என் மலர்
நீங்கள் தேடியது "destruction"
- டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
- 2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டது,
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, பண்ருட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது காலா வதியான பொருட்கள், குளிர்பானங்கள், கலப்பட டீ தூள், பழக்கடைகளில் கார்போக்கல் வைத்து பழங்கள் பழுக்க வைக்க படுகிறதா என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர் 2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
- தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஸ் நிறுத்த பயணியர் உணவகங்களை திடீர்ஆய்வு மேற்கொண்டனர்
- காலாவதியான பால் பாக்கெட்டுகள், கிரீம் போன்றவற்றை 150 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள பயண வழி உணவகங்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என பல்வேறு புகார்கள் மீண்டும் வந்தது.அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின்படி, விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஸ் நிறுத்த பயணியர் உணவகங்களை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். சுகந்தன் அவர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன் , பிரசாத், பத்மநாபன் , ஸ்டாலின் ராஜரத்தினம் மற்றும் கதிரவன், ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின் போது 2 உணவகங்களின் சமையல் கூடம் சுகாதாரமின்றி காணப்பட்டதை தொடர்ந்து அந்த உணவகங்களுக்கு முன்னேற்ற அறிக்கை வழங்கி அவற்றை தற்காலிகமாக நிறுத்தவும் செய்து குறைகளை சரி செய்த பின் மீண்டும் திறக்க அறிவுறுத்தப்பட்டது.மேலும் 2 உணவகங்கள் சுகாதார வழிமுறைகள் பின்பற்றாத காரணத்தால் அவற்றிற்கு தலா ரூ,2000அபராதம் விதிக்கப்பட்டதுஆய்வின்போது உணவகங்களில் மீதமான வெஜிடபிள் பிரியாணி ,காலாவதியான பால் பாக்கெட்டுகள், கிரீம் கேக் மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத பாதாம் குளிர்பானங்கள் , சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள் ஆகியவை சுமார் 150 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
ஆய்வின் போது உணவக நடத்துவோருக்கு குறைகளை சுட்டி காட்டி 7 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி 15 நாட்களுக்குள் சரி செய்ய அறிவுறுத்தப் பட்டது. தவறும் பட்சத்தில் சட்டபடியான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயணியர்களிடமும் அவ ர்களை கருத்துக்களை கேட்டு அறிந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.இதனால் இரவு நேரத்தில் பரபரப்பு நிலவியது.
- வைக்கோல் லாரி எரிந்து நாசமானது
- மின் கம்பி மீது உரசியதில் சம்பவம்
கரூர்:
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே, தம்மா நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு வைக்கோலை ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. தாளியாபட்டி சாலை அருமைக்காரன்புதுார் பகுதியில் இந்த லாரி வந்த போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசிய வைக்கோல் தீ பற்றி எரிந்தது. தகவலறிந்த, கரூர் தீயணைப்பு துறையின சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், லாரி முழுதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.
- கல்வராயன் மலை, கரியாலூர் போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- அங்கு 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 8 பிளாஸ்டிக் பேரல்களில் 1600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள தாழ்மொழிபட்டு கிராமத்தின் அருகில் கல்வராயன் மலை, கரியாலூர் போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 8 பிளாஸ்டிக் பேரல்களில் 1600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டனர். இதனை போலீசார் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.
அதேபோல் கல்வராயன் மலை சிறுகலூர் கிராம தெற்கு ஓடையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி தலைமையில் தனி படை போலீசார் கல்வராயன்மலை சிறுகலூர் கிராம தெற்கு ஓடை அருகில் கள்ள சாராயம் சம்பந்தமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் லாரி டியூப்பில் 260 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையும் சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர். இதில் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- நேற்றிரவு வழக்கம்போல் இருவரும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
- ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
அதிராம்பட்டினம்:
பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40).
இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி மற்றும் தாய் இருவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இதேபோல் அருகில் உள்ள வீட்டில் வீரையன் (44) என்பவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவியும், மகளும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் இருவரும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென நள்ளிரவில் வெடிக்கும் சத்தம் கேட்டு இருவரும் கண் விழித்து பார்த்தபோது வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் கத்தி கூச்சலிட்டனர்.
அதற்குள்ளாக, அருகில் இருந்த மாரிமுத்து என்பவரின் வீட்டிலும் தீ பரவியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தண்ணீர் ஊற்றி போராடி தீயை அணைத்தனர்.
இதில் வீட்டில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
அதிர்ஷ்டசவமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
- 4 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
- நோட்டு புத்தகம், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், துணிகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளுர் கண்ணந்தங்குடியில் நான்கு வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
இதில் பணம், நகை, மாணவர்களின் சான்றிதழ், நோட்டு புத்தகம், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், துணிகள் சாம்பலானது.
இதையடுத்து தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு பாலம் தொண்டு நிறுவனம் மூலம் செயலாளர் செந்தில்குமார், நிவாரணமாக தார்பாய் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பன்னீர்செல்வம், பிரைட் பீப்புள்ஸ் நிறுவனர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை.
- அதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டபோது வெங்களுர் கிராமத்தில் தண்ணி பள்ளம் ஓடை அருகில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 கிலோ கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது, கஞ்சா செடிகளை பயிரிட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது 32) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டபோது வெங்களுர் கிராமத்தில் தண்ணி பள்ளம் ஓடை அருகில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 கிலோ கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது, கஞ்சா செடிகளை பயிரிட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது 32) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
- ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர்.
- கஜா புயலால் மாமரங்கள் முற்றிலும் சாய்ந்து பேரிழப்பை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக கடற்கரையோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர். புதுப்பள்ளி, தெற்குபொய்கை நல்லூர், பூவைத்தேடி காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரதான தொழிலாக மா சாகுபடி செய்து வருகின்றனர்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் கொடூர தாக்குதலால் லட்சக்கணக்கான மா மரங்கள் சாய்ந்து மரங்கள் முரிந்தும் பேரிழப்பை ஏற்படுத்தியதுகஜா புயலால் சாய்ந்த மரங்கள் 5 பிறகு மீண்டும் துளிர்விட்டும்,புதிய மரங்கள் நடப்பட்டு காய்க்க தொடங்கி உள்ள இப்பகுதிகளில் குறிப்பாக பங்கனப்பள்ளி,ஒட்டு மாங்காய் ,ருமேனியா செந்தூரா, நீளம், காலபாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மாங்காய் காய்த்து விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில் இங்கு காய்க்கும் மாங்கனிகளை அதிக சுவை இருப்பதால் இம் மாங்காய்களை கேரளா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் குளிர்பான நிறுவனங்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு தனியார் நிறுவனங்கள் மாம்பழத்தை கொள்முதல் செய்யாததால் கடந்த ஆண்டு 35 ரூபாய் விலை போன ருமேனியா கிலோ 7 ரூபாய்க்கும் 50 ரூபாய் விற்ற பங்கனப்பள்ளி 20 ரூபாய்க்கும் 40, 50 ரூபாய் விலை போன ஒட்டு மாங்காய் 12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாங்கனிகள் மரத்திலிருந்து வீணாவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் இப்பகுதியில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைத்து மாங்காய்களை அரசே கொள்முதல் செய்து உரிய விலையை தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூரை வீடு மின் கசிவால் தீப்பற்றி முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது.
- ரூ.5 ஆயிரம் நிவாரணம், காய்கறி மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கினார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே சொக்கநாதபுரம் ஒத்தக்கடையில் கூலித் தொழிலாளியான நடேசன் என்பவரின் கூரை வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகிவிட்டது.
இதனை அறிந்த பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு அறிவுறுத்தலின் படி, பேராவூரணி தெற்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ நேரில் சென்று பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ஆறுதல் கூறி ரூபாய் 5000 நிவாரணத் தொகையும், காய்கறி மற்றும் அரிசி வழங்கினார்.
இந்நிகழ்வில் கட்டையங்காடு ஒன்றிய கவுன்சிலர் கவிதா செல்வ குமார், சொக்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராம் பிரசாத், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராசு, முன்னாள் மாநில கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன் கூட்டுறவு சங்க தலைவர் வே.கூத்தலிங்கம், இளைஞரணி செயலாளர் கே.எஸ்.வினோத் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் எஸ்.சத்யராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.
- வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னரம்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையன் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் சொந்த கிராமத்தில் 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.
எங்களுக்கு வேறு இடமோ, வீடோ இல்லை. பனைத் தொழில் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இந்த இடத்திற்கு எங்களுக்கு 2சி பட்டா வழங்கப்பட்டுள்ளது. பனை மரங்களுக்கு வரியும் நிலத்திற்கு கந்தாயர் ரசிதும் செய்து வருகிறோம்.
ஆனால் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை இடித்தும் விவசாயத்தை அழித்தும் எங்கள் இடத்தை காலி செய்ய சொல்லியும் மிரட்டி வருகின்றனர். எனவே 3 தலைமுறையாக எங்கள் அனுபவத்தில் மற்றும் எங்களின் வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
- 9 ஏக்கரில் முந்திரி விவசாயம் செய்து வந்தார்.
- பல லட்சம் மதிப்பிலான முந்திரி மரங்கள் எரிந்து நாசமானது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் மற்றும் பழையாறு பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் உள்பட 9 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி விவசாயம் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் இவர்களது முந்திரி தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த பூம்புகார் மற்றும் சீர்காழி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க நீண்ட நேரம் முயற்சி செய்து தீயை அணைத்தனர்.
இந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான முந்திரி மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது. மேலும் இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பல மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
- வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வண்டலூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது45). நேற்று மின்கசிவு காரணமாக இவரது கூரை வீட்டில் தீப்பிடித்தது.
அப்போது காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவி வண்டலூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த தமிழரசி , வெங்கடேசன், பாப்பையன், ராஜேந்திரன், ராஜேஷ் கண்ணா, மதீஷ் ராஜ், சுப்பிரமணியன், அரவிந்த் , பெரியசாமி, ராகுல் ஆகியோ ரின் கூரைவீடுகளுக்கும் பரவியது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை, கீழ்வேளூர், வேளா ங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட 4 தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து பல மணிநேரம் போராட்ட த்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
ஆனாலும் இந்த தீவிபத்தில் 11 கூரைவீடுகளும் முழுமையாக எரிந்து சாம்பலானது. மேலும் வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் எரிந்து சேதமானது.
இந்த தீவிபத்தில் ஒரு ஆடும் இறந்தது.
இதன் சேதமதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் அமைச்சர் ரகுபதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினர்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.