இந்த பகுதிகளில் யானை, மான், முயல், நரி போன்ற வன விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். குறிப்பாக மாலை நேரத்தில் பாலாற்றில் தண்ணீர் அருந்துவதற்காக யானைகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறது.
இதை அந்த சாலையை வாகனங்களில் கடந்து செல்லும் ஏராளமான சுற்றுலா பகுதிகளில் நின்று ரசித்துச் செல்வார்கள். இது மட்டுமின்றி கர்நாடக வனத்துறை அலுவலகம் மற்றும் சோதனை சாவடி ஆகிய பகுதிகளில் கடமான் ஒன்று தினசரி வந்து செல்கிறது. சாலை அருகே வனத்துறை கட்டிடம் அமைந்துள்ளதால் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த கடமான் அழகை ரசித்து செல்கிறார்கள்.
மக்களைக் கண்டு அச்சப்படாமல் தைரியமாக இந்த பகுதியில் உலாவரும் கடமான் நாள்தோறும் வந்துசெல்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.
- பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி கடற்கரை பகுதியில் 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது.
வழக்கம்போல் சுற்றித்திரிந்த அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.
இதனால் காயங்களுடன் கிடந்த அந்த மானை அவ்வழியாக வந்த பிரபுகுமார் என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்தவர்கள் வனவர் பெரியசாமி, வனக்காவலர் நாகூரான், வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், வேதமூர்த்தி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மானை மீட்டு கோடியக்கரை உதவி கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது.
காங்கயம்:
காங்கயம் அடுத்துள்ள ஊதியூா் மலையில் 100 க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. கோடை காலங்களில் மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால் குடிநீா் மற்றும் உணவுக்காக மலையில் இருந்து வெளியேறி அருகிலுள்ள தோட்டங்களுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு மலையிலிருந்து கீழிறங்கி, குண்டடம் சாலையைக் கடக்க முயன்ற ஒரு புள்ளிமான், ஒரம்பபுதூா் பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி உயிரிழந்தது. இது குறித்த தகவலறிந்த காங்கயம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மானின் உடலை கைப்பற்றினா். இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
- சில சமூக விரோதிகள் காட்டுக்குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
- சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான் உள்ளிட்ட அரிய வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. சில சமூக விரோதிகள் காட்டுக் குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதன் காரணமாக வனத்துறையினரும் ராஜபாளையம் வனப்பகுதியில் கண்கா ணிப்பை தீவிரப்படுத்தி யுள்ளனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வனச்சரக அலுவலர்கள் சக்தி பிரசாத், கதிர்காமன், வனவர் இள வரசன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஆவாரம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
உடனே வனத்துறையினர் அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். அப்போது அங்கிருந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. உடனே வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் 6 பேர் தப்பிவிட, காளிராஜ் (வயது21) என்பவர் மட்டும் சிக்கினார். தொடர்ந்து வீட்டில் இருந்த 10 கிலோ மான் இறைச்சி, அரிவாள், கத்தி, எடை எந்திரம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காளிராஜை கைது செய்து விசாரித்தபோது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான வாழைக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் கும்பலாக சென்று மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
- திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள மான்களுக்கு பொதுமக்கள் வழங்க உணவுகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- கிரிவலப்பாதையில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாப்பது வனத்துறையினரின் கடமையாகும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள், குரங்குகள் உள்ளன.
வனப்பகுதியில் இருந்து மான்கள் மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதைக்கு வருவதை தடுக்க வனத்துறை சார்பில் வனப்பகுதியின் எல்லையில் இரும்பு கம்பியால் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது அந்த இரும்பு வேலிகள் வரை துள்ளி குதித்து மான்கள் கூட்டமாக வருகின்றன. அந்த மான்களை கண்டதும் கிரிவலத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மான்களுக்கு பிஸ்கெட், பன், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி போடுகின்றனர்.
வனவிலங்குகளான மான்கள் போன்றவை காட்டில் இயற்கையாக விளைய கூடிய செடி, கொடி, காய்கனிகளை சுயமாக தேடி உண்ணும் பழக்கத்தை கொண்டவை.
மக்கள் உணவு பொருட்களை போடுவதால் மான்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு, குறிப்பிட்ட இடத்திற்கு சென்றால் உணவு கிடைக்கும் என்று சுயமாக உணவு தேடும் பழக்கத்தை மறந்து அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வருகின்றன.
பெரும்பாலும் கிரிவலப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் எதிரே வனப்பகுதியில் காலை மற்றும் மதியம் வேலையில் மான்கள் கூட்டமாக வந்து நிற்கின்றன.
மக்களை கண்டதும் பயந்து ஓடிவிடும் மான்கள் அவர்கள் கையை நீட்டியதும் உணவு பொருட்கள் தருகின்றனர் என்று அச்சமின்றி அருகில் வருகின்றன. மக்கள் அளிக்கும் உணவு பொருட்களால் சில சமயங்களில் மான்களுக்கு ஆபத்து ஏற்பட கூடும்.
கிரிவலப்பாதையில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாப்பது வனத்துறையினரின் கடமையாகும்.
இதுகுறித்து திருவண்ணாமலை வனத்துறையினர் கிரிவலப்பாதையில் வனப்பகுதிகளில் உள்ள மான்களுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.