என் மலர்
நீங்கள் தேடியது "Delay"
- காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
- தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
மதுரை:
மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆனந்தி ஷா என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தனது இடத்தை அபகரித் துக் கொண்டதாக கூறி நில அபகரிப்பு சட்டத்தின்கீழ் மேற்கு வங்காளத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் மீது மதுரை குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் தற்போது தலைமறைவாகி உள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிந்து ஓராண்டு ஆகியும், இன்னும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் காவல்துறையினர் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் இருக்கிறார் என தெரிந்தும் காவல்துறையினர் அவரை மீட்டு வந்து விசாரிக்கவில்லை.
எனவே நில அபகரிப்பு வழக்கை விரைந்து விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதி சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் போதுமான தகவல் இல்லை என கூறிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் மறைந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தலைமறைவு குற்றவாளிகள் குறித்து காவல்துறை ஏன் முன்னணி நாளிதழ்களில் அவர்களது விவரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்துவதில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், அண்டை மாநிலமான கேரளத்தில் பிரபலமான முன்னணி நாளிதழ்களில் தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதனை நாள்தோறும் பார்க்க முடிகிறது.
காவல்துறையின் இது போன்ற நடவடிக்கை குற்றவாளிகளுக்கு உறுதுணையாக பாதுகாப்பது போல் உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் தென்மண்டல காவல்துறை தலைவர், ஐ.ஜி. மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோர் தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏன் என்பது குறித்து விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
- திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் பாதிப்பு.
- பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக திடீரென மேகங்கள் திரண்டு வந்து, மேகமூட்டத்துடன் இருளான சூழ்நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடும் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக 35 விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதில் சென்னை வரும் 17 விமானங்களும், சென்னையில் இருந்து புறப்படும் 18 விமானங்களும் அடங்கும்.
- முத்து நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.
- இரவு நேரங்களில் பாம்பு, நாய்கள் தொல்லையால் மக்கள் அவதியடைந்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே முத்துநகரில் வசிக்கும் நகர் வாசிகள் தங்களது சொந்தசெலவிலேயே தெருவிளக்குகளை அமைத்து புதன்கிழமை பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தனர்.
சீர்காழி நகராட்சி 1-வது வார்டில் முத்துநகர் அமைந்துள்ளது.
இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு நகராட்சி சார்பில் மின்விளக்குகள் அமைத்து தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தும் மின்விளக்கு அமைத்திட தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனால் இரவு நேரங்களில் செல்லும்போது பாம்பு போன்ற விஷ ஜந்துக்களாலும், நாய்கள் தொல்லையாலும் மக்கள் அவதியடைந்தனர்.
இதனையடுத்து முத்துநகர் சங்க நிர்வாகிகள் ஏற்பாட்டின்படி நகர் வாசிகள் இணைந்து ரூ.25ஆயிரம் செலவில் அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் 8 மின்விளக்குகளை பொருத்தினர்.
அதனை பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி முத்து நகர் சங்க தலைவர் அமுதராஜன் தலைமையில் நடந்தது. சங்க செயலாலரும், நகர்மன்ற உறுப்பினருமான முபாரக் அலி மின்விளக்கை ஒளிரசெய்து தொடங்கி வைத்தார்.
இதில் பொருளாளர் சுரேஷ், துணை தலைவர் பிச்சைசாலி முகம்மது, துணை செயாளர் இஸ்மாயில் ஜின்னா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
- கோவையிலிருந்து தினமும் காலை 8.50 மணிக்கு புறப்படும்.
- ரெயிலில் அதிக அளவிலான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
திருப்பூர் :
பின்னலாடை நகரான திருப்பூரில் வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அவர்கள் அதிக அளவில் ெரயில் மூலமாகவே தங்களது சொந்த ஊருக்கு பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையிலிருந்து தினமும் காலை 8.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, பெங்களூரு, ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம், அனந்தபூர், மந்திராலயம் ரோடு, ராய்ச்சூர், கங்காபூர் ரோடு, சோலாப்பூர், பூனே வழியாக லோகமான்ய திலக் வரை இந்த ெரயில் செல்லும். இந்த ெரயிலில் அதிக அளவிலான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
வடமாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணத்தால்இந்த ரெயிலுக்கான இணைப்பு ெரயில் வருவதில் தாமதமானது. இதனால் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக காலை 8.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட வேண்டிய ெரயில் இன்று மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு 2.45 மணிக்கு வந்து 2.47 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று 13 மணி நேரம் தாமதம், நேற்று முன்தினம் 3½ மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ெரயிலில் கோவையில் இருந்து திருப்பூருக்கு பணிக்கு வரும் தொழிலாளர்களும் பயணிக்கிறார்கள். ரெயில் தாமதத்தால் தொழிலாளர்கள், பயணிகள், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
- அமைச்சர் கே.என்.நேரு, ஆதிதிராவிட பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 47 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், ஒரு கன்று என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், 5 பயனாளிகளுக்கு தலா இரண்டு காளை மாடுகளும் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு வழங்கினர்.
- குடிநீர் கலங்கலாக வருவதை தடுப்பதற்காக கம்பரசம்பேட்டை நீரேற்று நிலையப் பகுதியில் ரூ.5 கோடியில் நவீன எந்திரம் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
திருச்சி :
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சமலையில் வசித்து வரும் பழங்குடியின சுய உதவிக்குழு பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச கரவை மாடுகள் 70 பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலுக்கு காணிக்கையாக பெறப்பட்ட கால்நடைகள், ஆலய கோசாலை மற்றும் கம்பரசம்பேட்டை கோசாலைகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிலிருந்த 122 பசு மாடு மற்றும் கன்றுகளை மேற்கண்ட பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு கம்பரசம்பேட்டை கோசாலையில் இன்று நடந்தது.
இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆதிதிராவிட பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 47 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், ஒரு கன்று என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், 5 பயனாளிகளுக்கு தலா இரண்டு காளை மாடுகளும் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு வழங்கினர்.
இதன் மூலம் பச்சமலையில் உள்ள தென்புறநாடு, வடநாடு, கோம்பை ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மகளிர் குழுவை சேர்ந்தவர்கள் பயனடைந்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடிநீர் கலங்கலாக வருவதை தடுப்பதற்காக கம்பரசம்பேட்டை நீரேற்று நிலையப் பகுதியில் ரூ.5 கோடியில் நவீன எந்திரம் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே இது போன்ற எந்திரம் ஸ்ரீரங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலை பணிகளை தொடங்கிய நிலையில் மழை வந்துவிட்டது. போக்குவரத்தும் இடையூறாக இருக்கிறது. இதனால் பகலில் சாலைகள் போட இயலவில்லை. இரவில் மட்டுமே சாலைகள் போடும் பணி நடக்கிறது. மழையில் சாலை போட்டால் தார் வீணாகிவிடும். இயற்கையின் சீற்றத்தால் மட்டுமே சாலை பணிகள் தாமதம் ஆகி உள்ளது. ஆனால் நடைபெற உள்ள பணிக்கான ஆணைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போக்குவரத்து மற்றும் மின்சாரம் சப்ளையில் அரசு வருமானம் பார்க்க கூடாது. லாபம் ஈட்டக் கூடாது என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, சரி ரைட் என மட்டும் பதில் அளித்தார்.
அதி.மு.க. ஆட்சியிலும் பஸ் கட்டணம் மற்றும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை மனதில் வைத்து சரி ரைட் என மட்டும் சிரித்தவாறு பதில் அளித்து சென்றதாக அங்கிருந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தனியார் பள்ளிகளை விட்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்ததால் ஒருசில இடங்களில் சுழற்சி முறையிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
- அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி :
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளை விட்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்ததால் ஒருசில இடங்களில் சுழற்சி முறையிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மேலும் சில அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த படிக்க வைத்தும் வருகிறார்கள். அந்த அளவிற்கு அரசு பள்ளியில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் சென்று வருகிறார்கள்.
இதற்கிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஒரு மாத காலமாக பாடப்புத்தகம் வழங்கப்படாமல் இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் காலாண்டு தேர்வு வர இருப்பதால் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து திருச்சி அரசு பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், பொதுவாக வசதி படைத்தவர்கள் தங்களின் குழந்தைகளை பணம் செலவு செய்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். படிக்காத கூலி வேலை ெசய்யும் பாமர மக்கள் மட்டும் தான் அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை அனுப்பும் நிலை இன்னும் ஒரு சில இடங்களில் மாறாமல் தான் உள்ளது.
அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதமே வழங்க வேண்டிய புத்தகம் இன்னும் பள்ளிகளில் படிக்கும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரைகள் மூலமாகவும், குறிப்புகள் மூலமாகவும் தான் பாடம் கற்பித்து வருகிறார்கள்.
பாடப்புத்தகம் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. காலாண்டு தேர்விற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. கடைசி நேரத்தில் புத்தகத்தை வழங்கினால் மாணவர்கள் எவ்வாறு படித்த நல்ல மதிப்பெண் பெறமுடியும். குறிப்பாக பீமநகர் அரசு பள்ளி, பொன்மலைப்பட்டி அரசு பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் எதுவுமே வழங்கப்படாமல் உள்ளது.
தனியார் பள்ளியில் படிப்பவர்கள் பணம் கொடுத்து தாங்கள் படிக்கும் பாடப்புத்தகங்களை பெற்று கொள்வார்கள். ஆனால் அரசு பள்ளியில் ஏழை எளிய மாணவ, மாணவிகள் அதை எப்படி பெற்று கொள்ள முடியும். ஆகவே புத்தகம் வழங்கப்படாமல் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு விரைந்து புத்தகங்களை வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, புத்தகங்கள் இன்னும் சென்னையில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு வரவில்லை. அவைகள் வந்த உடன் விரைவில் புத்தகம் வழங்காமல் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
- தீவட்டிபட்டி அருகே சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 6 மாதம் ஆகியும் பணிகள் நடக்காததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த நாச்சனம்பட்டி காலனி 12 - வது வார்டு பகுதியில் சுமார்100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் குடிநீர் மற்றும் சாக்கடை வசதி இன்றி வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒப்பந்ததாரர் சார்பாக சாக்கடை வசதி அமைக்க ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது.
ஒவ்வொரு குடியிருப்புகள் முன்பு சுமார் 5 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மரப்பலகை வைத்து வீட்டுக்குள் சென்று வருகின்றனர்.
முதியோர்கள் இதில் நடக்க இயலாமல் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பள்ளம் தோண்டி வெகுநாட்கள் ஆகியும் சாக்கடை கால்வாய் பணிகள் முடிக்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாக்கடை வசதி மற்றும் குடிநீர் இணைப்பு ஆகிய பணிகளை உடனடியாக செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயில் தினமும் இரவு 7.35 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து 7.40 மணிக்கு திருத்தணிக்கு புறப்பட்டு செல்லும்.
நேற்று 7.35 மணிக்கு வந்த மின்சார ரெயில் அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட பாயிண்ட் கோளாறு காரணமாக 8.50 மணி வரை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் ரெயில் என்ஜின் முன்பாக நின்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்பாபு, வெங்கடேசன், ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ரெயில் மறியல் செய்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தண்டவாளத்தில் பாயிண்ட் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மின்சார ரெயில் 9.10 மணிக்கு திருத்தணி நோக்கி புறப்பட்டு சென்றது. ரெயில் மறியல் காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் வரும் 2 மின்சார ரெயில்கள் திருவலங்காடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு காலதாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள் முபரக் பாஷா, தர்குனிஷா. பாலுச்செட்டிசத்திரத்தை சேர்ந்தவர் மும்தாஜ்பேகம், வாலாஜாபாத்தை சேர்ந்தவர் நிஷார் அகமது. இவர்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் ஒரு சென்ட் நிலத்தை கடந்த 1999-ம் ஆண்டு ரெயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது. அதற்குரிய இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்கக்கோரி அவர்களது சார்பில் காஞ்சீபுரம் சார்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு உடனடியாக அவர்கள் 4 பேருக்கும் தலா ரூ.37 லட்சத்து 66 ஆயிரத்து 574 இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டது. ஆனால் இழப்பீட்டுத் தொகை வழங்காமல் ரெயில்வே நிர்வாகம் தாமதம் செய்து வந்தது.
இதையடுத்து திருப்பதி-புதுச்சேரி ரெயில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரின் வாகனம், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியின் வாகனம் மற்றும் கலெக்டர் அலுவலக அசையா சொத்துகளை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்திற்கு சென்ற கோர்ட்டு ஊழியர்கள் அங்கு நின்று கொண்டிருந்த திருப்பதி - புதுச்சேரி ரெயிலில் ஜப்தி செய்வதற்கான நோட்டீசை ஒட்டினர். இது போன்ற இழப்பீட்டு தொகை பிரச்சினையில் பஸ்சை அதிகாரிகள் ஜப்தி செய்வார்கள். ஆனால் ரெயிலை ஜப்தி செய்வதாக கூறி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ரெயில்வே ஊழியர்கள் இது குறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க சொல்வதாக தெரிவித்தனர். அதன் பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
கலெக்டரின் வாகனம், வருவாய்த்துறை அதிகாரியின் வாகனம் இல்லாததால் அவற்றை ஜப்தி செய்யவில்லை. #TrainConfiscation #KanchipuramRailwayStation
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அந்த பெண் 13 நாள்கள் மருத்துவமனையில் இருந்து, பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவர் தாமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். முகேஷ், வினய் உள்பட மற்ற 4 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.
டெல்லி நீதிமன்றம் விதித்த தூக்குதண்டனையை எதிர்த்து 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். குற்றவாளிகளில் ஒருவர் மேல்முறையீடு செய்யவில்லை. அவர்களது மேல்முறையீட்டு மனுவில் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, அவர்களது மனுவை நிராகரித்து தூக்கு தண்டனையை கடந்த ஜூலை மாதம் உறுதி செய்தது. ஆனால், தற்போது வரை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை விதிக்கப்படாதது ஏன்? என டெல்லி மகளிர் ஆணையம் திகார் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #NirbhayaMurderCase #DCW