என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delay"

    • திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சென்னை, கேரளா செல்லக்கூடிய ரெயில்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது.

    திருப்பூர் :

    பின்னலாடை நகரமான திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை, கேரளா செல்லக்கூடிய ெரயில்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது.

    மங்களூர் சென்ட்ரலில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய வெஸ்ட் கோஸ்ட் ரெயில் தினமும் காலை 8.08 மணிக்கு திருப்பூருக்கு வந்து 8.09 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்படும். இந்த ெரயில் இன்று 5 மணி நேரம் 30 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.அதன்படி இந்த ெரயில் திருப்பூருக்கு மதியம் 1:30 மணிக்கு வந்து 1:32க்கு புறப்படும்.

    அதேபோன்று திப்ருகரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய சிறப்பு ரெயில் 6 மணி நேரம் 14 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டு இருக்கிறது.அதன்படி திருப்பூருக்கு பிற்பகல் 3.57 மணிக்கு வந்து 3.59 மணிக்கு புறப்படும். கோர்பாவில் இருந்து கொச்சுவேலி வரை செல்லக்கூடிய சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.43 மணிக்கு வந்து 5.45 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 10 மணி நேரம் 23 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.

    அதன்படி இந்த ரெயில் மாலை 4.07 மணிக்கு திருப்பூருக்கு வந்து 4.09 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்படும். இதேபோன்று பல்வேறு ரெயில்கள் இன்று ஒரு மணி நேரம் ,2 மணி நேரம் தாமதமாகவே திருப்பூருக்கு வந்தது. காலை திருப்பதி மற்றும் சென்னை செல்லக்கூடிய இன்டர்சிட்டி ரெயில் 50 நிமிடங்கள் தாமதமாக திருப்பூருக்கு வந்தது. இதேபோன்று திருவனந்தபுரம் செல்லக்கூடிய கேரளா எக்ஸ்பிரஸ், சில்சர் - கோவை எக்ஸ்பிரஸ், தன்பா செல்லக்கூடிய ரெயில்களும் ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.

    • மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து காலதாமதம் இல்லாமல் உணவு அளிக்க வேண்டும்.
    • அதிகாரிகள் கடமை உணர்வோடும் மனசாட்சியோடும் செயல்பட வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    வடகிழக்கு பருவமழை பாதிப்பாக மாறும் நிலையில் பாதிக்கப்படும் மக்களுக்கு சேவை செய்யவிரைவாக அனைத்துத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    பருவமழை பாதிப்பின்போது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து காலதாமதம் இல்லாமல் உணவு அளிக்க வேண்டும்.

    மின்சாரம், கைபேசி, குடிநீர், மருத்துவமனை ஆகியவைகளை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    அதிகாரிகள் கடமை உணர்வோடும் மனசாட்சியோடு ம்செயல்பட வேண்டும்.

    அப்படி செயல்பட்டால் நான் மனிதநேயத்தோடு செயல்பட்டதற்கான உரிய மதிப்பு மக்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜி பாஸ்கர், அண்ணாதுரை, வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ரெயில் நிலையங்களில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
    • விசாரணையில் பொதுப்பணித்துறைக்கு டீசல் பிடித்து செல்லும் லாரி என்பது தெரியவந்தது.

    சுவாமிமலை:

    திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை- தரங்கம்பாடி சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் லாரி மோதியதால் ஓ.எச்.டி லைன் அறுந்து விழுந்து கேட் சிக்னல் பழுதானது.

    இதனை சீரமைக்கும் பணியை ரெயில்வே பணியாளர்கள் இரவில் உடனடியாக மேற்கொண்டனர். சிக்னல் சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. 

    இதனால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், திருப்பதி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் சுமார் 3 மணி நேரம் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பொதுப்பணித்துறைக்கு டீசல் பிடித்து செல்லும் லாரி என்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து காலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து ஆடுதுறை கேட்பகுதியை கடக்க ஏதுவாக மாற்று ஏற்பாடாக ரெயில்களில் டீசல் என்ஜின் பயன்படுத்தி இயக்கப்பட்டது.

    • விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை விற்க முடியாமல் காத்து கிடக்கின்றனர்.
    • விவ–சாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா முன்பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    ராராமுத்திரகோட்டை அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் பலர் தாங்கள் அறுவடைசெய்த நெல்லை கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர்.

    கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

    • மதுரை விமான நிலையம் சர்வதேச அங்கீகாரம் பெறுவதில் தாமதம் ஏன்? என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது.
    • இந்திய விமான நிலைய ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    மதுரை

    தென் மாவட்டங்களில் முக்கிய விமான நிலையமாக திகழும் மதுரை விமான நிலையம் தென் மாவட்ட மக்களின் உள்நாட்டு சேவை மூலம் வான்வழி போக்குவரத்திற்கு பேருதவியாக விளங்கி வருகிறது. அதுமட்டுமின்றி சர்வதேச அங்கீகாரம் பெறாவிட்டாலும் துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து செல்லலாம்.

    மதுரை விமான நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் அமைக்கப்பட்ட கோயம்புத்தூர், திருச்சி விமான நிலையங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றநிலையில் மதுரை விமான நிலையம் தற்போது வரை சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் பெறவில்லை. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் சமீபத்தில் மதுரை விமான நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளதாகவும், இந்தியாவில் 5 விமான நிலையங்கள் 24 மணி நேரம் செயல்பட உள்ளதாகவும், மத்திய அரசு ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அதில் மதுரை விமான நிலையம் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேரமும் செயல்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் தற்போது வரை மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்படவில்லை.

    இது தொடர்பாக பாஸ்கரன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு இந்திய விமான நிலையம் ஆணையம் பதில் அளித்துள்ளது.

    அதில், மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக 2 நீர்நிலை நிலப்பரப்பு தமிழக அரசாங்கத்திடம் நிலுவை யில் உள்ளது. நிலத்தை ஒப்படைத்த பின்னரே விமான ஓடுதள விரிவாக்கப் பணிகள் நடைபெறும்.

    மதுரை விமான நிலைய கட்டுப்பாட்டு மைய விரிவாக்க பணிகள் இன்னும் வகுக்கப்படும் நிலையிலேயே உள்ளது. மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்போது வரை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. 24 மணி நேரம் மதுரை விமான நிலையம் செயல்படுவதற்காக புதிய விமானங்கள் இயக்கப் பட வேண்டி உள்ளது. இதற்காக விமான சேவை நிறுவனங்க ளுடன் அறிக்கை பெறப் பட்டுள்ளது. மதுரை விமான நிலை யத்தை தரம் உயர்த்தி சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. கடந்த 2022 முதல் 2023 வரை மதுரை விமான 11லட்சத்து 38ஆயிரத்து 928 பயணிகள் பயணித்துள்ள னர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும்.
    • இனி பொதுமக்களை ஒருபோதும் அலைக்கழிக்க கூடாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் , காரைக்கால் மதகடியில் அமைந்துள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்ட அமைச்சர், ஒரு சிலர் காலதாமத்துடன் வருகை தருவதாக கூறப்படுகிறது. இனி, அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும். காலதாமதத்துடன் வந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

    மேலும், அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பொதுமக்கள் சிலர் நிற்பதை பார்த்த அமைச்சர், அவர்கள் ஏன் காத்துகிடக்கிறார்கள்? அவர்களது குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து உடனுக்குடன் அவர்களை அனுப்பி வைக்கவேண்டும். இனி பொதுமக்களை ஒருபோதும் அலைக்கழிக்க கூடாது. முக்கியமாக, பொதுமக்களிடமிருந்து எனக்கு எந்தவித குறைகளும் வராத வண்ணம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி செய்ய வேண்டும் என்றார்.

    • விமானத்தில் பயணம்செய்ய வந்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
    • பயணிகள் விமானநிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு செல்லும் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய சுமார் 150 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.

    இதற்கிடையே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை ஊழியர்கள் கண்டு பிடித்தனர். இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படும் என்று விமான நிறுவனம் அறிவித்தது. இதனால் அந்த விமானத்தில் பயணம்செய்ய வந்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

    இன்று மதியம் 12 மணி வரை விமானத்தில் தொழில் நுட்பகோளாறு சரி செய்யப்படாததால் விமானம் புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் பயணிகளுக்கு முறையான அறிவிப்பு மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்படாததால் கடும் அவதி அடைந்தனர்.

    12 மணிநேரத்துக்கும் மேல் காத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமானநிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானம் செய்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.
    • உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6:55 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.

    விமானம் ஓடுபாதையில் செல்வதற்கு முன்பு விமானத்தின் எந்திரங்களை விமானி சரிபார்த்த போது அதில் கோளாறு இருப்பதை அறிந்தார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் எந்திரம் பழுது பார்க்கப்பட்டு இன்று காலை 8:10 மணிக்கு தாமத மாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரியான நேரத்தில், விமானி கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • பாபநாசம் ரயில் நிலையத்தில் பாசஞ்சர் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது.
    • கும்பகோணம் ரயில் பாதையில் திருச்செந்தூர் உழவன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது,

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை நோக்கி பாசஞ்சர் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அப்பொழுது திடீரென பசு மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது.

    இதில் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது.

    இதில் பசு மாடு ரயில் என்ஜினில் சிக்கி சிறிது தூரம் இழுத்து சென்றது.

    இதனால் ரெயில் என்ஜின் கோளாறு ஆனது.

    பின்னர் கும்பகோணத்திலிருந்து மாற்று ரயில் என்ஜின் வரவழைக்கப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது .

    இது சம்பவத்தால் தஞ்சாவூர் கும்பகோணம் ரயில் பாதையில் திருச்செந்தூர் உழவன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது,

    இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்ர மணியம், ஏட்டு ஆறுமுகம் ஆழ்கியர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் நடை மேடையில் நின்று கொண்டிருந்த மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது.

    இதன் காரணமாக அந்த வழியாக ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தென் மண்டலங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    அதன்பிறகு தண்ட வாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. சென்னை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரம், மாம்பலம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஏறி செல்வது வழக்கம். அந்த ரெயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்ததால் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்களும், மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    • தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
    • முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்

    திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே இன்று காலை 7. 40 மணியளவில் வந்தது. அப்போது ரெயிலில் பயணம் செய்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கொத்தனார் புஷ்பராஜ் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

    உடனே சக பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரெயிலின் சங்கிலியை இழுத்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினர். ரெயில் டிரைவர் மற்றும் டி.டி.ஆர்.,ரெயில்வே ஊழியர்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.ஒரத்தூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் அவர் கையில் வைத்திருந்த நெஞ்சுவலி சம்பந்தமான மாத்திரையை கொடுத்து முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ெரயில் 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக சென்றது.  

    • நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
    • பணிகளை செய்வதில் தாமதப்படுத்தக்கூடாது என்று மேயர், ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.

    திருப்பூர்

    திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டல தலைவர் கோவிந்தராஜ், உதவி ஆணையாளர் வினோத், துணை ஆணையாளர்கள் செல்வநாயகம், கண்ணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள். 4-வது குடிநீர் திட்டப்பணிகள் குழாய் பதிப்பு பணிகள் நெடுஞ்சாலைத்துறையின் பிரதான சாலையில் நடைபெற வேண்டியுள்ளது. அதுபோல் குழாய் பதிப்பு பணிகள் முடிந்த சாலையை செப்பனிடும் பணி நடைபெறாமல் உள்ளது. இதுபோன்ற பணிகளை ஒருங்கிணைந்து செய்து காலதாமதம் இல்லாமல் விரைந்து செய்து முடிப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது. சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைப்பு, குடிநீர் குழாய் பதிக்க சாலையில் குழிதோண்டும் பணி ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    பணிகளை செய்வதில் தாமதப்படுத்தக்கூடாது என்று மேயர், ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.

    ×